Wednesday, January 27, 2010

அய்யாசாமி

அந்த பனி மலையில் கமலம் சுடிதார் போட்டுகிட்டு, சும்மா ஸ்லோ மோஷனில் நடந்து வருவதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார் அய்யாசாமி. இது மட்டும் சினிமாவா இருந்தா... கமலம் வர்ற அழகை வச்சி, அருமையான இசையோடு ஒரு பாட்டையே எடுத்தடலாம். நமக்கு மட்டும் என்ன குறைச்சலாம்... சும்மா ஹீரோவாட்டம்தானே இருக்கோம். தன்னையே மெச்சிக்கொண்டார் அய்யாசாமி. சும்மா சொல்லக்கூடாது கமலத்திற்கு சுடிதார்தான் அழகு... அதுவும் முன்னால அந்த ரெண்டு முடி சுருண்டு நெத்தியில் கிடக்கும் அழகு... இருக்கே... அடடா... சொல்ல வார்த்தையே இல்லை. நினைத்துக்கொண்டிருந்தபோதே, “என்னங்க... ஏங்க... எழுந்திருங்க...” என்று கம்பெடுத்து அடிக்காத குறையாய் கமலம் உழுப்ப...
“ என்னாச்சு...” என்ற படபடப்புடன் விழித்தார் அய்யாசாமி. அட... இவ்வளவு நேரம் கண்டது கனவா... அடச் சே... என்று சலிப்புடன் கண்ணை கசக்கி கொண்டு பார்த்தார். சுற்றிலும் கும்மிருட்டு.
செல்போன் வெளிச்சத்தில் கமலத்தின் இரண்டு கண்கள் மட்டும் தெரிய... கொஞ்சம் மிரண்டே போய்விட்டார் அய்யாசாமி.
“ஏங்க... கரண்ட் போயி அரைமணி நேரம் ஆச்சி. ஒரே இருட்டா... இருக்கு. எங்க தேடியும் மெழுகுவர்த்தி கிடைக்கல. கொஞ்சம் தேடிப்பாருங்க. இருட்டை பார்த்தால் விக்கி பயந்துடுவான்...”
ஆனால், அய்யாசாமி அந்த கனவில் இருந்து இன்னும் மீண்ட பாடில்லை.
“ஏங்க... நான் பாட்டுக்கு சொல்லிட்டே இருக்கேன். இன்னும் அப்படியே உட்கார்ந்துட்டு இருந்தா... என்ன அர்த்தம்.”
கனவுலகத்தில் இருந்து இன்னும் முழுசுமா மீளாத... அய்யாசாமி, எரிச்சலுடன் எழுந்து அந்த கும்மிருட்டில் கையையும், காலையும் நீட்டி, சும்மா... ஸ்கேட்டிங் போவது போல, அளந்து எடுத்து நடந்து போனார். போன வேகத்தில், கிழே படுத்திருந்த விக்கியை தெரியாமல் மிதித்துவிட..., வலி தாங்கமுடியாமல், “அய்யோ... அம்மா” என்று கத்தினான்.
“செல்லம்...” பதறியடித்துக்கொண்டு, பக்கத்தில் வந்து விக்கியை ஆசுவாசப்படுத்தினாள் கமலம்.
அதற்குள்ளாகவே வீட்டின் கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டு, மெழுகுவர்த்தி எடுக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு வாசல் நோக்கி நடந்தார் அய்யாசாமி.
“யாரது...?” அதட்டலுடன் கதவைத் திறந்தார்
வெளியே... காம்பவுண்ட் வாசிகள் எல்லாரும் அய்யாசாமியின் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தனர்.
“என்னாச்சு... என்ன பிரச்னை...?”
“ஒண்ணுமில்லை சார்... வழக்கமா... தினமும் காலையில இரண்டு மணி நேரம் கரண்ட் போகும். அப்போ ஒண்ணும் தெரியலை. ஆனா, இப்போ நைட்டு கரண்ட்ட ஆப் பண்ணி போட்டுட்டாங்க. வீட்டுக்குள்ள துõங்க முடியல சார். பயங்கர புழுக்கம். இதுக்கு ஏதாவது ஒண்ணு செஞ்சாகணும் சார்.” காம்பவுண்ட் வாசிகள் மொத்தமாக கூறியதும்..., அய்யாசாமிக்கு... இந்த நேரத்துல கண்டிப்பா, நாம ஏதாவது செஞ்சாகணும். அப்போதான்... அய்யாசாமி ஒரு கிரேட்னு எல்லாரும் நினைப்பாங்கன்னு மனசுக்குள்ள கணக்கு போட்ட அய்யாசாமி, “ஒண்ணும் பிரச்னையில்லை... நீங்க கவலைப்படாதீங்க... ஈ.பி. ஆபிஸ்ல பெரிய ஆபிஸரா இருக்கரது என்னோட பிரண்டுதான். இப்பவே அவனுக்கு போன் போட்டு, என்ன பிரச்னை, கரண்ட் எப்போ கரண்ட் வரும்னு கேட்டு சொல்றேன்”னு ஒரு தனக்கே உரித்தான பாணியில் ரீல் விட்டார் அய்யாசாமி.
அதோடு நின்றுவிடாமல், “கமலம்... கொஞ்சம் செல்போன் கொண்டு வா...” என்று அதிகாரமாய் குரல் கொடுத்தார்.
“என்ட்ட இல்லியே... உங்ககிட்டதான் இருக்கு...” சொல்லிக்கொண்டே வெளியே வந்தாள் கமலம்.
“ஆமா... ஆமா... என்ட்டதான் இருக்கு” வழிந்து கொண்டே... செல்போனில் சும்மா நம்பர்களை அழுத்த... உண்மையிலேயே ரிங் போக... எதிர்முனையிலிருந்து... “ஹலோ... யார் பேசறது?” என்று குரல் வந்தது.
இதை சற்றும் எதிர்பார்க்காத அய்யாசாமிக்கு, படபடப்பில் வியர்த்து கொட்டியது. இருந்தாலும், சமாளித்துக் கொண்டு... “ஹ... ஹலோ... நான் விநாயகர் காலனியிலிருந்து, அய்யாசாமி பேசறேன்.”
“சொல்லுங்க... என்ன விஷயம்...?” எதிர்முனையிலிருந்து அதட்டலாய் குரல் வந்தது.
“இல்ல சார், எங்க காலனியில... அரைமணி நேரமா கரண்ட் இல்லை. என்ன பிரச்னை சார். எப்போ கரண்ட் வரும்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா, நல்லாயிருக்கும்!”
அய்யாசாமி பேசறதை அந்த இருட்டில் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர், காம்பவுண்ட் வாசிகள்.
“யோவ்... நீ என்ன பைத்தியமா... கரண்ட் எப்போ வரும்னு ஈ.பி. ஆபிசுக்கு போன் பண்ணி கேளுய்யா. என்ட்ட கேட்கிறே... அறிவில்ல உனக்கு...” எதிர்முனையிலிருந்து அந்த குரல் அதட்டியது.
ஆனால் கொஞ்சம்கூட தொனி குறையாமல்... “அதான் சார் உங்ககிட்ட கேட்கிறேன்...” கொஞ்சம் பயம் கலந்த குரலில் கேட்டார் அய்யாசாமி.
“யோவ்... அர்த்த ராத்திரியில போன் பண்ணி குசும்பா பண்ற...! இரு... இரு... உன் போன் நம்பரை நோட் பண்ணிட்டேன்... நாளைக்கு காலைல... உன் அட்ரஸை கண்டுபிடிச்சு, உன்னை உண்டு இல்லைன்னு பண்றேனா இல்லையா பார்...” என்று எச்சரித்துவிட்டு அந்த எதிர்முனை போனை துண்டித்தது.
எதிர்முனை மிரட்டியதில், சப்த நாடிகளும் அய்யாசாமிக்கு அடங்கிப்போனது... இருந்தாலும் போனை வச்சுகிட்டு... “இப் ப வந்திருமா சார்... ரொம்ப தேங்ஸ் சார்...” னு பேசிட்டு இருக்கும் போதே... தெய்வாதீனமாக கரண்ட்டும் வந்தது. காம்பவுண்ட் வாசிகளுக்கு ஒரே சந்தோஷம்.
“கலக்கிட்டீங்க சார்... ஒரு போன்லேயே... கரண்ட்ட வரவச்சீட்டீங்களே சார்... நீங்க பெரிய்ய்ய ஆள்தான் சார்...” காம்பவுன்ட் வாசிகள் ஏகமாய் புகழ... கமலத்திற்கு ஒரே சந்தோஷம். நம்ம புருஷன் எப்போதும் கிரேட்தான்.
ஆனால், இதையெல்லாம் கேட்கும் நிலைமையில் அய்யாசாமி இல்லை.
நாளைக்கு காலைல உண்மையில அந்த போன்ல பேசினவன், வந்து நம்மள அடிச்சி துவம்சம் பண்ணிருவானோ... பயத்தில் அய்யாசாமியின் நாடி நரம்பெல்லாம் தந்தி அடித்தது.
“கமலம்... கமலம்...” வீட்டிற்கு வெளியே நின்று ஏலம் போட்டுக்கொண்டிருந்தார், அய்யாசாமி.
“இதோ வந்துட்டேங்க...” வீட்டினுள் இருந்து குரல் மட்டும்தான் வெளியே வந்ததே தவிர, கமலம் இன்னும் வெளியே வந்தபாடில்லை.
பொறுமை இழந்த அய்யாசாமி... “யேய்... கமலம்...” அதட்டலாய் குரல் கொடுக்க, சற்றே கலவரமடைந்த கமலம்... புறங்கையை புடவை தலைப்பில் துடைத்தவாறே...“இட்லிக்கு மாவு அரைச்சிட்டு இருந்தேன்... அதான்...” என்று பவ்வியமாய் சொன்னவள், “எதுக்குங்க கூப்புட்டீங்க...” என்றாள்.
“உள்ளே போய்வண்டி சாவியை எடுத்துட்டு வா... கடைத் தெரு வரை போயிட்டு வந்துடறேன்.”
காற்றாய் பறந்து உள்ளே போனவள்... வண்டி சாவியை அய்யாசாமியின் முகத்திற்கு நேராக நீட்டினாள்.
சாவியை வாங்கிக் கொண்டவர், வண்டியை வீட்டிலிருந்து தெருவிற்கு எடுத்தார். அந்த வண்டி மொபட்டும் இல்லாமல் பைக்கும் இல்லாமல் இரண்டும் கெட்டானாய் இருந்தது. அந்த வண்டியே, அந்த இரண்டு சக்கரத்தின் பாரத்தில்தான், சத்தியத்துக்கு கட்டுப்பட்டு ஓடிக்கொண்டிருந்தது.
அய்யாசாமி வண்டியை வெளியே எடுத்த வேகத்தில், வண்டியில் இருந்த போல்ட் இரண்டு கழண்டு விழுந்தது. பதறிப் போய் வண்டியை ஸ்டாண்ட் போட்டவர், போல்ட் ரெண்டையும் வேகவேகமாக எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.
‘அப்பாடா... யாரும் பாக்கலை’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே, வண்டியை ஸ்டார்ட் செய்து பார்த்தார். ஆனால், வழக்கம்போலவே வண்டி அடம்பிடிக்க, வேகமாய் வண்டியை உருட்டிக் கொண்டே ஓட... தடாலென்று ஸ்டார்ட் ஆகியது. ‘இப்படியே இன்னும் கொஞ்ச துõரம் உருட்டிட்டே ஓடிப்போனா... கடைக்கே போயிடலாம். பெட்ரோல் செலவாவது கொஞ்சம் மிச்சமாயிருக்கும்’ சலித்துக்கொண்டார் அய்யாசாமி.
வண்டி தெருமுனையை கடந்து, மெயின்ரோட்டில்தான் ஏறியிருக்கும். “ஏய்... வண்டியை நிறுத்து...” என்று அதட்டலாய் குரல் வர, குரல் வந்த திசையை நோக்கி பின்னால் முகத்தை திருப்பினார், அய்யாசாமி. அங்கே, டிராபிக் போலீஸார் நின்றுகொண்டிருந்தனர். போலீஸைக் கண்டதும்தான் தாமதம், அய்யாசாமிக்கு கை, காலெல்லாம் டைப் அடிக்க ஆரம்பித்தது. இருந்தாலும், பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், வண்டியை ஆப் செய்துவிட்டு, மெதுவாக உருட்டிக்கொண்டே போலீஸ் அருகில் சென்றார்.
“யோவ்... வண்டியை நிறுத்துன்னு கையை காட்டினா, தெரியாதா? நீ பாட்டுக்கு போயிட்டே இருக்கே...”
“இ... இல்ல சார் கவனிக்கலை... அதான்...” பவ்யமாய் கை இரண்டையும் கட்டிக்கொண்டு, போலீஸ் அருகில் நின்றுகொண்டிருந்தார் அய்யாசாமி.
“சரி... லைசன்ஸை எடு...”
“சார்... அ... அது...”
“என்னய்யா இழுக்கற...”
“லைசன்ஸை எங்க?”
“அது சார்... சீக்கிரம் எடுத்துடறேன்.”
“எதை எடுக்கப்போற...”
“அதான் சார்... லைசன்ஸை...”
“அடப்பாவி... இன்னும் லைசன்ஸே எடுக்காமதான் வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்கியா...?” என்று போலீஸ் மிரட்டிய மிரட்டில், அய்யாசாமி... அழ மட்டும்தான் செய்யவில்லை.
“சார்... இந்த ஒரு தடவை மட்டும்... ப்ளீஸ் சார்... வுட்டுருங்க சார்...” அய்யாசாமி கெஞ்சி கூத்தாடியதை சகிக்காத போலீஸார், “சரி... சரி.. போ... இனிமே லைசன்ஸ் இல்லாம நீ வண்டி ஓட்டுறத பார்த்தேன்... அவ்வளவுதான்!” என்று எச்சரித்து அனுப்பினார், போலீசார்.
‘தப்பிச்சோம்டா சாமி...’ன்னு, வண்டியை ஓட்டாமலே, உருட்டியே வீடு வந்து சேர்ந்தார் அய்யாசாமி.
வண்டியை உருட்டிட்டே வந்த அய்யாசாமியை, ஜன்னல் வழியாக பார்த்த கமலம்... வெளியே ஓடிவந்து, “என்னங்க... என்னாச்சு... வண்டியை உருட்டிட்டே வர்றீங்க...?”
இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பாராத அய்யாசாமி “ஒ... ஒண்ணுமில்லை...” இவள்ட்ட என்ன சொல்லி சமாளிக்கலாம்... டக்குன்னு யோசிச்சா... ஐடியா வரமாட்டேங்குது... வேற என்னவோவெல்லாம் வருது... மனசுக்குள்ளே பேசிக்கொண்டார் அய்யாசாமி.
“என்னங்க... என்னாச்சு...?”
“சொல்றேன்... வீட்டுக்குள்ள முதல்ல போ”, என்று வழக்கம்போல் கமலத்தை அதட்டிவிட்டு, கமலத்தின் பின்னாலேயே உள்ளே சென்றார் அய்யாசாமி.
“ஆங்... இப்போ சொல்லுங்க...”
‘போலீஸ்காரன் விட்டாலும்... இவ விடமாட்டா போலிருக்கே... மனசுக்குள்ளே கமலத்தை திட்டிக்கொண்டார்.’
‘ஏங்க... சொல்லுங்க...’ கமலம் விட்டபாடில்லை.
“அதான் கமலம்... நான் வண்டியில் வந்துட்டு இருந்தேன். அப்போ, டிராபிக் போலீஸ் வண்டியையெல்லாம் மறச்சு நின்னுகிட்டு... லைசன்ஸ் செக்கப் செஞ்சுகிட்டு இருந்தாங்க. எனக்கு வந்தது பாரு ஆத்திரம்... நேரா போய்... சார், கொஞ்மாவது... ‘இது’ இருக்கா... ஒவ்வொருத்தரும்... ஒவ்வொரு வேலையில், அவசர அவசரமா வண்டியில போயிட்டு இருக்கோம். அந்த நேரத்துலபோய், வண்டியை நிறுத்தி லைசன்ஸை காட்டு, அதை காட்டு இதை காட்டுன்னு விரட்டிட்டு இருக்கீங்க... ஏன் சார், லைசன்ஸ் வச்சிருக்கவங்களாலதான் ஆக்ஸிடெண்ட்டே அதிகமா நடக்கதுன்னு சும்மா எடுத்துவிட்டேன் பார்க்கணும், டிராபிக் போலீசெல்லாம் அப்படியே வெலவெலத்து போயிட்டாங்க.”
“அப்புறம்...” கமலம் ஆர்வமாய் கேட்டாள்.
“சார் நீங்க சொன்னது வாஸ்தவம்தான்...ன்னு போலீஸ்காரங்களே ஆமோதிச்சிட்டாங்கன்னா பார்த்துக்கோயேன்”னு சும்மா அளந்து விட்டார் அய்யாசாமி.
“அப்படியாங்க...” என்று அப்பாவியாய் கேட்டாள் கமலம்.
‘அப்பாடா... ஒரு வழியா நம்பிட்டா...’ பெருமூச்சி வாங்கிக்கொண்டு இருந்தபோது, “ஆமா... அதுக்கும், நீங்க வண்டியை உருட்டிட்டு வந்ததுக்கும் என்னங்க சம்பந்தம் இருக்கு” என்று அடுத்த கேள்விக்கணையை தொடுத்தாள் கமலம்.
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அய்யாசாமி, “அ... அது ஒண்ணுமில்லை... பிரண்ட் ஒருத்தன் வந்தான். அவன்ட்ட பேசுறதுக்காக வண்டியை உருட்டிட்டு வந்தேன். பேசுனதுல... வீடு வந்ததுகூட தெரியல அதான்...”சமாளித்தார் அய்யாசாமி.
“அதுதானே பார்த்தேன்...” என்று சொல்லிக்கொண்டே கமலம் உள்ளே சென்றாள்.
‘இவளுக்கு மட்டும் எப்படித்தான், இப்படி கேள்வி கேட்கணும்னு தோனுதோ தெரியல..., போலீஸ்காரர் கேட்ட கேள்வி இன்னும் மண்டையைக் குடைய... அம்மா தலைவலி உயிர் போகுதேன்னு தலையை இரண்டு கைகளால் தாங்கிப் பிடித்துக்கொண்டே, சேரில் அமர்ந்தார் அய்யாசாமி.
சனிக்கிழமை டூட்டி முடிந்ததுமே, அய்யாசாமிக்கு ஒரே குஷி. ‘ஹய்யா... நாளைக்கு லீவு’ன்னு மனதிற்குள்ளே ஒரே குதுõகலம். ‘அய்யய்யோ... காலையில வீட்லேர்ந்து கிளம்பற டைம்ல... கமலம் ஏதோ சொன்னாளே... என்ன சொன்னா... நெற்றியை தாங்கிப்பிடித்தவாறே யோசித்துக் கொண்டிருக்கையில்..., ‘ஆங்... நியாபகம் வந்துட்டு. விக்கிக்கு டிபன் பாக்ஸ் உடைஞ்சிட்டதால... புதுசா டிபன் கேரியர் வாங்கிட்டு வரச்சொல்லி, இருநுõறு ரூபா கொடுத்தா...’
அப்பாடா ஒரு வழியா நியாபகம் வந்துச்சு. இல்லேன்னா... வீட்டுக்கு போனவுடனேயே ஏன், எதற்குன்னு கேள்விக் கேட்டே மனுஷன சாகடிச்சுடுவா. மனதிற்குள்ளே பேசிக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தார் அய்யாசாமி.
அங்கே சற்றுத் தொலைவில், “அய்யா வாங்க... அம்மா வாங்க... நீங்க விரும்புற துணி, நீங்க எதிர்பார்க்காத வெலையில தரோம். அய்யா வாங்க... அம்மா வாங்க” என்ற சத்தம், அய்யாசாமியின் கவனத்தைக் திசைதிருப்பியது.
‘அட... அங்க என்னதான் செய்றாங்கன்னு, கொஞ்சம் பாத்துட்டுத்தான் போவமே...’ன்னு உள்மனசு, ஆசையைத் துõண்ட... அந்தக் கூட்டத்திற்கு அருகில் நெருங்கினார். அங்கு பயங்கரக் கூட்டம் கூடியிருந்தது. ஆனால், அங்கு என்ன பண்றாங்கன்னுதான் அவறால பார்க்க முடியல. கூட்டத்தின் வெளியே நின்னுட்டு சும்மா குதிச்சு, குதிச்சு பார்த்தார். அட... ஒண்ணுமே தெரியலையே... என்ன செய்யலாம்னு பயங்கர யோசனையில்... சரி... இன்னொரு முறை துள்ளித்தான் பார்ப்போமேன்னு, ‘உம்ம்...’ தரையை உந்தி அழுத்தி, மேலே குதித்து எட்டிப்பார்த்தார்.
ஆனால், இந்த சமயம் குதித்ததில், அவர் பையில் வைத்திருந்த டிபன் பாக்ஸ் துள்ளி சாலையில் விழுந்து, தெரித்து ஓடியது. “ஐயய்யோ... ஓடுது பிடிங்க... பிடிங்க”ன்னு கத்திட்டே ஓட... கூட்டத்தில் நின்ற சிலர் மட்டும், ‘என்ன அங்க சத்தம்’னு லேசா தலையை திருப்பிப் பார்த்துவிட்டு, மறுபடியும் திரும்பிக்கொண்டார்கள்.
டிபன் பாக்சை பிடிக்க ஓடியவர், சாலையில் வந்த சைக்கிள்காரன் மீது மோதவே, நிலை தடுமாறிய சைக்கிள்காரன்... ‘மொடேர்’ என்று கீழே விழுந்தார்.
“யோவ்... யோவ்... கண்ணு தெரியாது! அறிவுகெட்ட முண்டம், முட்டுனது கூட தெரியாம எப்படி போறான் பாரு...” என்று சைக்கிள்காரன் எரிந்து விழ...
அதைக் கொஞ்சம் கூட சட்டை பண்ணாமல், தன்னுடைய சோடா பாட்டில் கண்ணாடியை மட்டும் சரிசெய்துகொண்டு, சிதறிக்கிடந்த மூடியையும், பாக்ஸையும் எடுத்தார். மூடியை எடுத்துப் பார்த்ததுமே பயங்கர அதிர்ச்சி அய்யாசாமிக்கு.
அந்த மூடி கீழே விழுந்த வேகத்தில், இரண்டாக பிளந்து பல்லைக் காட்டிக் கொண்டிருந்தது. அச்சச்சோ... போச்சே... இப்படியே, வீட்டுக்குப்போனா... கமலம் நம்பள கொத்தி, குதறி எடுத்துருவாளே... என்று மனதிற்குள் பயம் தொற்றிக்கொண்டது.
இருந்தாலும், அந்தக் கூட்டத்தில் அப்படி என்னதான் நடக்குதுன்னு, இன்னிக்கு பாக்காம போகக் கூடாது என்று அய்யாசாமியின் உள்மனம் உசுப்ப, ‘இப்போ என்ன செய்யலாம்’ என்று யோசிக்கையில்தான், அந்த ஐடியா உதயமானது, அய்யாசாமிக்கு. உடனடியாக சட்டென்று எதைப்பற்றியும் யோசிக்காமல், தலையை ஆயுதமாக்கி... கூடியிருந்தவர்களை முட்டிக்கொண்டே... உடம்பை மட்டும் கூட்டத்திற்கு தகுந்தவாறு, அங்கும் இங்கும் அசைத்து, அசைத்து நுழைத்துக்கொண்டு, முண்டியடித்துக்கொண்டு முன் வரிசைக்கு வந்தார்.
ஆனால் தலை மட்டும்தான் முன் வரிசையில் வந்து, நீட்டிக் கொண்டிருந்ததே தவிர, உடம்பும் மற்ற பாகங்களும் ரெண்டாம், மூன்றாம் வரிசை வரை நீண்டிருந்தது.
கிட்டத்தட்ட ஒரு எலி எப்படி பொந்தில் இருந்து தலையை மட்டும் எட்டி வெளியே பார்க்குமோ... அதே நிலைதான் தற்போது அய்யாசாமிக்கும்.
அய்யாசாமியின் இடுப்பு பகுதி இரண்டாம் வரிசையில் நீண்டு துõக்கிக்கொண்டு, மற்றவர்களை இடித்துக் கொண்டிருக்க, அந்த வரிசையில் நின்ற ஒரு குசும்பு பிடித்தவர். சட்டென்று அய்யாசாமியின் இடுப்பில் கிச்சுக்கிச்சு... மூட்டிவிட... ‘அச்சச்சோ... அம்மா...’ என்று கெக்கே பிக்கேன்னு பல்லைக் காட்டியவர், ரசிகா போன்று பெல்லி டான்ஸ் ஆடுவதைப்போல கிச்சுக்கிச்சுக்கு ஏற்றவாறு இடுப்பை மட்டும் தனியாக ஆட்டினார்.
இவர் ஆட்டிய ஆட்டு... பக்கத்தில் நின்றவர்கள் மீது இடித்துவிட, இரண்டு மூன்று பேர் டக்கென்று அய்யாசாமியின் இடுப்பை அப்படியே அலேக்காக துõக்கி விட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத அய்யாசாமி, நிலை குலைந்து, குட்டிக்கரணம் அடித்து ஏலம் போட்டவர் முன்பு போய் மடேரென்று விழுந்தார். சிலர் உச்.. உச்...உச்... என்று அனுதாபப் பட்டாலும், கூட்டத்தில் இருந்த பலரும் கையை வாயில் வைத்து பொத்திக்கொண்டு கெக்கே பிக்கேன்னு சிரித்துக் கொண்டு நின்றிருந்தனர்.
குட்டிக்கரணம் அடித்து, ‘மடேர்’ என்று ஏலம் போட்டுக் கொண்டிருந்தவரின் அருகில் போய் விழுந்த அய்யாசாமியை விநோதமாய் பார்த்தான், ஏலம் விட்டவர்.
ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாத அய்யாசாமி, ‘நல்லவேளை கடவுள் புண்ணியத்துல... பெரிய காயம் ஏதும் படலை’ என்று மனதிற்குள் நினைத்தவாறு, மீண்டும் கூட்டத்தின் முதல் வரிசையில், சும்மா நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றிருந்தார்.
ஏலம்... மீண்டும் தொடர்ந்தது.
“சார்... நல்லா பாரு சார்... ஐநுõறு ரூபா மைசூர் சில்க் சேலை... உங்களுக்காக, வெறும் இருபத்தைஞ்சே ரூபாதான். விருப்பமுள்ளவங்க ஏலம் கேக்கலாம் சார். கேளுங்க சார்... கேளுங்க சார்...” என்று ஏலக்காரர் கூவ...
கூட்டத்தில் நின்றவர்கள்... முதல்வரிசையில் நின்றவர்... “அம்பது ரூவா...” என்று ஏலத்தை தொடங்கி வைத்தார்.
“நல்லா கேட்டுக்க சார்... போனா வராது சார், ஐநுõறு ரூபா மைசூர் சில்க் சேலை, இப்ப... வெறும் அம்பது ரூபா சார்... ஏலம் போயிட்டுருக்கு சார்ல விருப்பப்பட்டவங்க கேளுங்க சார்...” மறுபடியும் ஏலக்காரர் கூவ... ஏலம் சூடுபிடிக்க ஆரம்பித்தது...
அம்பது ரூபாயில் ஆரம்பித்தது, படிப்படியாக எழுப்பதைந்து, என்பது என்று இருநுõறு ரூபாயில் போய் நின்றது. நல்லா கேட்டுக்க சார். வெறும் ஐநுõறு ரூபா சேலை... இப்போ கடைசியா, இருநுõறு ரூபாயில போய் நிக்குது... விருப்பம் இருந்தா, வேற யாராவது கேளு சார்...” என்று ஏலம் போட்டவர் கூவ, கூட்டம் நிசப்தமாக நின்றது... இதையெல்லாம் ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தார் அய்யாசாமி.
“சரி சார்... ஏலத்தை முடிக்கப் போறேன்... ஏலம் இருநுõறு ரூபாய் முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம்... என்று கூவிவிட்டு... இருநுõறு ரூபாய் கேட்ட மவராசான் யாரு சார்... என்று ஏலக்காரர் கேட்க...” கூட்டத்தில் நின்ற ஒரு ஏடாகூடமான ஆள், டக்கென்று அய்யாசாமியின் கையை பிடித்து துõக்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத அய்யாசாமி, திருதிருவென்று விழித்துக் கொண்டு, ஏலக்காரனை உற்றுப் பார்த்தார்.
ஏலம் கேட்டவர், “வாங்க சார்... வந்து வாங்கிட்டு போங்க சார்...”ன்னு ஏலக்காரர் சொல்லவும், அய்யாசாமி... “அய்யய்யோ... எனக்கு வேண்டாம்... கமலம் திட்டுவா... நா ஏலம் கேட்கவே இல்லை...” என்று பயத்துடன் சொல்ல... “என்னது... ஏலம் கேட்கலியா... பின்ன எதுக்கு கையை துõக்கிட்டு நின்ன... ஒழுங்கு மரியாதையா, ரூபா கொடுத்து, சேலை வாங்கிட்டு போ... இல்லைன்னா... அவ்வளவுதான் சொல்லிட்டேன்” ஏலம் போட்டவர் மிரட்டிய மிரட்டில் கை, கால்கள் எல்லாம் நடுங்கி, இன்னும் கொஞ்சம் தாமதித்தால், அடிச்சாலும் அடிச்சிருவான்னு ரொம்பவே பயந்து, ஏலக்காரன் அருகில்போய்... “சார்... ஒரு அம்பது ரூபா குறைச்சி கொடுங்களேன்... வாங்கிக்கறேன்...” என்று மெல்லமாய் சொன்னார், அய்யாசாமி.
“என்ன கேட்ட...” என்று முறைப்பு முறைத்தான் ஏலக்காரன். அவ்வளவுதான்... டக்கென்று பாக்கெட்டில் கையைவிட்டவர், இருநுõறு ரூபாயை எடுத்து ஏலக்காரனின் கையில் திணித்தார். முகம் மலர ரூபாயை பெற்றுக்கொண்டவன், சேலைலை சுற்றி ஒரு கவரில் வைத்து தந்தான்.
டிபன் பாக்ஸ் வாங்கும் ரூபாய்க்கு, சேலையை வாங்கிட்டோமே... கமலத்திடம் என்ன சொல்லலாம் என்று மனதில் ஆயிரத்தெட்டு வினாக்களுடன் நடந்து போய்க் கொண்டிருந்தார் வீட்டிற்கு.
வீட்டு வாசலில் செருப்பைக் கழட்டியவர், “கமலம்...” என்று குரல் கொடுக்க....
“இதோ வந்துட்டேங்க...” முகம் மலர்ந்து ஓடிவந்து கதவைத் திறந்தாள் கமலம். வழக்கத்திற்கு மாறாக கமலத்தின் முகம் சந்தோஷத்தில் பிரகாசமாய் இருந்தது.
வீட்டிற்குள் நுழைந்தவர், “கமலம் உனக்காக ஸ்பெஷலாய் ஒண்ணு வாங்கிட்டு வந்துருக்கேன். இதை கொஞ்சம் பிரிச்சுப் பாரு” என்று, தான் வாங்கி வந்த சேலையை கமலத்திடம் கொடுத்தார் அய்யாசாமி.
பார்சலை வாங்கிய கமலம், அவசர அவசரமாய் பிரித்துப் பார்க்க, “அட... அதே சேலைதான்...” என்றாள்.
“என்னது... அதே சேலைதான்னு சொல்ற...” என்று புரியாமல் அய்யாசாமி கேட்க.
“இந்த புடவையைக் கொஞ்சம் பிடிங்க...” இதோ வந்துட்டேன். என்று விருட்டென்று உள்ளே சென்றவள், பீரோவிலிருந்து ஒரு புடவையை கொண்டுவந்தாள்.
“இது என்னது...” என்று அய்யாசாமி கேட்க, “அந்த புடவையைத் தாங்க”வென்று, அய்யாசாமியிடம் இருந்து புடவையை வாங்கியவள், “பாருங்க... ரெண்டு புடவையும், ஒரே புடவைதான்” என்று கமலம் சொல்ல,
“சரி... இந்தப் புடவையை எப்ப எடுத்த? என்ட்ட சொல்லவே இல்லை. என்ன விலை இது...?” என்று குறுக்கிட்டார் அய்யாசாமி.
“அதுவாங்க... இன்னிக்கு காலையில, நீங்க ஆபிஸ்க்கு போன பிறகு நம்ம தெருவுல, ஒருத்தன் புடவை ஏலம் போட்டுகிட்டு இருந்தான். அதுலதான் இந்த புடவையை வாங்கினேன். இந்த புடவை ஐநுõறு ரூபாயாம். நான்தான் சாமர்த்தியமா... நுõற்றைம்பது ரூபாய்க்கு ஏலம் எடுத்தேன். நல்லா இருக்கு இல்லீங்க...” என்று கமலம் சொல்லி முடித்த சமயம்... அய்யாசாமிக்கு கண்கள் எல்லாம் இருட்டாகி, தலை சுற்றுவது போல இருந்தது.
“ஆமா... நீங்க எங்க போய் இந்த புடவைய வாங்குனீங்க” என்று கமலம் கேட்க...
நினைவு திரும்பியவர்... “ஆங்... ஆபிஸுக்கு ஒருத்தன் பாரின் சேலை எல்லாம் கொண்டு வந்தான். அவன்ட்டதான் இந்த புடவைய வாங்கினேன்.” என்று மழுப்பினார் அய்யாசாமி.
“என்ன ரேட்? விலைய சொல்லவே இல்லை.”
“அது வந்து... நுõறு ரூபாய்...”
“பரவாயில்லையே... அப்ப... நான்தான் தண்டம் போட்டுட்டேன் போல...” என்று சலித்துக் கொண்டவள், “ஏங்க... நீங்க வாங்கிட்டு வந்த புடவைய, திருப்பிக் கொடுத்துடுங்க... ஒரே புடவை ரெண்டு எதுக்குங்க...?”
“என்னது திருப்பிக் கொடுக்கறதா... அவன் எப்படி வாங்குவான்...?”
“அதுதான்... ஆபிஸ்லதான எடுத்தேன்னு சொன்னீங்க... அவன்ட்டயே இந்த புடவைய கொடுத்துட்டு வேற டிசைன்ல வாங்குங்க...”
“அதெல்லாம் முடியாது...” என்றவர், ஏலம் போட்டவனை இனி எங்கேன்னு போய்த் தேடுவேன் என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டார்.
“அப்படின்னா இந்த சேலைய என்ன செய்ய...” என்று கேட்ட கமலத்திடம், “அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா, திருப்பி போய் கொடுக்க மாட்டேன்.” என்று அய்யாசாமி எரிச்சலடைந்து கத்தவும், கமலம் அப்படியே அமைதியானாள்.
சட்டென்று... நினைவிற்கு வந்தவள்... “ஆமாங்க... விக்கிக்கு டிபன்பாக்ஸ் கேட்டேனே வாங்கிட்டு வந்தீங்களா?”
“டிபன் பாக்ஸா... அ... து இல்ல... வாங்கல...”
“ஏன்...?”
“அந்த ரூபாயிலதான புடவை வாங்கினேன்... என்று அய்யாசாமி உளறிக்கொட்ட, கமலம் டக்கென்று உஷாராகி, புடவை நுõறு ரூபாய்தானே சொன்னீங்க... அப்படின்னா மீதியிருந்த நுõறு ரூபாய்க்கு... டிபன் பாக்ஸ் வாங்கிட்டு வந்துருக்கலாமே” என்று அடுத்த கேள்வி அம்பை தொடுத்தாள் கமலம்.
“அதுவா... அந்த ரூபா செலவழிஞ்சி போச்சு...”
“அப்படி என்ன செலவு பண்ணுனீங்க...” என்று கமலம் விடாப்பிடியாய் கேட்க...
“சும்மா.. சும்மா... கேள்வி கேட்டுட்டே இருக்காதே... நான் ஆம்பள... ஆயிரத்தெட்டு செலவு இருக்கும். அதெல்லாம் உன்ட்ட சொல்லிட்டு இருக்க முடியாது. போயி ஒரு கப் காபி போட்டு எடுத்துட்டு வா...” என்று கமலத்தை அய்யாசாமி விரட்ட...
“ஏன்தான் இந்த மனுசனுக்கு இப்படி மூக்குக்கு மேல கோபம் வருதோ... நான் அப்படி இந்த மனுஷன்ட்ட என்ன கேட்டுட்டேன்னு இப்படி கோபப்படறாரோ தெரியலை... ஆனாலும், இந்த மனுஷனுக்கு இவ்வளவு கோபம் ஆகாது”ன்னு கமலம் முணுமணுத்துக்கொண்டே அடுப்பங்கறைக்கு சென்றாள்.
‘அய்யய்யோ... கமலம்... மறுபடியும் அந்த நுõறு ரூபாய்க்கு கணக்கு கேட்டா என்னன்னு சொல்ல... அதுமட்டுமல்லாம, பேக்கை திறந்து பார்க்கும்போது என்னோட டிபன்பாக்சும் உடைஞ்சி இருக்கறத பார்த்துட்டு என்னன்ன கேக்கப் போறாளோ தெரியலையே... அதுக்கு என்ன பதில் சொல்லப்போறோமோ...’ என்று சோடாபுட்டிக் கண்ணாடியை கழற்றி கையில் வைத்துக்கொண்டு, கேள்விக்கான பதிலை அதிதீவிரமாக, சேரில் குத்த வைத்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தார் அய்யாசாமி.‘அடடா... காலண்டர் தாளை இன்னும் கிழிக்காமயே வச்சிருக்காளே கமலம். காலைல எழுந்தவுடனேயே, இதெல்லாம் செய்யணும்னு கமலத்துக்கு ஏன்தான் தோண மாட்டேங்குதோ... இந்த கமலத்திற்கு, என்று புலம்பிக்கொண்டவர்... எல்லோருமே நம்மள மாதிரிஇருப்பாங்கன்னு நினைக்கறதும் தப்புதான்’னு நினைத்தவர், குனிந்து காலண்டர் தாளை கிழித்தார்.
தேதி 27ஐ காட்டியது. ‘ஹைய்யா... இன்னும் மூணு நாள்ள... சம்பளம்’ என்று, சிறு பிள்ளையாய் மனதிற்குள் குதுõகலித்தவர், காலண்டர் தாளை துõர போட எண்ணியவர், சட்டென்று அந்தத் தாளை சுருட்டினார்.
சுருட்டிய அந்த காலண்டர் தாளை, அப்படியே காதுக்குள் விட்டு குடைந்தவர்... அடடா... ‘என்ன சுகம்... இந்த சுகம்...’ என்று பாடலை முணு முணுத்தவாறே, அருகில் கிடந்த சேரை இழுத்துப் போட்டு, அதில் வழக்கம்போல் குத்தவைத்து உட்கார்ந்து கொண்டு, விட்டத்தை பார்த்தவாறே கண்களை அப்படியே சொக்கி சொக்கி காதை குடைந்துகொண்டிருந்தார்.
“என்னங்க...” என்று திடீர் சத்தத்தைக் கேட்டு, நிலை குலைந்தவர், “என்ன... என்னாச்சு...” என்று பரபரப்புடன் எழுந்தார்.
“ஏங்க... என்னங்க பண்ணிட்டு இருக்கீங்க...?”
“ம்... பாத்தா தெரியல...?”
“தெரியுது... ஆனா, நான் நேற்றிலிருந்தே சொல்லிட்டுத்தானே இருக்கேன். பக்கத்து வீட்டு மாமியை, ஆஸ்பத்திரியில சேர்த்துருக்காங்க. இன்னிக்கு போய் பார்த்துட்டு வரணும். காலையிலேயே போயிட்டு வந்துடலாம்னு நேத்து நைட் பூரா கிளிப் பிள்ளைக்கு சொல்றது மாறி சொல்லிட்டு இருந்தேன். அப்போவெல்லாம் மண்டைய, மண்டைய ஆட்டிகிட்டு, இப்போ உட்கார்ந்து சவுகரியமா காதை குடைஞ்சிட்டு இருந்தா என்னங்க அர்த்தம்”.
“எனக்கும் போகணும்னு ஞாபகம் இருக்கு... முதல்ல நீ கிளம்பு...” என்று கமலத்தை விரட்டியவர், பாத்ரூமிற்குள் நுழைந்தார்.
அரைமணி நேர களேபரத்திற்கு பிறகு அய்யாசாமியும், கமலமும் புறப்பட்டு வாசலுக்கு வந்தார்கள். கமலம் வீட்டுக் கதவை, அரை நுõற்றாண்டு முன் கண்டுபிடித்த அந்த பூட்டை வைத்து பூட்டிக்கொண்டிருந்தாள்.
“கமலம்... பூட்டை நல்லா இழுத்துப் பார்த்துக்கோ...”
“நல்லா இழுத்துப் பார்த்துட்டேங்க...” என்றாள் கமலம்.
“என்னத்த இழுத்துப் பார்த்தியோ தெரியல...” என்று சொல்லிக்கொண்டே, கதவிற்கு பக்கத்தில் வந்தவர், இரண்டு கையையும் பலமாக வைத்து, பூட்டை இழுத்துப் பார்த்தார். அப்படியும் திருப்தி வராதவர், பூட்டை பிடித்து தொங்கி, ஒரு நிமிடம் அந்த பூட்டிலேயே ஊஞ்சல்போல் ஆடியே பார்த்துவிட்டார் அய்யாசாமி.
அய்யாசாமி செய்து கொண்டிருந்த அழிச்சாட்டியங்களையெல்லாம், பார்த்துக் கொண்டிருந்த கமலம் எரிச்சல் பட்டுக்கொண்டு, “ஏங்க திருந்தவே மாட்டீங்களா... வெளிய வச்சு, ஏங்க இப்படி கேவலப்படுத்துறீங்க?”
“உனக்கு தெரியாது கமலம்... ஊரே கெட்டுப் போய்கிடக்கு... பத்து நிமிஷம் வெளியே போனாலே வீட்டை துடைச்சுட்டு போயிடுவாங்க...” என்று ஆரம்பித்தவரை, “போதும்... போதும்... அப்படியே காலையிலேயே பிரசங்கத்தை ஆரம்பிச்சுடாதீங்க” என்று இடைமறித்தாள் கமலம்.
“ஏங்க... ஆஸ்பத்திரிக்கு எப்படி போறது...?”
“ஆட்டோவுல போயிடலாம்” என்றவர்..., எதிரே வந்த ஆட்டோவை கைநீட்டி நிறுத்தினார்.
“எங்க சார் போகணும்...?”
“கந்தன் ஆஸ்பத்திரிக்கு போகணும்... எவ்வளவு கேட்கறே...?”
“அறுவது ரூபா கொடு சார்... போதும்.”
“அறுபது ரூபாயா...” என்று அதிர்ச்சியாய், வாயைப் பிழந்தவரை... “என்ன சார்? ரொம்ப துõரம் சார்... வழக்கமா எம்பது ரூபா வாங்குவோம் சார்... ஆனா... உன்ட்ட ஏமாத்த முடியுமா சார்...” என்று டக்கென்று ஆட்டோக்காரன் வச்ச ஐசில் அப்படியே... உருகிப்போனார் அய்யாசாமி.
“சரி சரி... போலாம்...” என்றவர், ”கமலம் ஏறிக்கோ...” என்றார்.
“என்னங்க... ஆட்டோக்காரன் உங்கள வசமா ஏமாத்துறான். ஏமாந்துடாதீங்க கொஞ்சம் பொறுங்க... ஷேர் ஆட்டோ வரும்... அதிலேயே போயிடலாம்” என்று, அய்யாசாமியின் காதில் குசுகுசுத்தாள் கமலம்.
இதை காதில் வாங்கிய ஆட்டோக்காரன்... “ஏம்மா... ஷேர் ஆட்டோவெல்லாம் அங்கே போகாது. ஒன்லி ஆட்டோ மட்டும்தான்... சார்..., உனக்குத் தெரியாதா சார்... படிச்ச மனுஷனா தெரியற... கொஞ்சம் சொல்லு சார்...” என்று, அய்யாசாமியை இன்னும் கொஞ்சம் ஆட்டோக்காரன் உசுப்பேத்த...
“ஆமா கமலம்... அந்த இடத்துக்கு ஷேர் ஆட்டோவெல்லாம் போகாது. கொஞ்ச நாள் முன்னாடிதான் ஏதோ பிரச்னைன்னு ஷேர் ஆட்டோவெல்லாம் போகக்கூடாதுன்னு ஆர்டர் போட்டாங்க” என்று ஆட்டோகாரன் வைச்ச ஐஸுக்கு துதி பாடினார் அய்யாசாமி.
“என்ன பிரச்னைங்க... எனக்குத் தெரியாதே” என்று ஆச்சர்யமாய் கேட்டாள் கமலம்.
“அதெல்லாம் உனக்குத் தெரியாது... பேப்பர்ல எல்லாம் போட்டிருந்தாங்க.”
“கரெக்ட்டா சொல்றியே சார்... விஷயம் தெரிஞ்ச ஆளா இருக்கியே சார்...”னு மேலும் அய்யாசாமியின் தலையில் ஐஸ் மொத்தத்தையும் ஆட்டோக்காரன் கொட்ட, அட நம்மள பத்தி என்னமா புகழறான் என்று மனதிற்குள் பெருமைப் பட்டுக்கொண்டவர்... கொஞ்சம் கூட தாமதிக்காமல், அய்யாசாமி விறுட்டென்று கமலத்தின் கையைப் பிடித்து ஆட்டோவில் ஏற்றினார்.
“அடப் பாவிப் பய... இப்படி ஐஸ் வச்சு கவுத்திப்போட்டானே...” என்று, ஆட்டோக்காரனை வில்லனை பார்ப்பது போன்று உர்ரென்று பார்த்துக் கொண்டு வந்தாள் கமலம்.‘அடப்பாவிப்பய இப்படி ஐஸ் வச்சே கவுத்திட்டானே’ என்று மனதிற்குள் கருவிக் கொண்டு வந்தவள் உர்ர்றென்று அமர்ந்திருந்தாள்.
ஆட்டோவில் அலறிய எப்.எம். பாடலில், சங்கீத வித்வான் போல சுதி தப்பாமல் ஐந்து விரல்களையும் தொடையில் வைத்து தட்டியவாறே, கண்களை மூடிக்கொண்டு, தலையை பாடலுக்கு தகுந்தவாறு ஆட்டிக்கொண்டு வந்தார், அய்யாசாமி.
இதைப் பார்த்த கமலத்திற்கு கூடுதலாக எரிச்சல் வந்தது. ஆட்டோவில் இருந்த கண்ணாடி வழியாக அய்யாசாமியை கவனித்த ஆட்டோக்காரன், “சார்... என்னம்மா பீல் பண்ற சார். உங்களுக்கு சங்கீதம் எல்லாம் தெரியுமா சார்...” என்று ஆட்டோக்காரன் கேட்ட குரலில், கவனம் சிதறிய அய்யாசாமி... “என்ன சொன்னீங்க...?” என்று கேட்க...
ஆட்டோக்காரன் இன்னொரு தடவை அதை அப்படியே மறுபடியும் சொன்னான்.
ஆட்டோக்காரன் சொன்னதில் பரவசமடைந்த அய்யாசாமி... “ஆமா ஆமா... கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்களே எப்படி?”
“இல்ல சார்... அஞ்சரை கட்டைக்கு தகுந்தவாறு கரெக்ட்டா விரலை அசைக்கறீங்களே சார்... சங்கீதம் தெரிஞ்சவங்கள தவிர, வேற யாருக்கும் இந்த மாதிரியல்லாம் வராது சார்...” என்று ஏகத்துக்கும் ஏத்திவிட...
அடடா அஞ்சு கட்டை, ஏழு கட்டைன்னு ஏதேதோ சொல்றானே... உண்மையாவே இதெல்லாம் சங்கீத சமாசாரம்தானா... என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டவர், “ஆமா ஆமா... ரொம்ப சரியா சொன்னீங்க...” என்று சமாளித்துக்கொண்டவர், லேசா கமலம் பக்கமாக முகத்தை திருப்பினார். கமலம் இன்னமும் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டிருந்தாள்.
லேசாக சலித்துக் கொண்ட அய்யாசாமி, ‘ஞானசூனியம்... ஞானசூனியம்...’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு மீண்டும் எப்.எம்மில் லயித்தார் அய்யாசாமி.
“ என்னங்க...” என்ற சத்தத்தில் மீண்டும் கவனத்தை திருப்பிய அய்யாசாமி, “என்ன கமலம், என்னாச்சு...?”
“ஏங்க ஆஸ்பத்திரிக்கு போற நேரத்துல பழம் ஏதும் வாங்கிட்டு போக வேண்டாமா? பக்கத்துல ஏதாவது ஒரு பழக்கடையில ஆட்டோவை நிறுத்தச் சொல்லுங்க. வாங்கிட்டு போயிடலாம்.”
“ஏண்டி... வீட்ல இருந்து கிழம்பற நேரத்துல, இதெல்லாம் சொல்ல மாட்டீயா...?” என்று கோபப்பட்டவர், “டிரைவர் சார், பக்கத்துல ஏதாவது நல்ல பழக்கடையில ஆட்டோவை கொஞ்சம் நிறுத்த முடியுமா?” என்றார் அய்யாசாமி.
“நிறுத்தறேன் சார்...” என்று அந்த சாலையில் இருந்த பெரிய பழக்கடையோரம் ஆட்டோவை நிறுத்தினான் ஆட்டோக்காரன். வண்டியை விட்டு இறங்கிய அய்யாசாமியும், கமலமும் பழக்கடைக்கு சென்றனர்.
“ஏம்ப்பா... ஆப்பிள் எவ்ளோ...?” என்று தோரனையாய் கேட்டார் அய்யாசாமி.
“பதினைஞ்சி ரூபா சார்...” என்று பவ்யமாக சொன்னான் கடைக்காரன்.
பரவாயில்லையே... ரொம்ப சீப்பா இருக்கே என்று மனதிற்குள் நினைத்தவர், “ஏம்ப்பா ஒரு கிலோ தானே... பதினைஞ்சி ரூபா?”
“ம்... ஏழு கிலோ தாரேன் வாங்கிட்டு போறீயா...?” என்று கோபத்தின் உச்சிக்கே சென்ற கடைக்காரன், “ஒரு பழம் பதினைஞ்சு ரூபா...”
“ஏம்ப்பா... அநியாயமா தெரியல... இந்த விலை சொல்ற...?”
“யோவ்... இஷ்டம் இருந்தா வாங்கு... இல்லாட்டி அப்படியே போயிடு... காலைல வந்து இம்சை படுத்தாதே...” என்று எரிந்து விழுந்தான் கடைக்காரன். இதை சற்றும் எதிர்பார்க்காத அய்யாசாமி, அடடே... பக்கத்துல வேற கமலம் நின்னுட்டு இருக்காங்கறதையே மறந்துட்டேனே... இனியும் அமைதியா இருந்தா அவ்வளவுதான். கமலம் நம்மள மதிக்கவே மாட்டா... என்று நினைத்தவர்,
“யோவ்... என்னா... வெலய கேட்டா ரொம்பதான் குதிக்கற... விலைய கேட்காமலியா வாங்கிட்டு போவோம். சும்மா கத்திட்டு இருக்க...” என்று அய்யாசாமி வரிந்துகட்ட, கமலத்திற்கு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது.
கொஞ்சம் கூட தாமதிக்காமல், அய்யாசாமியின் கையை பிடித்தவள், “ஏங்க... வாங்க... போவோம்.”
“கொஞ்சம் நில்லு கமலம்... அவன நான், சும்மா விடறதா இல்ல... யார பார்த்து என்ன வார்த்த கேட்டுட்டான்.” என்று அய்யாசாமி ரவுண்டு கட்ட... அய்யாசாமி பண்ணிய ரவுசில், ஆட்டோக்காரன் இறங்கி களேபரம் நடக்கும் இடத்திற்கு அருகே வந்து பவ்வியமாக நின்று கொண்டிருந்தான்.
“ஏங்க பழமே வேண்டாம்... வாங்க போவோம்” என்று கையை இறுக்கமாக பற்றியவள், அய்யாசாமியை ஆட்டோவை நோக்கி இழுத்துச் சென்றாள்.
“டேய்... உன்னை சும்மா விட மாட்டேன்...” என்று இன்னும் டெம்ப்போ குறையாமல் அப்படியே குரலை உயர்த்தியவர், அப்படியே ஆட்டோவில் ஏறி அமர்ந்தார்.
“ஏங்க... ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு கோபம் ஆகாது. என்று அய்யாசாமியை கடிந்து கொண்டாள் கமலம்.
“பின்ன... அய்யாசாமின்னா... சும்மாவா...?”
“என்ன இருந்தாலும், நடு ரோட்ல நின்னுட்டு இப்படி நீங்க சண்டை போடறத பார்த்தா... எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” என்று சொன்ன கமலம், இந்த மனுஷனுக்கு இவ்வளவு கோபம் எங்கே இருந்துதான் வருதோ... நம்ம மட்டும், இன்னிக்கு இவரு கூட வரலைன்னா... அந்த கடைக்காரன் அவ்வளவுதான்... என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.
‘அப்பாடா... ஒரு வழியா பழச் செலவு மிச்சம். பாவம்... கமலம்... நாம சண்டை போட்டதை அப்படியே உண்மைன்னு நம்பிட்டா...!
அய்யய்யோ... நாம பாட்டுக்கு ரொம்ப சத்தம் போட்டுட்டோமே... அந்த கடைக்காரன் நம்மள நல்லா ‘நோட்’ பண்ணியிருப்பானோ... அச்சச்சோ... எங்கேயாவது பார்த்தா... நம்மள அடிச்சு துவம்சம் பண்ணிர கூடாதே... ஆண்டவா! இனி ஒரு ரெண்டு மாசம்... கடைத்தெரு பக்கமே வரக்கூடாது... அப்பதான் அந்தக் கடைக்காரணுக்கு நம்ம முகம் மறக்கும்... என்று நினைத்துக்கொண்டவர்... ஆட்டோவின் முன் கம்பியை இறுக்கமாக பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தார்.அய்யாசாமி ஆட்டோவில் இருந்த கம்பியை இறுக்கமாக பிடித்திருந்தார். கமலத்திற்கு மனதில் இருந்த திகில் இன்னும் குறைந்தபாடில்லை. மெதுவாக அய்யாசாமியின் கைகளைப் பற்றினாள். “ஏங்க எதுக்கெடுத்தாலும் ரொம்ப கோபப்படாதீங்க... உடம்புக்கு ஆகாது. பாருங்க... உடம்பெல்லாம் எப்படி வியர்த்திருக்குன்னு...”
‘அடிப்போடி பைத்தியக்காரி... அந்தக் கடக்காரன் நம்மள அடையாளம் வைச்சு, எங்கேயாவது அடிச்சுருவானோன்னு பயந்து போய் நானே ஆடிப்போய் இருக்கேன்... இவ வேற...’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.
‘சார்... போலாமா...?’ என்று ஆட்டோக்காரன் கொடுத்த குரலில், ‘ம்... போலாம்’ என்று உருமலுடன் பதில் சொன்னார் அய்யாசாமி.
ஆட்டோவை ஸ்டார்ட் செய்த ஆட்டோக்காரன், “ஆனாலும் நீங்க பயங்கரமான ஆளு சார்... என்னமா சண்டை எல்லாம் போடறீங்க சார்... எனக்கே ஒரு நிமிஷம் உடம்பெல்லாம் ஆடிப்போயிடுச்சு. ஆனா, நீங்க செஞ்சதுதான் சார் கரெக்ட். இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் இப்படி திட்டினாத்தான் சரியா வருவாங்க” என்று ஆட்டோக்காரன் சந்தடி சாக்குல சைக்கிள் ஓட்டினான்.
‘அடப்பாவி... இவனும் நம்மள வீரன்னு நம்பிட்டானே’ என்று மனதிற்குள்ளே சிரித்துக்கொண்டார் அய்யாசாமி.
ஆட்டோ... ஆஸ்பத்திரி வாசலில் போய் நின்றது. ஆட்டோவை விட்டு இறங்கிய அய்யாசாமி, எழுபது ரூபாயை நீட்டினார். “சரி ஸார் பாப்போம்...” என்று ஆட்டோவில் ஏறப்போனவனை தடுத்தாள் கமலம்.
“யோவ்... என்ன நீ பாட்டுக்கு மீதி ரூபாய் கொடுக்காம போற...”
“என்னம்மா மீதி ரூபாய்ங்கற...”
“ஆமா... அறுபது ரூபாய்ன்னு சொல்லித்தானே ஆட்டோவுல ஏறினோம். நாங்க எழுபது ரூபாய் கொடுத்துருக்கோம். அப்படீன்னா மீதி பத்து ரூபா நீ தானே கொடுக்கணும்” என்று ஆவேசமாய் கேட்டாள் கமலம்.
“என்னா சார்... இந்தம்மா இப்படி பேசறாங்க... ஆட்டோல ஆஸ்பத்திரிக்கு போறதுக்கு அறுபது ரூபாய் சொன்னது வாஸ்தவம். ஆனா, வழியில பழக்கடையில ஆட்டோவ நிறுத்தச் சொன்னீங்க. அதுல இருபது நிமிஷம் வேஸ்ட்டா போச்சு. வெயிட்டிங் சார்ஜ் பத்து ரூபா. அப்படீன்னா கணக்கு சரிதானம்மா... சார்... நீங்க சொல்லுங்க சார். நீங்கதான் சரியாச் சொல்லுவீங்க” என்றான் ஆட்டோக்காரன்.
“ஆமா கமலம்... ஆட்டோக்காரன் சொன்னதும் சரிதான். பழக்கடையில கொஞ்சம் லேட்டாயிடுச்சில்ல. அதுக்குத்தான் இந்த பத்து ரூபா. கணக்கு கரெக்ட்டுதான். நீங்க போங்க சார்...” என்று ஆட்டோக்காரனை வழி அனுப்பி வைத்தார் அய்யாசாமி.
“அடப் பாவிப் பய... இப்படி ஏமாத்துறானே... உறுப்படுவானா இவன்” என்று திட்டியபடியே அய்யாசாமியை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரி உள்ளே நுழைந்தாள் கமலம்.
பக்கத்துவீட்டு மாமி அனுமதிக்கப்பட்டிருந்த அந்த வார்டுக்குள் நுழைந்தனர் இருவரும்.
“என்ன மாமி நல்லாயிருக்கீங்களா...?” என்று குசலம் விசாரித்துக்கொண்டிருந்தாள் கமலம். ஆனால் அந்த குசும்பு பிடித்த மாமி, பழம் ஏதும் வாங்கி வந்திருக்கிறார்களா என்று, குறுகுறுவென்று கமலம் கையையும், அய்யாசாமியின் கையையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தாள்.
அதை கவனித்து, சுதாரித்துக்கொண்ட அய்யாசாமி, தொண்டையை செருமிக்கொண்டவாறே, ”சரி கமலம்... கிளம்புவோமா... விக்கி ஸ்கூல் விட்டு வர நேரமாச்சு” என்று கமலத்தை விரட்டுவதிலேயே குறியாய் இருந்தார்.
”சரிங்க... கிளம்புவோம்” என்றவள், ”மாமி... உடம்பை நல்லபடியா கவனிச்சுக்கங்க” என்றாள்.
“சரிம்மா... வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம்.” என்ற மாமி, ஆஸ்பத்திரிக்கு வரும்போது பத்து ரூபா பழம் வாங்கிட்டு வரணும்னு தெரியல... வந்துட்டா நல்லா அலங்காரம் பண்ணிக்கிட்டு, என்று மனதிற்குள் கமலத்தை திட்டி தீர்த்துக்கொண்டாள்.
“வா கமலம்... நேரமாச்சு... வெயில் வேற மண்டைய பொழக்குது... எப்படித்தான் போகப்போறமோ...” என்று அலுத்துக்கொண்டார் அய்யாசாமி.
ஆஸ்பத்திரி வெளியே அடித்த வெயிலில் கைக்குட்டையை நீளமாக விரித்து தலையில் போட்டுக்கொண்டு,
ஆட்டோவுக்காக காத்துக்கொண்டிருந்தனர்.
அங்கே துõரத்தில் வரும் வாகனத்தை கூர்ந்து பார்த்தார் அய்யாசாமி. சரிதான்... துõரத்தில் வருவது ஷேர் ஆட்டோவேதான்... அச்சச்சோ இப்போ கமலம் கேட்டா எப்படி சமாளிக்கறது... என்று நினைத்துக்கொண்டே கமலம் பக்கமாக திரும்பிப் பார்த்தார்.
ஆனால், கமலம் ஷேர் ஆட்டோவை இன்னும் கவனிக்கவில்லை.
ஷேர் ஆட்டோ நெருங்க நெருங்க இதயத்தில் சம்மட்டியைக் கொண்டு அடித்த மாதிரி இருந்தது அய்யாசாமிக்கு. அப்போதான் அந்த ஐடியா அய்யாசாமிக்குத் தோன்றியது.
‘விநாயகர் காலனி, விநாயகர் காலனி’ என்று கூவிக்கொண்டே வந்த ஆட்டோவை, களேபரமாய் திரும்பிப் பார்த்தாள் கமலம்.
ஷேர் ஆட்டோவைப் பார்த்த ஆச்சர்யத்திலும், அய்யாசாமி சொன்ன பொய்யிலும் கோபமடைந்தவள், பத்திரகாளியாய் அய்யாசாமியை திரும்பிப் பார்த்து, “என்னங்க...” என்று கூப்பிடவும்....
“அய்யய்யோ எனக்கு ஏதோ பண்ணுதே...” ன்னு அப்படியே கண்கள் இரண்டும் சொருகி, சுழண்டு கமலத்தின் தோளில் சாய்ந்தார் அய்யாசாமி.
“என்னங்க ஆச்சு உங்களுக்கு?” என்று பதறியவள்... அப்படியே அருகில் கிடந்த சேரில் அய்யாசாமியை சாய்ந்தவாறு உட்கார வைத்தாள்.
“ஏங்க... என்னைக் கொஞ்சம் பாருங்க...” என்று துடித்தவள், அய்யாசாமி வைத்திருந்த பேக்கில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுக்க படபடத்தாள்.
இதை லேசாக ஓட்டைக் கண் போட்டு, கமலம் அடைந்த படபடப்பை பார்த்தார் அய்யாசாமி. தண்ணீர் பாட்டிலை எடுத்தவள், அதைத் திறந்து தண்ணீரை எடுத்து, அய்யாசாமியின் முகத்தில் தெளித்தாள்.
கண்களை சுருக்கி லேசாக விழித்தவர்... “கமலம்... எனக்கு என்னாச்சு...?”
“ஒண்ணுமில்லேங்க... உங்களுக்கு என்னங்க பண்ணுது... ”
“ஒண்ணுமில்லை கமலம்... வெயில் ஓவரா இருக்குல்ல... அதுதான் தலை சுற்றலாகி, மயக்கம் வந்துடுச்சு.”
“இப்போ பரவாயில்லியாங்க...?”
“ஆமா கமலம். நாம ஆட்டோவுலேயே போயிடுவோம். ஷேர் ஆட்டோவுல போனா மறுபடியும் எனக்கு தலை சுத்து வந்திடும்.”
“சரிங்க... நம்ம ஆட்டோவுலயே போயிடுவோம்” என்று வந்த ஆட்டோவை மறித்து ஏறினார்கள் அய்யாசாமியும், கமலமும். அப்பாடா ஒரு வழியா... மயக்கம்போட்டு விழுந்ததை அப்படியே கமலம் நம்பிட்டா.
அய்யாசாமி... யூ ஆர் வெரி கிரேட்டுடா! பொண்டாட்டியை சமாளிக்கறத பற்றி சொந்தமா புத்தகமே போடலாம் என்று தன்னைத் தானே மெச்சிக்கொண்டார்.
ஆனா... வீட்டுக்கு போய் மறுபடியும் ஷேர் ஆட்டோ பிரச்னை பற்றி கேள்வி கேப்பாளோ... என்று நினைத்தவருக்கு உண்மையிலேயே மயக்கம் வருவது போன்று இருந்தது.‘அடடா... வெயில் மண்டைய பொளக்குதே. மார்ச் மாசமே இப்படி இருக்குதே... இன்னும் ஏப்ரல் இருக்கு. மே மாசம் இருக்கு... என்னதான் பண்ணப்போறோமோ தெரியலையே... இந்த கொடுமையில வேற, காலையில கரண்ட் வேற போயிடுது. நாடு போற போக்கைப் பார்த்தா... ஹூம்... என்னத்த பண்ணப் போறோமோ தெரியலை. பேசாம ஏதாவது ஒரு மலையில போய் டெண்ட் அடிச்சு உட்கார்ந்துட வேண்டியதுதான்... கொஞ்சம் காற்றாவது வரும்’ என்று, புழம்பியவாறே சென்ற வாரம் வந்த, வார பத்திரிகை ஒன்றை விரித்து வைத்துக்கொண்டு ‘ஆஸ்... ஊஸ்...’ என்று காற்று வீசிக்கொண்டிருந்தார் அய்யாசாமி.
“என்னங்க...” என்று கமலத்தின் குரல் கேட்க... ‘இவளுக்கு வேற வேலையே கிடையாது. லீவு அன்னிக்காவது மனுஷன கொஞ்சம் நிம்மதியா இருக்க விடறளா?’ என்று புலம்பியவர்... “என்ன கமலம், என்ன வேணும்?”.
“ஏங்க... இன்னிக்கு லீவுதானே... கொஞ்சம் கூட மாட காய்கறி வெட்டிக் கொடுங்களேன்... சமைக்கறதுக்கு கொஞ்சம் ஈஸியா இருக்கும்... சரி அதுக்கு முன்னாடி... குழம்புக்கு கொஞ்சம் கறிவேப்பிலை வேணும். கொல்லைப் பக்கம் போய், கருவேப்பிலை மரத்தில் ரெண்டு இலை பறிச்சுட்டு வந்துடுங்களேன்.”
“போறேன்... போறேன்... வேற ஏதும் வச்சிருக்கியா...? அவ்வளவுதானா...?” என்று தோளில் கிடந்த துண்டை கடாசிவிட்டு, வீறு நடைபோட்டு, கொல்லைப் பக்கம் போனார் அய்யாசாமி.
எலுமிச்சை மரங்களும், தென்னை மரங்களும் லேசாக அசைந்தாடியது. அந்தக் காற்றில் தன்னை மறந்தவர், டைட்டானிக் படத்தில் டெக்கில் கதாநாயகனும், கதாநாயகியும் கையை பப்பரப்பேன்னு விரிச்சிட்டு நிப்பாங்களே... அதுமாதிரி கை ரெண்டையும் சும்மா அகலமா விரிச்சுக்கிட்டு, கண்ணை மூடிக்கொண்டு, அப்படியே மெய்மறந்து நின்றார் அய்யாசாமி.
அந்த சமயம் பார்த்து... தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த காக்கா... செய்த சேட்டையில், அய்யாசாமி அலங்கோலமாய் நின்றார். செய்வதறியாமல் அப்படியே மேல்நோக்கி பார்த்த அய்யாசாமியை, கேவலமாய் பார்த்துக்கொண்டிருந்தது மரத்திலிருந்த அந்த காகம்.
வேறு வழியில்லாமல், எலுமிச்சை மரம் பக்கம் போனவர், ரெண்டு மூன்று இலைகளை பறித்து, மடித்து தலையில் காக்கா செய்த அசிங்கத்தை அறுவறுப்புடன் துடைத்து துõறப் போட்டார். அந்த சமயம் மெல்ல தவழ்ந்து வந்த தென்றல் காற்றில், பப்பாளி பழத்தின் வாசம் அடித்தது.
‘ஆஹா... பப்பாளி பழம் வாசம் அடிக்குதே... எங்கேயிருந்து வருகிறது... என்று சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தவர், சட்டென்று கண்களை மூடிக்கொண்டு... பப்பாளிப் பழம் வாசம் அடிக்கும் திசை நோக்கி, நன்றாக மூச்சை இழுத்து மோப்பம் பிடித்துக்கொண்டே மெல்ல நடந்தார். ஆஹா... வாசம் இன்னும் அதிகமாகுதே... அப்படீன்னா இங்கதான் எங்கேயோ இருக்குது’ என்று கண்ணை திறந்து பார்த்தார். நினைத்தது போலவே அய்யாசாமி வீட்டீன் காம்பவுன்ட் சுவர் ஓரம் அடுத்த வீட்டின் பப்பாளி மரம் சாய்ந்து நின்றது. அந்த பப்பாளி மரத்தில், இரண்டு பப்பாளி பழுத்துக் கிடந்து, ‘என்னைப் பறிச்சுக்கோ’ என்று கூப்பிடுவது போல அய்யாசாமிக்கு தோன்றியது.
‘அடடா... இந்தப் பழத்தை இப்பவே பறிச்சு ஆகணுமே!’ என்று அய்யாசாமியின் உள் மனசு துõண்டியது. எப்படி பறிக்கலாம்...? காம்பவுண்ட் சுவர் வேற... ரொம்ப உயரமா இருக்கே... என்ன செய்யலாம்? என்று யோசித்தவாறு, அப்படியே குத்தவச்சு உட்கார்ந்தார். ரொம்ப நேரம் யோசித்தவர், பேசாம... அடுத்த வீட்டில் கேட்டே பழத்தை வாங்கிக் கொள்ளலாமே, ஏன் கஷ்டப்படணும்? என்று யோசித்தவரை, ‘திருட்டுப் பழம்தான் ருசிக்கும் அய்யாசாமி’ என்று, உள்மனசு உரக்கச் சொல்லியதை அப்படியே ஆமோதித்தார் அய்யாசாமி.
‘சரி இதுதான் சரியான வழி...’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவர், வேஷ்டியை கோவணம் போல் கட்டிக்கொண்டு, அடுத்த வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை ஒட்டியவாறு வளர்ந்து நின்ற தன் வீட்டு தென்னை மரத்தில் ஏறலானார் அய்யாசாமி.
மரம் ஏறி... இல்லை இல்லை... தென்னை மரம் ஏறி முன்பின் பழக்கம் இல்லாததால்... ஏறிய உடனே தென்னைமரத்தில் பட்டைகள் வயிறு ஓரமாய் கிழித்தது. அதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல், வலுக்கட்டாயமாய் ஏறினார் அய்யாசாமி.
ஒருவழியாக தென்னை மரத்திலிருந்து, அடுத்த வீட்டின் காம்பவுன்ட் சுவற்றை பிடித்துக்கொண்டு, அடுத்த வீட்டை நோட்டமிட்டார் அய்யாசாமி. நல்ல வேளையாக அந்த வீட்டின் பின் வாசலும் பூட்டு போட்டு பூட்டியிருந்தது. அப்பாடா... வீட்டில் யாரும் இல்லை. ‘இதுதான் சமயம்... அய்யாசாமி... ம்... நடக்கட்டும்...’ என்று தனக்குத்தானே உற்சாகம் ஏற்றிக்கொண்டு, அப்படியே மரத்திலிருந்து சுவற்றிற்கு குதித்தார்.
அப்பாடா... இனிமே பழத்தை பறிச்சிடலாம் என்று, இரட்டைக்கல் காம்பவுன்ட் சுவற்றில் தவளை மாதிரி குதித்து குதித்து சென்றவர், பப்பாளி மரத்தை நெருங்கி, மஞ்சளும் சிவப்புமாக பழுத்துக்கிடந்த அடுத்த வீட்டு பப்பாளி பழத்தை அப்படியே திருகி பரித்தார். ‘அப்பா... என்ன கணம்... இன்னொரு பழமும் கிடக்கிறதே, அதையும் அப்படியே பறிச்சிடுவோம்’ என்று, முதலில் பறித்த பழத்தை இடுப்பில் அனைத்துக்கொண்டு, அடுத்த பழத்தை பறிக்க முயன்றார் அய்யாசாமி. ஆனால், ஒற்றைக் கையால் பறிக்க ரொம்ப சிரமமாக இருந்ததால், முதலில் பறித்த பழத்தை காம்பவுன்ட் சுவற்றில் வைத்தபோது, அது அப்படியே காம்பவுன்ட்டில் இருந்து உருண்டது... அதை சற்றும் எதிர்பார்க்காத அய்யாசாமி... அச்சச்சோ... என்று பழத்தை பிடிப்பதற்காக குனிந்தபோது, கால் இடறி... ‘டமார்’ என்று அடுத்த வீட்டின் காம்பவுன்ட்டை ஒட்டியுள்ள தண்ணீர் தொட்டியினுள் ‘அய்யோ அம்மா...’ சத்தமிட்டவாறே பொத்தடீர்னு விழுந்தார்.
டமார்... என்ற பயங்கர சத்தத்தைக் கேட்டு... ‘என்ன அங்கே சத்தம்...’ என்று கேட்டபடி... அடுப்பங்கறையிலிருந்து பதறியடித்து, கொல்லைப்பக்கம் ஓடிவந்தாள் கமலம்.
கொல்லைப் பக்கம் வந்தவள், கேள்விக்குறியுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். ‘ஒண்ணும் இல்லையே... பின்னே எங்கிருந்து அவ்வளவு சத்தம் கேட்டுச்சு...?’ என்று தலையை சொரிந்து கொண்டவள், ‘ஆமா... இவரை எங்கே ஆளைக் காணோம். கறிவேப்பிலை பறிக்கச் சொல்லி, சொல்லியிருந்தோமே... ஆளைக் காணோம்’ என்று அப்போதுதான் கமலம் அய்யாசாமியைத் தேட ஆரம்பித்தாள்.‘அய்யய்யோ... இப்படி ஆயிடுச்சே... என்று தட்டுத் தடுமாறி, அந்த தண்ணீர் தொட்டியில் இருந்து எழுந்தார் அய்யாசாமி. அப்பாடா நான் கும்பிட்ட சாமி என்னை கைவிடல... நல்லவேலை தொட்டியில தண்ணீர் இருந்ததால, நாம தப்பிச்சோம்... இல்லேன்னா, என்ற நினைத்தபோதே... கமலம் கண்முன் வெள்ளைப் புடவையுடன் வந்து சென்றாள்.
கமலம்... உன் தாலி கெட்டித் தாண்டி...’ என்று சொல்லிக்கொண்டே தொட்டியிலிருந்து வெளியே வந்தார். உடல், வேஷ்டி எல்லாம் தண்ணீரில் முழுவதும் தொப்பென்று நனைந்திருந்தது.
‘திருட்டுப் பழத்துக்கு ஆசைப்பட்டு... இப்படி ஆயிடுச்சே...’ என்று தன் நிலையை நொந்துகொண்டு, ‘ஆமா... நாம பறிச்ச பழத்தை எங்கே காணோம்...’ என்று சுற்றியும் முற்றியும் தேடிப்பார்த்தார் அய்யாசாமி. அந்தப் பப்பாளிப்பழம் விழுந்த வேகத்தில் உடைந்து சிதறிக் கிடந்தது.
‘அச்சச்சோ... பழமும் போச்சே... சரி... இப்போ எப்படி நாம வீட்டுக்குள்ளே போகிறது? என்று யோசித்துக்கொண்டே, மறுபடியும் சுவர் ஏறவேண்டுமே... இந்த நேரத்துல கமலம் வேற பார்த்துட்டான்னா, வேற விணையே வேண்டாம்’ என்று நினைத்துக்கொண்டு, ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தார்.
பத்து நிமிஷங்கள் கடந்திருக்கும்... சரி இதுதான் கரெக்ட் என்று ஏதோ ஒரு முடிவிற்கு வந்தவர், காம்பவுன்ட் சுவற்றில் கை வைத்து லேசாக தலையை மட்டும் நீட்டி, தன் வீட்டை நோட்டமிட்டார்.
நல்லவேளையாக... கமலம் கொல்லைப்புறத்தில் இல்லை. என்று எம்பி தவ்வி காம்பவுன்ட் சுவற்றில் ஏறினார். இந்த கலைக் கூத்தாடிகள், இரண்டு புரமும் கயிரைக் கட்டி நடக்கும்போது பேலன்ஸ் செய்வதற்காக, இரண்டு பக்கமும் கைகளை நீட்டி நடப்பார்களே! அதேபோல அய்யாசாமியும் இரண்டு கைகளையும் பேலன்ஸ் செய்துகொண்டு, அப்படியே நடந்து, தனது வீட்டு மாடிக்கு தவ்வினார்.
அப்பாடா ஒரு வழியா நம்ம வீட்டுக்கு வந்தாச்சு... இனிமே அப்படியே உடம்பையும், துணியையும் காய வச்சுக்கிட்டு, வீட்டுக்குள்ளே போயிட வேண்டியதுதான் என்று நினைத்தவர், தலையில் கை வைத்துப் பார்த்தார். இன்னும் தலை சுத்தமாக காய்ந்தபாடில்லை. அடடா தலை காயறதுக்கே இன்னும் அரைமணிநேரம் ஆகும் போலிருக்குதே என்று சலித்துக் கொண்டவர், விரலால் தலை முடியை கோதியபடி வெயிலில் உலர்த்திக் கொண்டிருந்தார்.
அதே நேரம், கமலம் அய்யாசாமியை வலை போட்டு தேடிக் கொண்டிருந்தாள். “என்னங்க... எங்க போனீங்க...?” என்று சத்தமிட்டவாறே, ஒவ்வொரு அறையாக தேடி வந்தாள். எங்கதான் போயிருப்பார். நம்மகிட்ட சொல்லாம எங்கேயும் போக மாட்டாரே... என்று புலம்பியவாரே வீட்டு முன் வாசலுக்கும், கொல்லைப்புறமுமாக பரபரப்பாக ஓடி ஓடி வந்துகொண்டிருந்தாள்.
மொட்டை மாடியில், வெயிலில் உடம்பு காய்வதற்காக குத்த வைத்துக்கொண்டிருந்த அய்யாசாமிக்கு எங்கிருந்தோ கருகிய வாடை அடித்தது.
‘அடடா... யார் வீட்டிலயோ குழம்பை அடுப்பில் வச்சிக்கிட்டு, மறந்துட்டாங்க போலிருக்கு...’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவர், மூச்சை நன்கு இழுத்துவிட்டார். கருகிய வாடை ரொம்ப பக்கத்திலே அடிக்கிற மாதிரி தெரியுதே... என்று யோசித்தபோதுதான், அச்சச்சோ... கமலம் கறிவேப்பிலை பறிச்சிக்கிட்டு வரச் சொன்னாளே... என்று அப்போதான் ஞாபகத்திற்கு வந்தவர் எழுந்திருக்க முயற்சித்தார்.
அப்போது மாடியில் இருந்த தன் வீட்டு புகைக் கூண்டிலிருந்து குபுகுபுவென்று புகை வந்தது. ‘அச்சச்சோ... குழம்பு தீஞ்சது, நம்ம வீட்டில் இருந்துதானா... கமலம் என்ன பண்ணிட்டு இருக்கா’ என்று கோபப்பட்டவர், ஆவேசமும், பரபரப்புமாய் மொட்டை மாடியிலிருந்து கீழே ஓடி வந்தார். பின் வாசலில் வழியாக வீட்டுக் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவரை, முன் வாசலில் இருந்த கமலம் பார்த்து, “என்னங்க...” என்று சினிமா கிளைமாக்ஸில் கதாநாயகி கதாநாயகனைப் பார்த்து ஸ்லோ மோசனில் ஓடி வருவார்களே... அதேபோல கணவனைப்பார்த்து ஓடி வந்தாள் கமலம்.
அந்த நேரத்தில் ஆவேசமாய் வந்த அய்யாசாமி, கிச்சனுக்குள் பாய்ந்தோடினார். அங்கே... காஸ் அடுப்பில் குழம்பு வைத்த சட்டி கருகி, அப்போதுதான் சட்டி நெளிய ஆரம்பித்திருந்தது. நெஞ்சம் படபடப்படைந்த அய்யாசாமி, சற்றும் தாமதிக்காமல் டக்கென்று அடுப்பை அணைத்தார்.
அப்போது, கிச்சனுக்குள் நுழைந்த கமலத்தை, “யேய்... குழம்பு கருகி பத்து வீட்டுக்கும் நாறுது... வீட்டுக்குள்ளே உட்கார்ந்துட்டு, அப்படி என்னதாண்டி யோசிச்சிட்டு இருக்கே” என்று அதிரடியாய் எகிறினார் அய்யாசாமி.
“அது வந்து... இல்லீங்க... உங்களை காணோம்னு தேடிட்டு இருந்தேன்.”
“நான் என்ன... ஊரைவிட்டா ஓடிப்போயிட்டேன்? குழம்பு ஏன் கருக விட்டேன்னு கேட்டா, என்னவோ பேசிகிட்டு இருக்கே...” என்று அதட்டியவர், “ஏண்டி நாற்றம் தெருவுக்கே அடிக்குது. உனக்கு மட்டும் எப்படி தெரியாம போச்சு.” “இல்லீங்க... ஒரு வாரமா மூக்கு அடைச்சிருக்கு... அதான்” என்று தலையை சொரிந்தவளை... “மூக்குத்தான் அடைச்சிப்போச்சு. கண்ணு ஒழுங்காத்தானே தெரியுது. ஏண்டி, குழம்பு கரிஞ்சி சட்டியே நெளிஞ்சி போற அளவுக்கு வீடு முழுவதும் புகை மூட்டமா இருக்கு...” என்று ஆவேசப் பட்டவரை என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று யோசித்தாள் கமலம்.
“ஆங்... இவ்வளவு நேரம் நீங்க எங்க போயிருந்தீங்க... உங்களை தேடிட்டு இருந்ததுலதான், நான் அடுப்புல வைச்சத மறந்துட்டேன்” என்றாள் கமலம்.
“நான் இங்கேதான் நின்னுட்டு இருந்தேன்.”
“இல்லையே... நான் வீடு முழுசுமா தேடிப்பார்த்தேனே... உங்களைத்தான் காணலை. ஆமா... வேஷ்டி ஏன் ஈரமா இருக்கு...” என்று அடுத்த கேள்வியைத் தொடுத்தாள் கமலம்.
“ஏய்... நான் என்ன கேட்டுட்டு இருக்கேன்... நீ என்ன கேட்டுட்டு இருக்கே... முதல்ல... அடுத்ததா என்ன குழம்பு வைக்கப்போற. அதப்பத்தி முதல்ல யோசி...” என்று வெடித்தவர், அப்பாடா ஒரு வழியா பப்பாளி சமாசாரத்தை கேட்க விடாம, கமலம் வாயை அடைச்சாச்சு...
‘அய்யாசாமி நீ கிரேட்டுடா... என்னமா சமாளிக்கிற’ என்று தன்னைத்தானே மனதுக்குள் புகழ்ந்துகொண்டார். ‘ஆமா... மூக்குகண் கண்ணாடியை எங்கே காணோம்...? அச்சச்சோ... பப்பாளி பழம் பறிக்கிற நேரத்துல... அடுத்து வீட்டு காம்பவுன்ட்டுக்குள்ளே விழுந்திருச்சா...? அடடா... கமலம் அடுத்ததா, கண்ணாடியை எங்கேன்னு கேட்கறதுக்குள்ளே... நாம கண்டுபிடிச்சு ஆகணுமே... என்று வியர்க்க விருவிருக்க வீடு முழுவதும் தேட ஆரம்பித்தார் அய்யாசாமி.“கமலம்... பேப்பர் வந்திருச்சா...?”
“இல்லீங்க... இன்னும் வரல...! வரக்கூடிய நேரம்தான். வாசலுக்குப் போங்க... கரெக்ட்டா இருக்கும்.“
எழுந்த உடனேயே இந்த பேப்பர் படிக்கலைன்னா... நமக்கு மண்டையே வெடிச்சிடும்... என்று புலம்பியவாறே... மேஜை டிராயரில் வைத்திருந்த, ஸ்பேர் மூக்குக் கண்ணாடியை எடுத்து போட்டுக்கொண்டு, வாசற் கதவைத் திறந்து, பேப்பர் வருகைக்காக காம்பவுண்ட்டிற்குள் நின்று கொண்டிருந்தார்.
‘மணி ஆறரை ஆகுது. இன்னும் இந்த பேப்பர் காரணைக் காணோம்...’ என்று எரிச்சலுடன், காம்பவுன்ட் கேட்டைத் திறக்காமலே, சுவற்றின் வழியாக எட்டி தெருவீதியைப் பார்த்தார்.
ஏமாற்றத்துடன்... கைகள் இரண்டையும், பின்னால் கட்டிக்கொண்டு, தலையை அங்கேயும், இங்கேயும் ஆட்டிக்கொண்டு உலாவ ஆரம்பித்தார்.
திடீரென்று... காற்றைக் கிழித்துக்கொண்டு... ‘பொத்’தென்று அய்யாசாமியின் தலையில் விழுந்தது, அந்தச் செய்தித்தாள்.
‘யம்மா...’ அலறியவாறு, என்று தலையை பிடித்துக்கொண்டு... விழுந்தது என்ன? என்று பார்த்தார் அய்யாசாமி.
பக்கத்தில் தினசரி ஒன்று சிதறிக் கிடந்தது.
‘அடப்பாவி... பேப்பரை இப்படி துõக்கி எறிஞ்சிகிட்டுப்போறானே...’ என்று தலையை தடவிவிட்டவாறே... ஆக்ரோஷமாய், காம்பவுன்டை எட்டிப்பார்த்தார் அய்யாசாமி. ஆனால், கண்ணுக்கெட்டும் துõரம் வரை, யாரையும் காணவில்லை.
‘இருக்கட்டும்... இருக்கட்டும்... நாளைக்கும் அவன்தானே வந்து பேப்பர் போடுவான். வரட்டும் நாளைக்கு ஒரு கைபார்த்துடுவோம்...’ என்று கீழே சிதறிக்கிடந்த பேப்பரை பார்த்தபோது, பேரதிர்ச்சி அடைந்தார் அய்யாசாமி.
‘அடப்பாவி பய... பேப்பரை வேற, மாற்றி போட்டு தொலைச்சிருக்கானே...’ என்று புலம்பிக்கொண்டே சிதறிக்கிடந்த அந்த ஆங்கில பேப்பரை பொறுக்கியவர்... களேபரமாய் பார்த்தார்.
‘இதை எப்போ படிச்சு...’ என்று குழப்பமாய் பேப்பரைப் பார்த்தவர், இரண்டு பத்தி படிக்கணும்னாலயே, டிக்ஸனரியை எடுத்து மூணுமணிநேரம் புரட்டினால்தானே ஏதாவது கொஞ்சம் புரியும். ‘காலையிலயே, நம்மள இப்படி புலம்ப விட்டுட்டானே... பாவிப்பய...’ என்று புலம்பியவாறே லேசாக வீட்டிற்குள் எட்டிப் பார்த்தார்.
கமலம் பரபரப்பாய்... வீட்டிற்குள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். விக்கி இன்னும் துõங்கிக் கொண்டுதான் இருந்தான்.
நல்லவேளை இன்னும் விக்கி எழுந்தறிக்கலை. நல்ல நாளிலேயே தமிழ் பேப்பரை படிச்சிக்கிட்டு, ஆயிரெத்தெட்டு சந்தேகம் கேட்பான். இப்போ இதை பார்த்துட்டு ஏதாவது கேட்டான்னா... அவ்வளவுதான் மானம் போயிடும். வேற வினையே வேண்டாம்... இதையே சாக்கா வச்சு... கமலமும் நம்மள கேவலமா பார்ப்பா... என்று மறுபடியும் பேப்பரை புரட்டியவருக்கு... ஒவ்வொரு அரசியல் தலைவர்கள் படமும், அய்யாசாமியின் கண்முன் மிரட்டியது.
‘சரி... இப்போ என்ன பண்ணலாம்?’ என்று யோசித்தவாறே... பேப்பரை சுருட்டும்போது, “என்னங்க...” என்று அதிரடியாய் வந்த கமலத்தின் குரலில், என்ன செய்யலாம் என்று ஒரு நிமிடம் குழம்பிப்போனவர், டக்கென்று சுருட்டிய பேப்பரை, சினிமாவில் வில்லன்கள் எல்லாம் முதுகிற்குப்பின்னால், சட்டைக்குள் அரிவாள் வைத்திருப்பார்களே, அதேபோல், முதுகில் பனியனுக்குள் பேப்பரை சொருகினார்.
மீண்டும் “என்னங்க...” என்ற கமலத்தின் குரல், அய்யாசாமியை எரிச்சல்படுத்த...
“என்னடி... இங்கேதானே நிக்கறேன்... ஏன் இப்படி காட்டுக் கூச்சல் போடுற...?”
“ஏங்க... இன்னுமா பேப்பர் வரலை? வாசல்லேயே நின்னுட்டு இருக்கீங்க...?”
“ஆமா... பேப்பர் இன்னும் வரலை. அதுதான் நின்னுக்கிட்டு இருக்கேன். சரி... உனக்கு இப்போ என்ன வேணும்...?”
“இல்லீங்க... கேஸ் காலியாயிடுச்சு...”
“என்னது...?”
“ஆமாங்க... இப்பதான் காலியாச்சு. என்னங்க பண்ணலாம்?”
“பக்கத்து வீட்டுல, எக்ஸ்ட்ரா சிலிண்டர் இருந்தா கேட்டுப் பார்க்க வேண்டியதுதானே...?”
“பக்கத்து வீட்ல யாரும் இல்லை. அவங்க ஊருக்குப் போயிருக்காங்க!”
“சரி... இப்போ என்னதான் செய்யலாம்னு சொல்ற?”
“இப்போ ஒன்னும் செய்யமுடியாதுன்னுதான் சொல்றேன்...?”
“ஏன்...?”
“ஸ்டவ்ல மண்ணெண்ணெய் இல்ல. அதனால இன்னிக்கு முழுசுமா ஓட்டல்லதான் வாங்கி சாப்பிட்டாகணும்.”
“என்னது! என்று அதிர்ச்சியான அய்யாசாமி... ஓட்டல்லயா...?”
“வேற... பட்டினியாவா கிடக்க முடியும்... வேணும்னா போய் மண்ணெண்ணெய் வாங்கிட்டு வாங்க. அப்புறமா சமைச்சு தாறேன்” என்று போட்டி போட்டுக் கொண்டு பேசினாள் கமலம்.
“ஏண்டி... நான் ஆபீசுக்கெல்லாம் போக வேண்டாமா?”
“அது உங்க இஷ்டம்...” என்ற கமலத்தின் பதிலில் எரிச்சல் அடைந்தவர், “சரி... நான் கடையில போய் மண்ணெண்ணெய் வாங்கிட்டு வந்துடறேன்...” என்று தன்னுடைய அறைக்குள் சென்றவர், முதுகிற்கு பின்னால் சொருகி வைத்த ஆங்கில பேப்பரை எடுத்து, பரனில் துõக்கி எரிந்துவிட்டு, சட்டையை போட்டுக்கொண்டு, அறையை விட்டு வெளியே வந்தார்.
இன்னும் ஆக்ரோஷமாய் இருந்த கமலம், “மாதா மாதம் உங்களோட இதேதாங்க... பிரச்னை. என்னிக்குத்தான் எக்ஸ்ட்ரா சிலிண்டர் வாங்கித் தர போறீங்களோ...?”
“ஏண்டி... நான் கையில வச்சிக்கிட்டா தர மாட்டேங்குறேன்...” என்று அய்யாசாமி ஆக்ரோஷமாய் குரலை உயர்த்த,
“இன்னொரு சிலிண்டருக்கு... ஏற்பாடு செய்யுங்களேன்னுதானே சொல்ல வாரேன். அதுக்கு ஏன் இப்படி கோபப்படுறீங்க” என்று ஆக்ரோஷமாய் பேசிக்கொண்டிருந்த கமலம், சட்டென அய்யாசாமியின் குரலுக்கு அடங்கிப் போனாள்.


காலையில் எப்படியாவது சாப்பிடவேண்டுமே; வேறு வழியே இல்லாமல் வளைந்து, நெழிந்து கிடந்த அந்த மண்ணெண்ணை கேனை எடுத்துக்கொண்டு, கமலம் கடைக்கு போயிட்டு வந்துடறேன். ஸ்டவ்வை மட்டும் எடுத்து துடைச்சு வை. இப்போ வந்துடறேன். என்று, நான்கு நாட்களாய் துவைக்காமல் ஹேங்கரை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த சட்டையை மாட்டிக்கொண்டு, நடையை கட்டினார் அய்யாசாமி.
வீதியில் நடக்க ஆரம்பித்த அய்யாசாமி, வீட்டுக்கு அருகிலேயே இருந்த பலசரக்கு கடையில், “அண்ணாச்சி... மண்ணெண்ணெய் இருக்கா...?” என்று கேட்டார்.
“இல்லீங்க சார்... கொஞ்சம் நடந்து போங்க. இந்த தெரு கடைசியிலே ஒரு சின்ன பெட்டிக் கடை ஒண்ணு இருக்கு. அங்கதான் மண்ணெண்ணெய் கிடைக்கும்.”
“ரொம்ப நன்றி அண்ணாச்சி” என்று ரெண்டு கையையும் வீசி வீசி நடக்க ஆரம்பித்தார் அய்யாசாமி.
இருபது அடி துõரம்தான் நடந்திருப்பார். “கிளி ஜோசியம்... கிளி ஜோசியம்... அய்யா கிளி ஜோசியம்... என்று மூன்று பேர் ஆளுக்கொறு கிளிக் கூண்டை துõக்கிக் கொண்டு அய்யாசாமிக்கு எதிர்ப்பில், துõரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
“டேய்... அங்க பாரு... துõரத்துல ஒரு இழிச்சவாயேன்... வர்றான். அவனை இன்னிக்கு எப்படியாவது கவத்திட வேண்டியதுதான்...” என்று ஒரு கிளி ஜோசியக்காரன், மற்றவர்களிடம் கூறினான்.
ஏதோ ஞாபகத்தில் நடந்து சென்ற அய்யாசாமி, எதிரே கிடந்த கல்லில் சடாரென்று கால் இடித்துவிட, ‘அய்யோ, அம்மா‘ என்று கத்தியவாறே... கேனை கீழே போட்டுவிட்டு குனிந்து காலைப் பார்த்தார். கால் பெருவிரல் இடித்து, லேசாக ரத்தம் வழிய ஆரம்பித்தது. ‘அச்சச்சோ... நான் என்ன செய்வேன்’ என்று புலம்பியவாறே... சட்டைப் பையில் இருந்த கைக்குட்டையை இரண்டாக கிழித்து, கால் கட்டை விரலில் இறுகக் கட்டினார்.
இதையெல்லாம் துõரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த கிளி ஜோசியக்காரன், இதுதான் சரியான சமயம்... என்று மற்ற இருவரிடம் கண்ணை காட்டிவிட்டு, அந்த குசும்பு பிடித்த கிளி ஜோசியக்காரன் மட்டும், அய்யாசாமியை மெதுவாக நெருங்கினான்.
அப்போதான், கால் கட்டை விரலை கட்டிவிட்டு நிமிர்ந்து எழுந்து நடக்க ஆரம்பித்தார்.
“சார்... கிளி ஜோசியம்; ஜோசியம் பாருங்க சார்...” என்று அருகே வந்தான்.
“யோவ்... போய்யா... காலைல வந்துட்டான். எனக்கு தலைக்கு மேல வேலை கிடக்கு... உன் ஜோசியம் எல்லாம் எனக்கு வேண்டாம். வேற யாரையாவது போய் பாரு...” என்று எரிச்சலுடன் நடக்க ஆரம்பித்தார் அய்யாசாமி.
“சார்... உங்க முக ராசிக்கு, இன்னிக்கு ஒரு ரத்தக் காயம் ஏற்படணும்னு பச்சி சொல்லுது சார், நின்னு பாத்துட்டு போங்க சார்” என்று தெருவில் படுத்து, அடம் பிடிக்காத குறையாய் ஜோசியக்காரன் கெஞ்ச ஆரம்பித்தான்.
“அட... பரவாயில்லையே... நம்ம கால்ல அடிபட்டு ரத்தம் வந்ததை, பக்கத்துல நின்னு பார்த்தது மாதிரி சரியா சொல்றானே...” என்று ஆச்சர்யபட்ட அய்யாசாமி, “சரி... ஜோசியம் பார்க்க எவ்வளவு?” என்றார்.
ரொம்ப இல்ல சார்... வெறும் அஞ்சு ரூபா மட்டும்தான்.
“பரவாயில்லையே... ஆமா... உன் கிளி கரெக்ட்டா சொல்லுமா...?”
“சார்... என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க... கரெக்ட்டா சொல்லும் சார்... கேட்டா நீங்களே அசந்து போயிடுவீங்க...” என்றான்.
“சரி எங்க வைச்சு பார்க்க? நடு ரோடா வேற இருக்கு...” என்றார் அய்யாசாமி.
“சார்... பக்கத்துல பாருங்க. ஒரு மரம் இருக்கு... அங்க போவோம் சார்” என்று அய்யாசாமியை கையைப் பிடித்து அழைத்து செல்லாதக் குறையாய் அழைத்துச் சென்றான் ஜோசியக்காரன்.
இருவரும்... அந்த மரத்தடிக்கு சென்றனர்.
ஜோசியக்காரன்... தன்னுடைய கட்கத்தில் வைத்திருந்த பாயை எடுத்து விரித்துபோட்டு, “சார்... உட்காருங்க சார்”என்று சொல்லிக்கொண்டு, கிளிக்கூண்டை பக்கத்தில் வைத்துவிட்டு, தானும் அமர்ந்து கொண்டான்.
கூண்டின் மேல் பகுதியை திறந்தான். அதில் பத்ரகாளி நாக்கை துருத்திக் கொண்டு, சூலாயிதத்தை துõக்கிக்கொண்டு மிரட்டுவது போல் இருந்தது.
“அம்மா... காளி... நான் சொல்ற வாக்கு, உண்மையா இருக்கணும். எல்லாத்துக்கும் நல்லதே நடக்கணும். அதுவும் உடனே பலிக்கணும். எதுவா இருந்தாலும், நீயே என் நாக்கில் உட்கார்ந்து அருள் சொல்லணும் ஜக்கம்மா...” என்று சொல்லிக்கொண்டே, கிண்ணத்தில் இருந்த திருநீரை நெற்றியில் பட்டையாக பூசிக்கொண்டு, போட்டோவைப் பார்த்து கும்பிட்டுக்கொண்டவன், “சார்... பார்க்கலாமா...?”
“ம்...” என்று மண்டையை ஆட்டினார்.
“சார்... நல்லா கிழக்குத் திசையைப் பார்த்து உட்கார்ந்துட்டு, தாயை வணங்கிக்கோங்க... சொல்றது எல்லாம் பலிக்கணும்னு தாயை கும்பிட்டுட்டு தட்சணையை தட்டில் வைங்க சார்” என்றான்.
ஜோசியக்காரன் சொன்னதுமாதிரி கண்களை ‘சிக்’கென்று மூடிக்கொண்டு, காளியை மிக பயபக்தியுடன் கும்பிட்டு, ஜோசியக்காரன் காட்டிய தட்டில், ஐந்து ரூபாயை எடுத்து வைத்தார் அய்யாசாமி.
“அய்யா... உங்க பேரை இனிசியலோடு சொல்லுங்க சார்”.
“பேரு... ந.அய்யாசாமி.”
“உங்க நட்சத்திரம்...?”
“ஆயில்யம், ராசி கடகம்.”
“அம்மா... நீதான் அருள் சொல்லணும், என்று இரண்டு கைகளையும் தலைக்கு மேல் வைத்து ஒரு பெரிய கும்பிடு போட்டுக் கொண்ட கிளி ஜோசியக்காரன், அம்மா... சிந்து... வெளியே வந்து சாருக்கு ஒரு நல்ல சீட்டை எடுத்துப் போடும்மா...” என்று கிளியைப் பார்த்து சொன்னான்.
ஹூம்... என்று முகத்தை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு கிளி எதிர்திசையை பார்த்துக் கொண்டது.
“சிந்து... வாம்மா... கோபப்படாதே... வாடி என் செல்லம்... அய்யாவுக்கு ஒரு நல்ல சீட்டை எடுத்துப்போடு” என்று மறுபடியும் வாஞ்சையாக கிளியைக் கூப்பிட்டான், ஜோசியக்காரன்.
அய்யாசாமி முகத்தை குறுகுறுவென கிளியை உத்துப் பார்த்தார். இவரை எதிர்கொண்டு பார்த்த கிளி, மறுபடியும் முகத்தை திருப்பிக் கொண்டது.
“சார்... என்ன சார்... கிளி சீட்டை எடுக்க மாட்டேங்குது...!”
“என்ட்ட கேட்டா... என்ன அர்த்தம்; கிளிகிட்ட கேளு”. என்று மறுபடியும் கிளியை உற்றுப்பார்த்தார் அய்யாசாமி.
“காளியாத்தா என்ன சோதனை இது...” என்று கண்ணீர் வராதக் குறையாக காளியுடன் மன்றாடிய ஜோசியக்காரன், மறுபடியும்... “சிந்து வாம்மா... உனக்கு வாழைப்பழம் வாங்கித்தர்றேன். வந்து சீட்டை எடுத்துக் குடும்மா” என்றான் ஜோசியக்காரன்.ஜோசியக்காரன் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தான். ஆனால், கிளி கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை.
என்னடா இது நமக்கு வந்த சோதனையா? இல்ல... கிளிக்கு வந்த சோதனையான்னு தெரியலையேன்னு பரிதாபமாய் ஜோசியக்காரனை வச்சக் கண் வாங்காமல் பார்த்தார் அய்யாசாமி.
“சார்... என்னன்னே தெரியலையே சார்... சிந்து எப்பவுமே ஒரு தடவை சொன்னா போதும். உடனே வந்து சீட்டை எடுத்து கொடுத்துட்டு போயிடுவா. ஆனா, இவ்வளவு நேரம் கெஞ்சுபார்த்தும் சொல்லலேன்னா ஏதோ விஷயம் இருக்கு...” என்று பயங்கரமாக பீடிகை போட்டான், ஜோசியக்காரன்.
“என்னய்யா... இது. இப்போ என்ன செய்யணும்?” என்று அப்பாவியாய் கேட்டார் அய்யாசாமி.
“கொஞ்சம் பொருங்க சார். ஆங்... உங்களுக்கு என்ன கடவுள் புடிக்கும்னு சொன்னீங்க?”
“முருகன்...!”
“அதான பார்த்தேன்...” என்று பெரிய விஷயத்தை கண்டுபிடிச்சது மாதிரி ஜோசியக்காரன் முகம் மலர்ந்தான்.
“என்னய்யா பிரச்னை?”
“அதான் சார்... நீங்க கும்புடறது, முருகன் சாமி. நான் வச்சிருக்கிறதோ பொம்பள கிளி... அப்போ எப்படி சார், சீட்டு எடுக்கும். பொம்பள கிளி, ஆம்பள சாமி கும்பிடுறவங்களுக்கு சீட்டு எடுக்காது.”
“அட... இந்த ஜோசியத்துல இவ்வளவு விஷயம் இருக்கா...?” என்று வாயைப்பிளந்தார் அய்யாசாமி.
“சரி சார்... உங்களுக்காக சிந்துகிட்ட இன்னொரு முறை சொல்லலாம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தா, கிளி சீட்டை எடுக்கும். சீட்டை எடுக்கலைன்னா, எனக்கு அதிர்ஷ்டம் இல்லைன்னு நினைச்சுகிட்டு, நீங்க தந்த அஞ்சு ரூபாயை திருப்பி தந்துட்டு போயிடுவேன்” என்றான், ஜோசியக்காரன்.
அட பரவாயில்லையே... ரொம்ப நியாயமான ஜோசியக்காரனா இருப்பான் போலிருக்கே என்று ஒரு நிமிடம் ஆச்சர்யப்பட்டே போனார், அய்யாசாமி.
அடப் பாவி... எப்படி ஏமாத்தினாலும், ஏமாற்றானே... இவன இன்னிக்கு ஒரு வழி பண்ணிடனும், என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டே, “சார்... இன்னொரு தடவை, நீங்க கும்பிடற சாமியை மனசுல வச்சு, இந்த தடவை சிந்து, சீட்டை எடுத்துக் கொடுக்கணும்னு வேண்டிக்கோங்க சார்...” என்று ஜோசியக்காரன் சொல்ல, ‘பூம்பூம்’ மாடு மாதிரி மண்டையை ஆட்டினார், அய்யாசாமி.
“அம்மா தாயி... உன் பக்தனை ஏமாத்திடாதம்மா...” என்று உக்கிரமாய் சுவாமியை கும்பிட்டவன், “அம்மா சிந்து... கொஞ்சம் வெளியே வந்து, அய்யாசாமி என்கிற பேருல ஒரு சீட்டு எடுத்துக் கொடும்மா...” என்று சொல்லிவிட்டு, கூண்டை இரண்டு தடவை கையால் தட்டினான் ஜோசியக்காரன்.
அவன் தட்டிய தட்டில், அதிர்ச்சியாய் பார்த்த கிளி, தன்னுடைய உடம்பை மெல்ல, மெல்ல அசைத்து, அசைத்து கூண்டைவிட்டு வெளியே வந்து, ‘அய்யோ பாவம் சிக்கிக்கிட்டானே...’ என்பதுபோல் அய்யாசாமியை பரிதாபமாய் பார்த்தது கிளி.
சரி... இவன் விதியை மாற்ற யாரால் முடியும் என்பதுபோல் அன்ன நடை நடந்து வந்து, ஜோசியக்காரன் எடுத்து வைத்த சீட்டை ஒவ்வொன்றாய் எடுத்து கீழே போட்டுவிட்டு, பத்தாவதாக ஒரு சீட்டை தன் அலகால் எடுத்து, ஜோசியக்காரன் கையில் கொடுத்தது.
“சார்... உங்க மனசுக்கு எல்லாம், நல்லதுதான் நடக்கும். எல்லாத்துக்கும் நன்மையேதான் நீங்க நினைப்பீங்க... உங்க அறிவுக்கு நீங்க இருக்க வேண்டிய ஆளே கிடையாது...” என்று ஜோசியக்காரன் சொன்னதும், அப்படியே உச்சிக் குளிர்ந்து போனார் அய்யாசாமி.
“ஆனா... இப்படிப்பட்ட உங்களுக்கு, இப்போ வந்திருக்கிற சீட்டை கொஞ்சம் பாருங்க சார்”னு சொல்லிக்கிட்டே அந்த சீட்டை அய்யாசாமியின் முகத்திற்கு நேராக காட்டினான், ஜோசியக்காரன்.
அந்த சீட்டில் தாலியை இழந்த பெண் ஒருத்தி, தலையை விரித்தது போன்றும், வாகனம் ஒன்று மோதி ஒருவர் விபத்தில் இறந்து கிடப்பது போன்றும் அந்த படத்தில் இருந்தது. இதைப் பார்த்ததும் ஒரு கணம் அப்படியே அதிர்ந்து, நெஞ்சே அடைத்துவிடும் போலிருந்தது அய்யாசாமிக்கு.
“சார் நான் சொல்றத விளையாட்டா நினைக்காதீங்க... இப்போ உங்க நேரமே சரியில்லை. வண்டியில போயிடாதீங்க... உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன். ஏன்னா... இன்னும் மூன்று வாரத்துல உங்க உயிருக்கே ஆபத்து வரப்போகுது சார். உங்களுக்கு பிடிக்காத யாரோதான் உங்களுக்கு செஞ்சி வச்சிருக்காங்க சார்.”
“என்னது...?”
“ஆமா சார்... உங்க வளர்ச்சியை பிடிக்காத ஒருத்தரு,உங்க காலடி மண்ணை வச்சு... செய்வினை செஞ்சிருக்காங்க. இதை உடனடியாக எடுத்து ஆகணும். இல்லாட்டி... மகமாயி...” என்று கண்களை மூடிக்கொண்டான் ஜோசியக்காரன்.
முகம் முழுவதும் வியர்வை வழிந்து, கிலி படர்ந்திருந்தது.
“ஆமா... இப்போ அதுக்கு என்ன பண்ணனும்?”
“ஒண்ணும் இல்ல சார்... ஆயிரம் ரூபா மட்டும் கொடுங்க. உங்க பேர்ல ஒரு பூஜையைபோட்டு, அந்த செய்வினையை எடுத்துடுவோம்.”
“எடுத்துட்டா...?” என்று அப்பாவியாய் கேட்டார் அய்யாசாமி.
“எடுத்தாச்சுன்னா... உங்க ஆயுசு கெட்டி சார். உங்களுக்கு நுõறு வயசு.”
“சொல்றதெல்லாம் சரிதான்... இப்போ என்ட்ட அந்த அளவுக்கு பணம் இல்லையே...!”
“அச்சச்சோ... சார்... இது உங்க உயிர் பிரச்னை. உங்களை பார்க்கறதுக்கு வேற நல்ல மனுஷனா தெரியறீங்க... உங்கள நான் அந்த ஆபத்துல இருந்து கண்டிப்பா காப்பாற்றி ஆகணுமே...” என்று ஓவரா அக்கறை கொண்ட ஜோசியக்காரன், “இப்போ உங்க கையில எவ்ளோ சார் இருக்கு?”
“முந்நுõறு ரூபாய் இருக்கு.”
“சரி சார். இப்போ உங்க கையில இருக்கிற ரூபாயை குடுங்க... இதை வச்சிக்கிட்டு, என் கையிலிருந்து எழுநுõறு ரூபாய் போட்டு உங்களுக்கு அந்த பூஜையை செஞ்சு, உங்கள அந்த கண்டத்திலிருந்து காப்பாத்திடறேன். அப்புறமா உங்ககிட்ட மீதி ரூபாயை வாங்கிக்குறேன்” என்றான் ஜோசியக்காரன்.
அப்பாடா... ஒரு வழியா ஜோசியக்காரன் புண்ணியத்துல நமக்கு மறு ஜென்மமே கிடைக்கப் போற சந்தோஷத்துல பாக்கெட்டில் இருந்த 300 ரூபாயை எடுத்து ஜோசியக்காரனிடம் நீட்டினார் அய்யாசாமி.
பணத்தை வாங்கி பாக்கெட்டில் திணித்துக்கொண்ட ஜோசியக்காரன், “சரி சார்... உங்க அட்ரஸை சொல்லுங்க...” என்று பாக்கெட்டில் இருந்து பேப்பரும், பேனாவையும் எடுத்தான்.
கொஞ்சம் யோசித்த அய்யாசாமி, தவறான முகவரியை ஜோசியக்கரனிடம் கொடுத்தார்.
“இதுதான் உங்க முகவரியா...? சரி சார் பூஜையை எல்லாம் முடிச்சுகிட்டு, நேரா உங்க வீட்டுக்கே வர்றேன்” என்று சொல்லியவனிடம் பெரிய கும்பிடு போட்டுவிட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்து, நடக்க ஆரம்பித்தார் அய்யாசாமி.
‘அப்பாடா... ஒரு வழியா தப்பிச்சுட்டோம். புத்திசாலித்தனமா அட்ரஸை மாத்தி கொடுத்ததால நமக்கு 700 ரூபா லாபம். அய்யாசாமி நீ பெரிய அறிவாளிதாண்டா’ என்று மனதுக்குள் பெருமைப் பட்டுக்கொண்டவர், தெரு கடைசியில் உள்ள அந்த டீக்கடையிடன் சேர்ந்த பெட்டிக் கடைக்குச் சென்றார்.
‘அப்பாடா... இதே மாதிரி தினமும் ஒரு இழிச்சவாயன் கிடைச்சான்னா... என் சிந்துக்கு தங்கக் கூண்டே செஞ்சிடுவேன்’னு சொல்லிக்கிட்டு, அய்யாசாமி கொடுத்த முகவரி தாளை கிழித்து போட்டுவிட்டு, அடுத்து வேற யாராவது இழிச்சவாயன் கிடைப்பானா பார்ப்போம்னு கூண்டை துõக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான் ஜோசியக்காரன்.
பெட்டிக் கடை பக்கம் நெருங்கிய அய்யாசாமி... மண்ணெண்ணெய் வாங்க வைத்திருந்த எல்லா ரூபாயையும் ஜோசியக்காரன்ட்ட கொடுத்துட்டோமே இப்ப என்ன செய்யலாம், என்று தலை சொரிந்து கொண்டவாறு பாக்கெட்டை துலாவ ஆரம்பித்தார் அய்யாசாமி.
நல்ல வேளையாக, பாக்கெட்டில் ஒரு இருபது ரூபாய் தாள், சட்டையோடு சட்டையாக ஒட்டிக் கொண்டிருந்தது.
சட்டைப் பையில் எதையோ தேடிக்கொண்டிருந்த அய்யாசாமியை, அந்தக் கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த ரெண்டு பேர் விநோதமாய் பார்த்தார்கள்.சட்டைப்பையில் ஒட்டிக்கொண்டிருந்த அந்த இருபது ரூபாயை எடுத்து, கையில் வைத்துக்கொண்டே, ‘இந்த ரூபாய்க்கு கடைக்காரன் மண்ணெண்ணெய் தருவானா?’ என்று ஆயிரெத்தெட்டு குழப்பத்தில் தலையை சொரிந்து கொண்டு, யோசித்துக்கொண்டிருந்தார் அய்யாசாமி.
விநோதமாய் நின்று கொண்டிருந்த அய்யாசாமியை, பார்த்த கடைக்காரன் “என்ன சார் வேணும், இப்படியே நின்னுக்கிட்டு இருந்தா, எப்போதான் வாங்குவீங்க” என்றான்.
“ஒண்ணும் இல்லை அண்ணாச்சி. மண்ணெண்ணெய் வேணும். உங்க கடையில இருக்கா?.” என்றார் அய்யாசாமி.
“இருக்கு. ஆனா, பிளாக்கு ரேட்தான். பரவாயில்லையா?” என்றான் கடைக்காரன்
“பிளாக் ரேட்டுன்னா... புரியலையே...” என்று கேள்விக்குறியோடு கடைக்காரனை பார்த்தார் அய்யாசாமி.
“லிட்டர்... முப்பத்தைந்து ரூபா!”
“என்னது...” என்று அதிர்ந்தவர், அடப்பாவி டீசல் விலைக்கு, மண்ணெண்ணெய் விற்கிறானே... என்று மனதிற்குள் கடைக்காரனை கருவிக்கொண்டே, தான் கொண்டு வந்திருந்த அஷ்டகோணலாக நெளிந்திருந்த அந்த கேனை, கடைக்காரனிடம் நீட்டினார் அய்யாசாமி.
ஒரு தடவைக்கு இரண்டு தரம், கேனையும், அய்யாசாமியையும் மாற்றி, மாற்றி கேவலமாய் பார்த்த கடைக்காரன்,
“எவ்ளோ சார் எண்ணெய் வேணும்” என்று கேட்டான்.
“ம்... இருபது ரூபாய்க்கு கொடுங்க, போதும்”
“சார்... இருபது ரூபாய்க்கெல்லாம் வராது. ஒண்ணு அரை லிட்டர் வாங்குங்க... இல்லாட்டி ஒரு லிட்டரா வாங்குங்க. எப்படி வாங்கிக்கிறீங்க?” என்றான் கடைக்காரன்.
அரை லிட்டர்னா... 17.50 ரூபாய்தான் வரும். இரண்டரை ரூபாய் மிச்சம். என்று மனதிற்குள் கணக்கு போட்டு பார்த்த அய்யாசாமி, “அரை லிட்டர் கொடுங்க போதும்...” என்றார்.
கேனில் அரை லிட்டர் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொடுத்த கடைக்காரன், “ரூபா கொடுங்க சார்” என்றான்.
“இ.. இந்தாங்க...” என்று, கடைக்காரன் நீட்டிய கேனை வாங்கிக்கொண்டு, தான் கையில் வைத்திருந்த, அந்த நைந்து நாறாய் போன, அந்த இருபது ரூபாய் தாளை எடுத்து நீட்டினார் அய்யாசாமி.
ரூபாயை கையில் வாங்கிய கடைக்காரன், நான்காய் மடித்திருந்த அந்த இருபது ரூபாய் நோட்டை எடுத்து, துõக்கி விரித்துப் பார்த்தான். அந்த நோட்டில் காந்தித் தாத்தா கண்ணாடி வழியாக, வந்த சூரிய ஒளி, கடைக்காரன் கண்ணில் விழுந்து, கண்ணை கூசச் செய்தது.
“சார்... நோட்டு செல்லாது!”
“என்னது... நோட்டு செல்லாதா” என்று அதிர்ந்தார் அய்யாசாமி!
“ஆமா சார்... பாருங்க எவ்வளவு பெரிய ஓட்டை இருக்குன்னு...” என்று அய்யாசாமி முகத்திற்கு நேராக அந்த இருபது ரூபாய் தாளை விரித்துக் காட்டினான் கடைக்காரன்.
“அய்யோ மண்ணெண்ணெய் போச்சா...” என்று நினைத்தபோதே, அய்யாசாமிக்கு கண்களை இருட்டிக்கொண்டு, லேசாக தலை சுற்றுவது போல இருந்தது.
“சார்... வேறு ஒரு நோட்டைத் தாங்க.” என்று கடைக்காரன் கொடுத்த குரலில், நினைவுக்கு வந்தவர், லேசாக தயங்கியபடி...“வேற நோட்டு இல்லை” என்றார்.
“என்ன சார்... காலையில இந்த செல்லாத நோட்டை, நான் யாருகிட்ட போய் மாத்துவேன்” என்றான் கடைக்காரன்.
“இல்ல அண்ணாச்சி... நீங்க ஒரு பத்து நிமிஷம் குடுத்தீங்கன்னா... நான் வீட்ல போய், ரூபா எடுத்துட்டு வந்து தந்துடறேன்” என்று அப்பாவியாய் சொன்னார் அய்யாசாமி.
அய்யாசாமியை ஒரு தடவை ஏற இறங்க பார்த்த கடைக்காரன், “சரி சார்... போய் எடுத்துட்டு வாங்க!”
“அப்படீன்னா... அந்த ரூபாயைத் தாங்க.”
“நீங்க நல்ல ரூபாய் நோட்டை குடுத்துட்டு, இந்த ரூபாயை வாங்கிக்கோங்க” என்று புத்திசாலியாய் சொன்னான் கடைக்காரன்.
“சரி அண்ணாச்சி, நான் போய், ரூபாயை கொண்டு வந்துடறேன்” என்று சொன்ன அய்யாசாமி, விட்டால் போதும் என்று நடையைக் கட்டினார்.
நடந்து சென்றுகொண்டிருந்த அய்யாசாமியின் காலில் ஏதோ சில்லென்று சொட்டு, சொட்டாய் ஏதோ விழுவது போன்று இருந்தது.
என்னது இது என்று குனிந்து பார்த்தவருக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
ஏற்கெனவே அஷ்டகோணலாய் நெளிந்திருந்த அந்த மண்ணெண்ணெய் கேனின் அடிப்பகுதி, லேசாய் ஓட்டை விழுந்து அதிலிருந்து மண்ணெண்ணெய் கசிய ஆரம்பித்தது.
அச்சச்சோ... இருக்கிற மண்ணெண்ணெயும் இப்படி ஒழுக ஆரம்பிச்சதுன்னா... வீட்டுக்கு வெறும் கேனோடதான் போகணும். அப்படி மட்டும் போனோம்னா அவ்வளதுதான். கமலம் பத்திரகாளியாய் மாறிடுவா என்று பதறியபடி, என்ன செய்யயலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்.
ஜோசியக்காரன் சொன்னதுபோல எல்லாமே கெட்டதாவே நடக்க ஆரம்பிச்சுடுச்சே... என்று தனக்குள் புலம்பியவாறே நடந்து வந்த சாலையை சுற்றும் முற்றும் பார்த்தார்.
ஹைய்யா... கிடைச்சிடுச்சு என்று துள்ளிக் குதிக்காதக் குறையாய், சாலையில் ஓரமாய் ஒட்டிக்கொண்டிருந்த தாரை, பார்த்தார்.
கேனை வைத்துக்கொண்டு குத்த வைத்து உட்கார்ந்து கொண்டவர், மெல்ல மெல்ல அந்த தாரை, கையால் லாவகமாய் நோண்டி எடுத்தார்.
அது ஒரு சிறு உருண்டை அளவிற்கே கிடைத்தது. அந்த உருண்டையை அப்படியே, ஒழுகிக் கொண்டிருந்த கேனின் அடிப்பரப்பில் வைத்து ஒட்டினார்.
அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்து கொண்டிருந்த சிறுவன், நடு வீதியில் ஒரு பெரியவர் இப்படி குத்தவைத்து என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது போன்று விநோதமாய் திரும்பித், திரும்பி பார்த்துக் கொண்டே சென்றான்.

தாரை வைத்து லாவகமாக கேனில் ஒட்டியதும், மண்ணெண்ணை ஒழுகுவது நின்றது. அப்பாடா ஒருவழியா சரி பண்ணிட்டோம் என்ற திருப்தியில், ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு சென்றார்.
வீட்டு வாசலை நெருங்க மணி ஒன்பதைத் தொட்டது. வாசலில் காலடி எடுத்து வைக்கவும், வீட்டிலிருந்து ஸ்கூல் பேக்குடன் ஓடிவந்தான் விக்கி.
“என்னடா... சாப்பிடாம எங்கே புறப்பட்டுட்டே...?” என்று கேட்டார் அய்யாசாமி.
“கிளாஸுக்குப் போறேன்பா...!” என்று புத்தகத்தை சைக்கிள் கேரியரில் வைத்துக்கொண்டே கூறினான் விக்கி.
“ஏன்டா பரீட்சைதான் முடிஞ்சி போச்சே... இன்னும் என்ன கிளாஸ்?”
“அடுத்த வருஷத்துக்கான ஸ்பெஷல் கோச்சிங் கிளாஸ்ப்பா...!”
பையன் படிப்பு மேல உள்ள ஆர்வத்தைப் பார்த்த அய்யாசாமி... “பார்த்து போடா கண்ணா...” என்றவர், “தம்பி நீ சாப்ட்டியா?”
“ம்... சாப்டாச்சுப்பா... நான் கிளம்பறேன்...” காலில் சக்கரத்தைக் கட்டி கிளம்பறதைப்போல விருட்டென்று கிளம்பினான். வாசலில் நின்றுகொண்டு, தெருவின் கடைசி முனை திரும்புற வரைக்கும் வச்சக்கண்ணு வாங்காமல் பையனையே பார்த்துக்கொண்டிருந்தார் அய்யாசாமி.
“பையன் படிக்கிற படிப்பை பார்த்தா... அடுத்த வருஷம் பத்தாம் வகுப்புல ஸ்டேட் ரேங்க் வாங்குவான் போல...” என்று தனக்குள்ளேயே பூரிப்படைந்தவர், “கமலம்...” என்று குரல் கொடுத்தார்.
வீடே மயான அமைதியாய் இருந்தது. என்னாச்சு... கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் கமலத்தைக் காணோமே... என்று திகிலடைந்தவர், “கமலம்... ஏண்டி கமலம்” என்று மறுபடியும் வாசலில் நின்று ஏலம் போட்டார்.
வீட்டினுள் அந்த அமைதி இன்னும் நீடித்தது. என்னாச்சு இவளுக்கு என்று கேனை கோபத்தில் ‘பொடேர்’ என்று தரையில் வைத்தவர், வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு... விசுக்கு விசுக்குன்னு வீட்டிற்குள் நடந்தார். ஒவ்வொரு ரூமாய் எட்டிப்பார்த்தார்.
எந்த ரூமிலேயும் காணோம். பின் கதவு வேறு சாத்தப்பட்டிருந்தது. என்னாச்சு வீடு முழுசும் தேடியாச்சு. எங்கே போயிட்டா...? என்று பதைபதைத்தவருக்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது. மறுபடியும் வீட்டிற்குள் தேட ஆரம்பித்தவருக்கு லேசாக புகை வாடை அடித்தது.
புகை வருதே... எங்கே இருந்து வருது என்று திரும்பிப் பார்த்தபோது, பின் வாசல் கதவு துவாரத்தின் வழியாகத்தான் அந்தப் புகை வந்துகொண்டிருந்தது.
பதறிப்போய் ஓடிய அய்யாசாமி, படாரென்று அந்த கதவைத் திறந்தார். அங்கே தோட்டத்தில் ஒருதென்னை மரத்தின் அடியில் ‘குபுகுபு’வென்று புகை கிளம்பியபடி இருந்தது. அந்த புகை மூட்டத்திற்கு உள்ளே கமலம் குனிந்து உட்கார்ந்திருந்தாள்.
கமலம்... என்று பதறியடித்துக்கொண்டு... புகை வந்த இடத்திற்கு ஓடிச்சென்றார் அய்யாசாமி.
அய்யாசாமியின் அபயக் குரலை கேட்டதும், பதறியடித்துக்கொண்டு எழுந்த கமலம், “என்னாச்சுங்க...?” என்று எழுந்தாள்.
“இங்க என்னடி பண்ற...? ஒரே புகையா இருக்கு...!” என்றார் அய்யாசாமி.
“ம்... ஏங்க மண்ணெண்ணை வாங்க எப்போ போனீங்க...? இப்போ வர்றீங்க! கொஞ்சம் கூட உங்களுக்கு பொறுப்பு இல்லீங்க. விக்கி வேற பசிக்குதுங்கிறான். உங்களுக்கு ஆபீசுக்கு போறதுக்கு டைம் ஆயிடுச்சு. எண்ணை வாங்கப் போன உங்களையும் காணல. நான் என்ன பண்ணட்டும். அதான், காம்பவுன்டில் கெடந்த தென்னை மட்டையை வைத்து சமையல் செஞ்சுட்டு இருக்கேன்.”
“சரி... மண்ணெண்ணை வாங்க போனீங்களே... ஏன் இவ்வளவு நேரம்? கிடைச்சுதா இல்லையா...?” என்று அடுத்த தென்னை மட்டையை அடுப்பினுள் தினித்தக்கொண்டே கேட்ட கமலம் எரிச்சலுடன் அய்யாசாமியைப் பார்த்தாள்.
“ம்... ஒரு வழியா வாங்கிட்டேன்.”
“ஆமா... கேனை எங்கே காணோம்” என்று கேட்டாள் கமலம்.
“வீட்டு வாசல்ல வச்சிருக்கேன். வா... வந்து எடுத்துக்கோ” என்று சொல்லிவிட்டு, வீட்டின் முன் அறைக்கு நுழைந்த அய்யாசாமியை நுõல்பிடித்தமாதிரி பின்தொடர்ந்தாள் கமலம்.
முன்பக்க ரூமைப் பார்த்ததும் அய்யாசாமிக்கு பகீர் என்றது.
“என்னங்க... என்னதுங்க இது...?” என்று பதறியடித்துக்கொண்டு உள் ரூமிற்கு ஓடிப்போனாள் கமலம்.
‘கடவுளே இது என்ன சோதனை?’ என்று சொல்லியவாறே... தலையில் கை வைத்துக்கொண்டு, கேனில் இருந்து ஒழுகி ஓடிய மண்ணெண்ணையை வச்சக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் அய்யாசாமி.
“ஏங்க... மண்ணெண்ணை இப்படி ஆறு மாதிரி ஓடிக்கிட்டு இருக்கு... என்ன வேடிக்கை பார்த்துட்டு நிக்கறீங்க?” என்று கத்தினாள் கமலம்.
இவ வேற நிலைமை தெரியாம பேசுவா... என்று மனதிற்குள் புலம்பியவாறே, நம்மதான் தாரை வைத்து கேனை அடைச்சோமே... பின்ன எப்படி ஒழுகுது என்று சந்தேகத்துடன், அந்த கேனை துõக்கிப் பார்த்தார்.
கேனில் ஒட்டியிருந்து அந்த தார் உருண்டை காணாமல் போயிருந்தது. அடடே... ஒட்டி வைச்ச தாரைக் காணோமே. எங்க போச்சு...? என்று சுத்தி சுத்தி தேடிப்பார்த்தார்.
அது கேன் இருந்த இடத்தில் தரையோடு தரையாக ஒட்டிப்போயிருந்தது. கண்ணாடியை சரிசெய்துகொண்டு தார் இருந்த எடத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் அய்யாசாமி.
“அங்க என்னத்த உத்துக்கிடந்து ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்க...? கூட மாட ஒத்தாசைக்கு கொஞ்சம் உதவி செய்யுங்களேன்...” என்று அடுத்த அறைக்கு ஓடிக்கொண்டிருந்த மண்ணெண்ணையை துணியை வைத்து அணைக் கட்டிக்கொண்டிருந்தாள் கமலம்.அடுத்த அறைக்கு ஓடிக்கொண்டிருந்த மண்ணெண்ணையை அணைக்கட்டிக்கொண்டிருந்தாள் கமலம்.
இன்னமும் எண்ணெய் எப்படி கொட்டியது என்று ஆழ்ந்த சிந்தனையிலேயே இருந்தார் அய்யாசாமி.
“ஏங்க... நின்னுக்கிட்டு, அப்படி என்னத்தான் யோசிச்சிட்டு நிப்பீங்களோ”ன்னு கேட்ட கேள்வியில் சிந்தனை களைந்தார் அய்யாசாமி.
“இப்ப நான் என்ன பண்ணட்டும்?” என்று அப்பாவியாய் கேட்டார் அய்யாசாமி.
“ஏங்க... நான் தெரியாமத்தான் கேட்கறேன்... மண்ணெண்ணை எவ்வளவு வாங்கிட்டு வந்தீங்க...? கொஞ்சம்தான் கீழே கொட்டியிருக்கு. ஆனா, கேன்ல ஒரு சொட்டுக்கூட எண்ணை இல்லையே...?” என்று கேட்டாள் அய்யாசாமி.
“அ...து... வந்து அரை லிட்டர்தான் வாங்கிட்டு வந்தேன்.”
“ஏன்...?”
திடீர்னு ஏன்னு கேட்டா என்னன்னு சொல்ல... என்று மண்டையை சொரிந்து கொண்டவர், கடையிலேயே மொத்தமே அரைலிட்டர்தான் இருந்துச்சு. அதுவும் தரமாட்டேன்னுதான் சொன்னான். அப்புறம் நான்தான் சண்டைப் போட்டு வாங்கிட்டு வந்தேன் என்று சமயோசிதமாய் புழுகினார் அய்யாசாமி.
“சரிங்க... அதுக்கு, இவ்வளவு நேரமா ஆகும்?” என்று சந்தேகத்தோடு கேட்டாள் கமலம்
“ஏய் என்ன நீ கேள்விக்கு மேல கேள்வியாய் கேட்டுக்கிட்டு கிடக்கே...?” என்று கோபப்பட்டவர், “ஒரு விஷயம் தெரியுமா... இன்னிக்கு உன் நெற்றியில இருக்கிற குங்குமம் இருக்கிறதே... அந்த கடவுளோட கருணைதான் தெரிஞ்சுக்கோ,” என்று தடாலடியாக அய்யாசாமி போட்ட குண்டில்.
குபீர் என்று அதிர்ச்சியானாள் கமலம்.
“என்னங்க சொல்றீங்க...?” என்று பதறினாள்.
“முதல்ல என் கால் கட்டை விரலைப் பார் உனக்கே புரியும்”. என்று ஒற்றைக்காலை மட்டும் துõக்கி, இந்த நடராஜர் சிலை எல்லாம் நிட்குமே அதுமாதிரி துõக்கி நின்றார்.
அந்த விரலில் கண்ணுக்கே தெரியாதமாதிரி ஒரு சின்ன துணியால் கட்டு போட்டிருந்தது. அதைப் பார்த்த பதறிப்போன கமலம்... “என்னங்க ஆச்சி... இவ்வளவு பெரிய கட்டுப் போட்டுறிக்கீங்க” என்று பதறிப்போய், உணர்ச்சிவசப்பட்டவள், படாரென்று அய்யாசாமியின் காலைப் பிடித்து இழுத்தாள்.
கமலம் இப்படி செய்வாள் என்று கொஞ்சமும் எதிர்பாராத அய்யாசாமி, நிலைதடுமாறி கீழே விழச்சென்றவர், அருகிலுள்ள வாசல் நிலைக் கம்பை தாங்கிப் பிடித்து நின்றார்.
“என்னங்க ஆச்சு... ரத்தம் ரொம்ப போயிருக்கும் போலஇருக்கே”ன்னு கவலைப்பட்டவளிடம், அய்யாசாமி... “கமலம் இன்னிக்கு நான் நடந்து போயிட்டு இருந்த நேரத்துல, ஒரு கிளி ஜோசியக்காரன் வந்தான். என்னை முன்னப் பின்ன பார்க்காதவன், என்னைப்பார்த்ததும்... சார் உங்களுக்கு ஒரு பெரிய கண்டம் ஒண்ணு இருக்கு. அதுமட்டுமல்லாம உங்க ராசிக்கும், நடக்குற நேரத்துக்கும் பார்த்தா... உங்க உடம்புல இருந்து கண்டிப்பா, இப்போ ரத்தம் போயிருக்கணுமேன்னு ரொம்ப கரெக்ட்டா சொன்னான். அவன் அப்படி சொல்றதுக்கு பத்து நிமிஷத்துக்கு முன்னாடிதான் எனக்கு காலில் அடிபட்டு ரத்தம் வந்துச்சு.”
“எப்படிங்க இவ்வளவு கரெக்ட்டா சொன்னான்?” என்று வாயைப் பிளந்தாள் கமலம்.
“ம்... இன்னும் சொல்றேன் கேளு” என்ற அய்யாசாமி... “எவனோ... என் உசுருக்கு நாள் குறிச்சிட்டான்”னு சொன்னதும் கமலம் அதிர்ச்சியாகி, இரண்டு கன்னத்திலும் கை வைத்துக்கொண்டு அய்யாசாமியையே வெறித்துப் பார்த்தாள்.
“ஆமாண்டி... கமலம் என்னோட வளர்ச்சியைப் பிடிக்காத ஒருத்தன், என் உயிரையே எடுக்கறதுக்கு செய்வினை வச்சிருக்காங்க.”
“ஏங்க... ஆபீஸ்ல உங்க கூட வேலைப் பார்க்கிறானே... கிரகம் புடிச்சவன் குமாரு, அவனா இருக்குமோ. அவன்தான் அப்போ அப்போ உங்களப் பார்த்து முறைச்சிட்டு அலையறான்னு சொன்னீங்க. அதுமட்டுமல்லாம எப்போ பார்த்தாலும் எவனையாவது கெடுக்கறதுக்காக எலுமிச்சம்பழம் உருட்டுவான்னு சொல்வீங்களே அவனாத்தான் இருக்கும், நாசமாப்போறவன்...” என்று எள்ளும் கொள்ளும் வெடித்தாள் கமலம்.
“இல்லடி... அவனா இருக்காது. ஏன்னா... ஆண்டவன் எப்போதும் நம்ம பக்கம்தான். எவன் என்னத்த உருட்டினாலும் இந்த அய்யாசாமிகிட்ட அந்த பாச்சா பலிக்குமா என்ன? ஆனா, சும்மா சொல்லக்கூடாதுடி... கிளிஜோசியக்காரன் அவ்வளவு கரெக்ட்டா சொன்னது மட்டுமல்லாம... அந்த செய்வினையை இன்னிக்கே எடுத்துடுவேன்னு சொன்னான்.”
“எப்படிங்க...?” என்று ஆர்வமாய் கேட்டாள் கமலம்.
“அதுக்கு தனியா யாகம் எல்லாம் நடத்தப் போறானாம். ஆயிரம் ரூபாய் கேட்டான். நான்தான் புத்திசாலித்தனமா... முன்னுõறு ரூபாயில மேட்டரை முடிச்சுட்டேன்.” என்றார் அய்யாசாமி.
“ஏங்க... அவன் கேட்டதோ ஆயிரம் ரூபாய். நீங்க முன்னுõறு ரூபாய்தான் கொடுத்துருக்கீங்க... உங்க உசுருக்கு ஏதும்...?” என்று கண் கலங்கினாள் கமலம்.
“ஒண்ணும் ஆகாதுடி... நீ ஒண்ணும் பயப்படாதே...!” என்று கமலத்தை தேற்றினாள் அய்யாசாமி.
அய்யாசாமியை வச்சக்கண் வாங்காமல் பார்த்த கமலம், தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு... மாரியாத்தா என் புருஷனை காப்பாத்து... என் தாலிக்கு மட்டும் எந்த பங்கமும் வரவச்சிறாதே...ன்னு வேண்டிக்கிட்டவள், “ஏங்க... நீங்க வேணா... ஆபீசுக்கு ஒரு மாசம் லீவு போட்டுடுங்களேன்” என்றாள்.
“என்னடி சொல்ற கமலம்? உனக்கு என்னாச்சு?” என்று விநோதமாய் கேட்டார் அய்யாசாமி.
“ஆமாங்க... ஆபீசுக்கு போற வழியில உங்களுக்கு ஏதாச்சும் ஒண்ணு நடந்துச்சுன்னா... நாங்க என்னங்க பண்றது?” என்று கிலி பிடித்தவளாய் பேசினாள் கமலம்.
“அப்படியல்லாம் ஒண்ணும் ஆயிடாதுடி. நீ கவலைப்படாதே... அதுதான் ஜோசியக்காரன் சரி செய்துடுவேன்னு சொல்லியிருக்கானே...” என்று தேற்றிய அய்யாசாமி, “கமலம்... அதுமட்டுமில்லாம... அடுத்த வாரம் ஆபீஸ் விஷயமா திருநெல்வேலி வரைக்கும் போக வேண்டியதுருக்குடி. அதனால கண்டிப்பா ஆபீசுக்கெல்லாம் லீவு போட முடியாது” என்று கடமையுணர்ச்சியுடன் பேசினார் அய்யாசாமி.
“ஏங்க... டிபன் செஞ்சி கொண்டு வரட்டுமா... பாவம் பசியோடு இருப்பீங்கன்னு கலங்கியிருந்த கண்களை முந்தானையால் துடைத்துக்கொண்டவள், ஆண்டவா என் புருஷனை நீதான் காப்பாத்தணும்னு சொல்லிக்கொண்டே, துணியால் வழித்தெடுத்த மண்ணெண்ணெயை ஒரு டப்பாவில் எடுத்துக்கொண்டு அடுப்பங்கறைக்கு விரைந்தாள் கமலம்.
ம்... உலகம் தெரியாதவளா இருக்காளே கமலம்... இருந்தாலும் கமலத்துக்கு ரொம்பதான் பாசம் என்று புலங்காகிதம் அடைந்த அய்யாசாமி... சோடாப்புட்டி கண்ணாடியைக் கழற்றி மேஜையின் மீது வைத்தார்.“கமலம்... நேரமாகுது... ரெடிபண்ணிட்டியா...?” என்று அவசரப்படுத்தினார் அய்யாசாமி.
“பொறுங்க... ஏங்க இப்படி அவசரப்படுத்துறீங்க...?” என்று ஒரு பெரிய பையில் ஊருக்கு கிளம்புவதற்கான ஏற்பாடுகளை ஜரூராக ரெடி செய்து கொண்டிருந்தாள் கமலம்.
“ஏங்க... டிரெயின் டிக்கெட் எல்லாம் எடுத்துட்டீங்களா?” என்று அக்கறையாய் கேட்டாள் கமலம்.
“டிக்கெட் எல்லாம்... ஆபீஸ்லேயே எடுத்துருப்பாங்க...” என்று பெருமையாக சொன்னார் அய்யாசாமி.
“செகண்ட் கிளாஸா? பர்ஸ்ட் கிளாஸாங்க?” என்று ஆர்வமாய் கேட்டாள் கமலம்.
“பர்ஸ்ட் கிளாஸ் ஏசின்னு ஆபிஸ்ல பேசிட்டு இருந்தாங்க. ஏசியாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்” என்று புன்னகையோடு பதிலளித்தார் அய்யாசாமி.
“ஏங்க... போறதெல்லாம் சரிதான். ரொம்ப ஜாக்கிரதையா பார்த்து போங்க” என்று கவலைப்பட்டாள் கமலம்.
“பயப்படாதேடி... ஜாக்கிரதையா போயிட்டு வந்துருவேன்.”
“இருந்தாலும்... ரொம்ப ஜாக்கிரதைங்க. டிரெயின்ல இன்ஜின்ல இருந்து 6வது அல்லது 7வது பெட்டி தாண்டி உட்காருங்க... ஏங்க ஏசி கம்பார்ட்மெண்ட் எல்லாம், என்ஜின்ல இருந்து தள்ளித்தானே இருக்கும்” என்று கவலையாக கேட்டாள் கமலம்.
“ஏண்டி... உனக்கு என்னாச்சு? ஏன் இப்படியெல்லாம் கேள்வி கேட்கறே” என்றார் அய்யாசாமி.
“இல்லீங்க... ஏற்கனவே ஜோசியக்காரன் உங்களுக்கு கண்டம் இருக்குன்னு சொல்லியிருக்கான். அதுமட்டுமல்லாம இப்போவெல்லாம் டிரெயினை யாரல்லாமோ ஓட்டுறாங்களாம். பேப்பர்ல படிச்சேன். அதாங்க... நீங்க ஊருக்கு போறேன்னு சொன்னதும் எனக்கு கையும் ஓடலை. காலும் ஓடலை” என்று கவலைப்பட்டாள் கமலம்.
ஒரு வகையில் கமலம் சொன்னது, அய்யாசாமியின் மனதில் கிலி ஏற்படுத்தினாலும், முகத்தில் அந்த கலவரத்தை கொஞ்சமும் காட்டிக்கொள்ளாமல், “அதல்லாம் பயப்படாதேடி கமலம்... அப்படியெல்லாம் அவ்வளவு சீக்கிரத்துல உன்னை விட்டு போயிடமாட்டேன்...” என்று கமலத்திற்கு தைரியம் ஊட்டினார் அய்யாசாமி.
“சரி கமலம்... ரொம்ப நேரமாயிடுச்சு நான் கிளம்புறேன். வீட்டை பூட்டிக்கிட்டு ஜாக்கிரதையா இருங்க. நான் திருநெல்வேலிக்கு போயிட்டு உனக்கு போன் பண்றேன்” என்று கமலம் தயார் செய்து வைத்திருந்த பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு ஆபிசுக்கு விரைந்தார் அய்யாசாமி.
ஆபிசுக்குள் நுழைந்து தனது சீட்டில் போய் அமர்ந்தார் அய்யாசாமி.
மேனேஜர் அறையில் இருந்து வெளிவந்த டைபிஸ்ட் செல்லையா, “குட்மார்னிங் அய்யாசாமி சார்.”
“வாங்க செல்லையா... என்ன, சார் வந்தாச்சா?” என்று கேட்டார் அய்யாசாமி.
“சார் உங்களை வரச்சொன்னார்” என்று சொல்லிவிட்டு செல்லையா மேனேஜர் ரூமிற்குள் நுழைந்தார்.
டிக்கட் கொடுக்கறதுக்குத்தான் உள்ளே வரச் சொல்றார். அப்பாடா... முதல் முறையா ஏசி கோச்சுல டிரெயின்ல போறோம். என்று சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்காத குறையாக மேனேஜர் ரூமில் வலது காலை எடுத்து வைத்தார் அய்யாசாமி.
“வாங்க... அய்யாசாமி...” என்று அழைத்தார் மேனேஜர் கோதண்டம்.
“குட்மார்னிங் சார்...” என்று ராணுவத்தில் சல்யூட் எல்லாம் அடிப்பாங்களே அந்த மாதிரி பலமாக வணக்கம் போட்டார் அய்யாசாமி.
“திருநெல்வேலிக்கு போறதுக்கு, எல்லா ஏற்பாடும் பண்ணிட்டீங்களா...? ஈவ்னிங் டிரெயின் ஓ.கே.தானே” என்றார் மேனேஜர்.
“யெஸ் சார்... எவ்ரிதிங் ஓ.கே. சார். நீங்க டிரெயின் டிக்கட் மட்டும் கொடுத்துட்டீங்கன்னா... நான் மூணு மணிக்கெல்லாம் கிளம்பிடுவேன் சார்” என்றார் அய்யாசாமி.
“அய்யாசாமி... உங்களுக்கு முதல்ல ஏ.சி. கோச்சிலதான் டிக்கெட் புக் பண்ண சொல்லியிருந்தேன். ஆனா...” என்று இழுத்தார் மேனேஜர் கோதண்டம்.
“ஆனா... என்ன சார்... டிக்கெட் கிடைக்கலையா...? பரவாயில்லை சார். செகண்ட் கிளாஸிலாவது கிடைச்சிருக்கே. அதுவரை ஓ.கே.” என்று சோகமாக சொன்னார் அய்யாசாமி.
“பொறுங்க... அய்யாசாமி. நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. ஏ.சி. கோச்சுல டிக்கெட் கிடைக்காததால... செகண்ட் கிளாஸுலேயாவது டிக்கெட் புக் பண்ணலாம்னு நினைச்சோம். ஆனா... பாருங்க. இது சம்மர் சீசன் பாத்தீங்களா... அதனால செகண்ட் கிளாஸுலயும் டிக்கட் கிடைக்கல. அதனால...?” என்று இழுத்தார் மேனேஜர்.
“அதனால என்ன சார்?” என்று பதட்டமானார் அய்யாசாமி.
“அதனால... இப்போ உங்களுக்கு அன் ரிசர்வ் கம்பார்ட்மண்ட்லதான் டிக்கெட் எடுத்திருக்கோம். டிரெயின் அஞ்சு மணிக்கு கிளம்பும். ஆனா... நீங்க மூணு மணிக்கெல்லாம் ஸ்டேசன்ல க்யூவுல நின்னாதான் உட்காரதுக்கே சீட் கிடைக்கும்” என்று மேனேஜர் சொல்லி முடிக்கவும்... ஒரு நிமிடம் அய்யாசாமிக்கு நெஞ்சு அடைத்தது.
“அய்யாசாமி...” என்று குரல் கொடுத்த மேனேஜர், எடுத்து வைத்திருந்த டிக்கெட்டை அய்யாசாமியின் கையில் திணித்தார்.
“ஓ.கே. அய்யாசாமி. நீங்க போயிட்டு ஆபிஸ் வேலையெல்லாம் முடிச்சிட்டு... மூணு நாள்ல திரும்பி வந்துடணும். நீங்க ரிட்டர்ன் வர்றதுக்கு திருநெல்வேலி ஆபீஸ்ல இருந்து டிக்கெட் எடுத்து கொடுப்பாங்க” என்றார் மேனேஜர்.
“அய்யாசாமி... இப்பவே மணி 12 ஆச்சு. நீங்க... இப்பவே கிளம்பினாத்தான் கரெக்ட்டா இருக்கும்” என்று வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவிட்டு புண்சிரிப்போடு சேரில் அமர்ந்தார் கோதண்டம்.
டிக்கெட் வாங்கிக்கொண்ட அய்யாசாமி, நடைபிணமாய் ரூமை விட்டு வெளியே வந்தார்.
என் கனவுல மண்ணை அள்ளி போட்டுட்டானே... பாவிப்பய... உருப்படுவானா? டிக்கெட் எல்லாம் கிடைச்சிருக்கும். இந்தப் பாவிப்பய... அந்தப் பணத்துல ஏதாவது கமிஷன் எடுத்துருப்பான் என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த பேக்கை தோளில் தொங்கப் போட்டுக்கொண்டு வெறுமையாய் நடக்க ஆரம்பித்தார் அய்யாசாமி.மானேஜர் மீது உள்ள கோபத்தில், மனதில் அவரை கண்டபடி திட்டிக்கொண்டே நடைபிணமாய் நடந்து வந்தார் அய்யாசாமி.
‘திருச்சி சந்திப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற திருச்சி ரயில் நிலைய வரவேற்பு பலகை இன்னும் கொஞ்சம் அய்யாசாமியை எரிச்சல் படுத்தியது. ரயில் நிலையத்திற்குள் நடந்து சென்ற அய்யாசாமி, 7 மணிக்கு ஸ்பெஷல் டிரெயின்னு போட்டிருக்கு. மணி இப்போ மூணு தானே ஆகுது. இன்னும் நாலு மணி நேரம் இருக்குதே. அதுவரை என்னத்த செய்ய...? என்று யோசித்தவாறே, ஸ்டேஷனில் இருந்த பேப்பர் கடை, டீக்கடை என்று அனைத்துக் கடைகளையும் பராக்கு பார்த்துக்கொண்டே தனது பேக்கையும் தோளில் தொங்கப்போட்டுக்கொண்டு அந்தோ பரிதாபமாய் நின்று கொண்டிருந்தார்.
அந்த சமயம் ஸ்டேஷனில் இருந்த ஸ்பீக்கரில் அறிவிப்பு ஒலி ஒலித்தது. ‘7 மணிக்கு வந்து சேர வேண்டிய திருநெல்வேலி வரை செல்லும் சிறப்பு ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். பயணிகளின் அசவுகரியத்திற்கு மிகவும் வருந்துகிறோம்’ என்ற அறிவிப்பு ஒலி, அய்யாசாமியின் காதில் எதிரொலித்தது.
‘அப்படியே... சீக்கிரம் வந்துட்டாலும்...’ என்று சலித்துக்கொண்டவர், இன்னும் ரெண்டு மணி நேரம் தேவையில்லாம காத்துக் கிடக்கணுமா...? இதுக்கு பேசாம பஸ்சுலேயாவது போயிருக்கலாம். இதுக்குள்ள பாதி துõரமாவது போயிருக்கலாம். மரமண்டை மேனேஜர் என்னைக்கு ஒழியரானோ அன்னிக்குத்தான் கம்பெனி உறுப்படும் என்று, மானேஜரை மறுபடியும் திட்டிக்கொண்டவர், சரி டிரெயின் எந்த பிளாட்பாரத்தில் வந்து நிற்கும் என்ற தகவலையாவது கேட்டுக்குவோம் என்று நினைத்தவாறே... ஸ்டேஷன் அறிவிப்பு அறைக்குச் சென்றார்.
அந்த அறையில் ஒரு பெண்மணி ஸ்டேஷனில் விற்ற சாம்பார் வடை இரண்டை தட்டில் வைத்து குனிந்து கொண்டு, வடையை துவம்சம் செய்து கொண்டிருந்தார்.
வடையை விலாசிக்கொண்டிருந்த பெண்மணியை வச்சக்கண் வாங்காமல் பார்த்த அய்யாசாமி... “மேடம் உள்ளே வரலாமா?” என்று பணிவாக கேட்டார்.
வடை சாப்பிட்டுக்கொண்டிருந்த உற்சாகத்தில் இருந்த அந்த பெண்மணி அய்யாசாமி கூப்பிட்டதை கண்டுகொள்ளவில்லை.
அந்த அம்மணி திரும்பி பார்க்காததால் சற்றே கோபமடைந்த அய்யாசாமி... “உள்ளே வரலாங்களா...?” என்று குரலை உயர்த்தினார்.
அந்த குரல் ஸ்டேஷன் முழுவதும் எதிரொலித்தது.
ஏனெனில் வடை சாப்பிடும் உற்சாகத்தில், அந்த அறிவிப்பு பெண்மணி மைக்கை ஆப் செய்ய மறந்து விட்டார். ஸ்டேஷன் முழுவதும் தன்னுடைய குரல் எதிரொலிப்பதை ஆச்சர்யமாகவும், அதே நேரம் குழப்பத்துடனும், வெளியே திரும்பிப் பார்த்தார் அய்யாசாமி.
அதே நேரம், அய்யாசாமி குரலின் சத்தத்தில் கலவரமடைந்த அந்த பெண்மணி, தன்னுடைய உயரதிகாரிதான் வந்திருக்கிறாரோ என்று மிரண்டு சாம்பார் வடை தட்டை அப்படியே கீழே தள்ளிவிட்டு படபடப்பாக எழுந்து நின்று, வாசலைப் பார்த்தார்.
வாசலில் அய்யாசாமி... மீண்டும்... “உள்ளே வரலாமா...?” என்று கேட்டதும், மறுபடியும் அவரது குரல் ஸ்டேஷன் முழுவதும் எதிரொலித்தது. இந்தக் குரலில் ஸ்டேஷனில் இருந்த பயணிகள் எல்லாரும் ஒரு முறை சப்தம் வரும் ஸ்பீக்கரை பார்த்தனர்.
அறிவிப்பு அறையில் இருந்த பெண்மணி சற்றே கலவரமடைந்து, மைக்கை பொத்திக்கொண்டு, அய்யாசாமியை வெளியே செல்லுமாறு சைகை காட்டினாள்.
இதை புரியாத அய்யாசாமி, “திருநெல்வேலிக்கு போகும் ஸ்பெஷல் டிரெயின் எந்த பிளாட்பாரத்தில் நிற்கும்? அதை மட்டும் சொல்லுங்க. நான் போயிடறேன்” என்றார் அப்பாவியாக.
ஆத்திரமடைந்த அந்த பெண்மணி, மைக்கை ஆப் செய்துவிட்டு, ஆவேசமாக... அய்யாசாமியை நோக்கி விரைந்து சென்று, “யோவ் வெளியே போய்யா... இங்கே வந்து இதெல்லாம் கேட்க கூடாது” என்று ஆவேசமாக கத்தினாள் அந்தப் பெண்.
“வேற எங்க போய் கேட்கணும்...” என்று அப்பாவியாய் கேட்டார் அய்யாசாமி.
“ம்... வெளியே போய் கேள்... சொல்லுவாங்க...” என்று மீண்டும் கத்தியதில் கொஞ்சம் பயந்தே போன அய்யாசாமி... மெதுவாய் வெளியே வந்தார்.
வேலை பார்க்க வேண்டிய நேரத்துல வடை சாப்பிடறதை கெடுத்துட்டேன்னு எரிச்சல். அதான் எரிஞ்சு விழறா... நாம அந்த பொம்பள சாப்பிடற வடையவா கேட்டோம்... பிளாட்பாரத்தைத்தானே கேட்டோம். இதுக்கு ஏன் அந்த பொம்பளை இப்படி எரிஞ்சு விழறா? என்று தனியாக புலம்பியவாறே... ஒவ்வொரு பிளாட்பாரத்தையும் வெரித்து பார்த்துக்கொண்டு நடந்து வந்தார் அய்யாசாமி.
நடை மேடைக்கு மேலே நடந்து வந்துகொண்டிருந்தபோது ஐந்தாவது பிளாட்பாரத்தில் வளைந்து வளைந்து ஒரு நீண்ட வரிசை நின்று கொண்டிருந்தது. அந்த நீண்ட வரிசையைப் பார்த்த அய்யாசாமி, சரி அங்கே போய் கேட்டு பார்ப்போம் என்று அங்கு போய், வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம், “சார்... திருநெல்வேலி ஸ்பெஷல் எந்த பிளாட்பாரத்திற்கு வரும்னு உங்களுக்கு தெரியுமா?” என்றார்.
அய்யாசாமியை ஏறிட்டுப் பார்த்த அந்த நபர், “இந்த பிளாட்பாரம்தான்” என்று அவர் சொன்னதும், “சரி... இங்கே ஏன் இவ்வளவு பெரிய நீண்ட வரிசை”ன்னு அவரிடமே கேட்டார்.
“சார்... அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் இங்கே தான் நிக்குமாம்...” அதுக்கு இடம் பிடிக்கறதுக்காகத்தான் இந்த நீ...ண்ட வரிசை என்றார்.
இதைக் கேட்டதும்... “என்னது... அன்ரிசர்வ்க்கா இவ்வளவு பெரிய கூட்டம்” என்று கேட்டபோது அய்யாசாமிக்கு தலை ராட்டினம் சுற்றுமே அதேபோல் கிறுகிறு வென்று சுற்ற ஆரம்பித்தது.வரலாமா, வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே ஒரு வழியாக திருநெல்வேலி சிறப்பு ரயில் திருச்சி ரயில் நிலையத்தில் நுழைந்தது.
அதுவரையில் நீண்ட வரிசையில் ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்த பயணிகள், ரயில் உள்ளே நுழைந்ததும், கும்பலாக ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு ரயிலில் ஏறினர். இந்தக் கூட்டத்திற்கு இடையே சிக்கிக்கொண்ட, அய்யாசாமியை முண்டியடித்துக்கொண்ட அந்த கும்பல், அப்படியே அலேக்காக துõக்கிக்கொண்டு உள்ளே சென்றது.
மூச்சுத் திணறிய அய்யாசாமி ஏதோ வானத்தில் மிதந்து செல்வது போன்று உணர்ந்தார். எப்படியாவது உட்கார்வதற்கு சீட் கிடைத்துவிடும் என்ற நப்பாசையில் இருந்த அய்யாசாமியின் எண்ணத்தில் மண் விழுந்தது.
ஏனென்றால் இன்னும் வாசல்படியை விட்டு அய்யாசாமி உள்ளே செல்வதற்கு கொஞ்சம் கூட வழியில்லாமல், கூட்டம் வாசலிலேயே திமிறிக்கொண்டிருந்தது.
கூட்டத்தில் இடித்துச் சென்று உள்ளே சென்றதால், மூக்குக்கண்ணாடி அலங்கோலமாய் கோணல்மாணலாய் இருந்தது. அதை சரிசெய்து கொண்டு தன்னுடைய பையை எங்கே என்று தேடிப் பார்த்தார். தோளில் மாட்டிக்கொண்ட பையின் கைப்பிடித் தவிர, பையின் மொத்தமும் கூட்டத்தில் இடையே சிக்கிக்கொண்டது.
அயய்யோ பையை எப்படி எடுக்கப்போகிறோம் என்று சிந்தித்தவர், கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு, உடலில் இருக்கும் மொத்த பலத்தையும் கைக்கு திரட்டிக் கொண்டுவந்து, பையை பிடித்து இழுத்தார். ஒரு வழியாக ஆண்டவன் புண்ணியத்தில் எங்கோ சிக்கிக்கொண்டு, சின்னாப்பின்னப் பட்டுக்கொண்டிருந்த பையும் வந்து சேர்ந்தது. பை கிடைத்த சந்தோஷத்தில் எங்காவது உட்காருவதற்கு இடம் கிடைக்குமா என்று கால் கட்டைவிரலை உந்தி, கொஞ்சம் கூட்டத்தை எட்டிப் பார்த்தார். அதற்குள் அய்யாசாமி காலை உயர்த்திய இடத்தில் இடம் காலியாகவே, பக்கத்தில் இருந்த ஒருவர் அந்த இடத்தில் அவருடைய காலை சவுகரியமாக வைத்துக்கொண்டார்.
இதற்கிடையே கூட்டத்தைப் பார்த்து மலைத்துப்போன அய்யாசாமிக்கு வியர்க்க ஆரம்பித்தது. அடடா ஊருக்கு முழுசுமா போய் சேர்ந்துடுவமா என்று நினைத்துக்கொண்டே காலை லேசாக கீழே வைத்தபோது, அந்த இடத்தில் வேறொருவரின் கால் தட்டுப்பட்டது. அய்யாசாமியின் கால் அந்த நபரின் காலில் பட்டதுதான் தாமதம், “யோவ், சோடாபுட்டி கண்ணாடி... ஆள் நிக்கறது தெரியலை... எருமைமாடு, கொஞ்சம் தள்ளி நில்லுய்யா...” என்று சத்தம்போட, அடப்பாவிப்பய... இந்த இடத்தையும் புடிச்சிட்டானே... என்று சலித்துக்கொண்டே கட்டைவிரலில் உடலை தாங்கிப் பிடித்தவாறே நின்று கொண்டிருந்தார்.
ஒரு வழியாக டிரெயின் புறப்பட ஆரம்பித்தது. உடலை அங்கும் இங்கும் அசைக்கக் கூட முடியாமல் திக்குமுக்காடிக்கொண்டிருந்தார் அய்யாசாமி.
அருகில் நின்றுகொண்டிருந்த ஒருவர், குழந்தைக்கு காற்று வரவில்லை என்பதற்காக தலைக்கு மேல் குழந்தையை துõக்க, அது சாவகாசமாக அய்யாசாமியின் தோளில் தொற்றிக்கொண்டது.
“ஏய்... யாரது... தோள்ல ஏர்றது?” என்று ஏகத்துக்கும் கடுப்பாகிப்போன அய்யாசாமி, சத்தம் போட, “சார்... கொஞ்சம் பொறுத்துக்கங்க சார்... பச்சப்புள்ள சார். காத்துக்கு அல்லாடுது சார்...” என்று சொல்ல, இன்னும் கடுப்பாகிப்போன அய்யாசாமி, “யோவ்... உன் பிள்ளைக்கு காற்று வரலைன்னா... உன் தோள்ல ஏத்திக்கணும். அத உட்டுப்புட்டு என் தோளில் ஏத்தி வச்சிருக்க...” என்று மீண்டும் சத்தம் போட... “சார்... கூட்டம்னா அப்படி, இப்பிடித்தான் சார் இருக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ சார்...” என்று அந்த நபர் கொஞ்சம் இறங்கிப் பேசவும், வேறு வழியில்லாமல் வாயை மூடிக்கொண்டார், அய்யாசாமி.
இரண்டு காலையும் கீழே வைக்கமுடியாமலும், தோளில் குழந்தையை துõக்கிக்கொண்டும் செய்வதறியாமல் விக்கித்துப் போயிருந்த அய்யாசாமியின் செல்போன் திடீரென்று அலறியது.
அடடா... செல்போன் வேற அடிக்குதே... இதை இப்போ எப்படி எடுப்பேன்... என்று நினைத்துக்கொண்டவர், ரொம்ப பிரயத்தனப்பட்டு ஒரு வழியாக செல்போனை எடுத்தவர்... அதில் ‘கமலம் காலிங்’ என்பதைப் பார்த்து, இவ ஏன் இப்போ போன் பண்றா... என்ற சந்தேகத்துடன், காதருகே போனைக் கொண்டு போனவர், “சொல்லு கமலம், என்ன விஷயம்...?” என்று கேட்டார் அய்யாசாமி.
“ஒண்ணும் இல்லீங்க... டிரெயின்ல ஏறிட்டீங்களா...? ஏசி கோச்தானே...?” என்று கமலம் கேட்க, என்ன பதில் சொல்ல என்று விக்கித்துப் போனவர்... “ஆ... ஆமா... ஏசி கோச்தான்... ரொம்ப வசதியா இருக்கு... நா... நாளைக்கு காலையில திருநெல்வேலிக்கு போயிட்டு போன் பண்றேன். நீ போனை வை” என்றார் அய்யாசாமி.
“பார்த்து... ஜாக்கிரதையா உட்கார்ந்துக்கோங்க...” என்று கரிசனத்துடன் சொன்ன கமலம் போனை துண்டித்தாள்.
இன்னும் என்னன்னவெல்லாம் பொய் சொல்லப்போறேனோ என்று நினைத்துக்கொண்டே செல்போனை பாக்கெட்டில் வைத்தார் அய்யாசாமி.
இதற்கிடையே அய்யாசாமியின் முன் நின்றுகொண்டிருந்த ஒரு கூட்டம், “ஏல... பசிக்குதுன்னா சாப்பிட வேண்டியதுதானே... மூஞ்ச, மூஞ்ச பார்த்துக்ககிட்டிருந்தா பசி போயிடுமா என்ன...?” என்று குரலை உயர்த்திய அந்த நபர், பையில் இருந்த இரண்டு மூன்று பெரிய பொட்டலங்களை எடுத்து, தன்னுடன் நின்றிருந்த சகாக்களுக்கு நீட்டினார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த அய்யாசாமி, ‘உட்காரதுக்கே இடத்தைக் காணோம்; இதுல இந்த கும்பல் எப்படித்தான் சாப்பிடப்போறாங்கன்னு பார்ப்போம்’னு அந்த கும்பலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் அய்யாசாமி.
பொட்டலத்தைப் பிரித்த அந்த கும்பல், கொஞ்சம் கூட யோசிக்காமல் அப்படியே நின்றுகொண்டே சாப்பிட ஆரம்பித்தனர்.
அடடா... புளியோதரைதான் சாப்பிடறாங்க... என்னம்மா வாசம் வருது... என்று வெறித்துப்பார்த்த அய்யாசாமிக்கு நாக்கில் எச்சில் ஊறியது.
யாரையும் கண்டுகொள்ளாது, புளியோதரையை குமுறிக்கொண்டிருந்த அந்த கும்பலில் இருந்த ஒருவன், பசியால் பரிதாபமாய் பார்த்துக்கொண்டிருந்த அய்யாசாமியை குறுகுறுவென்று பார்த்தான்.மதுரை வந்ததும் உட்காருவதற்கு கொஞ்சமாவது இடம் கிடைக்கும் என்று நம்பியிருந்த அய்யாசாமிக்கு, மேலும் ஒரு பேரடி விழுந்தது. மதுரை ஸ்டேஷனுக்கு டிரெயின் வந்ததும்தான் தாமதம், புயலாய் டிரெயினில் நுழைந்த ஒரு கும்பல், அய்யாசாமியை அப்படியே அலேக்காகத் தள்ளிக்கொண்டு, அந்த கம்பார்ட்மென்ட் கழிவறை அருகே கொண்டு நிறுத்தியது.
ஏற்கனவே நிற்கமுடியாமல் திணறிக்கொண்டிருந்த அய்யாசாமிக்கு, கழிவறை வாசனை வேறு மூக்கை பதம் பாத்துக் கொண்டிருந்தது. கையை எடுத்து மூக்கையும் பொத்திக்கொள்ள முடியவில்லை. கூட்டத்தில் கையை கீழே இருந்து மேலே எடுப்பதற்கே மிகவும் சிரமமாக இருந்தது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஓடிக்கொண்டிருந்த காற்றாடியும் நின்று போனது. அதிகாலை டிரெயின் வாஞ்சி மணியாச்சியைத் தாண்டி திருநெல்வேலியை நெருங்கிக்கொண்டிருந்தது.
ஒரு பக்கம் புழுக்கம்; இன்னொரு பக்கம் கூட்ட நெருக்கடி... இதையும் தாண்டி கூட்டத்தில் இருந்தவர்களால் வந்த நாற்றம் இவையெல்லாம் சேர்ந்து அய்யாசாமிக்கு குமட்டலே வந்தது.
ஒரு வழியாக 6 மணிக்கெல்லாம் மெல்ல மெல்ல திருநெல்வேலி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது அந்த ஸ்பெஷல் டிரெயின். இன்னும் எவ்வளவு நேரம் சமாளிக்க வேண்டியது இருக்குமோ, என்று நினைத்துக்கொண்டே... அருகில் நின்றுகொண்டிருந்தவரிடம்... “சார்... டிரெயின் திருநெல்வேலிக்கு எப்போ போய் சேரும்...” என்று கேட்டார் அய்யாசாமி.
“டிரெயின் இப்படியே ஊந்து போச்சுதுனா... பத்து நிமிஷத்துல போய் சேரும். கொஞ்சம் வேகமா போச்சுதுனா அஞ்சு நிமிஷத்துல போய் சேர்ந்துடும்” என்று சொன்னார்.
அவர் சொன்னது அய்யாசாமிக்கு மிகப்பெரும் ஆறுதலாக இருந்தது. நல்ல வேளை தப்பிச்சோம். இன்னும் ஒரு மணி நேரம் தாண்டுச்சுன்னா... ஊருக்கு நாம போக மாட்டோம். நம்மோட பாடிதான் போய்ச் சேரும் என்று நினைத்துக்கொண்டவர், ஸ்டேஷன்ல யாராவது நம்மள அழைச்சிட்டு போகறதுக்கு காத்துட்டு இருப்பாங்க என்று இன்னமும் நம்பிக்கொண்டிருந்தார்.
டிரெயின் ஒரு வழியாக திருநெல்வேலி நிலையத்தை வந்தடைந்தது. எப்படி கும்பலாய் சேர்ந்து அய்யாசாமியை உள்ளே தள்ளினார்களோ அப்படியே வெளியேயும் வந்து விழுந்தார்.
ஸ்டேஷனில் இறங்கியதும், சுற்றியும் முற்றியும் யாராவது அய்யாசாமின்னு போர்டு எழுதி வச்சுக்கிட்டு நிப்பாங்களான்னு கண்ணாடியை கொஞ்சம் துõக்கிப் பிடித்துக்கொண்டு தேடிப்பார்த்தார்.
டிரெயினில் இறங்கிய கூட்டம் அங்கேயும், இங்கேயும் சென்று கொண்டிருந்தார்களே தவிர, யாரும் போர்டை பிடித்து நிற்காதது, அய்யாசாமிக்கு இன்னும் ஏமாற்றத்தைத் தந்தது.
கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தவர், அங்கே ஒரு ஓரமாக ஒரு காலியாகக் கிடந்த பெஞ்சில்காலை துõக்கி மேலே வைத்துக்கொண்டு விரக்தியாய் உட்கார்ந்தார்.
என்னடா... இன்னமும் நம்மள தேடிட்டு கம்பெனியிலிருந்து யாரும் வரலையேன்னு வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தார் அய்யாசாமி.
சரி மேனேஜருக்கு போன் செய்து பார்ப்போம்னு, செல்போனை எடுத்து போன் செய்தார். ‘ நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் தற்சமயம் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று வந்த எதிர் குரல் அய்யாசாமிக்கு மேலும் எரிச்சலை உண்டு பண்ணியது.
பாவிப்பய மேனேஜர் பிளான் பண்ணி நம்மள ஏமாத்திட்டான், என்று மனதிற்குள் எரிந்து விழுந்தவாறே...
இப்போ கம்பெனிக்கு எப்படிப் போக என்று நினைத்துக்கொண்டிருந்தவர் முதுகை ஒரு கரம் தட்டியது. பதறியடித்து திரும்பிப்பார்த்தார் அய்யாசாமி. எதிரே ஒரு போலீஸ்காரர் நின்றிருந்தார்.
“யார் சார் நீங்க... இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று அதட்டலாய் கேட்டார் அந்த போலீஸ்காரர்.
“சார்... நான் திருச்சியிலிருந்து வர்றேன். கம்பெனியிலிருந்து கூட்டிட்டு போக ஆள் இன்னும் வரலை. அதான் உட்கார்ந்திட்டு இருக்கேன்” என்று அப்பாவியாய் சொன்னார் அய்யாசாமி.
“சார் டிரெயின் வந்துட்டு போய் ரொம்ப நேரம் ஆச்சு. இன்னும் இங்க உட்காரக்கூடாது; எழுந்திருச்சு போங்க...” என்று விரட்டினார் போலீஸ்காரர்.
“இல்ல சார்... ஆள் வந்துடுவாங்க.”
“யோவ் சொல்லிட்டே இருக்கேன்... எழுந்து போகப்போறீயா? இல்லாட்டி, சந்தேகக் கேசுல உள்ள தள்ளவா?” என்று போலீஸ்காரர் பார்த்தப் பார்வையில் சப்த நாடியும் அடங்கிப்போய், பையை தோளில் மாட்டிக்கொண்டு அப்படியே மெதுவாக ஸ்டேஷனுக்கு வெளியே நடக்க ஆரம்பித்தார்.
அப்படியே பையை துõக்கிக்கொண்டு தேம்ப தேம்ப விழித்துக்கொண்டே ஸ்டேஷன் வெளியே வந்தார் அய்யாசாமி. வெளியே வந்ததும்தான் தாமதம். ஒருவர் அங்கிருந்து துள்ளிக் குதித்துக்கொண்டு “சார்...” என்று கூவிக்கொண்டு பாய்ந்தோடி வந்தார்.
அவர் வந்த வேகத்தை கொஞ்சம் கலவரத்துடன் பார்த்தார் அய்யாசாமி.
“சார்... நீங்கதானே அய்யாசாமி!”
“ஆமாம்... நீங்க...”
“நான் ரமேஷ்... நம்ம ஆபிஸோட திருநெல்வேலி கிளார்க் சார். நேற்றுதான் நீங்க வர்றதா திருச்சியிலிருந்து போன் பண்ணி சொன்னாங்க. அதான்... காலையிலே வந்துட்டேன்.”
“என்னை எப்படி நீங்க அடையாளம் கண்டுபிடிச்சிங்க” என்று ஆர்வமாய் கேட்டார் அய்யாசாமி.
“உங்க கண்ணாடி ஒண்ணு போதாதா சார் உங்களை கண்டுபிடிக்க?” என்ற ரமேஷை, அனல் கக்கும் பார்வையால் பார்த்தார் அய்யாசாமி.
“ஸ்டேஷனுக்கு வந்த நீங்க... ஏன் உள்ள வரலை? நான் ரொம்ப நேரம் காத்துட்டு இருந்தேன்.”
“இல்ல சார்... உள்ளே வரலாம்தான்... உள்ளே வரணும்னா, மூணு ரூபாய்க்கு பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்கணும். அதுக்கெல்லாம் கம்பெனி அனுமதி கிடையாது” என்று ரமேஷ் சொன்னதும், அப்படியே வாயைப் பிழந்த அய்யாசாமி... “அடப்பாவி... காளை மாட்டுல பால் கறக்கற கும்பலா இருக்கும் போலிருக்கே...” என்று சிந்தனையில் மூழ்கியவரை, “சார்... போலாமா... ரொம்ப நேரம் ஆச்சு” என்றார் ரமேஷ்.
“எப்படி போற்ரது கார்லதானே...?” என்று அப்பாவியாய் கேட்டார் அய்யாசாமி.
“ம்... தேர்ல...! சார் வாய்ல எதாவது வந்துடப்போகுது. நம்ம கம்பெனி நிலவரம் தெரிஞ்சும், நீங்க ரொம்பதான் ஆசைப்படறீங்க” என்று நக்கலாய் சிரித்தான் ரமேஷ்.
“அப்படீன்னா நம்ம இப்போ எப்படி போகப்போறோம்?”
“கவலையேபடாதீங்க சார்... கம்பெனி சைக்கிள் அதோ நிக்குது பாருங்க... அதுலதான்.”
ரமேஷ் கைக்காட்டிய இடத்தில் பரிதாபமாய் ஒரு சைக்கிள் நின்றுகொண்டிருந்தது. அந்த சைக்கிளில் ஒரு கேரியர் இருந்ததே பார்க்கணும். யம்மாடியோவ்... அவ்வளவு பெருசு. இந்த சாக்கு மூட்டையெல்லாம் வச்சி கொண்டு போவாங்களே... அந்த மாதிரியான சைக்கிள்.
கேரியரை பார்த்தவுடன் கொஞ்சம் அதிர்ச்சியடைந்த அய்யாசாமி, “ஏன் சார்... இந்த சைக்கிளிலா நாம ரெண்டு பேரும் போகப்போறோம்?” என்று பாவமாய் கேட்டார் அய்யாசாமி.
“ஆமா சார்... இந்த சைக்கிளிக்கு அப்படி என்ன குறைச்சல்? நல்லாதானே இருக்கு.” என்று சைக்கிளை பச்சைக்குழந்தையை தடவிக் கொடுப்பது போல் தடவிக்கொடுத்தார் ரமேஷ்.
“சரி சார்... காலைல ஏதாவது நீர் ஆகாரம் ஏதும் குடிக்கிறீங்களா?” என்று கேட்டார் ரமேஷ்.
“ம்...” என்று அவசரமாய் தலையை அசைத்தார் அய்யாசாமி.
“சரி சார் காபி கீபி குடிக்கணும்னா சீக்கிரம் குடிச்சிட்டு வாங்க. நான் வேணும்னா ஒரு பத்து நிமிஷம் காத்திருக்கிறேன்.”
“என்னது... நீங்க குடிக்கலையா?”
“எதுக்கு சார் உங்களுக்கு வீண் செலவு? நீங்க மட்டும் குடிச்சிட்டு வாங்க!” என்றார் ரமேஷ்.
அடப்பாவி... பத்து பைசா நீட்ட மாட்டேங்கறானே... ம்... இவனை நாம என்னத்த குறை சொல்ல? எல்லாத்துக்கும் காரணம்... அந்த மேனேஜர் குண்டன் கோதண்டம்தான். அவனை... என்ற அய்யாசாமி, நறநறவென்று பல்லைக் கடித்தார்.
“இல்ல... வாங்க நாம போலாம்! குளிச்சிட்டு டீ குடிச்சிக்கலாம்”, என்று சமாளித்தார் அய்யாசாமி.
“சரி சார்... நான் இப்போ சைக்கிளை மிதிப்பேன். சைக்கிள் கொஞ்சம் ஓடின உடனே ஓடிவந்து ஏறிக்கோங்க. சைக்கிள் நிற்கும்போது ஏறினால் எனக்கு பேலன்ஸ் கிடைக்காது.”
“ஓ.கே. ரமேஷ்... நீங்க சைக்கிளை ஓட்டுங்க.” என்றதும்... ரமேஷ் சைக்கிளை அழுத்த ஆரம்பித்தார்.
அய்யாசாமி கையில் வைத்திருந்த பேக்கின் பாரம் ஒருபுறம் இழுக்க, சுமக்க முடியாமல் சுமந்து மூச்சு இறைக்க இறைக்க சைக்கிளைப் பிடிக்க ஓடினார்.
ஆனால், ரமேஷோ அய்யாசாமி சைக்கிளில் ஏறிவிட்டார் என்று நினைத்து, சைக்கிளை வேக வேகமாய் அழுத்த ஆரம்பித்தார்.
இதற்கு மேல் ஓட முடியாது சாமி... என்று மூச்சிறைக்க அப்படியே ஒரு கடைமுன் நின்றுவிட்டார் அய்யாசாமி.
துõரத்தில் ரமேஷ் சைக்கிளில் வேகமாய் போய்க்கொண்டிருந்தார்.“சார்... உங்களுக்கு திருநெல்வேலி ஊர் எப்படி, பிடிச்சிருக்கா...?” என்று பின்னால் அய்யாசாமி இருப்பதாகவே நினைத்து பேசிக்கொண்டு வந்தார் ரமேஷ்.
“என்ன சார் நான் பாட்டுக்கு பேசிட்டு வர்றேன்... என்ன மூச்சே விட மாட்டேங்குறீங்க?” என்று லேசாக பின்னால் திரும்பிப் பார்த்தார் ரமேஷ். சைக்கிள் கேரியர் வேறு காலியாய் இருப்பதைப் பார்த்து, அதிர்ச்சியாய் உடனடியாக சைக்கிளை நிறுத்தினார்.
அய்யய்யோ இந்த மனுஷன் எங்கே நிற்கிறானோ தெரியலையே... அடப்பாவி மறுபடியும் இவ்வளது துõரம் இந்த சைக்கிளை மிதிக்கணுமா? சோடாப்புட்டிக் கண்ணாடி..., சைக்கிள்ல ஏறலங்கிறதையாவது சொல்லலாம்ல... மடையன். எங்கிருந்துதான் இந்த மாதிரி ஆட்களையெல்லாம் தேடிப்பிடிச்சு வேலைக்கு சேர்த்து, நம்ம உசுரை வாங்கறாங்களோ தெரியலை. என்று சலித்துக்கொண்டே ரோட்டின் இருபுறத்திலும் பார்த்துக்கொண்டே சைக்கிளில் திரும்பி வந்தார் ரமேஷ்.
ரயில்வே ஸ்டேஷன் அருகில் வந்ததும், ஒரு டீக்கடையோரம் பையை கட்கத்தில் பிடித்துக்கொண்டு, இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு, கம்பீரமாய் ராஜ தோரணையாய் நின்றுகொண்டிருந்தார் அய்யாசாமி.
அய்யாசாமியைப் பார்த்ததும்தான் தாமதம், நிக்கிறான்பாரு பப்பரப்பேன்னு. நமக்குன்னுதான் இப்படியெல்லாம் தேடிக்கிட்டு வருது. இவரை வச்சி, இன்னும் என்னென்ன சமாளிக்கப்போறோமோ? என்று புலம்பிக்கொண்டவாறே... “சார், அய்யாசாமி சார்...” என்ற ரமேஷின் குரலில் நினைவு கலைந்தவர், அசடு வழிந்தவாறே ரமேஷ் அருகில் வந்தார்.
“ஏன் சார்... நான்தான் உங்களை சைக்கிளில் ஏறிக்கச் சொன்னேனே... ஏன் ஏறலை... நான்பாட்டுக்கு ரொம்ப துõரம் போயிட்டேன்.”
“ஹி.. ஹி... எனக்கு சைக்கிளில் ஓடி வந்து ஏறத் தெரியாது. அதான் அப்படியே நின்னுட்டேன். பின்ன... எப்படி சைக்கிள்ல ஏறுவீங்க?”
“ரமேஷ்... நீங்க ஏதாவது ஒரு பெரிய திண்டு பக்கத்துல சைக்கிளை நிப்பாட்டுங்க. நான் திண்டுல கால் வச்சி சைக்கிளில் ஏறிக்கிறேன்” என்று பரிதாபமாகச் சொன்னார் அய்யாசாமி.
“சார்... நான் இப்போ திண்டுக்கு எங்கே போவேன்” என்று சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தார் ரமேஷ்.
துõரத்தில் ஒரு கடையின் பிளாட்பார்ம் கொஞ்சம் உயராமாக தெரியவே... “அய்யாசாமி சார்... அதோ அந்த கடை முன்னால, நீங்க கேட்டது மாதிரி உயரமான திண்டு ஒண்ணு இருக்கு. நான் சைக்கிள்ல முன்னாடி போயிடறேன். நீங்க நடந்து அப்படியே அந்த திண்டு பக்கத்துல வந்துடுறீங்களா” என்றார் ரமேஷ்.
“சரி.. சரி... நீங்க போங்க. நான் இதோ வந்துடறேன்” என்று சொல்லிக்கொண்டு ஓட்டமும், நடையுமாக பையைத் துõக்கிக்கொண்டு ஓடி வந்தார் அய்யாசாமி.
சைக்கிளை நிறுத்தி வைத்துக்கொண்டு, அய்யாசாமி வருவதை துõரத்தில் இருந்து பார்த்தார் ரமேஷ், ஆளையும் சைஸையும் பாரு; கண்ணாடியும், அவன் நடையும்... கருமம்... என்று தலையில் அடித்துக்கொண்டிருக்கவும், அய்யாசாமி சைக்கிள் பக்கம் வரவும் சரியாக இருந்தது.
“சார் நான் சைக்கிளில் ஏறிக்கலாமா?”
“சார்... பத்திரமா ஏறிக்கோங்க... கீழே விழுந்துடப்போறீங்க...” என்று அக்கறையோடு சொன்னான் ரமேஷ்.
“ம்... கரெக்ட்டா ஏறிக்கிட்டேன். நீங்க போலாம்” என்றார் அய்யாசாமி.
“சார்... சைக்கிளை நல்லா கெட்டியா பிடிச்சுக்கோங்க! விழுந்துடப்போறீங்க... நான் கொஞ்சம் ஸ்பீடா போவேன்” என்றார் ரமேஷ்.
“ஸ்பீடாவா... அச்சச்சோ...” என்று அலறிய அய்யாசாமி, “வேண்டாம் சார்... நீங்க அட்ரஸைக் கொடுங்க... நான் நடந்தே வந்துக்கறேன்” என்றார் அய்யாசாமி.
“ஏன் சார் இப்படி பயப்படுறீங்க? அதெல்லாம் நீங்க பயப்படற மாதிரி ஒண்ணும் நடக்காது. தைரியமா வாங்க. அப்படி ஏதும் நடந்துச்சுன்னா... நாங்க சும்மா விட்டுருவோமா!”
“ஆமா... ஒரு டீக்கே வழியக் காணோம். இதுல வசனம்... ஹும்!” என்று சலித்துக்கொண்டே அந்த சைக்கிள் மெகா கேரியரில், ஒரு புறமாய் உட்காராமல் இரண்டு புறமும் காலைத் துõக்கிப் போட்டு ஏறி உட்கார்ந்தார் அய்யாசாமி.
“சார்... என்ன சார் பண்றீங்க...”
“இல்ல... நீங்க வேற சைக்கிள்ல வேகமா போவீங்கன்னு சொன்னீங்க... அதான், ஒருபுறம் காலை தொங்கப்போட்டு உட்கார்ந்தா, சைக்கிள் திரும்புற நேரத்துல நான் விழுந்துட்டேன்னா... அதான்”
‘ரொம்பதான் விவரம்...’ என்று தலையில் அடித்துக்கொண்டே ரமேஷ் சைக்கிளை ஓட்ட ஆரம்பித்தார்.
திருவாரூர் தேர் போல மெதுவாய் ஊந்து போனது அந்த ஹைதர் காலத்து சைக்கிள்.


“என்ன சார் ரொம்ப அமைதியா வர்றீங்க? ஏதாவது பேசுங்க சார்...!”
“இல்ல... டிரெயின்ல வந்தது உடம்பெல்லாம் கசகசன்னு இருக்கு குளிக்கணும்.”
“குளிச்சரலாம் சார்... தாமிரபரணி ஆறு நிறைஞ்சு ஓடுது. நல்லா நீந்தி குளிங்க சார்... உடம்புல உள்ள உஷ்ணம் எல்லாம் போயிடும்” என்றார் சேகர்.
சொல்றதும் நல்லாத்தான் இருக்கு. ஆனா, நமக்கு நீச்சல் சிலேட்டுல எழுதிப் படிக்கத்தானே தெரியும்... நம்ம தாமிரபரணி ஆத்துல குளிக்கணும்னா, ஒரு பக்கெட்டும், ஒரு கப்பும் தேவைப்படுமே... இதை துõக்கிட்டுப் போனா... இவன் நம்மள ரொம்ப கேவலமா நினைப்பானே என்று ஆழ்ந்த யோசனையில் இருந்தார் அய்யாசாமி.
“அய்யாசாமி சார்... உங்களுக்கு நீச்சல் தெரியுமா?”
அடடே... நம்ம மனசுல உள்ளதை கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டானே... ஒருவேளை நம்ம மனசுல நினைக்கிறது எல்லாம் இவனுக்கு கேட்குதா?
“என்ன சார்... அமைதியாயிட்டீங்க?” என்றார் ரமேஷ்.
“இல்ல... என்ன கேட்டீங்க...?”
“உங்களுக்கு நீச்சல் தெரியுமான்னு கேட்டேன் சார்...” என்று மறுபடியும் அழுத்தமாய் சொன்னார் ரமேஷ்.
“பேஷா தெரியும். திருச்சி காவிரி ஆத்துல தண்ணீர் ஓடுற சமயத்துல, நான் தண்ணியில நீந்தி போவேன் பாருங்க... அதுவும் குறிப்பிட்டு சொல்லணும்னா சும்மா இந்தக் கரையிலிருந்து அந்த கரைக்கு அப்படியே எறால் நீச்சல் அடிச்சி போவேன் பாருங்க. நான் நீச்சல் அடிக்கற அழகைப் பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் வரும்னா பாத்துக்கோங்களேன்” என்று புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டார், அய்யாசாமி.
“நான் விறால் நீச்சல்தான் கேள்விப்பட்டிருக்கேன். அதென்ன சார் எறால் நீச்சல்?”
“அ... அது உங்களுக்குத் தெரியாதா? விறால் நீச்சல் இருக்கே... அதை அப்படியே திருப்பி போட்டா அதான் எறால் நீச்சல்.”
“பரவாயில்லையே சார்... உங்கள நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு சார். பாருங்க... தாமிரபரணி ஆத்துக்குப் பின்னாடிதான் என் வீடு இருக்கு. மழை சமயத்துல ஆத்து தண்ணி வீட்டுக்கே வந்துடும்னா பாத்துக்கோங்களேன். இவ்வளவு பக்கத்துல இருந்தும், எனக்கு நீச்சல் தெரியாது. இன்னும் ஒண்ணு சொல்றேன் சார்... யார்ட்டயும் சொல்லிடாதீங்க. நான் ஆத்துக்கு குளிக்கப் போற நேரத்துல சொம்பு இல்லாம போக மாட்டேன்.”
“ஏன்... எதுக்கு?”
“அதுதான் சொன்னேனே சார்... எனக்கு நீச்சல் தெரியாதுன்னு; சொம்புல தண்ணீர் எடுத்துதான் குளிப்பேன்.”
அடப்பாவி... இவனுக்கு நீச்சல் தெரியும்னு நினைச்சித்தானே நமக்கு தெரியும்னு டூப் விட்டோம். இப்போ என்ன செய்யறது? என்று மறுபடியும் ஆழ்ந்த யோசனையில் இருந்தார் அய்யாசாமி.
“சார் கெட்டியா அந்த சைக்கிள் கேரியரை புடிச்சிக்கோங்க. நான் கொஞ்சம் வேகமா போகப்போறேன்” என்றார் ரமேஷ்.
ரயில்வே ஸ்டேஷன்ல ஏறினதில் இருந்ததே இப்படித்தான் சொல்லிட்டு இருக்கான். ஆனா, சைக்கிள்ல இவன்கூட ஸ்லோ ரேஸ்ல போட்டி போட முடியாது போலிருக்கிறதே அப்படி ஓட்டுறான்... ஆனா, பேச்சைப்பாரு... என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டார் அய்யாசாமி.
“அய்யாசாமி சார்... இன்னும் கொஞ்ச துõரம்தான், நம்ம ஆபீஸ் கெஸ்ட் ஹவுஸ் வந்திடும்” என்றார் ரமேஷ்.
பரவாயில்லையே... கெஸ்ட் ஹவுஸ் எல்லாம் வச்சிருக்காங்களா? கெஸ்ட் ஹவுசிற்கு போனவுடனேயே கொஞ்ச நேரம் பேனை போட்டுவிட்டு, பெட்டில் படுத்து துõங்கினாதான், உடம்புல உள்ள அசதி போகும் என்று நினைத்து முடிக்கவும், ரமேஷ் கெஸ்ட் ஹவுஸ் வாசலில் நின்றார்.
“சார் இறங்குங்க...”
“எதுக்கு...?”
“கெஸ்ட் ஹவுஸ் வந்துடுச்சு...!” என்றார் ரமேஷ்.
“எங்கே இருக்கு...?” என்று கண்ணாடியை சரிசெய்துகொண்டு கேட்டார் அய்யாசாமி.
“சார்...” இதுதான் நம்ம கெஸ்ட் ஹவுஸ்.
ரமேஷ் கைகாட்டிய இடத்தில், ஆஸ்பெஸ்ட்டாஸ் ஓடு போட்ட அந்த வீட்டைப் பார்த்து, அடப்பாவிகளா... மாடு அடைச்சி வச்சிருக்கும் கொட்டகையை வச்சிக்கிட்டு, அதுக்கு கெஸ்ட் ஹவுஸ்னு பெயரை வச்சி ஏமாத்திப்புட்டாங்களே... என்று மனதிற்குள் பொறுமித் தள்ளினார் அய்யாசாமி.
“சார் வாங்க உள்ளே போலாம்” என்று பாக்கெட்டில் வைத்திருந்த சாவியை எடுத்து கதவை பலவந்தமாக திறக்க முயற்சிப் பண்ணினார் ரமேஷ். ஆனால், அந்த துருப் பிடித்த பூட்டு திறப்பேனா என்பது போல் அடம்பிடித்துக்கொண்டிருந்தது.
“என்னாச்சு ரமேஷ் சார்... பூட்டை திறக்க முடியலையா?”
“ஆமா சார்... இந்த ரூமிற்கு வந்து கிட்டத்தட்ட ஆறு மாசம் ஆச்சு. இப்போ நீங்க வர்ததாலதான் கெஸ்ட் ஹவுஸையே திறக்கிறேன்” என்று பூரிப்பா சொன்னார் ரமேஷ்.
“விதி எங்க போனாலும் நம்ம விடாது போலிருக்கே...” என்று நினைத்துக்கொண்டு, “ரமேஷ் சார் திறந்துருவீங்களா... இல்ல கல்லு, கம்பின்னு எதாவது போய் எடுத்துட்டு வரணுமா..?”
“இல்ல சார் பூட்டை உடைக்கிற அளவுக்கு போகாது! எப்படியும் திறந்துடுவேன்” என்று முக்கி முணகியபடி ஒருவழியாய் பூட்டையும் திறந்து, கதவையும் திறந்தபோது... உள்ளிருந்து ஒரு வவ்வால் பறந்து வந்தது.
இதைப் பார்த்ததும், அய்யாசாமிக்கு திக்கென்று இருந்தது.
“என்ன சார்... இது?” என்று வாயைப் பிளந்தார் அய்யசாமி.
“இல்ல சார்... ஒண்ணும் பிரச்னை இல்லை. ரொம்ப நாள் பூட்டிக் கிடந்ததால வவ்வால் வந்துடுச்சு.” இன்னும் என்னென்னவெல்லாம் உள்ளே இருந்து வரப்போகுதோ... பேசாம இந்த சோடாபுட்டிக் கண்ணாடியை முதலில் அனுப்பிட்டு, கொஞ்சம் ஜாக்கிரதையா உள்ளே போனால் என்ன? என்ற யோசனை ரமேஷிற்கு தோன்றவே, நடையை சுருக்கி பின்வாங்கினார்.
“ச..சார்... நீங்க வீட்டுக்குள்ள போங்க... நான் சைக்கிளை பூட்டிட்டு வந்துடுறேன்.”
“பாரு... எப்படி நைசா தப்பிக்கறான் பாரு... திருடன்.” அய்யாசாமி மனசை தைரியமா வச்சிக்கிட்டு, குலசாமிய நேந்துக்கிட்டு உள்ளே போடா... என்று உள் மனசு அய்யாசாமியின் மனதைப் பிடித்து உலுக்க... தைரியமாய் பேக்கை துõக்கிக்கொண்டு அந்த ஆஸ்பெஸ்டாஸ் குகைக்குள் நுழைந்தார் அய்யாசாமி.வலது கால் லேசாக நடுங்கியபடி, அந்த அறைக்குள் காலடி எடுத்து வைத்தார் அய்யாசாமி, எங்கிருந்தோ தொப்பென்று குதித்து ஒடியது ஒரு பூனை. அதைப் பார்த்ததும், கலவரமடைந்த அய்யாசாமி, அய்யோ அம்மா, என்று கூச்சலிட்டார். இதைப் பார்த்ததும், வெளியே சைக்கிளை பூட்டுவது போன்று பாசாங்கு செய்து கொண்டிருந்த ரமேஷ், சைக்கிளை அப்படியே திருப்பிக்கொண்டு ஓடி விடலாமா என்பது போல் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தார்.
அதற்குப் பிறகு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட, அய்யாசாமி தான் தங்கவிருக்கும் அறையை சுற்றி பார்த்தார். பழைய பைல் என்ற பெயரில் ஒரு பெரிய குப்பைக் கிடங்கே அங்கு இருந்தது. அதைப்பார்த்ததும் மலைத்துப் போன அய்யாசாமி, பல்லை நறநறவென்று கடித்துக்கொண்டு, வாசலை எட்டிப் பார்த்தார்.
அய்யாசாமி தன்னைத் தான் பார்க்கிறார் என்பதைத் தெரிந்து கொண்ட ரமேஷ், இன்னும் சைக்கிள் பூட்டை பூட்டுவது போன்று பாசாங்கு செய்துகொண்டிருந்தார்.
அடப்பாவி, இன்னும் இவன் சைக்கிள பூட்றதைப் போல எப்படி நடிக்கிறான் பாரு. செத்தா நான் மட்டும் சாவணும். இவன் அப்படியே எஸ்கேப் ஆகி போயிடனும். பெரிய வில்லன்தான் இவன். நாம மட்டும் என்ன சாதாரணமான ஆளா? விட்டுடுவேனா இவனை, என்று மனதில் நினைத்துக்கொண்டே, சார்... ரமேஷ் சார்... என்று குரல் கேட்டதும், அய்யாசாமிதான் கூப்பிடுகிறார் என்று தெரிந்தும், தெரியாததுபோல் வேறு எங்கோ பார்த்தார் ரமேஷ்.
அடப்பாவி... இவன் நடிக்கற நடிப்புக்கு இவனுக்கு ஆஸ்காரே கொடுத்திடலாம். இதில் கொஞ்சம் டென்ஷனான... அய்யாசாமி, ‘டேய் ரமேஷ்...’ என்று குரல் கொடுத்ததுதான் தாமதம், பதறியடித்துக்கொண்டு, “என்ன சார் கூப்பிட்டீங்களா?” என்றார் ரமேஷ்.
“ஆமா... கூப்பிட்டேன்... கொஞ்சம் உள்ளே வாங்க.”
சைக்கிளை அப்படியே அம்போன்னு தெருவில் விட்டுவிட்டு உள்ளே வந்த ரமேஷ், “அய்யாசாமி சார்... என்னை நீங்க எப்படி கூப்பிட்டீங்க...” என்றதும், டேய் எங்கக்கிட்டேயேவா... என்று மனதில் நினைத்துக்கொண்ட அய்யாசாமி, “வழக்கமா எப்படி கூடுவாங்க...?” என்று திருப்பிக்கேட்டார் அய்யாசாமி.
“இல்ல... ஏதோ டேய்ன்னு காதில் விழுந்துச்சு அதான்.”
“ச்சே.. ச்சே... நான் மரியாதைத்தான் கூப்பிட்டேன். அதுவும் அஞ்சு நிமிஷமா சார்... சார்...ன்னு கூப்பிட்டது உங்க காதிலே விழலையா...” என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார் அய்யாசாமி.
“இல்ல சார்... சைக்கிளை பூட்டிக்கிட்டு இருந்தேனா... அதான் காதுல விழலை” என்றார் சேகர்.
“அது எப்படி விழும்... திருடன், எப்படி சமாளிக்கறான் பார்!” என்று மனதிற்குள்ளேயே பேசிக்கொண்ட அய்யாசாமி, “ரமேஷ் சார்... இந்த ரூம்ல நான் எங்கே உட்கார்றது?” என்று கேட்டார் அய்யாசாமி.
“இல்ல சார்... இந்த பைலை எல்லாம் கொஞ்சம் நகட்டிக்கிட்டு, அப்படியே கொஞ்சம் முதுகை சாய்ச்சிக்கலாம்.”
“நீங்க சொல்றது சரி. அடைஞ்சி வச்சிருக்கிற குப்பையைப்பார்ததா... உள்ளேயிருந்து அனகோண்டா பாம்பே வந்திடும் போலிருக்கே...”
“ஒரு நாள்தானே சார்... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க...” என்று ஆறுதலாய் சொன்னார் ரமேஷ்.
“அட்ஜஸ்ட் பண்ணிக்கப் போய் உயிரே போயிடுச்சுன்னா... என்ன பண்றது?”
“அதான் நான் ஏற்கனவே சொன்னேனே சார்... நாங்க இருக்கோம்”னு என்று பதிலுக்கு சொன்னார் ரமேஷ்.
நீங்கதான் இருப்பீங்கன்னு நீ சைக்கிள் பூட்டுன லட்சனத்தை வச்சே தெரிஞ்சி போச்சே... என்று மனதிற்குள்ளேயே திட்டித் தீர்த்த அய்யாசாமி, “நான் குளிக்கணும்னு சொன்னேனே... தாமிரபரணி ஆத்துக்குப் போலாமா” என்று அய்யாசாமி கேட்டதும், “போலாம் சார்” என்று ஆமோதித்தார் ரமேஷ்.
“அய்யய்யோ நாம வேற வீராவேசமாய் ஆத்துல சும்மா நீந்தி குளிப்பேன்னு வேற சொல்லிட்டேன் இப்போ எப்படி சமாளிக்கப்போறேன்னு தெரியலையே” என்று யோசித்துக்கொண்டே வெளியே வந்தார், அய்யாசாமி.
அதற்குள்ளே வெளியே சைக்கிளை எடுத்து ஒரு திண்டிற்கு பக்கத்தில் ரெடியாக நின்றுகொண்டிருந்தார் ரமேஷ்.
சைக்கிளில் லாவகமாய் ஏறி அமர்ந்த அய்யாசாமி, “ரைட் போலாம்” என்று சிக்னல் கொடுக்க, சைக்கிளை ஓட்ட ஆரம்பித்தார் ரமேஷ்.
“அய்யாசாமி சார்... நம்ம இப்போ ஆற்று பக்கத்துல வந்துட்டோம்.”
“குளிர்ந்த காத்து வர்றதை வச்சே, நாம் ஆத்துப் பக்கத்துல வந்துட்டோம்ங்கறத தெரிஞ்சுக்கிட்டேன்” என்றார் அய்யாசாமி.
“நீங்க ரொம்பதான் பிரில்லியண்ட் சார்” என்றான் ரமேஷ்.
தாமிரபரணி ஆறு இறைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றுத் தண்ணிரைப் பார்த்ததும், உடம்பெல்லாம் லேசாய் உதறல் எடுக்க ஆரம்பித்தது அய்யாசாமிக்கு.
“என்ன சார்... தண்ணிய பார்த்ததும், அப்படியே பாஞ்சி போய் விழுந்து நீச்சலடிச்சி குளிக்கணும்னு தோணுமே” என்று கடுப்பேற்றினான் ரமேஷ்.
“இவன் வேற ரெட்டை நாயணத்துல எடையில் ஒரு குட்டி நாயணம். நம்ம படற அவஸ்தைப் புரியாம இவன் வேற இடையல தொணதொணன்னு...” என்று நொந்து கொண்டார் அய்யாசாமி.
“என்ன சார் அமைதியாயிட்டீங்க...” என்று அக்கறையாய் கேட்டார் ரமேஷ்.
“இல்ல... ஆளம் ஜாஸ்தியா இருந்தாதான்... நீச்சல் அடிச்சி குளிக்க நல்லா இருக்கும்... இங்கே எப்படின்னு தெரியலையே”ன்னு லேசாய் வார்த்தையை விட்டார் அய்யாசாமி.
“அய்யய்யோ... இந்தப் பக்கத்துல ஆழம் கிடையாது சார்... நம்ம வேணா குறுக்குத்துறை பக்கம் போவோமா அங்கே நீங்க எதிர்பார்க்கிற மாதிரி ரொம்ப ஆழமா இருக்கும்” என்றார் ரமேஷ்.
“அப்பாடா... நம்ம பயந்த மாதிரி இங்கே ஆழம் இல்லையாம். தண்ணியில விழுந்தா கூட உயிர் பொழைச்சுக்கலாம்” என்று பெருமூச்சி விட்டுக்கொண்டவர், “இல்ல ரமேஷ் நாம அங்கே எல்லாம் போக வேண்டாம். இங்கேயே குளிச்சுக்கலாம்.” என்றார் அய்யாசாமி.“என்ன சார்... தண்ணிய பார்த்ததும், அப்படியே பாஞ்சி போய் விழுந்து நீச்சலடிச்சி குளிக்கணும்னு தோணுமே” என்று கடுப்பேற்றினான் ரமேஷ்.
“இவன் வேற ரெட்டை நாயணத்துல எடையில் ஒரு குட்டி நாயணம். நம்ம படற அவஸ்தைப் புரியாம இவன் வேற இடையல தொணதொணன்னு...” என்று நொந்து கொண்டார் அய்யாசாமி.
“என்ன சார் அமைதியாயிட்டீங்க...” என்று அக்கறையாய் கேட்டார் ரமேஷ்.
“இல்ல... ஆளம் ஜாஸ்தியா இருந்தாதான்... நீச்சல் அடிச்சி குளிக்க நல்லா இருக்கும்... இங்கே எப்படின்னு தெரியலையே”ன்னு லேசாய் வார்த்தையை விட்டார் அய்யாசாமி.
“அய்யய்யோ... இந்தப் பக்கத்துல ஆழம் கிடையாது சார்... நம்ம வேணா குறுக்குத்துறை பக்கம் போவோமா அங்கே நீங்க எதிர்பார்க்கிற மாதிரி ரொம்ப ஆழமா இருக்கும்” என்றார் ரமேஷ்.
“அப்பாடா... நம்ம பயந்த மாதிரி இங்கே ஆழம் இல்லையாம். தண்ணியில விழுந்தா கூட உயிர் பொழைச்சுக்கலாம்” என்று பெருமூச்சி விட்டுக்கொண்டவர், “இல்ல ரமேஷ் நாம அங்கே எல்லாம் போக வேண்டாம். இங்கேயே குளிச்சுக்கலாம்.” என்றார் அய்யாசாமி.
சரி சார்... நீங்க குளிச்சிட்டு வாங்க... நான் இங்கேயே உட்காந்துக்கறேன்னு சொல்லிவிட்டு நல்ல பாறையாய் பார்த்து அமர்ந்தார் ரமேஷ்.
எப்படி குத்தவச்சி உட்கார்ந்திருக்கான் பாரு... மிருகக்காட்சி சாலையிலிருந்து தப்பிச்சி வந்த அனிமல் மாதிரி... ரமேஷ் சார்... ஒரு சின்ன ஆப்ளிகேஷன்...
சொல்லுங்க சார்... என்ன வேணும்?
இல்ல... நான் குளிச்சிட்டு வர்ற வரைக்கும், இந்த டிரஸ்சை மட்டும் கொஞ்சம் கையில வச்சிக்கோங்க. என்று தான் போட்டிருந்த பேண்ட்டையும், சட்டையையும் கழற்றி, ரமேஷ் கையில் கொடுத்தார் அய்யாசாமி.
பட்டாபட்டி ட்ரவுசருடன் நின்றுகொண்டிருந்த அய்யாசாமி, கையையும், காலையும் சும்மா அங்கேயும், இங்கேயும் சுழற்றி காற்றில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார்.
இதையெல்லாம் விநோதமாய் பார்த்துக்கொண்டிருந்த ரமேஷ், சார் என்ன பண்றீங்க என்று பவ்வியமாய் கேட்டார்.
இல்ல, குளிக்கப் போறதுக்கு முன்னாடி உடம்பு கொஞ்சம் பிளக்சிபிலா இருக்கணும். அப்போதான், ப்ரீயா நீச்சல் அடிக்க முடியும். அதுமட்டுமல்லாம, காலையில எந்திச்சதும், கொஞ்சம் எக்சைஸ் பண்ணலைன்னா, நமக்கு அன்னிக்கு வேலையே ஓடாது என்று சொல்லிக்கொண்டே, தண்டால் எடுத்தார் அய்யாசாமி.
பரவாயில்ல சார்... உங்கள பார்த்தா எனக்கே பரவசமா இருக்கு. எப்படி சார்... இதெல்லாம் என்று மூக்கின் மேல் விரல் வைத்தார் ரமேஷ்.
அடப்பாவி... இவன் நாம என்ன பண்ணினாலும் நம்பறானே, தண்ணியப் பார்த்ததும், நம்ம உடம்பு நடுங்கறது தெரியாம இருக்கறதுக்காகத்தான் எக்சைஸ் பண்ணி மேட்ச் பண்ணிட்டு இருக்கேன். இவன் என்னான்னா, தனியா ஒரு கதையே எழுதி டைரக்சன் செஞ்சிருவான் போலிருக்கே... என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டார் அய்யாசாமி.
அய்யாசாமி சார்... சீக்கிரம் போய் குளிங்க... நீங்க குளிக்கற அழகைப் பார்க்க ஆவலா இருக்கேன். என்று சொன்ன ரமேஷை, அசட்டுத்தனமாய் பார்த்த அய்யாசாமி, கடைசியாய் சூரிய நமஸ்காரம் இருக்கு. அதுமட்டும் செஞ்சிட்டேன்னா, அப்படியே குளிச்சிடலாம் என்று, கிழக்குப் பார்த்து திரும்பி நின்ற அய்யாசாமி, கைகள் ரெண்டையும் கூப்பிக்கொண்டு, கண்கள் இருக மூடிக்கொண்டு, கடவுளே... இந்த லுõசுப் பயக்கிட்ட தெரியாத்தனமா நீச்சல் தெரியும்னு கொஞ்சம் பில்டப் கொடுத்துட்டேன். நீதான் என் உசுரு போகாம பார்த்துக்கணும். கமலம் தாலிய நீதான் காப்பாத்தணும் சாமி... என்று ஒரு பெரிய கும்பிடு போட்டார் அய்யாசாமி.
கண்ணை லேசாக திறந்து ரமேஷைப் பார்த்தார், அவர் கண்ணத்தில் கையை வைத்துக்கொண்டு, அய்யாசாமியை வச்சக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
என்ன சார்... அப்படி பார்த்துக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டார் அய்யாசாமி.
முன்ன பின்ன செத்தாதான சுடுகாடு தெரியும்னு சும்மாவா பழமொழி சொல்லி வச்சாங்க... நீங்க செய்றதைப் பார்க்கும்போதுதான், சூரிய நமஸ்காரம் இப்படித்தான் செய்யணும்னு எனக்கே தெரிது. ஆனா, பரவாயில்லை சார்... எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க... என்று பரவசமானார் ரமேஷ்.
அடடா... இவன் நம்மள ரொம்பத்தான் உசுப்பேத்தி விடறான். இவனுக்காக நாம இப்போ எதாவது செஞ்சே ஆகணுமே... என்று வீராவேசமாய் பொங்கி எழுந்த அய்யாசாமி, பின்னங்கால் பிடறிபட தலைதெறிக்க ஓடிப்போய் தொப்பென்று சலசலவென்று ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணி ஆற்றில் குதித்தார்.ஆற்றுத் தண்ணிரீல் அய்யாசாமி குதித்ததும் தண்ணீர் முழுவதும் வெளியே தெறித்தது. தண்ணிரீல் விழுந்த இடத்தில் அய்யாசாமி லேசாக நின்று பார்த்தார்... கால் உள்ளே உள்ளே சென்றுகொண்டிருந்தது. அச்சோ... அவ்வளவுதானா; முடிஞ்சுபோச்சா... என்று நினைத்துக்கொண்டிருந்தபோதே காலடியில் ஒரு பாறை தட்டுப்பட்டது. அதில் காலை வைத்து அழுத்தி நின்ற அய்யாசாமியின் கழுத்துவரை, தண்ணீர் முட்டி மோதி சென்றது.
அப்போது இவரின் தலைக்கு மேலாக பறந்து வந்து ஒரு சிறுவன் டைவ் அடித்து தண்ணிரீல் விழுந்தான். ஒரு கணம் அதிர்ச்சி அடைந்த அய்யாசாமி, மெல்ல திரும்பி கரையைப் பார்த்தார். அங்கே ரமேஷ் உட்கார்ந்திருந்து கையை ஆட்டிக்கொண்டிருந்தார்.
பதிலுக்கு சிரித்துக்கொண்ட அய்யாசாமி, பாவிப்பய... சாவறதுக்கு டாடா காட்டுற முதல் ஆளு இவனாத்தான் இருக்கும். என்று உடம்பு தேய்ப்பது போன்று நடித்துக் கொண்டிருந்தார் அய்யாசாமி.
அப்போது கரையில் உட்கார்ந்திருந்த ரமேஷின் கையில் இருந்த அய்யாசாமியின் சட்டைப் பையில் இருந்த செல்போன் அடிக்கும் ஒலி கேட்டதும், தேடித்துருவி செல்போனை எடுத்தார் ரமேஷ்... அதில் கமலம் காலிங் என்று வந்தது. அதைப் பார்த்து ஆன் செய்து... “ஹலோ...” என்றார் ரமேஷ்.
எதிர்முனையில் பேசிய கமலம்... “என்னங்க... எப்படி இருக்கீங்க...” என்று ஆர்வமாய் கேட்டாள்.
“அய்யோ மேடம்... என் பேரு ரமேஷ். அய்யாசாமி சார் குளிச்சிட்டு இருக்காரு... நீங்க யாரு?”
“நான் கமலம்... அய்யாசாமி சாரோடு வொய்ப். சரி சார்... நான் அப்பறம் பேசறேன். சார்ட்ட நான் பேசினதா மட்டும் சொல்லுங்க” என்றாள் கமலம்.
“சார்... தாமிரபரணி ஆத்துல நீச்சல் அடிக்கற அழகைப்பார்த்தால் இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு தண்ணியில இருந்து எழுந்திருக்க மாட்டாரு” என்று பெருமை பொங்க சொன்னார் ரமேஷ்.
“எ.. என்னது... தாமிரபரணி ஆத்துலயா குளிக்கார்... அய்யோ... அவருக்கு நீச்சல் தெரியாதே!”
“அய்யோ போங்க மேடம்... நீங்கதான் விவரம் தெரியாம பேசறீங்க... சார் என்னமா நீச்சலடிக்கிறார் தெரியுமா...? எறால் நீச்சல்னு இந்தியாவிலேயே இல்லாத ஒரு புது நீச்சலையே அடிச்சிட்டு இருக்காருன்னா பார்த்துக்கோங்களேன்.”
“அய்யய்யோ... சார்.. அவருக்கு நீச்சல் தெரியாது. அது மட்டுமல்லாம அவருக்கு தண்ணீர்ல கண்டம் வேற... சார்... என் உயிரே உங்க கையிலதான் இருக்கு. என் தாலியை காப்பாத்துங்க சார்... உடனே போய் அவர காப்பாத்துங்க சார்...” என்று கதறி மன்றாடினாள் கமலம்.
“அச்சச்சோ... மேடம் நீங்க உண்மையாவா சொல்றீங்க... அவரு என்ட்ட நீச்சல் தெரியும்னு சொல்லிட்டுத்தானே ஆத்துல குதிச்சாரு...” என்ற ரமேஷிடம்... சார்... இந்த போனையே உங்க காலா நினைச்சு கெஞ்சி கேட்டுக்கறேன்... பேசறதுக்கு நேரம் இல்ல... தயவு செஞ்சு அவரை வெளியே கூப்பிட்டுட்டு வந்துடுங்க... பாவம் சார் அவரு...” என்று சொன்னதும், செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டு அய்யாசாமியைப் பார்த்தார் ரமேஷ்.
அங்கே அந்த பாறையில் பேலன்ஸ் செய்துகொண்டு வழுக்கி விழாமல் நின்ற மேனிக்கே, இந்த காக்கா எல்லாம் தண்ணிரில் தலையை மட்டும் முக்கி எடுத்து உதறிக்கொள்ளுமே அதேபோல தலையை நின்றவாறே செங்குத்தாக தண்ணீரில் முக்கி முக்கி குளித்துக்கொண்டிருந்தார் அய்யாசாமி.
வெளியில் இருந்து பார்த்த ரமேஷ். இந்த மேடம் ஏதோ உளர்றாங்க...இவரு அழகாத்தான் குளிச்சிட்டு இருக்கார். என்று ரமேஷ் நினைத்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று தண்ணீரின் வேகம் அதிகமாக, தண்ணீரில் முங்கிய அய்யாசாமி அப்படியே தண்ணீரின் போக்கில் இழுத்துச் செல்லப்பட்டார். “அய்யோ.. அம்மா...” என்று மரண ஓலமிட்ட அய்யாசாமி, கையை காட்டி தன்னை காப்பாற்றுமாறு கையை துõக்கி வெளியே காட்டினார். அய்யாசாமியின் மரண ஓலம் எதுவும் அந்தத் தண்ணீர் சத்தத்தில் எடுபடாமல் போகவே, வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ரமேஷ்... அடடா மனுஷன் என்னமா எறால் நீச்சல் அடிக்கிறார்... என்றவாறே அய்யாசாமிக்கு பதிலுக்கு கையைக் காட்டிக்கொண்டிருந்தார் ரமேஷ்.
தெய்வமே என்னைக் காப்பாத்து... என்று புலம்பியவாறே தண்ணீர் இழுவையில் சென்ற அய்யாசாமி, கமலம்... என்று அண்ட சராசரமே அடங்கி விடும் அளவிற்கு கத்தினார். அந்த சமயம் பாறைகளுக்கு நடுவே முளைத்திருந்த நாணல் புல் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரியில் தட்டுப்படவே கொத்தாய் பிடித்துக்கொண்டார் அய்யாசாமி. அப்பாடா ஒருவழியா புடிச்சிக்கிட்டோம். என்று நாணல் புற்களோடு சேர்த்து பாறையையும் ஆறத்தழுவிக்கொண்ட அய்யாசாமி கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு, கரையில் ரமேஷை தேடினார். அவர் துõரத்தில் ஒரு சிறு புள்ளியாய் தெரிந்துகொண்டிருந்தார்.


ஸ்ஸ்... அப்பா... என்று பாறையை கட்டித் தழுவிக்கொண்ட அய்யாசாமி, கமலம் உன் தாலி ரொம்ப கெட்டிதாண்டி. என்று நினைத்துக்கொண்டவர், இந்த பல்லி எல்லாம் சுவற்றில் ஏறுமே, அதேபோல் பாறையில் மெதுமெதுவாக ஊந்து சென்று ஒரு வழியாக கறையேறினார் அய்யாசாமி.
ஒரு வழியா கறையேறிட்டோம். ஆனா, அந்த லுõசுப்பயட்ட என்னத்த சொல்லி சமாளிக்கப்போறோமோ தெரியலை. உயிரோட வருவானா, இல்ல அப்படியே தண்ணீரோட தண்ணியா ஜலசமாதி ஆயிட்டானான்னு காத்திட்டு இருக்கான்னு நினைக்கிறேன்... பாரு இன்னமும் அப்படியே குத்தவச்சி உட்கார்ந்திருக்கான்.
அய்யாசாமி வருவதைப் பார்த்து கையில் அவருடைய உடையிடன் ஓடிவந்த ரமேஷ், “வாங்க சார்... நல்ல குளியலா... திருப்தியா இருந்துச்சா?”
“ம்... இருந்துச்சு... இருந்துச்சு...” என்று வெடவெடன்னு நடுங்கிக்கொண்டிருந்த அய்யாசாமி, இரண்டு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு நின்றிருந்தார். மேல் பல்லும், கீழ் பல்லும் ஒன்றுக்கொன்று டைப் அடித்துக்கொண்டிருந்தன.
“சார்... உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்.”
“தாராளமா கேளுங்க... ஆனா, கேட்கறதுக்கு முன்னாடி கொஞ்சம் டவலை கொடுத்தீங்கன்னா அப்படியே தலை துவட்டுக்குவேன்.”
“இந்தாங்க சார்... என்று டவலை நீட்டிய ரமேஷ், இல்ல சார்... உங்களுக்கு நீச்சல் தெரியுமா... தெரியாதா...?” என்று ரமேஷ் கேட்ட கேள்வியில் அதிர்ச்சியான அய்யாசாமி, அய்யய்யோ கண்டுபிடிச்சிட்டானா... என்று மனதில் நினைத்துக் கொண்டவருக்கு, குளிர் எல்லாம் காணாமல் போய், வியர்க்க ஆரம்பித்தது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, “என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க...? நீங்கதான் கண்ணால பார்த்துட்டுத்தானே இருந்தீங்க... நான் எப்படி நீச்சல் அடிச்சேன். இங்க முங்கி நீச்சல் அடிக்க ஆரம்பிச்சவன், அப்படியே அரைகிலோமீட்டர் போய்தானே நின்னேன்.”
“ஆமா சார்... நானும் கவனிச்சேன்... நீங்க இங்கேதானே நின்னுக்கிட்டு இருந்தீங்க... அங்க எப்படி போனீங்க...?”
“பார்த்தீங்களா... நீங்களே கவனிக்கலை. அதான் எறால் நீச்சல். நின்னுக்கிட்டு இருக்கிற மாதிரியே இருக்கும்... ஆனா திடீர்னு எங்கேயோ போயிருவேன்...” என்று சொன்னவர், “எப்படியல்லாம் சமாளிக்க வேண்டியதிருக்கு... எப்படித்தான், இப்படியல்லாம் கேள்வி கேட்கிறானோ தெரியலை” என்று மனதிற்குள் நொந்துகொண்டார் அய்யாசாமி.
“சரி சார்... நீங்க சொல்றது எல்லாம் சரிதான். ஆனா, உங்க மனைவி உங்களுக்கு நீச்சலே தெரியாதுன்னு சொன்னாங்களே...?” என்றதும், ஒரு பேரிடி அய்யாசாமியின் தலையில் விழுந்தது போல இருந்தது.
“இ.. இல்லை... அப்படியல்லாம் ஒன்றும் இல்லை... ஆமா, என் மனைவிக்கு தெரிஞ்சது, உங்களுக்கு எப்படி தெரியும்.”
“இல்ல சார்... நீங்க குளிச்சிட்டு இருக்கிற சமயத்துல... உங்க போனுக்கு ஒரு கால் வந்துச்சு. அதுல உங்க மனைவிதான் பேசினாங்க. அவங்கக்கிட்ட நீங்க ஆத்துல நீச்சல் அடிச்சு குளிச்சிட்டு இருக்கறதா சொன்னேன். அவங்க பயங்கரமா அதிர்ச்சியாய்ட்டாங்க. உங்களுக்கு நீச்சல் தெரியாதுன்னும், உங்கள உடனடியா காப்பாத்துங்கன்னும் என்னிடம் சொன்னாங்க... ஆனா, பாருங்க உங்க மனைவி சொல்றதை நான் நம்பவே இல்லை.”
எப்படி நம்புவ... அதுக்கும் கொஞ்சம் மூளை வேணும்தானே... என்ற வாய்குள்ளேயே முணங்கிக்கொண்ட அய்யாசாமியை “என்ன சார்... அப்படியே நின்னுட்டீங்க...” என்றார் ரமேஷ்.
“இல்ல... ஒண்ணுமில்லை... கமலம் ஏன்தான் இப்படி பயப்படறாளோ தெரியலை.”
“இந்த பொம்பளைங்களே இப்படித்தான் சார்... ஒண்ணுன்னா ஒன்பதும்பாங்க... நீங்க விட்டுத் தள்ளுங்க சார்...”
“சரி ரமேஷ்... பக்கத்துல ஏதும் ஓட்டல் இருக்கா...?”
“இருக்கு சார்... முதல்ல நீங்க டிரஸ் போட்டுட்டு வாங்க... நாம அப்படியே ஓட்டல்ல சாப்பிட்டுட்டு, ஆபீசுக்குப் போய் மேனஜரை பார்த்துட்டு வந்துடலாம்.”
“ஓ.கே. ரமேஷ்...” என்ற அய்யாசாமி மின்னல் வேகத்தில் டிரஸ்சை மாற்றிக்கொண்டு, அந்த அதரப் பழசான காயலாங்கடை சைக்கிளில் ஏறி ஆற்றுப் பக்கத்திலேயே உள்ள ஒரு சின்ன ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு முடித்து விட்டு வெளியே வந்தனர்.
“சார்... அப்படியே ரூமுக்குப் போய், பைலை எடுத்துட்டு ஆபிஸ் போவோம்” என்றார் அய்யாசாமி.
“சரி சார்...” என்று சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார்... ரமேஷ். இவன் சைக்கிள் மிதிக்கறதுக்கு... ஏலேலோ... ஐலசா... ஏலேலோ ஐலசா...ன்னு யாராவது பேக்ரவுண்டுல பாடினா... இவன் சைக்கிள் ஓட்டுற ஸ்டைலுக்கு கரெக்ட்டா இருக்கும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டார் அய்யாசாமி.


“என்ன ரமேஷ் சார்... என்ன பேசவே மாட்டேங்குறீங்க... ஏதோ யோசிக்கற மாதிரி தெரியுது” என்றார் அய்யாசாமி.
“இல்ல சார் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. எனக்கு வேறொரு சிந்தனை ஓடிட்டு இருக்கு. அதை சொல்லலாமா வேண்டாமான்னு ஒரே குழப்பமா இருக்கு” என்றார் ரமேஷ்.
“சும்மா சொல்லுங்க சார்... வெளிப்படையா சொன்னாத்தானே... உங்களுக்கு ஏற்பட்ட குழப்பத்தை கொஞ்சமாவது சரிகட்ட முடியும்... மனசுக்குள்ளேயே வச்சிருந்தா என்னாகும்...” என்றார் அய்யாசாமி.
“இல்ல சார்... விஷயமே உங்களப் பத்திதான்... நேத்துதான் எனக்கு மேனேஜர் போன் பண்ணி சொன்னார். அதை உங்ககிட்ட கண்டிப்பா இப்போ சொல்லக்கூடாது ஆபிசுக்கு வந்தப்பிறகு நானே சொல்லிக்கறேன்னு மேனேஜர் சொன்னார்.”
“என்னது... என்னைப் பத்தின விஷயமா... என்ன சார் சொல்றீங்க... கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லுங்களேன்.”
“இல்ல சார்... உலக அளவுல பொருளாதாரத்துல சரிவு ஏற்பட்டதால...” என்று ரமேஷ் இழுக்கவும்..
“அச்சச்சோ... வேலையை விட்டே என்னை துõக்கிட்டாங்களா...?” என்று அதிர்ச்சியில் கத்தினார் அய்யாசாமி.
“சார்... அப்படியல்லாம் ஒண்ணும் இல்லை. நீங்க ரொம்ப பயப்படாதீங்க...” என்று ஆசுவாசப்படுத்தினார் ரமேஷ்.
“அதானே பார்த்தேன்... கொஞ்சம் புரியற மாதிரி சொல்றீங்களா ரமேஷ் சார்...’3
“இல்ல... நீங்க இப்போ வேலை பார்க்கற செக்ஷன்ல இருந்து உங்களை இன்னொரு செக்ஷனுக்கு மாத்தப்போறாங்களாம்.”
“அடடே... ஆரம்பிச்சிட்டான்யா வேலைய... நான் அப்பவே நினைச்சேன். இந்த குண்டன் கோதண்டம் தனியா ரூம்ல உட்கார்ந்து சிந்திக்கற நேரத்துலயே நினைச்சேன். இவன் நம்மள ஏதோ ஒண்ணு பண்றதுக்காகத்தான் திருநெல்வேலியில் வேலைன்னு நம்மள அனுப்பியிருக்கான்... டேய் கோதண்டம்... இந்த அய்யாசாமி நாக்கு கறுநாக்கு... நான் சாபமிட்டேன் அவ்வளவுதான்” என்று மனதுக்குள்ளேயே தன்னுடைய மேனேஜர் கோதண்டத்தை கரித்துக்கொட்டிக்கொண்டு வந்தார் அய்யாசாமி.
“என்ன சார்... டக்குன்னு அமைதியாயிட்டீங்க...?”
“இல்ல... எந்த செக்ஷன்ல நம்மள மாத்தினாங்கன்னு தெரியலையே... அதான் யோசிச்சிட்டு இருக்கேன். உங்களுக்கு ஏதாவது அதப்பத்தி தெரியுமா?” என்று கேட்டார் அய்யாசாமி.
“அது மட்டும்தான் தெரியலை சார்...” என்று நைசாக நழுவிக்கொண்டார் ரமேஷ்.
“எல்லாம் தெரிஞ்சிருக்கும். கள்ளன் இவன் நம்மகிட்டேயிருந்து மறைக்கிறான்” என்று மனதிற்குள்ளேயே ரமேஷையும் திட்டிக்கொண்டே வந்தார் அய்யாசாமி.
இருவரும் கெஸ்ட் அவுசிற்கு சென்று பைல்களை எடுத்துக்கொண்டு, ஆபிசுக்கு விரைந்தார்கள்.
ஒரு பெரிய கட்டடத்தின் வாசலில் சைக்கிளை நிறுத்தினார் ரமேஷ். “ஏன்சார்... இந்த பில்டிங்கிலேயா நம்ம ஆபீஸ் இருக்கு?” என்று அப்பாவியாய் கேட்டார்.
“எஸ் சார்... இதே பில்டிங்லதான் இருக்கு...” என்று பெருமிதமாய் சொன்னார் ரமேஷ்.
பரவாயில்லையே என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டவர், அந்த கட்டடத்தின் மாடிப்படியேறி சென்றார்கள்... “ரமேஷ் சார் நான் கேட்கறேன்னு தப்பா நினைச்சுக்கக் கூடாது. இவ்வளவு உயரமான ஆபிசுக்கு இப்படித்தான படியேறி போகணுமா... இந்த லிப்ட் வசதியெல்லாம் கிடையாதா...?”
“இல்ல சார்... லிப்ட் வசதி எல்லாம் உண்டு. ஆனா, நமக்கு மட்டும் கிடையாது” என்று பீடிகை போட்டார் ரமேஷ்.
“கொஞ்சம் எனக்கு புரியற மாதிரி சொல்லுங்க...” என்றார் அய்யாசாமி.
“நம்ம ஆபிஸ் இந்த பில்டிங்ல வாடகைக்குத்தான் இருக்கு. இந்த பில்டிங் ஓனர் போட்ட அக்ரிமெண்டுல லிப்ட் யூஸ் பண்றதா இருந்தா... அதுக்குத் தனியா பணம் கொடுக்கணும். அதனாலதான், நம்ம மேனேஜர்... லிப்ட் வேண்டாம்னு எழுதிக்கொடுத்துட்டார். அதுவும் ஒரு வகைக்கு வசதிதானே... படியில போனா... உடற்பயிற்சி செஞ்ச மாதிரி இருக்கும்தானே...” என்றார் ரமேஷ்.
அடப்பாவி... கஞ்சத்தனத்தையே... என்னமா பில்டப் பண்ணி பேசறான். “ஆமா ரமேஷ் சார்... ரொம்ப நேரம் படியே ஏறிக்கிட்டு இருக்கோம் ஆபீஸ் வந்தது மாதிரியே இல்லையே...” என்றார் அய்யாசாமி.
“இல்லை சார்... இன்னும் ஒரே ஒரு புளோர்தான்... அப்புறம் நம்ம ஆபீஸ்தான்.’3
“என்னது... இன்னும் ஒரு புளோர்தானா... ஏன் சார்... அதுக்குப்பிறகுதான் பில்டிங்கே முடிஞ்சிபோயிடுமே... அதுக்குப்பிறகு எங்கிருந்து ஆபீஸ் இருக்கும்” என்றவரை புன்முறுவலோடு பார்த்தார்.
ரமேஷ் சொன்னது மாதிரியே... அடுத்த புளோரும் கடந்து மேலே வந்தபோது அந்த வெட்ட வெளி மாடியில் பரபரவென்று காற்று அடித்துக்கொண்டிருக்க... அந்த வெட்டவெளியின் ஓரத்தில் ஆஸ்பெஸ்டாஸ் ஓடுபோட்ட வீடு மாதிரி ஒரு கட்டடம் இருந்தது. அந்தக் கட்டடத்தையே குறுகுறுன்னு பார்த்தார் அய்யாசாமி.
“என்ன சார் அப்படி பார்க்கறீங்க... இதுதான் நம்ம ஆபீஸ்” என்ற ரமேஷை கேவலமாய் பார்த்த அய்யாசாமி, குருவிக்கூடுக்கு பேரு ஆபீஸ்ன்னு சொல்லி நம்மள இப்படி ஏமாத்திப்புட்டானே என்று ஏமாற்றத்துடன் ரமேஷைப் பார்த்தார் அய்யாசாமி.
“சார்... வாங்க சார்... மேனேஜர் வந்துட்டார்” என்று பரபரப்பாய் சொன்னார் ரமேஷ்.
“எப்படி அவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க?” என்று கேட்டார் அய்யாசாமி.
“இங்கே பாருங்க... அவர் செறுப்பு கிடக்குது. அப்படீன்னா அவரு வந்துட்டாருன்னுதான் அர்த்தம்” என்று சொல்லிக்கொண்டே, இருவரும் மேனேஜர் அறையில் பவ்யமாக நுழைந்தார்கள்.
“வாங்க அய்யாசாமி...” என்று புன்னகையுடன் வரவேற்றார் திருநெல்வேலி மானேஜர்.

No comments:

Post a Comment