பொதிகை மலை புதையல்!
------------------------------
அன்றுதான் சேகருக்கும், சபரீஷ்க்கும் முழு ஆண்டு தேர்வு முடிந்தது. தேர்வு முடிந்த சந்தோஷத்தில் வீட்டிற்கு சிட்டாக பறந்து வந்தனர்.
“அம்மா... அம்மா... கதவை சீக்கிரம் திற...” என்று ஒருசேர சத்தம் போட்டதில், என்னவானதோ ஏதானாதோ என்ற பயத்தில், ‘இதோ வந்துட்டேண்டா...’ என்று சொல்லியவாறே படபடப்புடன் ஓடிவந்தாள் அம்மா சுப்புலட்சுமி.
கதவைத் திறந்ததும்தான் தாமதம்... சேகரும், சபரீஷûம் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு, வீட்டிற்குள் பாய்ந்தோடி வந்தனர்.
‘அடடா... எக்சாம் முடிஞ்ச அன்னிக்கே, வால் தனத்தை ஆரம்பிச்சுட்டாங்களே... இன்னும் ரெண்டு மாசம் இவங்கள வச்சி... எப்படித்தான் சமாளிக்கப் போறேனோ தெரியல...’ என்று புலம்பியவாறே கதவைப் பூட்டிவிட்டு வீட்டிற்குள் வந்தாள். அங்கே, சேகர் பெரிய டேபிளை நகர்த்தி, அந்த நீண்ட கப்போர்டின் கீழ் கொண்டு வந்தான்.
“டேய்... என்னடா பண்ற... இன்னும் யூனிபார்ம் கூட மாத்தல...” என்றாள் சுப்புலட்சுமி.
“ஒண்ணுமில்லேம்மா... அந்த கப்போர்டிலதானே கிரிக்கெட் பேட்டை ஒளிச்சு வச்சிருக்கே... அத நான் எடுக்கப்போறேன்...” என்றான் சேகர்.
“சபரீஷ் எங்கடா...?”
“அவனா... பந்தை தேடிட்டு இருக்கான்... எப்படியும் எடுத்துருவான்னு நினைக்கிறேன்.”
“டேய்... எக்சாம் இன்னிக்குத்தானடா முடிஞ்சிருக்கு... இன்னிக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு, நாளையிலேர்ந்து விளையாடுங்களேன்டா...” என்ற அம்மாவிடம், “போம்மா... ஒரு மாசம் படி, படின்னு தொந்தரவு பண்ணின... இப்போதான் எக்சாம்தான் முடிஞ்சிடுச்சுல... ‘ப்ளீஸ்’மா எங்களை விளையாட விடும்மா...” என்று கெஞ்ச ஆரம்பித்தான் சேகர்.
“சரி... சரி... வீட்டு பக்கத்துலேதான் விளையாடணும்... கிரவுண்டுக்கு எல்லாம் போகக்கூடாது.”
“சரிம்மா... நாங்க இங்கேயே விளையாடறோம்...” என்றவனை செல்லமாக தட்டிவிட்டுச் சென்றாள் அம்மா.
“எங்கிருந்தோ பந்தை தேடி எடுத்து வந்த சபரீஷ், வாடா... பந்து கிடைச்சிடுச்சு...” என்று தம்பியின் தோளில் கை போட்டவாறே வெளியில் அழைத்துச் சென்றான்.
மாலை... ஆறு மணி இருக்கும். வீட்டு வாசலில் ஸ்கூட்டர் ஸ்டாண்டு போடும் சத்தம் கேட்டு, வெளியே எட்டிப் பார்த்தாள் சுப்புலட்சுமி. வெளியே வேலு நின்று கொண்டிருந்தான்.
அவசர அவசரமாக வெளியே சென்றவள், “என்னங்க... இன்னிக்கு சீக்கிரமாவே ஆபீஸ்ல இருந்து வந்துட்டீங்க...” என்று ஆர்வம் தாங்காமல் கேட்டாள்.
“ஒண்ணுமில்லே... ஊர்ல இருந்து அப்பா போன் பண்ணினார்.”
“என்னவாம்...?”
“பசங்களுக்கு... எக்சாம் முடிஞ்சுடுச்சுல... அதான், ஊருக்கு வரச்சொல்லி அப்பா போன் பண்ணினார்.”
“எங்க... வள்ளியூருக்கா?” என்று முகம் சுழித்தாள் சுப்புலட்சுமி.
“ஆமாம்... வள்ளியூருக்குத்தான். அப்பா காலையில இருந்து தொடர்ந்து போன் பண்ணிக்கிட்டே இருக்கார்...”
“அதனால... இப்பவே கூட்டிட்டு போறீங்களா?”
“ஆமா... இன்னிக்கு நைட் 9 மணி டிரெயினுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன்... நாளைக்கு காலையில வள்ளியூர்ல இருப்போம். ஆமா... பசங்கள எங்க காணோம்...?”
“அவங்களா? பேட்டை துõக்கிட்டு விளையாட போயிட்டாங்க...”
“சரி... சரி... சீக்கிரம் அவங்கள கூட்டிட்டு வா... புறப்பட சொல்லணும்.” அவசரப்படுத்தினான் வேலு.
விளையாடிக் கொண்டிருந்த இருவரையும் கூட்டிக்கொண்டு வந்தாள் சுப்புலட்சுமி.
வீட்டிற்குள் நுழைந்தவர்கள்... “அப்பா... இன்னிக்கு, நாம தாத்தா வீட்டுக்கா போறோம்?” ஆர்வம் தாங்காமல் கேட்டான் சபரீஷ்.
“ஆமாண்டா... தாத்தா, இந்த ரெண்டு மாச லீவுக்கும், நீங்க அங்கதான் இருக்கணும்னு கண்டிப்பா சொல்லிட்டார். அதான் உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போறேன்.”
“அம்மா வரலையாப்பா...” கேட்டான் சேகர்.
“இல்லப்பா...”, என்று சொன்னதும். ‘அப்பாடா... அங்க போய் நல்லா, விளையாடலாம். ஹைய்யா... ஜாலி... ஜாலி...’ என்று குதுõகலித்தான் சபரீஷ்.
டிரெயின் திருநெல்வேலியைத் தாண்டி... வயல் வரப்புகளுக்கு இடையே சீரிப் பாய்ந்து வள்ளியூரை நெருங்கிக் கொண்டிருந்தது.
வள்ளியூர் ரயில்வே ஸ்டேஷனில், கண்ணுக்கெட்டும் துõரம்வரை தண்டவாளத்தையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் தாத்தா சுப்பையா.
வள்ளியூரில் அருகே, அந்த பொதிகை மலையில்தான் பல விசித்திரமான அனுபவங்களை எதிர்கொள்ளப் போவதையும், வரலாற்றில் சொல்லப்பட்ட அந்த புதையல் ரகசியத்தை தேடி அலையப் போகிறோம் என்பதையும் அதுவரை சேகரும், சபரிஷûம் தெரிந்திருக்கவில்லை.
சுப்பையா, வெறித்துத் தண்டவாளத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். துõரத்தில் ரயில் வருவதற்கான சத்தம் கேட்டதுமே உற்சாகமானார்.
ஸ்டேஷனுக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஆட்டோக்காரனை ‘ரயில் வருகிறது...’ என்று சைகை காட்டி, ஆட்டோவை புறப்படத் தயாராகச் சொன்னார்.
துõரத்தில் புள்ளியாய் தெரிந்த ரயில், இப்போது அருகருகே நகர்ந்து வந்து, ஸ்டேஷனுக்குள் நுழைந்தது. சந்தோஷத்தின் உச்சக்கட்டத்தில் இருந்த சுப்பையா, தன் அருகே நகர்ந்து சென்று நிற்கும் தறுவாயில் வந்த ரயிலின் ஒவ்வொரு ஜன்னலையும் ஆர்வமாய் தலையைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தார். ரயில் நின்றதும்தான் தாமதம், நான்காவது பெட்டியிலிருந்து வேலு முதலில் இறங்க, சேகரும் சபரீஷûம் ‘பொத்’தென்று கீழே குதித்தனர்.
“டேய்... இங்கேயே ஆரம்பிச்சுட்டீங்களா... மெதுவா இறங்க வேண்டியதுதானே...” என்று வேலு சொல்ல, துõரத்தில் இருந்து பேரப்பிள்ளைகளை பார்த்த சந்தோஷத்தில், சுப்பையா வேகமாக அவர்கள் அருகில் ஓடிவந்தார்.
வேலு, தந்தையைப் பார்த்ததும், ‘டேய்... தாத்தா வந்துட்டாங்க, பாருங்க...’ என்று கூற, சேகரும், சபரீஷûம், ‘தாத்தா...’ என்று சுப்பையாவின் தோளைக் கட்டிக் கொண்டனர்.
“வாங்கடா என் செல்லங்களா...” என்று, இருவரையும் மாறி மாறி கன்னங்களில் முத்த மழையை பொழிந்த சுப்பையா, பேரன்களின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு, ‘வாங்க ராசா... வீட்டுக்குப்போலாம்’ என்று ஆட்டோவிற்கு அழைத்துச் சென்றார்.
ஆட்டோ புறப்பட்டு, வள்ளியூர் எல்லையில் உள்ள சுப்பையாவின் வீட்டிற்கு அருகே வந்துகொண்டிருந்தது. வீட்டு வாசலில் பாட்டி சிவகாமி, பேரப்பிள்ளைகளின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள். ஆட்டோ வீட்டு வாசலில் வந்ததும், சபரீஷ், ‘பாட்டி...’ என்று சந்தோஷத்தில் குதித்தான்.
சிவகாமிக்கு பூரிப்பில் ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது. ஆட்டோவை விட்டு இறங்கிய தன் இரண்டு பேரப் பிள்ளைகளையும் வாரி அணைத்துக்கொண்டு, வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.
“என்னப்பா வேலு... எத்தனை நாள் லீவ் போட்டிருக்கே...”
“லீவ் கிடைக்கலப்பா... இன்னிக்கு சாயங்காலம் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் கிளம்பறேன்பா...”
“என்னடா இப்படி சொல்லிட்ட...” என்ற சுப்பையாவை ஆறுதல்படுத்தினான் வேலு. பாட்டியுடன் ஊர்க்கதைகளெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர், சபரீஷûம், சேகரும்.
மாலை மணி ஐந்தானது. ஊருக்கு அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தான் வேலு.
‘சேகர்...’ என்று குரல் கொடுத்ததுமே பக்கத்தில் ஓடோடிவந்தான் சேகர்.
“என்னப்பா...?”
“வீட்ல பாட்டி, தாத்தாகிட்ட கலாட்டா பண்ணாம இருக்கணும். வீட்டு பக்கத்துலேயே விளையாடுங்க... தாத்தா போன் பண்ணி கம்ப்ளெய்ன்ட் பண்ற அளவுக்கு நடந்துக்கக் கூடாது சரியா... ஆமா, சபரீஷ் எங்கே...?”
“அவன் பாட்டி கூட... பக்கத்துல உள்ள கோயிலுக்கு போயிருக்காம்பா...”
“சரி... அவன் வந்தா, நான் ஊருக்கு கிளம்பிட்டதா சொல்லு, அவனையும் ஜாக்கிரதையா இருக்கச்சொல்லு”, என்று அறிவுரை கூறினான் வேலு.
“டேய்... என்ன பிள்ளைங்கள, ஓவரா அதட்டிக்கிட்டு இருக்க... பசங்கன்னா சேட்டை பண்ணுவாங்கதான்... நீ ஊருக்கு கிளம்பிட்டல்ல... வா... உன்னை கொண்டு ஸ்டேஷன்ல விட்டுட்டு வந்துடறேன்” என்று சுப்பையா அவசரப்படுத்த, வேலு ‘சரிப்பா... நான் கிளம்பிட்டேன்’ என்று பேக்கை தோளில் போட்டுக்கொண்டு, கிளம்பினான்.
இரவு மணி எட்டு இருக்கும். ‘தாத்தா... வீட்டுக்குள்ளே ரொம்ப வேர்க்குது... எங்க படுத்து துõங்கறது...?” என்று கேட்டான் சபரீஷ்.
“கோடைகாலம் தொடங்கிடுச்சுல... காலைல அடிச்ச வெயிலோட வெப்பம், இப்போதான் தெரியுது. அதுதான் புழுக்கமா இருக்கு... சரி... நாம மூணு பேரும் முற்றத்திலே பாய் விரிச்சு படுத்துக்கலாம். பாட்டி மட்டும் வீட்டுக்குள்ளே படுத்துக்கட்டும்.”
“ஏன் பாட்டியும் வெளியே வந்து படுத்துக்கலாமே...” என்றான் சேகர்.
“இல்லப்பா... பாட்டிக்கு வெளியில படுத்தா ஒத்துக்காது. அவ... வீட்டுக்குள்ளேயே படுத்துக்கட்டும் சரியா?”
“சரி தாத்தா...” என்று கூறியவாறே, பாய், தலையணையுடன் முற்றத்திற்கு நடந்தான் சேகர். முற்றத்தில் பாய் விரித்து, தலையணை எல்லாம் போட்டு ஒழுங்கு செய்த சேகர், “தாத்தா பாய் எல்லாம் போட்டாச்சு... சீக்கிரம் வாங்க...” என்று குரல் கொடுத்தான்.
“இதோ வந்துட்டேண்டா...” என்று சொல்லிக்கொண்டே, சபரீஷையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு முற்றத்திற்கு வந்தார் சுப்பையா.
அன்று பவுர்ணமி... முழு நிலா, ராத்திரியை பகலாக்கிக் கொண்டிருந்தது. வாசலில் இருந்த பலாமரமும், தென்னை மரமும் லேசாக அசைந்து ஆட, தென்றல் காற்று மெதுவாக அவர்களைத் தொட்டது. அந்த சுகத்தில் அப்படியே வானத்தை பார்த்துக் கொண்டு படுத்திருந்தனர், மூவரும்.
“தாத்தா... சும்மா படுத்துக்கிட்டு இருக்கீங்க... ஏதாவது கதை சொல்லுங்க...” என்று சேகர் தாத்தாவிடம் கதை கேட்க... “கதையா? சரி உங்களுக்கு என்ன கதை பிடிக்கும். சொல்லுங்க...”
“தாத்தா ஏதாவது ராஜா கதை சொல்லுங்க...” என்றான் சபரீஷ்.
“ராஜா கதையா? உண்மைக் கதையையே சொல்றேன்...” என்றார்
“உண்மைக் கதையா...?” வாயைப் பிளந்தான் சேகர்.
“ஆமாண்டா... இது, இந்த வள்ளியூரோட கதை. நுõறு கோடி ரூபாய் மதிப்புள்ள புதையல் புதைஞ்சு கிடக்கிற, பொதிகை மலையோட கதை, இன்னிக்கு வரை அந்த புதையலை தேடி அலைஞ்சுட்டு, இருக்கிறவங்களோட உண்மைக் கதை” என்று தாத்தா சொல்ல... பேரன்கள் இருவரும் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தனர்.
புதையலைத் தேடி அலைஞ்சுட்டு இருக்கறவங்களோட உண்மைக்கதை என்று தாத்தா சொல்ல... பேரன்கள் இருவரும் ஆச்சர்யத்தில் கண்களை அகல விரித்தனர்.
“சொல்லுங்க தாத்தா” என்று, அந்த நிலவொளியில் தாத்தாவின் முகத்தை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர் சேகரும், சபரீஷûம்.
“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், மதுரையைத் தலைநகராகக் கொண்டு, தமிழ்நாட்டின் தென்பகுதியை சந்திரகுலத்தைச் சேர்ந்த பிற்காலப் பாண்டிய மன்னர்கள்தான் ஆட்சி செய்தார்கள். மதுரை மன்னரின் குடும்பத்தினர், சின்ன சின்ன ஊர்களை எல்லாம் ஒன்று சேர்த்து சிறிய நாடாக ஆட்சி செய்து வந்தனர்” என்று தாத்தா சொல்ல,
“சின்ன ஊர்னா எவ்வளவு பெருசு தாத்தா இருக்கும் தாத்தா?” என்று சந்தேகத்தை எழுப்பினான் சேகர்.
“சின்ன ஊர்னா... நம்ம வள்ளியூர் அளவு இருக்கும். கதையை சொல்லட்டுமா...” என்று தாத்தா கேட்க, “சொல்லுங்க தாத்தா...” என்றான் சபரீஷ்.
“சங்கரன்கோவிலுக்கு பக்கத்திலுள்ள மானுõர் எனும் ஊரை தலைநகராகக் கொண்டு, உக்கிரம பாண்டியன் எனும் ராஜா ஆண்டு வந்தான். அவனுக்கு அள்ளியுண்ட ராஜா என்ற மகன் இருந்தான்.
அவன் ஒருசமயம் குதிரையில், மலைப்பாதை வழியாக திருக்குறுங்குடி மலையில் உள்ள பெருமாள் கோயிலில் சாமி கும்பிட வந்தான்.”
“திருக்குறுங்குடி மலை எங்க தாத்தா இருக்கு?” என்று அடுத்தக் கேள்விக் கணையைத் தொடுத்தான் சபரீஷ்.
“மேற்கு தொடர்ச்சி மலையிலதான், திருக்குறுங்குடி மலை இருக்கு. இந்த மலையிலதான் ரகசியங்கள் நிறைய இருக்கு. அந்த ரகசியத்தை தெரிஞ்சுக்க, இந்த மலையைப் பற்றி இன்று வரைக்கும் நம்ம நாட்டு வனவியல் ஆராய்ச்சி நிலையத்தினர் ஆராய்ஞ்சுட்டு இருக்காங்க ”.
“சரி தாத்தா... கதையை நடுவில விட்டுடாதீங்க... சொல்லுங்க” என்று அவசரப்படுத்தினான் சேகர்.
“அப்படீன்னா... கதை முடியற வரைக்கும் எந்தக் கேள்வியும் யாரும் நடுவுல கேட்கக் கூடாது. கதை முடிஞ்ச பிறகுதான் கேட்கணும். சரியா...?” என்று தாத்தா சொல்லவும், “சரி...” என்று இருவரும் ஆமோதித்தனர்.
“திருக்குறுங்குடி பெருமாள் கோயிலுக்கு வந்த அள்ளியுண்ட ராஜா, சாமியை கும்பிட்டுவிட்டு, அப்படியே மலையில் வேட்டையாடவும் தயாரானான். அப்போ, அங்க மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன், ‘அருகில் வள்ளியூர் எனும் ஊர் ஒன்று உள்ளது. அந்த ஊரில் உள்ள குகையில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையோடு காட்சியளிப்பார். அதை தரிசித்தால் நன்மை விளையும்” என்று கூறியுள்ளான். இதைக் கேட்ட அள்ளியுண்ட ராஜா, குதிரையில் வள்ளியூர் முருகன் கோயிலுக்கு வந்து முருப்பெருமானை வணங்கினான்.
முருகன் கோயிலுக்கு வரும் வழியில், வள்ளியூரின் அழகில் மெய்மறந்த ராஜா, வள்ளியூரையே சிறிய நாடாக்கி ஆட்சி புரிய ஆரம்பித்தான். சிறிது காலத்திற்கு பின்னர், அள்ளியுண்ட ராஜாவிற்கு பிறகு, அவரது மகன் பிராத்த ராஜாவும், அவருக்குப் பின்னர், அவரது மகன் சீவிலிமாறப்பாண்டியனும், வள்ளியூரை மேலும் விரிவுபடுத்தி வலுவான கோட்டையை அமைத்து, அதைச்சுற்றி அகழியையும் அமைத்தனர்.
சீவிலிமாறபாண்டியன், மாலையம்மாள் என்ற நங்கையை மணம் முடித்தான். திருமணம் முடிந்து பல ஆண்டு காலமாக குழந்தைகள் இல்லை. அதற்குப் பிறகு முருகப்பெருமானை மணமுருகி வேண்டியதால், அவனுக்கு ஐந்து ஆண் குழந்தைகள் பிறந்தன.
அவர்களுக்கு குலசேகரன், முத்தும் பெருமாள், முகிலம் பெருமாள், முடிசூடும் பெருமாள், பாண்டியப் பெருமாள் எனப் பெயரிட்டு சீரும், சிறப்புமாக வளர்த்து வந்தனர். இவர்களில் மூத்தவரான குலசேகரப் பாண்டியனை ராஜாவாகக் கொண்டு, இவர்கள் ஐவரும், பஞ்ச பாண்டியர் என்ற பெயருடன் வள்ளியூரை ஆட்சி செய்து வந்தனர்.
இவர்கள் பல போர்களில் வெற்றி பெற்று, புகழுடன் வாழ்ந்து வந்தனர். மூத்தவரான குலசேகரப் பாண்டியன் ஒரு கழைக்கூத்தாடியின் மகள் உலகம் முழுவதும் உடையாள் என்பவரை திருமணம் செய்து, அரசிப்பட்டம் சூட்டி ராணியாக்கினார்.
இவர்களின் சீரும் சிறப்பையும் கண்டு பொறாமையுற்று, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் நம்பியாற்றுக்கு வடக்கே உள்ளே களக்காட்டுப் பகுதியில் ஆண்டு வந்த கன்னடியர் தளபதி வெங்கலராஜன், வள்ளியூர் மீது படையெடுத்து கோட்டையை முற்றுகையிட்டான்.
ஆனால், வெங்கலராஜனை, ஒன்றாக எதிர்த்து அவனைத் தோற்கடித்தனர். பகைவர்கள் ஒழிந்தார்கள் என்று எண்ணி ஐவரும் வள்ளியூர் ஆட்சியை, தங்களது தளபதி காளிங்கன் என்ற வனிடம் ஒப்படைத்து விட்டு மதுரைக்கு போய்விட்டனர்.
காளிங்கன் வள்ளியூர் நாட்டில் ஊழல் புரிந்தும், லஞ்சம் வாங்கியும், அநியாய வரி விதித்தும் பொதுமக்களுக்குக் கேடு விளைவித்தான். பணம் திரட்டி, படை திரட்டி, ஐவர் ராஜாவுக்குச் சொந்தமான வள்ளியூரை தனது வசமாக்கத் திட்டமிட்டான். அதோடு நின்றுவிடாமல், பொற் காசுகள், வைரம்ன்னு எல்லாவற்றையும் மொத்தமா சேர்த்து பொதிகை மலையில் கொண்டு போய் மறைத்து வைத்தான். அந்த பொற்காசு புதையலை வேறு யாரும் எடுத்துவிடாதபடி மந்திரி ஒரு ரகசியம் கூறினான்.
காளிங்கன் வள்ளியூரில் ஊழல் செய்ததோடு மட்டுமில்லாம பொற் காசுகள், வைரம்ன்னு எல்லாவற்றையும் மொத்தமா சேர்த்து பொதிகை மலையில் கொண்டு போய் மறைச்சு வச்சுட்டான். அந்த பொற்காசு புதையலை வேறு யாரும் எடுத்துவிடாதபடி மந்திரி ஒரு ரகசியம் கூறினான் என்று தாத்தா சொல்லி முடிக்கவும், ஆர்வம் தாங்க முடியாமல், “என்ன ரகசியம் தாத்தா” என்று கேட்டான் சேகர்.
அந்த சமயம் அருகில் இருந்த கிறிஸ்தவ ஆலய பெரிய மணி பதினொன்று அடித்து ஓய்ந்தது.
மணி சத்தத்தைக் கேட்டதும்... “அச்சச்சோ மணி பதினொன்று ஆயிடுச்சா. பேரப்பிள்ளைங்களா... ரொம்ப நேரமாயிடுச்சு... இப்போ படுத்துத் துõங்குங்க. மீதி கதைய நான் பிறகு சொல்றேன்” என்றார் சுப்பையா.
“ப்ளீஸ் தாத்தா... இப்பவே முழுக் கதையையும் சொல்லிடுங்க. அப்பத்தான் எங்களுக்கு துõக்கம் வரும்” என்று கோரஸாக சேகரும், சபரீஷûம் கூறினர்.
“இல்ல... பேரப்பசங்களா... இப்பவே ரொம்ப நேரம் ஆயிடுச்சு. மீதிக் கதையை கண்டிப்பா, நாளைக்கு காலைல சொல்லுவேன்” என்று தாத்தா சொன்னதும், “காலைல எழுந்த உடனேயே சொல்லுவீங்களா?” என்றான் சபரீஷ்.
“இல்ல... நாளைக்கு இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலா... நான் சொல்லிட்டு இருந்த கதைல வரும் இடத்துக்கே, உங்க ரெண்டு பேரையும் கூட்டுட்டு போய் சொல்லப் போறேன்.”
“அப்படியா தாத்தா... நிசமாத்தான சொல்றீங்க...!”
“நிசமாத்தான் சொல்றேன்” என்று தாத்தா ஆமோதித்தார்.
“ஹைய்யா ஜாலி... ஜாலி...” சந்தோஷத்தில் குதுõகலித்தார்கள் சேகரும், சபரீஷûம்.
தாத்தா சொன்ன கதையில், அந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் இருந்த இருவருக்கும், ராத்திரியில் துõக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தார்கள்.
வழக்கமா... ஏழு மணி ஆனாக்கூட படுக்கையில் இருந்து எழுந்திருக்க சோம்பல்படும் சேகரும், சபரீஷûம், விடியற்காலை ஐந்து மணிக்கே எழுந்து உட்கார்ந்து இருந்தனர்.
“என்னடா தாத்தா இன்னும் முழிக்கவே இல்லையே” என்று சேகர், சபரீஷைப் பார்த்துக் கேட்டான்.
“நான் வேணா தாத்தாவை எழுப்பட்டுமா...?”
“வேண்டாம்டா... தாத்தா ரொம்ப அசந்து துõங்கிட்டு இருக்கார். அவரா முழிக்கட்டும்” என்று இருவரும் குசுகுசுவென்று பேசிக்கொண்டிந்ததைக் கேட்டே தாத்தா விழித்துக்கொண்டார்.
“என்னப் பசங்களா... சீக்கிரமே முழிச்சிட்டீங்களா...?”
“ஆமா தாத்தா... நீங்கதான் காலைல முழிச்ச உடனே, கதை சொல்றேன்னு சொன்னீங்க... அதான் ராத்திரி எல்லாம் எங்களுக்கு துõக்கமே வரலை” என்று இரண்டு பேர் சொன்னதைக் கேட்டதும், தாத்தா சிரித்துக் கொண்டார்.
“சரி... காலைல டிபன் எல்லாம் முடிச்சுட்டு அப்படியே நாம போகலாம்.”
“எங்க தாத்தா போகப் போறோம்.”
“அதான் நேற்றே நான் சொன்னேனே... கதை நடந்த எடத்துக்கே கூட்டிட்டு போகப்போறேன்னு...”
“அந்த இடம் எங்க தாத்தா இருக்கு?” ஆர்வமாய் கேட்டான் சேகர்.
“திருக்குறுங்குடிக்கு போகப்போறோம்!”
“ஆங்... எனக்கு ஞாபகம் வந்துடுச்சு... அள்ளியுண்ட ராஜா பெருமாள் கோயில்ல கும்பிடுவாறே. அந்த இடம்தானே தாத்தா” என்றான் சேகர்.
“சரியா சொன்னேடா என் பேராண்டி. அதே இடம்தான்.”
“அந்த இடத்துல என்ன தாத்தா இருக்கு?” அடுத்த கேள்விக் கணையை தொடுத்தான் சபரீஷ்.
“காளிங்கன் மறைச்சு வைத்த புதையல் ரகசியத்திற்கான தகடு, ராமர் பாதம் என்கிற மலையில் தான் மறைச்சு வைச்சானாம். அந்த தகட்டைத் தேடித்தான் இன்னிக்கு வரைக்கும் பலபேர் அலைஞ்சு திரிஞ்சுகிட்டு இருக்காங்க.”
“இப்ப அந்த ராமர் பாதம் மலைக்கா தாத்தா போகப் போறோம்.”
“ஆமாண்டா தங்கம்...” என்று சேகரின் கண்ணத்தை செல்லமாய் கிள்ளினார் தாத்தா.
“நாமளும் அங்கப் போய், தகடையா தாத்தா தேடப்போறோம்” அடுத்த கேள்வியைத் தொடுத்தான் சபரீஷ்.
“இல்லடா செல்லம்... தகட்டை தேட நாம போகலை. அந்த இடத்துக்கு போகப் போறோம் அவ்வளவுதான். அந்த ராமர் பாதம் மலை அடர்ந்த காட்டுக்குள்ள இருக்கு. நிறைய குகை, உயரமான அருவிகள் எல்லாம் இருக்கு” என்று தாத்தா சொல்லி முடிக்கவும், “அப்படீன்னா, நீங்க அங்க ஏற்கனவே போயிருக்கீங்களா தாத்தா” என்றான் சேகர்.
“இரண்டு தடவை போயிருக்கேன். ஏன்னா... அந்த மலையிலதான அந்த ராஜாக்கள் வாழ்ந்த அடையாளம் இன்னும் இருக்கு” என்றார் தாத்தா.
‘தொப்’ என்று விழுந்த சத்தத்தில், மூன்று பேரும் திடுக்கிட்டு பார்த்தனர். அங்கே... பக்கத்தில் இருந்த பெரிய காட்டு மரத்திலிருந்த, காய்ந்த கிளை ஒன்று கீழே விழுந்து கிடந்தது. அந்த சத்தத்தில் திடுக்கிட்டு தாத்தாவை ஒட்டிக்கொண்ட சபரீஷûம், சேகரும் கிளையை பார்த்ததும், ப்பூ... இதுதானா? என்று பெருமூச்சி விட்டனர்.
“சரி உட்கார்ந்தது போதும்... மலை ஏறுவோமா?” என்று பேரப்பிள்ளைகளிடம் கேட்டார் சுப்பையா.
“தாத்தா...” என்று அதிர்ச்சியாய் கத்திய சபரீஷை விசித்திரமாய் பார்த்தார் தாத்தா!
“தாத்தா, இப்போதானே யானை போச்சின்னு சொன்னீங்க... நம்ம இப்போ மலைக்குப் போனா, யானை நம்மள ஒண்ணும் செஞ்சிறாது?” என்றான் சபரீஷ்.
“டேய்... யானை தாகத்துக்கு, தண்ணீர் குடிக்கறதுக்காகத்தான் கீழே வந்திருக்கு. அதுதான் இப்ப காட்டுக்குள்ளே போயிருக்குமே. அதுமட்டுமல்லாம, விலங்குகளை நாம ஏதும் தொந்தரவு செய்யாதவரை, அதுவும் நம்மை ஏதும் செய்யாது. புரிஞ்சுதா...?” என்றார் சுப்பையா.
“அப்படியா தாத்தா...” என்று ஆச்சர்யமாய் கேட்டான் சேகர்.
“ஆமா பேராண்டி. சரி... கிளம்புவோமா?” என்று கேட்டுக்கொண்டே... இருவர் கையையும் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார் சுப்பையா தாத்தா.
கொஞ்சம் கொஞ்சமாய் மலை ஏற, ஏற குளிர் எடுக்க ஆரம்பித்தது. காட்டு மரங்கள் வேர் ஒவ்வொன்றும், பின்னிப் பிணைந்து தரையை விட்டு வெளியே வந்து, பாறை போன்று மேடாக இருந்தது.
“தாத்தா... நாம மலை ஏறதுக்கு முன்னாடி, அவ்வளவு வெயில் அடிச்சுதே... ஆனா, இங்கே பயங்கரமா குளிர் எடுக்குதே...” என்று ஆச்சர்யமாய் கேட்டான் சேகர்.
“ஆமாண்டா... பேராண்டி... மேலே போகப் போக பாருங்க... இன்னும் பல அதிசயத்தை பார்க்கப் போறீங்க...” என்று பீடிகைப் போட்டார் தாத்தா.
அருவிகளில் இருந்து பேரிறைச்சலுடன் விழுந்த தண்ணீர் சத்தம், இப்போது இன்னும் நெருக்கமாக கேட்டது. வண்டுகளின் சத்தமும், புள்ளி மான்கள் குதித்து ஓடும் போது, காய்ந்த சருகுகளின் சத்தமும் சேகருக்கும், சபரீஷûக்கும் சந்தோஷமாக இருந்தது.
“பேரப்பிள்ளைங்களா... ராமர் பாதம் மலை, இப்போ ரொம்ப பக்கத்துல தெரியுது பாருங்க...” என்று தாத்தா கை காட்டிய திசையை ஆர்வமாய் பார்த்தார்கள் சேகரும், சபரீஷûம்.
“ஹை! ஆமா தாத்தா... அழகா இருக்கு தாத்தா... பக்கத்துலேயே பெரிய அருவியும் தெரியுது தாத்தா” என்று ஆச்சர்யப் பட்டான் சேகர்.
“டேய் சேகர் அங்கே பாருடா... அருவித் தண்ணீர் விழுற பாறையை ஒட்டி, வானவில் தெரியுது பாருடா...” என்று சந்தோஷத்தில் கத்தினான் சபரீஷ்.
“தாத்தா... ராமர் பாதம் மலை ரொம்ப பக்கத்துலேயே தெரியுதே... இன்னும் எவ்வளவு நேரம் ஆகும், நாம அங்கே போறதுக்கு” என்று கேள்வியைத் தொடுத்தான் சேகர்.
“இன்னும் கொஞ்ச நேரம்தான். சீக்கிரமாவே நாம அங்கே போயிடுவோம்...” என்று தாத்தா... அவர்களின் ஆர்வத்தை துõண்டினார்.
“பேரப்பிள்ளைங்களா... இனிமேதான் நீங்க கவனமா இருக்கணும்... இனிமே மலைக்கு மேல அதிகமா காட்டு மரங்கள் இருக்காது. காட்டுப் புல்தான் அதிகமா இருக்கும். அதனால... ரொம்ப ஜாக்கிரதையா ஒருத்தர் கைய, ஒருத்தர் புடிச்சிக்கணும். சரியா...?” என்றார் தாத்தா.
“புல்லுதானே தாத்தா... நாங்க பாத்துக்குவோம்” என்று அசால்ட்டா சொன்னான் சேகர்.
“காட்டுப் புல் ஒவ்வொன்றும் நீங்க பார்த்தது போல, குட்டை குட்டையா இருக்காது. ஒவ்வொரு புல்லும் என் உசரத்துக்கு மேலேயே இருக்கும்” என்றார் தாத்தா.
“ஏ... அப்பா அவ்வளவு உயரமாவா புல் இருக்கும்?” என்று ஆச்சர்யமாய் கேட்டான் சபரீஷ்.
சபரீஷ் கேட்ட கேள்விக்கு புன் சிரிப்பை மட்டும் பதிலாக சொல்லிவிட்டு, இருவரின் கைப் பற்றி விரைவாக நடக்க ஆரம்பித்தார் சுப்பையா.
அவர் சொன்னது போன்றே, காட்டு மரங்களை எல்லாம் கடந்து மேடான பகுதி வந்ததுமே, இரண்டு ஆள் உயரத்துக்கு அந்த காட்டுப் புல் கண்முன் வந்து மிரட்டியது.
புற்களைப் பார்த்ததுமே, மிரண்டு போனான் சபரீஷ். “தாத்தா... இந்த புல்லைத் தாண்டி, நாம போயிட முடியுமா?” என்று சந்தேகத்துடன் கேட்டான் சபரீஷ்.
“போயிடலாம் பசங்களா... பயப்படாதீங்க!“ என்று சொல்லிக்கொண்டே, இருவரின் கைகளையும் இருகப் பற்றிக்கொண்டு ஏறலானார் சுப்பையா.
ஒரு வழியாக காட்டுப் புல் பகுதியைக் கடந்து, அந்த மேடான பாறை பகுதிக்கு மூன்று பேரும் சென்றனர். “ஹே... வந்தாச்சு...” என்று சந்தோஷத்தில் குதித்தான் சேகர்.
“டேய் பசங்களா அங்கே பாருங்க...” என்று தாத்தா கைக்காட்டிய திசையில் சேகரும், சபரீஷûம் பார்த்தனர். அந்த மேட்டுப் பகுதியில் இருந்து பார்த்த போது, வள்ளியூர் ஒரு சிறு புள்ளியாக தெரிந்தது.
ஆச்சர்மாய் பார்த்த சபரீஷ், மெதுவாக திரும்பி பின்பக்கம் பார்த்து... “டேய் சேகர் அங்கே பாருடா...” என்று ஆச்சர்யத்தில் விழிகளை விரித்தான். அங்கே...
“டேய் சேகர் அங்கே பாருடா...” என்று ஆச்சர்யத்தில் விழிகளை விரித்தான். அங்கே... இரண்டு பனை மர உயரத்தில் வெள்ளிக் கம்பி போன்று, அருவி கொட்டிக் கொண்டிருந்தது. அருவி விழுந்து தெரித்த தண்ணீர் துளிகள், இவர்கள் மீது சாரலாய் பட்டது.
மதியம் ஒரு மணி இருக்கும். மண்டையைப் பிளக்கும் அந்த வெயில் கூட, அந்த இடத்தில் காணாமல் போய் இருந்தது. அந்தச் சூழலே, ரம்மியமாக இருந்தது. லேசான மழைத் துõரல் வேறு, அங்கு பெய்து கொண்டிருந்தது. சலசலவென்று தண்ணீர் ஓடும் சத்தமும், எங்கோ யானை பிளிறும் சத்தமும், வண்டுகளின் ரீங்காரமும், அங்கும் இங்கும் தாவித் திரியும் குரங்குகளையும் பார்ப்பதற்கு சபரீஷ்க்கும், சேகருக்கும் குதுõகலமாக இருந்தது.
“தாத்தா... நாம இங்கேயே இருந்துடலாமா?” ஏக்கமாய் கேட்டான் சபரீஷ்.
“ஆமா தாத்தா... இந்த இடம், ரொம்ப சூப்பரா இருக்கு. நாம இங்கேயே இருந்துடுவோமே...”
சிரித்துக் கொண்டே சுப்பையா... “பார்த்தீங்களா...? நான்தான் அப்பவே சொன்னேன் இல்ல... நீங்க மலைக்கு மேல போன உடனேயே, ஒரு அதிசயத்தைப் பார்ப்பீங்கன்னு. அதுதான் இது. ஊரில எவ்வளவு வெயில் காய்ந்தாலும், இந்த இடத்தில் மட்டும் எப்போதும், மழைத்துõரல் பெய்து கொண்டே இருக்கும்.”
“அப்படியா தாத்தா!” என்று ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்த சேகரிடம், “அங்கப் பாருங்க... அதான் ராமர் பாதம்” என்று கையைக் காட்டினார் தாத்தா...
இப்போது அந்த ராமர் பாதம் எட்டிவிடும் துõரத்தில் பிரம்மாண்டமாக இருந்தது.
“என்ன தாத்தா இது... ஒரு பாறையைக் காட்டி, இதுதான் ராமர் பாதம்ங்கறீங்க...” என்று நக்கலாய் கேட்டான் சபரீஷ்.
“இல்லடா கண்ணுங்களா... உங்களுக்கு இங்கே இருந்து பார்க்கறதுக்கு அது, வெறும் பாறை மாதிரிதான் இருக்கும். ஆனால், பக்கத்துல போய் பார்த்தாதான் உங்களுக்கு அங்கே என்ன இருக்கு என்று உங்களுக்குத் தெரியும். இப்போ நாம அங்கே போலாமா?” என்று தாத்தா கேட்டதும், இருவரும் ஆமோதிப்பதாய் தலையை ஆட்டினார்கள்.
தாத்தா இருவர் கையையும் பிடித்துக்கொண்டு, மிக ஜாக்கிரதையாய் நடந்து போனார். தண்ணீர் விழுந்து, விழுந்து பாறை முழுவதும் தண்ணீரில் நனைந்து கிடந்ததால், சபரீஷ்க்கும், சேகருக்கும் பாறையில் கால் வைத்து நடக்க முடியவில்லை. அருவித் தண்ணீர் சமவெளியில், கண்ணாடியாய் ஓடிக் கொண்டிருந்தது. மேலிருந்து பார்க்கும்போது, மீன்கள் தரையில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு ஓடிக்கொண்டிருந்தது, பளிச்சென்று தெரிந்தது.
ரத்தின் அடியில் பிரிந்து சென்ற வேர்கள், ஒவ்வொன்றும் பின்னிப் பிணைந்து மலை ஏறுவதற்கு வசதியாய் பாறையை ஒட்டி படிக்கட்டுகள் போல் இருந்தன.
ஒரு வழியாக, மூன்று பேரும் ராமர்பாதம் மலைக்கு அருகில் சென்றார்கள். ராமர் பாத மலையையே மூடிவிடுவது போன்று, அடர்த்தியான காட்டு மரங்கள் வளர்ந்து கிடந்தன. சில்லன்று இருந்த, அந்தச் சூழல் சேகரையும், சபரீஷையும் குதியாட்டம் போட வைத்தது.
“தாத்தா... ரொம்ப பசிக்குது... சாப்பிடுவோமா?” என்று கேட்டான் சேகர்.
“வாங்க சாப்பிடலாம்...” என்று தோளில் மாட்டியிருந்த பையை இறக்கினார் சுப்பையா.
“தாத்தா... இங்கேதான் அருவித் தண்ணீர் எல்லாம் விழுந்து, ஈரமாய் இருக்கிறதே. இங்கே உட்கார்ந்து எப்படி சாப்பிட முடியும்?” என்று கோரஸாய் கேள்வி எழுப்பினர் சேகரும், சபரீஷûம்.
“அதுக்கு ஒரு இடம் இருக்கு... வாங்க. அங்கே போவோம்!” என்று, அழைத்துச் சென்றார். அங்கே ராமர் பாதத்தை ஒட்டி, பெரிய குகை ஒன்று இருந்தது. அதை ஆச்சர்யமாக பார்த்தனர் சேகரும், சபரீஷûம்.
200 பேர் தங்கும் அளவிற்கு பிரமாண்டமாக இருந்தது அந்த குகை.
அந்த குகையில் ஆங்காங்கே, மசாலா சாமான்கள் இருந்தன. அதைப் பார்த்ததும், “தாத்தா... இங்கே என்ன மசாலா பொருள் எல்லாம் இருக்கு... இங்க யாராச்சும் வருவாங்களா...?” என்று ஆச்சர்யமாய் கேட்டான் சபரீஷ்.
“ஆமாண்டா பேராண்டி...! சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, இங்கேயிருந்து மாலைப் போட்டு போகிறார்கள் இல்லையா? அதேபோல கேரளாவிலிருந்து ஒரு பிரிவினர், இந்த ராமர் பாத மலைக்கு ஆவணி மாதம் விரதமிருந்து மாலை போட்டு வர்றாங்க...!”
“இந்த மலைக்கு எப்படி தாத்தா அவங்க வருவாங்க...?” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டான், சேகர்.
“இந்த மலையையும், இதுக்கு அடுத்ததா இருக்கறதுதான் பொதிகை மலை. அந்த மலையையும் கடந்துட்டோம்ன்னா... அங்கேதான் கேரளா இருக்கு. அதனால... அவங்களுக்கு அங்கேயிருந்து இங்கே வர்றதுக்கு ரொம்ப ஈஸியா இருக்கும்.”
“இந்த மலைக்கு பின்னாடியா கேரளா இருக்கு...?” என்று ஆச்சர்யமாய் கேட்டான் சபரீஷ்.
“ஆமாண்டா பேராண்டி...!” என்றார் சுப்பையா.
குகையை ஆச்சர்யமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சேகரும், சபரீஷûம்.
குகையின் கடைசி முனையில் நின்று கொண்டிருந்த சேகர், “டேய் சபரீஷ்... இங்கே பாரேன்” என்று அவன் கொடுத்த குரல், குகையில் எதிரொலித்து பயங்கரமாய் அதிர்ந்தது.
சேகர் கொடுத்த சத்தத்தில், ஒரு நிமிடம் அதிர்ந்தே போன சுப்பையாவும், “என்னடா... அங்கே...” என்றுகேட்டார்.
“இல்ல தாத்தா... இங்கே பாருங்க... இந்தப் பாறையில... ஏதோ எழுதியிருக்கு. வந்து பாருங்களேன்” என்றான் சேகர்.
ஆர்வமாய் ஓடிப்போன சபரீஷ், குகையின் சுவற்றை உற்றுப் பார்த்தான். அந்தப் பாறையில், தமிழில் ஏதோ எழுதப்பட்டிருந்தாலும், இடை இடையே... ஏதேதோ வட்டமாகவும், சதுரமாகவும், எழுதப்பட்டிருந்தது.
“தாத்தா... அங்கே என்ன எழுதியிருக்கு... கொஞ்சம் படிச்சு சொல்லுங்களேன்.”
“நீங்க இப்போ சாப்பிடுங்க... அப்புறமா அங்க எழுதப்பட்டிருக்கிற ரகசியத்தை சொல்றேன்”, என்று பீடிகை போட்டார் சுப்பையா.
“தாத்தா அங்க என்ன எழுதியிருக்குன்னு முதல்ல சொல்லிடுங்களேன். எங்களுக்கு மண்டையே வெடிச்சிடும் போலிருக்கு” என்று சேகர் சொல்ல, சம்மதம் சொல்லி, தலையை ஜோராக ஆட்டினான் சபரீஷ்.
“முதல்ல சாப்பிடுங்க. அப்புறம்தான்...” என்று தாத்தா விடாப்பிடியாக அவர்களை சாப்பிட உட்கார வைத்தார்.
குகைக்கு வெளியே அந்த வட்ட வடிவ பாறையில் மூன்று பேரும் அமர்ந்தனர். அருவித் தண்ணீர் நீரோடையாக, அந்தப் பாறையின் மீது ஏறி துள்ளி, குதித்துச் சென்றது. இரண்டு பேருக்கும் சாப்பாடு வைத்துவிட்டு, தாத்தாவும் சாப்பிட ஆரம்பித்தார்.
சபரீஷ்க்கும், சேகருக்கும் சாப்பாடே இறங்கவில்லை. இவர்கள் சாப்பிடுவதை, ஆங்காங்கே பாறையிலும், மரத்திலும் அமர்ந்திருந்த குரங்குகள், இவர்களை வச்சக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. இதுதான் சமயம் என்று, சேகர் தனது இலையில் இருந்த சாப்பாடை கொஞ்சம், கொஞ்சமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த குரங்குகளுக்கு வைத்தான்.
சேகர் வைத்ததும்தான் தாமதம், பாறையிலிருந்து துள்ளிக் குதித்து பாய்ந்தோடி வந்த குரங்குகள், முன் இரண்டு கால்களினாலும் விறுவிறுவென்று சாப்பாட்டை எடுத்து, வாய்க்குள் திணித்துக் கொண்டன. இன்னொரு குரங்கோ, சேகர் வைத்த சாப்பாட்டை, தன் வயிற்றில் தாங்கி வைத்திருந்த குட்டிக் குரங்குக்கும், லாவகமாக ஊட்டியது.
இதை அனைத்தும், கண்கொட்டாமல் அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தனர், சேகரும் சபரீஷûம்.
“தாத்தா... அந்த ராமர் பாதம் பாறை மீது, அப்படி என்னதான் இருக்கு...?” என்று கேள்வியை எழுப்பினான், சபரீஷ்.
“ராமாயணம் எல்லாம் படிச்சிருப்பீங்க இல்லையா?” என்று தாத்தா கேள்வி எழுப்ப,
“ஆமாம் தாத்தா...” என்று ஒன்றுபோல் குரல் எழுப்பினர் சேகரும், சபரீஷûம்.
“ராமாயணத்துல சீதையை, ராவணன் கவர்ந்து கொண்டு இலங்கையில் வைத்திருந்த சமயம், ராமன் சீதையை மீட்க இந்த வழியாக வந்த போது, இங்கே அவருடைய பாதம் பட்டதாக புராணம் சொல்லுது. இது எந்த வகையில் உண்மை என்று தெரியாது. ஆனா, அந்த பாறை மீது ஒரு பெரிய பாதம் ஒன்று உள்ளது. அது ராமருடைய பாதம்தான் என்று மக்கள் நம்பி இங்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்.” என்று, தாத்தா சொல்வதை அப்படியே கண்கொட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தனர் சேகரும், சபரீஷûம். ஒரு வழியாக மூன்று பேரும் சாப்பிட்டு முடித்தனர்.
அருவித் தண்ணீர் பாறையில் தெறித்து துõவாணமாய் இவர்கள் முகத்தில் சில்லன்று பட்டது.
“தாத்தா... நாமதான் இப்போ சாப்பிட்டு முடிச்சாச்சே. வாங்க, குகையில என்ன எழுதியிருக்குன்னு கொஞ்சம் படிச்சு சொல்லுங்க...” என்றான் சேகர்.
“குகையில என்ன எழுதியிருக்குன்னு தெரிந்து கொள்வதற்கு முன் நீங்க, அந்த கதையை மழுசுமா கேட்டாதான், குகையில எழுதியிருப்பதற்கான அர்த்தம் புரியும். புரிஞ்சுதா...?” என்றார் சுப்பையா தாத்தா.
“சரி... அப்படீன்னா கதையைச் சொல்லுங்க...!” என்று முந்திக்கொண்டு சொன்னான் சேகர்.
“கதையை எதோட முடிச்சேன்... ஞாபகம் இருந்தா கொஞ்சம் சொல்லுங்க”
சேகர் நாடியில் கை வைத்து யோசிக்க ஆரம்பிக்க... “ஆங்... எனக்கு ஞாபகம் வந்திடுச்சு” என்று துள்ளி குதித்தான் சபரீஷ்.
“சரி... கதையை எதோட முடிச்சேன், சொல்லு பார்க்கலாம்” என்று சபரீஷை கேட்க, “காளிங்கன் தங்கம், வைரம், வைடூரியம் எல்லாத்தையும் மொத்தமா, பொதிகை மலையில் கொண்டு மறைச்சு வைத்தான். அந்த பொற்காசு புதையலை வேறு யாரும் எடுக்க முடியாதபடி, மந்திரி ஒரு யோசனை சொன்னார். அதோடு முடிச்சீங்க தாத்தா...” என்று சபரீஷ் சொல்ல, “சரியா சொன்னேடா என் பேராண்டி” என்று செல்லமாக கன்னத்தில் கிள்ளினார் தாத்தா.
“சரி தாத்தா... மீதி கதையைச் சொல்லுங்க...” என்று சேகர் கேட்க, “சொல்றேன்...” என்று தொடர்ந்தார் தாத்தா.
“பொதிகை மலையில்தான், புதையலை வைக்க வேண்டும் என்று காளிங்கன் முடிவு செய்தவுடன், அதற்கு அமைச்சர் பொதிகை மலையில் வைக்கும்போது, கள்வர்கள் யாரும் களவாடிச் செல்லாமல் இருக்க... அந்த புதையலுக்கு காவலாக துர் தேவதைகளை நிற்கச் செய்ய வேண்டும், நமக்கோ அல்லது நமக்குப் பின் வரும் சந்ததிகளோ இந்தப் புதையலை எடுக்க வேண்டுமானால், துர் தேவதைகளை விரட்டுவதற்கான மந்திரத்தை ஒரு ஒரு தகட்டில் எழுதி அதையும், பொதிகை மலையின் குகையில் வைத்துவிட வேண்டும். அந்த தகட்டில் உள்ள எழுத்துக்களை மறைக்க ரசாயான கலவையைத் தடவி விட வேண்டும்” என்று மந்திரி ஆலோசனை சொல்லியிருக்கிறார்.
‘சரி... ரசாயானக் கலவையை தடவிவிட்டால், அதை படிப்பது எப்படி?’ என்றான் காளிங்கன்.
அதற்கு மந்திரியோ... ‘மன்னா... பொதிகை மலையில் இருக்கும் கறுநொச்சி என்ற அபூர்வ மூலிகையை பறித்து, பிழிந்து இந்த தகட்டில் மீது ஊற்றினால், தானாகவே ரசாயானம் உருகி, அதில் உள்ள எழுத்துக்கள் தெரிய ஆரம்பிக்கும்” என்றார் மந்திரி.
“அந்த தகடு இருக்கும் இடத்தையும், அதில் உள்ள எழுத்துக்களை படிக்கும் வழியையும், ராமர் பாதம் மலையில் உள்ள குகையில் எழுதி வைத்துவிடலாம்” என்று யோசனை கூறினான்.
யோசனையைக் கேட்ட காளிங்கனோ, ‘சரி... இப்படி ரகசியங்களை, யாருக்கும் தெரியாத காட்டு குகைக்குள் எழுதி வைத்தால் நம்முடைய சந்ததிகள் எப்படி தெரிந்து கொள்வார்கள்?’ என்றான்.
அதற்கும் ஒரு யோசனை சொன்னான், மந்திரி?
“என்ன யோசனை தாத்தா...?” என்று ஆர்வம் தாங்காமல் கேட்டான் சேகர்.
“சொல்றேன்...” என்று சொன்ன தாத்தா, கதையைத் தொடர்ந்தார்.
காளிங்கன் கேட்ட கேள்விக்கு தீர்க்கமா யோசித்த மந்திரி, “அதற்கும் ஒரு யோசனை உள்ளது மன்னா. நம் ஊரில் இருக்கும் முருகன் கோயிலில் எழுதி வைத்துவிடலாம்” என்றான் மந்திரி.
அதற்கு காளிங்கனோ, “என்ன மந்திரி உமக்கு மதி கெட்டுவிட்டதா, கோயிலில் எழுதி வைத்தால், பார்ப்பவர்கள் எல்லாம் படித்துவிட்டு, புதையலை எடுத்துவிட மாட்டார்களா? யோசித்து பேசுங்கள் மந்திரி” என்றான்.
“யோசித்துதான் சொல்கிறேன் மன்னா. நான் சொன்ன இடம் சரியான இடம்தான். நாம் கோயிலில் முன்புறத்தில் எழுதி வைக்கப்போவதில்லையே.”
“வேறு எங்குதான் ரகசியத்தை எழுதி வைப்பது?” என்று கேட்டான் காளிங்கன்.
“நம் அரண்மனையில் இருந்து, எப்படி அவசர காலத்தில் தப்பித்துச் செல்வதற்காக சுரங்கப்பாதை அமைத்திருக்கிறோமோ, அதேபோல நம்முடைய வள்ளியூர் முருகன் கோயிலிலிருந்து, பணகுடி ராமலிங்க சுவாமி கோயிலுக்கு செல்வதற்கும், ஒரு ரகசிய சுரங்கப்பாதை ஒன்று உண்டு. அள்ளியுண்ட ராஜா காலத்தில் அமைக்கப்பட்ட அந்த சுரங்கப்பாதை தற்போது யாரும் பயன்படுத்துவது இல்லை.”
“ஆமாம், அந்த சுரங்கப்பாதை மூலஸ்தானத்தின் பின்புறம் அல்லவா இருக்கிறது.”
“ஆம் மன்னா, சுரங்கப்பாதையின் முகப்பு வாசலிலேயே புதையலுக்கான ரகசியத்தை செதுக்கிவிடுவோம். நம் காலத்திற்கு பிறகு நம் சந்ததிகள் படித்துப் பார்க்க... அதுதான் சரியான வழி.”
“நீ சொல்வதெல்லாம் சரிதான் மந்திரி. ஆனால், இந்த ரகசியம் வெளியே கசிந்துவிடக்கூடாதே” என்றான்.
“எப்படி மன்னா தெரியப்போகிறது. கோயில் மூலஸ்தானத்திற்கு பூசாரி மட்டுமே செல்வார். வேறு அன்னியர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாது. அதுமட்டுமல்லாமல், சுரங்கப்பாதையை திறப்பதற்கும், மூடுவதற்கும் மன்னர் ஒருவர் மட்டுமே அதிகாரம் உண்டு. அப்படி இருக்கும்போது, எப்படி ரகசியம் வெளியே தெரியும்? தவிறவும், பூசாரியும் மிகவும் நம்பிக்கைக்குரியவர்தான்” என்றான் மந்திரி.
“சரியான யோசனை சொன்னாய் மந்திரி. அப்படியானால், புதையல் வைப்பதற்கான வேலையை உடனடியாக ஆரம்பித்துவிடு”, என்று காளிங்கன் கட்டளையிட்டான்.
“சரி தாத்தா... காளிங்கன் போட்ட கட்டளையை, உடனடியாக மந்திரி நிறைவேற்றிவிட்டானா?”
“ஆமாண்டா பேராண்டி! என்னதான் இருந்தாலும் அவன், மன்னன் இல்லையா? அவன் ஆணையை யாராவது மறுக்க முடியுமா என்ன? உடனடியாக காளிங்கன் போட்ட ஆணையையும், மந்திரி உடனடியாக நிறைவேற்றி முடித்தான்”.
“சிறிது ஆண்டுகளுக்குப் பிறகு, காளிங்கனோட ஆட்சி சொல்லும் அளவிற்கு பிரமாதமாக இல்லை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த, களக்காடு மன்னனான வெங்கலராஜன், வள்ளியூர் மீது படையெடுத்து, வெற்றிபெற்றதோடு, காளிங்கனை சிறைபிடித்தான். அதற்குப் பிறகு, அவன் கொள்ளையடித்து மறைத்து வைத்திருந்த புதையல் ரகசியத்தை காளங்கனிடம் எத்தனையோ முறை கேட்டு பார்த்து, வெங்கல ராஜன் மிரட்டிப் பார்த்தான். ஆனால், அவன் ரகசியத்தை சொல்லாததால், காளிங்கன் மற்றும் அவனுடைய குடும்பத்தை கூண்டோடு கொலை செய்தான்.
வெங்கலராஜன் வள்ளியூரை கைப்பற்றியதை கேள்விப்பட்ட குலசேகரப்பாண்டியன், வள்ளியூர் மீது மீண்டும் படையெடுத்து, வெங்கலராஜனை புறமுதுகிட்டு ஓட வைத்தான்” என்று தாத்தா சொல்லி முடிப்பதற்குள், “அதற்குப் பிறகு என்னாச்சு தாத்தா... புதையல் பத்தின ரகசியம் யாருக்காவது தெரிஞ்சுதா?”
“ஆமா... புதையல் ரகசியம் தெரிஞ்சுது?”
“எப்படி தாத்தா தெரிஞ்சுது...?” என்று ஆர்வம் பொங்க கேட்டான் சபரீஷ்.
“மன்னர் ஆட்சி, கொஞ்சம் கொஞ்சமா வலுவிலந்து மக்களாட்சி ஏற்பட்டுச்சு. அப்புறம் இயற்கை மாற்றங்களால, இந்தப் பகுதியிலுள்ள மன்னர்களின் ரகசிய சுரங்கங்கள் எல்லாம் மண்ணோடு புதைஞ்சிபோச்சு.
“ஆனா, கோயில்ல இருந்த சுரங்கப்பாதை மட்டும் மண்ணில் புதையல.”
“அப்படீன்னா, அந்த ரகசியத்தை எல்லாரும் படிச்சிருப்பாங்களே!”
“சரியா சொன்ன செல்லம்... சுரங்கத்தின் வாயிலில் எழுதி வச்சிருந்த, புதையல் ரகசியத்தை எல்லாரும் படிச்சு தெரிஞ்சுகிட்டாங்க.”
“தாத்தா... அந்த சுரங்கப்பாதை இன்னும் முருகன் கோயில்ல இருக்கா?” என்று ஆச்சர்யமாக கேட்டான் சேகர்.
“இல்லடா பேராண்டி...” சுரங்கப்பாதை இருந்ததற்கான அடையாளம் மட்டும்தான் இருக்கு.
“அப்படியா தாத்தா...” என்று விழிகள் விரிய கேட்டான் சபரீஷ்.
“ஆமா... நாம நாளைக்கு முருகன் கோயிலுக்கு போறப்ப, அந்த சுரங்கத்தை காட்டுறேன்” என்றார் தாத்தா.
“சரி தாத்தா... புதையல் ரகசியத்தைதான் எல்லாரும் பார்த்து படிச்சாங்கன்னு சொல்றீங்க. அப்படீன்னா புதையல எடுக்க வேண்டியதுதானே.”
“எல்லாரும் புதையல் இருக்க ரகசியத்தை படிச்சாங்களே தவிர, அதில் உள்ள சிக்கல் அந்த சமயத்துல யாரும் தெரிஞ்சுக்கல” என்றார் தாத்தா.
“அதுல என்ன தாத்தா சிக்கல் இருந்துச்சு...? கொஞ்சம் சொல்லுங்களேன்...” என்றான் சேகர்.
“சொல்றேன்...!”
“என்ன சிக்கல் தாத்தா இருந்துச்சு... அதை முதல்ல சொல்லுங்களேன்” என்று ஆர்வமாய் கேட்டான் சேகர்.
“சொல்றேன்...” கோயில் சுரங்கப்பாதையில் எழுதப்பட்டிருந்த தகவலையெல்லாம், ஒரு சிலர் அதை அரிய விஷயமாத்தான் படிச்சாங்களே தவிர, ரொம்ப சிரமப்பட்டு புதையல் எடுக்க முயற்சி செய்யலை. ஆனா, புதையல் ஆசையில அதைப் படிச்சவங்க... நேரா ராமர் பாதம் மலைக்கு வந்தாங்க.”
“வந்து அந்த தகட்டை எடுத்துட்டாங்களா தாத்தா...?”
“இல்ல... வந்தவங்க ராமர் பாதம் மலையில எழுதி வைச்சிருக்கிற இந்த தகவலை எல்லாம் சேகரிச்சுட்டு, நேரா பொதிகை மலைக்கு போயிருக்காங்க. ஆனா, பொதிகை மலையில், அகத்தியர் கோயிலுக்கு மேல் உள்ள மலையில்தான், காளிங்கன் தகட்டை மறைச்சு வச்சிருக்கான்.
ஆனா, அந்த தகட்டை எடுக்கப் போனவங்கள்ள பாதிபேர் கூட, ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேலே போக முடியலையாம்.”
“ஏன் தாத்தா... என்னாச்சு?” என்று ஆர்வம் கொப்பளிக்க கேட்டான் சபரீஷ்.
“அந்த தகடு இருக்கும் இடத்தைச் சுற்றி, துர் தேவதைகளை அரசன் நிறுத்தி வச்சிருக்கான்னு ஏற்கெனவே உங்களுக்கு சொல்லியிருக்கேனே.”
“சரி தாத்தா... அந்த துர் தேவதைங்க... இங்கே இருந்து போனவங்கள என்ன பண்ணுச்சு?”
“புதையலை எடுக்கணும்னு ஆர்வமா நிறையபேர் பொதிகை மலைக்கு கிளம்பி போயிருக்காங்க. ஆனா, போனவங்கள்ல பாதிபேர் உயிரோட திரும்பி வரலை.”
“ஏன் தாத்தா...?” என்று கண்கள் விரிய அதிர்ச்சியாய் கேட்டான் சேகர்.
“ஒரு குறிப்பிட்ட துõரத்திற்கு மேல் போனவங்களை துர் தேவதைகள் கொண்ணுடுச்சுன்னு, புதையல் எடுக்க போயிட்டு வந்தவங்க சொல்றாங்க. இது எந்த வகையில் உண்மைன்னு போயிட்டு வந்தவங்கட்ட கேட்டாதான் தெரியும்.”
“ஏன் தாத்தா... அவங்கள்ள யாராவது, உங்களுக்கு தெரிஞ்சவங்க இப்போ வள்ளியூர்ல இருக்காங்களா?”
“ம்... இருக்காங்களே...!”
“அவங்கள போய் நேரடியா பார்த்து நாளைக்கு பேசலாமா தாத்தா” என்று ஆர்வம் பொங்க கேட்டான் சேகர்.
“நாளைக்கு நாம முருகன் கோயிலுக்கு போயிட்டு வர்ற வழியில, அவங்களையும் பார்த்துட்டு வரலாம்” என்றார் தாத்தா.
“ஏன் தாத்தா... இந்தப் பாறையில என்ன எழுதியிருக்குன்னு நீங்க படிச்சு சொல்லவே இல்லையே” என்று அடுத்த கேள்வியைத் தொடுத்தான் சபரீஷ்.
“பேராண்டி... அதுல கொஞ்சம்தான் தமிழ்ல் எழுதியிருக்கு... அப்புறம் எழுதியிருக்கிறதெல்லாம் கொஞ்சமும் புரியலை. அதான் உங்ககிட்ட படிச்சு காட்டலை” என்று சுப்பையா தாத்தா சொல்லி முடிக்கும் சமயத்தில் லேசாக மழைத் துõர ஆரம்பித்தது.
கையில் கட்டியிருந்த வாட்சை பார்த்த தாத்தா, “அச்சச்சோ... இப்பவே மணி இரண்டை தாண்டியிடுச்சே... வாங்க கிளம்புவோம்” என்றார்.
“என்ன தாத்தா... இப்பதானே வந்தோம். அதுக்குள்ள கிளம்பணும்னு சொல்றீங்க...” என்றான் சேகர் எரிச்சலோடு.
“இல்லடா பசங்களா... இப்பவே மணி இரண்டரை ஆயிடுச்சு. இன்னும் கொஞ்சநேரம் இங்க இருந்தா, இருட்ட ஆரம்பிச்சுடும்.”
“என்ன தாத்தா சொல்றீங்க... மதியமே இருட்டுமா? பொய்தானே சொல்றீங்க.”
“இல்லடா கண்ணுங்களா... உண்மையத்தான் சொல்றேன். இது ரொம்ப அடர்ந்த காடு. அடிக்கடி மழை பெய்ஞ்சிகிட்டே இருக்கும். சீக்கிரத்திலேயே இருட்டிடும்.”
“அப்படியா தாத்தா...!” என்று ஆச்சர்யத்துடன் கேட்டான் சபரீஷ்.
“தாத்தா... இங்கே இருந்து போகறதுக்கே மனசு வரலை. இன்னும் கொஞ்ச நேரம் மட்டும் இருந்துட்டு போகலாமே.”
சுப்பையா சிரித்துக்கொண்டே, “இல்லடா தங்கம்... இப்ப நம்ம நடக்க ஆரம்பிச்சாதான். சாயங்காலம் அஞ்சு மணிக்காவது, நம்ம மலை அடிவாரத்திற்கே போகமுடியும். பாருங்க... மழை இப்போ கொஞ்சம் அதிமாயிடுச்சு.”
“ஆமா தாத்தா... நீங்க சொல்றது சரிதான். நாம கிளம்பிடலாம்,” என்று சொல்லி முடிக்கும் முன்பே ‘சோ’வென்று மழை கொட்ட ஆரம்பித்தது.
மழையில் நனைந்துவிடாமல் இருக்க, பேரன்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு, குகைக்குள் நுழைந்தார் தாத்தா.
குகைக்குள் நுழைந்ததும், தாத்தா கொண்டு வந்த பொருள்களையெல்லாம், எடுத்து பையில் எடுத்து வைத்து புறப்படுவதற்கு ஆயத்தமானார்.
ஆனால், அதற்குள் சேகர் தன் சட்டை பைக்குள் வைத்திருந்த சின்ன நோட்டில், குகைக்குள் எழுதி வைத்திருந்த எழுத்துக்களை எல்லாம் பார்த்து, அப்படியே தனது நோட்டில் எழுத ஆரம்பித்தான்.
இதைப்பார்த்த தாத்தா, “சேகர் என்னடா பண்றே...!”
“இல்ல தாத்தா... இதுல உள்ள எழுத்துக்கள உங்களுக்கு படிக்கத் தெரியலை. ஆனா, என் பிரண்ட் தினேஷோட அப்பா கல்வெட்டல்லாம் படிப்பாரு தாத்தா. அவருகிட்ட காட்டி, இதுல என்ன இருக்குன்னு படிச்சு தெரிஞ்சுக்கலாம்னு இருக்கேன்.”
“என்னடா... நீயும் புதையல் எடுக்க கிளம்ப போறீயா...?” என்று கிண்டலாய் சிரித்தார் தாத்தா.
“ஏன் தாத்தா கூடாது?” என்று எதிர் கேள்வி கேட்ட சேகரை, அதிர்ச்சியாய் பார்த்தார் சுப்பையா தாத்தா.
அந்த சமயத்தில்... குகையின் வாசலைப் பார்த்த தாத்தாவும், சபரீஷும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.
அந்த சமயத்தில்... குகையின் வாசலைப் பார்த்த தாத்தாவும், சபரீஷும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர். குகையின் வாசலில், ஒரு மலைப்பாம்பு தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் சபரீஷ், “தா..த்..தா.. பாம்பு...” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பாகவே, தொண்டை உலர்ந்து அதற்குப் பின் பேச்சே வரவில்லை.
“ஸ்..ஸ்.. மூச்... சத்தம் போடாதீங்க!” என்று தாத்தா சொன்னதும், சேகரும், சபரீஷûம் இரண்டு கைகளால் வாயைப்பொத்திக் கொண்டனர்.
சுப்பையா தாத்தா சேகர், சபரீஷ் தோளில் கைப் போட்டு, தன்னோடு இறுக அணைத்துக் கொண்டார். ஐந்து நிமிடங்கள் சென்றிருக்கும். அந்தப் பாம்பு அப்படியே குகைக்கு மேலே சென்று, மலை மீது ஏறிச் சென்றது.
அப்போதுதான், மூவருக்கும் உயிரே வந்தது. “தாத்தா... பாத்தீங்களா எவ்வளவு பெரிய பாம்பு” என்று கண்கள் விரிய ஆச்சர்யப்பட்டான் சேகர்.
“ஆமாம் தாத்தா...! பாம்புன்னா கடிக்கும்தானே... நம்ம மூணு பேரையும் பாம்பு பார்த்தும், நம்மை எதுவும் செய்யலையே” என்று சபரீஷ் கேள்வி எழுப்பினான்.
“பேராண்டி... காட்டு மிருகங்கள்ட்ட ஒரு நல்ல விஷயம் இருக்கு. அதாவது, எந்த மிருகத்தையும் நாம தொந்தரவு செய்யாத வரைக்கும், நம்மளையும் அது எதுவும் செய்துவிடாது” என்றார் தாத்தா.
“ஆமா தாத்தா... நீங்க சொன்னது சரிதான். எங்க டீச்சர் கூட இதை சொல்லிக்கொடுத்திருக்காங்க” என்று தாத்தா சொன்னதை ஆமோதித்தான் சேகர்.
“சரி... இனிமேலும் இங்கு நிற்க வேண்டாம். வாங்க புறப்படுவோம்” என்று இருவர் தோளிலும் கைப் போட்டுக்கொண்டு இருவரையும் அணைத்தப்படி, மலையிலிருந்து இறங்க ஆரம்பித்தார், சுப்பையா தாத்தா.
காட்டுப்புல் வழியாக மூவரும் இறங்க ஆரம்பித்தார்கள். “தாத்தா எனக்கு ஒரு சந்தேகம்” என்று ஆரம்பித்தான் சபரீஷ்.
“என்னடா தங்கம் சந்தேகம்...?”
“இல்ல தாத்தா... நீங்க கதை சொல்ற சமயத்துல, புதையல துர்தேவதைகள் காக்கிறதா சொன்னீங்க... துர்தேவதைங்கன்னா, கொம்பு வைத்துக்கொண்டு, வாய்க்கு வெளியே பல் எல்லாம் நீண்டு, அரக்கர்கள் மாதிரி இருக்குமே... அந்த பூதம் தானே.“
“தாத்தா சிரித்துக்கொண்டே... பூதம் வேறு, துர்தேவதைகள்“ வேறு என்றார்.
“தாத்தா நீங்க பொய்தானே சொல்றீங்க...!” என்று தாத்தா சொல்வதை மறுத்தான் சபரீஷ்.
“அப்படி என்னடா பொய் சொன்னேன்?” என்று கேட்டார் சுப்பையா.
“இல்ல தாத்தா, புதையலை பூதம்தானே காக்கும். அப்படித்தான் எங்க அம்மா கதை சொல்லியிருக்காங்க. ஆனா, நீங்க என்னவோ புதுசா துர்தேவதைங்கன்னு சொல்றீங்களே...” என்றான் சபரீஷ்.
“அம்மா சொன்ன கதையும் பொய்யில்லை. நான் சொல்றதும் பொய்யில்லை இரண்டும் உண்மைதான்” என்றார் தாத்தா.
“எப்படி தாத்தா...?” எனக்கு ஒரே குழப்பமாய் இருக்கு என்று தலையை சொரிந்தான் சேகர்.
“ராஜா காலத்துல... ஜோசியம், கோயில்ல பிரசன்னம் பார்க்கறது, மந்திரம், மாந்த்ரீகம் போன்றவெற்றிலெல்லாம் ரொம்ப நம்பிக்கை இருந்துச்சு”.
“மந்திரம், மாந்த்ரீகத்திற்கெல்லாம் கேரள மாநிலத்தில் உள்ள சில மந்திரவாதிகள் மிகவும் கை தேர்ந்தவர்கள். அவர்கள், நல்லதுக்கும் சரி; கெட்டதுக்கும் சரி துர்தேவதைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்கள்.
அந்த துர்தேவதைகள் அவர்களது மந்திரத்திற்கு மட்டும் கட்டுப்பட்டு, அவர்கள் என்ன சொல்வார்களோ அதன்படி செய்து முடிக்கும்.”
“தாத்தா... அந்த துர் தேவதைங்க நம்ம கண்ணுக்கெல்லாம் தெரியுமா?” என்றான் சபரீஷ்.
“இல்லடா செல்லம்... அந்த துர் தேவதைகள் நம் கண்களுக்கெல்லாம் தெரியாது. மந்திரவாதிகள் கண்களுக்கு மட்டுமே தெரியும். அப்படித்தான் மந்திரி சொன்ன யோசனையில், காளிங்கன் மன்னன், கேரள மாநிலத்திலிருந்து ஒரு பெரிய மந்திரவாதியை வள்ளியூருக்கு வரவழைச்சான்” என்று தாத்தா கதை சொல்லவும், “ஏன் தாத்தா... அந்த துர் தேவதைகள் என்ன செய்யும்?” என்று கேட்டான் சேகர்.
“துர் தேவதையைப்பற்றி நான் முழுசா சொல்றதை நீங்க கேட்டாதான் அது என்ன செய்யும்ணு உங்களுக்கு தெரியும்.” என்றார் தாத்தா... இப்போது மூவரும் மலையிலிருந்து, கீழே பாதி துõரம் இறங்கி வந்திருந்தார்கள்.
“சரி தாத்தா... நீங்க கதையைச் சொல்லுங்க... இவன் எப்போதும் இப்படித்தான். கதையை முழுசா கேட்க விடமாட்டான். ஏதாவது குறுக்க குறுக்க கேட்டுக்கிட்டே கிடப்பான்” என்று சபரீஷ் சேகர் வாயை அடக்கினான்.
“மந்திரி சொன்னது போலவே காளிங்கனும் கேரளத்திலிருந்து மந்திரவாதியை வரவழைத்தான். மந்திரவாதி வந்ததும் மந்திரி புதையல் பற்றிய அனைத்து ரகசியங்களையும் சொன்னான்.”
ரகசியங்களை எல்லாம் கேட்டவுடன், “நாம் இப்போது உடனடியாக பொதிகை மலைக்கு போக வேண்டும்” என்று மந்திரவாதி கூறினான்.
உடனடியாக மந்திரி, காளிங்கன் மற்றும் மந்திரவாதி மூவரும் பொதிகை மலைக்கு, குதிரையில் சென்றனர். பொதிகை மலைக்கு சென்றதும் மந்திரவாதி சிறப்பு வேள்வி, மந்திரங்கள் எல்லாம் சொல்லி தான் கொண்டு வந்திருந்த சில மந்திர தந்திர வேர்களை குறிப்பிட்ட இடங்களைச் சுற்றி கொஞ்சம் கொஞ்சமாக போட்டான்.
“தாத்தா... துர்தேவதைன்னா வேரா...” என்று சந்தேகம் கேட்டான் சேகர்.
“இல்லடா செல்லம்... மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி வருவதற்கு முன் அவர்களை வரவிடாமல் செய்வதற்கான மந்திர வேர் அது. தெரியாதவர்கள் யாரேனும் வருவார்களேயானால், அவர்கள் அந்த வேரை கடக்கும் பட்சத்தில், அவர்கள் தங்கள் சுயநினைவை மறந்து, மூர்ச்சையாகி இறந்து போவார்கள். அப்படிப்பட்ட கொடூர விஷயம் கொண்டது அந்த வேர்” என்றார் தாத்தா.
“சரி தாத்தா புதையல் ரகசியம் மந்திரிக்கும், மன்னனுக்கு மட்டும்தானே தெரியும். இப்போ மந்திரவாதிக்கும் சொல்லிட்டாங்கன்னா... அவன் வேற யாருகிட்டயும் சொல்லிட மாட்டானா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டான் சபரீஷ்.
“ஆங்... இந்த கேள்வியைத்தான், நீங்க கேட்கணும்னு நான் எதிர்பார்த்தேன்... சரியா கேட்டடா பேராண்டி” என்று சபரீஷ் தோளில் தட்டிக் கொடுத்த சுப்பையா தாத்தா, “அதாவது மந்திரிக்கும், காளிங்கனுக்கு மட்டுமே தெரிந்த புதையல் ரகசியம் கடைசி வரை மந்திரவாதியிடம் சொல்லவே இல்லை.”
“எப்படித் தாத்தா மந்திரவாதிகிட்ட சொல்லாம மறைச்சாங்க?” என்று கேட்டான் சேகர்.
அவங்க... ஒரு குறிப்பிட்ட எல்கையைக் காட்டி, இந்த இடத்தில்தான் புதையல் இருக்கு. இதைக் காக்கத்தான் துர்தேவதைகளை நிறுத்தணும்னு என்று காளிங்கன் சொன்னான். காளிங்கன், மன்னன் அல்லவா... அதனால் காளிங்கன் சொன்னதை அப்படியே கேட்டு... அந்தப் பகுதியில் துர்தேவதையை நிறுத்தினான் மந்திரவாதி.
துர்தேவதையை நிறுத்திய பிறகு, அந்த ரகசிய மந்திரத்தை காளிங்கன் மன்னனுக்கு மந்திரவாதி கற்றுக்கொடுத்தான். அந்த மந்திரத்தை உச்சரித்தால் மட்டுமே துர்தேவதை அடிபணியும். இல்லாவிட்டால், அது தன் வேலையைக் காட்டிவிடும். அதற்குப் பிறகு கற்றுக்கொடுத்த மந்திரம் பலிக்கவேண்டி இரவு பகலாக நடுகாட்டில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
“சரி தாத்தா... மந்திரவாதி சொல்லிக்கொடுத்தது மாதிரி, காளிங்கன் மந்திரத்தை கற்றுக்கொண்டானா?” என்றான் சேகர்.
“ஆமாண்டா பேராண்டி மந்திரவாதி சொன்னதை அப்படியே கற்றுக்கொண்டான் காளிங்கன்.
மந்திரங்களை எல்லாம் கற்றறிந்த பின்னர், மந்திரவாதி மன்னனிடம் ஒரு கோரிக்கை ஒன்றை வைத்தான்.” என்று தாத்தா சொல்லி முடிக்கும் முன்பே, “அது என்ன கோரிக்கை தாத்தா” என்று ஆர்வமாய் கேட்டான் சபரீஷ்.
“அதாவது... நான் இங்குள்ள துர்தேவதைகளுக்கெல்லாம் நீங்கள்தான் பசியாற்ற வேண்டும். துர்தேவதைகளின் மனதை குளிரச் செய்யவேண்டும் என்று மந்திரவாதி சொல்லியிருக்கிறான்.”
“அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்” என்று காளிங்கன் கேட்டான்.
அதற்கு மந்திரவாதியோ... “இந்த துர்தேவதையை நினைத்து ஒருபிடி மண் எடுத்து தருவேன். அந்த மண்ணை அரண்மனையில் ஒரு இடத்தில் கொட்டி, அந்த இடத்தில், நான் தரும் பெண் வடிவத்தை, சிலையாக செய்து அதற்கு தினமும் படையல் கொடுக்க வேண்டும்.
அதன் பின் வருடத்திற்கு ஒரு முறை சாப்பாடு படையலோடு, ஆடு, பன்றியின் ரத்தத்தால் அந்த சிலைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்” என்றான் மந்திரவாதி.
“எதற்கு இந்தமாதிரியெல்லாம் செய்ய வேண்டும்” என்று கேட்டான் மந்திரி.
அதற்கு மந்திரவாதியோ... “இப்படி நீங்கள் செய்தால் மட்டுமே... நீங்கள் கற்றுக்கொண்ட மந்திரம் பலிக்கும். அதுமட்டுமல்லாமல் அந்த துர்தேவதையும் உங்களுக்கும் கட்டுப்படும். இல்லையென்றால்... அது உங்களையே அடித்துக் கொன்றுவிடும்” என்று மந்திரவாதி கூறியிருக்கிறான்.
“மந்திரவாதி சொன்ன இந்த நிபந்தனையையும் காளிங்கன் ஏற்றுக்கொண்டான். அதற்குப் பிறகுதான் மந்திரவாதி எதிர்பாராத ஒரு அதி பயங்கரம் அங்கு நடந்தது” என்று தாத்தா பீடிகை போட்டார்.
“மந்திரவாதி சொன்னதைத்தான் மன்னனும், மந்திரியும் செஞ்சுட்டாங்களே... பின்ன, என்ன தாத்தா பயங்கரம்?” என்று கேட்டான் சேகர்.
“மந்திரவாதி சொன்னதைத்தான் மன்னனும், மந்திரியும் செஞ்சுட்டாங்களே... பின்ன, என்ன தாத்தா பயங்கரம்?” என்று கேட்டான் சேகர்.
“என்னதான் இருந்தாலும் புதையல் எங்கே இருக்கிறது என்ற ரகசியம் தெரிந்தவனாயிற்றே, மந்திரவாதி. அதனால்... மந்திரவாதியை துõக்கிலிட்டு கொன்றான் காளிங்கன்.”
இதைக் கேட்டதும், சபரீஷûம், சேகரும் அதிர்ச்சியில் வாயைப் பிளந்து நின்றனர்.
“ஏன் தாத்தா காளிங்கன் மன்னன் இப்படி செய்தான்?” என்று அப்பாவியாய் கேட்டான் சபரீஷ்.
“அதுவெல்லாம் ராஜ ரகசியம். அதற்காகத்தான் மந்திரவாதியை காளிங்கன் கொன்றான்.”
“சரி தாத்தா... மந்திரவாதிக்கு ரகசியம் தெரிஞ்சதுனால அவனை துõக்குல போட்டு கொன்னான் மன்னன்.
ஆனா, மந்திரிக்கும்தான்... ரகசியம் தெரியுமே அவனை காளிங்கன் என்ன செய்தான்” என்று கேள்வி கேட்டான் சேகர்.
“பேராண்டி நீ கேட்டது சரிதான். ஆனா, அந்த சூழ்நிலை வருவதற்கு முன்னரே நிலைமையே தலைகீழா போச்சு” என்று தாத்தா சொல்லி முடிக்கவும், “என்ன தாத்தா நடந்துச்சு” என்று கேட்டான் சபரீஷ்.
காளிங்கனோட ஆட்சி சொல்லும்படியா இல்லை. அவனது படையும் கொஞ்சம் கொஞ்சமா வலுவிழந்ததால... அண்டை நாட்டு மன்னர்கள், காளிங்கனை அரண்மனையோடு சேர்த்து பீரங்கியை வைத்து தகர்த்து தரைமட்டமாக்கிட்டாங்க... அதுக்கப்பறம்... மன்னர் ஆட்சியெல்லாம் மாறி, மக்கள் ஆட்சி வர ஆரம்பிச்சுடுச்சு” என்று சொன்னார் தாத்தா.
“சரி தாத்தா... எல்லாரும் செத்துப் போயிட்டாங்களே... அப்படீன்னா... மன்னரோட வாரிசுக்கு புதையல் இருக்கற இடம் தெரியாமலே போயிருக்குமே.”
“ஆமாண்டா பேராண்டி... ஊரை அடிச்சு கொள்ளையடிச்சப் பணமும், நகையும் அவனுக்கும் புரயோஜனம் இல்லாம, அவன் வாரிசுக்கும் புரயோஜனமில்லாம போயிடுச்சு. அதற்கப்புறம் கோயில் சுரங்கத்தில் இருந்த கல்வெட்டை வைத்து, ஒவ்வொருத்தரா புதையலைத் தேடி அலைய ஆரம்பிச்சாங்க. ஆனா, யாருக்கும் புதையலை பற்றின சரியான தகவல்கள் இன்னும் கிடைக்கல” என்று சொல்லி முடித்தார் சுப்பையா தாத்தா.
“தாத்தா... கதை ரொம்ப நல்லா இருந்துச்சு” என்று சந்தோஷப்பட்டான் சபரீஷ்.
ஆனால், சேகரோ அந்த கதையைப் பற்றி தீவிரமா யோசிக்க ஆரம்பித்தான். “தாத்தா... இன்னும் மலையிலிருந்து கீழே இறங்கறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்” என்று கேட்டான் சேகர்.
“இன்னும் பத்து நிமிஷத்துல, நாம மலையடிவாரத்துக்கு போயிடலாம்” என்றார் தாத்தா.
“தாத்தா இந்தமாதிரியான த்ரிலிங்கான கதை, வேற எதும் இருக்கா?” என்றான் சபரீஷ்.
“நிறைய இருக்கு... நான் ஒவ்வொன்னா உங்களுக்கு சொல்றேன்” என்றார் தாத்தா.
“தாத்தா... நாளைக்கு கண்டிப்பா எங்களை அந்த முருகன் கோயிலுக்கு கூட்டிட்டு போவீங்களா?” என்றான் சேகர்.
“கண்டிப்பா கூட்டிட்டு போரேண்டா செல்லம்” என்றார் சுப்பையா.
“கோயிலுக்கு மட்டும் இல்ல தாத்தா... உண்மையில புதையல தேடி அலைஞ்சவங்கள தெரியும்னு சொன்னீங்களே... அவங்கள்ல ஒருத்தரக் கூட உங்களுக்கு தெரியும்னு சொன்னீங்களே... அந்த ஒருத்தரையும், நீங்க நாளைக்கு எங்களுக்கு காட்டணும்” என்றான் சேகர்.
“ஏண்டா... கோயிலை மட்டும் பார்த்தால் போதாதா? அவரை எதுக்குப் போய் பார்க்கணும்னு” கேட்டார் தாத்தா.
“இல்ல தாத்தா... அந்த பொதிகை மலையில அப்படி என்னதான் பார்த்தார்னு நான் நேரடியா கேட்கணும். அந்த அனுபவம் எப்படி இருந்துச்சுன்னு கேட்கணும்” என்றான் சேகர்.
“தாத்தா... இவன் விட்டா நாளைக்கே உங்களுக்குத் தெரியாம புதையலைத் தேடி பொதிகை மலைக்கே போயிடுவான்னு நினைக்கிறேன்” என்று சிரித்தான் சபரீஷ்.
“அப்படியாடா பேராண்டி... சபரீஷ் சொல்றது உண்மையா?” என்று கேட்டார் சுப்பையா.
“இல்ல தாத்தா இவன் ஏதாவது உளறுவான்” என்று சலித்துக்கொண்டு, நடந்தான் சேகர்.
“தாத்தா... எனக்கு பசியெடுக்க ஆரம்பிச்சிடுச்சு... ஏதாவது வச்சிருக்கீங்களா?” என்றான் சபரீஷ்.
“கொஞ்சம் பொறுத்துக்கடா... செல்லம். நாம இப்போ மலையடிவாரத்திற்கு வந்தாச்சு. ஏதாவது ஆட்டோ வந்துச்சுன்னா... இன்னும் அஞ்சு நிமிஷத்துல நாம வீட்டுக்கு போயிடலாம்” என்று சொல்லிவிட்டு துõரத்தில் ஆட்டோ வருகிறதா என்று பார்த்தார் சுப்பையா.
சேகர் எதுவும் பேசாமல் மவுனமாய் நின்றுகொண்டிருந்தான்.
“தாத்தா... அங்கப்பாருங்க... ஆட்டோ வருது...” என்று சபரீஷ் கை நீட்டிய திசையில் பார்த்தார் தாத்தா.
துõரத்தில் அவன் சொன்னதைப் போன்றே ஒரு ஆட்டோ வந்துகொண்டிருந்தது.
சுப்பையா கையைக் காட்டி ஆட்டோவை மறித்தார். பின்னர் மூவரும் ஆட்டோவில் ஏறிக்கொண்டனர்.
ஆட்டோ அந்த இடத்தைவிட்டு நகர ஆரம்பித்தது. ஆனால் சேகர் மட்டும் ஆட்டோவிற்கு வெளியே தலையை நீட்டி... ராமர் பாதம் மலையை அடுத்து தொலைவில் தெரியும் பொதிகை மலையை வச்சக் கண் வாங்காமல் வெறித்துப் பார்த்தான்.
ஆட்டோ வீட்டு வாசலில் வந்து நின்றதும், சபரீஷ் துள்ளிக் குதித்து வீட்டிற்குள் ஓடினான். சேகர் இன்னும் ஆழ்ந்த தீவிர யோசனையில் ஆட்டோவில் இருந்து மெல்ல இறங்கி வீட்டிற்குள் நுழைந்தான்.
“பாட்டி ரொம்ப பசிக்குது... என்ன டிபன் இருக்கு?” என்று அடுப்பங்கறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தன்னுடைய பாட்டியிடம் கேட்டான் சபரீஷ்.
“பசிக்குதாடா என் செல்லம்...? போய் கை கழுவிட்டு வா... உனக்கு புடிச்ச பால் கொழுகட்டை செஞ்சிருக்கேன்” என்றாள் பாட்டி.
பாட்டி சொல்லி முடிக்கும் முன்னே கை கழுவிவிட்டு தயாராய் தட்டை எடுத்துக்கொண்டு, ஹாலில் போய் அமர்ந்தான் சபரீஷ்.
இன்னும் தீவிரமாய் யோசித்துக்கொண்டிருந்த சேகர், சேரில் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.
சேகரை பார்த்த சுப்பையா தாத்தா... “ஏன்டா சேகர்... என்ன இப்படி அமைதியா உட்கார்ந்திருக்க... உனக்கு பசிக்கலை?” என்று கேட்டார் தாத்தா.
“இல்ல தாத்தா எனக்கு பசிக்கலை... நான் பிறகு சாப்பிட்டுக்கறேன். ஆமா தாத்தா... நீங்க எப்போ முருகன் கோயிலுக்கு கூட்டிட்டு போகப்போறீங்க?” என்றான் சேகர்.
“தாத்தா... பாத்தீங்களா... இவன் இன்னும் புதையலைத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கான். இவன் புதையலை எடுக்காம விட மாட்டான். இவனுக்கு புதையல் பைத்தியம் பிடிச்சிருக்கு” என்று சொல்லிக்கொண்டு கிண்டலாய் சிரித்தான் சபரீஷ்.
சபரீஷை முறைத்துப் பார்த்த சேகர், “சொல்லுங்க தாத்தா... நாம எப்போ போகப்போறோம்?” என்று கேட்டான் சேகர்.
“சேகர் நீ முதல்ல டிபன் சாப்பிடு. மணி இப்போதான் அஞ்சு ஆகுது. ஆறு மணிக்குத்தான் கோயில் நடை திறப்பாங்க. அப்போதான் நாம அங்க போக முடியும். இன்னிக்கு நாம ரொம்ப துõரம் அலைஞ்சுட்டு வந்திருக்கோம். உடம்பெல்லாம் ரொம்ப வலிக்கும். பேசாம சாப்பிட்டு படுத்து துõங்கு. நாம நாளைக்கு காலையில போகலாம்” என்றார் சுப்பையா தாத்தா.
“அதெல்லாம் முடியாது தாத்தா... நாம இன்னிக்கே கண்டிப்பா முருகன் கோயிலுக்கு போகணும்” என்று பிடிவாதமாய் சொன்னான் சேகர்.
“தாத்தா... பாத்தீங்களா...? இவன் சொன்னா கேட்க மாட்டான். பிடிவாதக்காரன். தான் ஒண்ணு நினைச்சா நடக்கறது வரை, இவன் விடமாட்டான்” என்று மறுபடியும் கேலி செய்தான் சபரீஷ்.
“சேகர் நீ இப்போ டிபன் சாப்பிடு. சாப்பிட்டு முடிச்சதுமே நாம கோயிலுக்கு கிளம்பலாம். சரியா?”
“உண்மையாவா தாத்தா...?” என்று முகம் மலர்ந்தவன், சபரீஷ் அருகில் அமர்ந்து டிபன் சாப்பிட ஆரம்பித்தான்.
சாப்பிட்டுக்கொண்டிருந்த சேகரை வச்சக் கண் வாங்காமல் பார்த்தார் சுப்பையா தாத்தா.
இருவரும் சாப்பிட்டு முடித்ததும், சேகர் கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். மணி 5.30 ஆனது. “தாத்தா... நேரமாயிடுச்சு. நாம இப்போ போனாதான் ஆறு மணிக்காவது கோயிலுக்கு போக முடியும். சீக்கிரம் புறப்படுங்க தாத்தா” என்று அவசரப்படுத்தினான் சேகர்.
“சரி புறப்படுவோம்” என்றவர், தோளில் துண்டை போட்டுக்கொண்டு சைக்கிளை வெளியே எடுத்தார். சைக்கிளில் முன்புறம் சபரீஷையும், பின்னால் சேகரையும் உட்கார வைத்தவர், கோயிலுக்கு சைக்கிளை அழுத்தினார்.
துõரத்தில் முருகன் கோயிலின் கோபுரம் தெரிந்தது.
“தாத்தா கோயில் வந்துடுச்சு” என்று கத்தினான் சபரீஷ்.
“டேய்... கோயில் வரலை. கோயிலுக்கு நாம வந்துட்டோம்” என்று கிண்டல் செய்தான் சேகர்.
கோயில் வாசலில் சைக்கிளை நிறுத்தினார் சுப்பையா. சைக்கிளை விட்டு இறங்கிய சேகரையும், சபரீஷையும் கையை பிடித்துக் கொண்டு கோயிலுக்குள் நடக்க ஆரம்பித்தார் தாத்தா.
“தாத்தா...” என்று மெல்லமாய் அழைத்த சேகர், “தாத்தா... அந்த சுரங்கப்பாதை எங்க இருக்கு?” என்றான்.
“அவசரப்படாதேடா செல்லம்... மூலவர் சிலைக்கு பக்கத்துல, ஐயப்பன் சிலை இருக்கும். அது பக்கத்துலதான் சுரங்கப் பாதை இருக்கு” என்றார் தாத்தா.
குகைக்குள் இருந்த மூலவர் முருகன், விளக்கொளியில் ஜொலித்தார்.
மூலவரை தரிசித்த மூவரும் ஐயப்பன் சிலை இருக்கும் அந்த குகை அருகே வந்தனர். “தாத்தா இந்த இடம்தானே சொன்னீங்க...” என்று மெல்லிய குரலில் கேட்டான் சேகர்.
“ஆமான்டா... இதோ... இந்த சிலைக்கு பின்னாடி பாருங்க”. என்று தாத்தா கைகாட்டிய திசையை பார்த்தார்கள் சேகரும், சபரீஷûம்.
தாத்தா காட்டிய இடத்தில் இரண்டு கரும் பாறைக்கு நடுவே செங்கலால் சுவர் ஒன்று கட்டப்பட்டிருந்தது.
“தாத்தா இங்கே ஏன் செங்கலை வைத்து கட்டியிருக்காங்க” என்று கேட்டான் சபரீஷ்.
“இங்கேதான் சுரங்கப்பாதை இருந்துச்சு. ஆனா, இப்போ அதை செங்கல் வைச்சு அடைச்சிட்டாங்க... அங்கப் பாருங்க... அதுதான் காளிங்கன் புதையல் பத்தின ரகசியத்தை எழுதி வைச்ச கல்வெட்டு” என்று தாத்தா கைகாட்டிய திசையில், பாறையில் ஏதோ எழுதப்பட்டிருந்ததை வினோதமாய் பார்த்துக் கொண்டிருந்தனர் சேகரும், சபரீஷûம்.
ஆட்டோ வீட்டு வாசலில் வந்து நின்றதும், சபரீஷ் துள்ளிக் குதித்து வீட்டிற்குள் ஓடினான். சேகர் இன்னும் ஆழ்ந்த தீவிர யோசனையில் ஆட்டோவில் இருந்து மெல்ல இறங்கி வீட்டிற்குள் நுழைந்தான்.
“பாட்டி ரொம்ப பசிக்குது... என்ன டிபன் இருக்கு?” என்று அடுப்பங்கறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தன்னுடைய பாட்டியிடம் கேட்டான் சபரீஷ்.
“பசிக்குதாடா என் செல்லம்...? போய் கை கழுவிட்டு வா... உனக்கு புடிச்ச பால் கொழுகட்டை செஞ்சிருக்கேன்” என்றாள் பாட்டி.
பாட்டி சொல்லி முடிக்கும் முன்னே கை கழுவிவிட்டு தயாராய் தட்டை எடுத்துக்கொண்டு, ஹாலில் போய் அமர்ந்தான் சபரீஷ்.
இன்னும் தீவிரமாய் யோசித்துக்கொண்டிருந்த சேகர், சேரில் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.
சேகரை பார்த்த சுப்பையா தாத்தா... “ஏன்டா சேகர்... என்ன இப்படி அமைதியா உட்கார்ந்திருக்க... உனக்கு பசிக்கலை?” என்று கேட்டார் தாத்தா.
“இல்ல தாத்தா எனக்கு பசிக்கலை... நான் பிறகு சாப்பிட்டுக்கறேன். ஆமா தாத்தா... நீங்க எப்போ முருகன் கோயிலுக்கு கூட்டிட்டு போகப்போறீங்க?” என்றான் சேகர்.
“தாத்தா... பாத்தீங்களா... இவன் இன்னும் புதையலைத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கான். இவன் புதையலை எடுக்காம விட மாட்டான். இவனுக்கு புதையல் பைத்தியம் பிடிச்சிருக்கு” என்று சொல்லிக்கொண்டு கிண்டலாய் சிரித்தான் சபரீஷ்.
சபரீஷை முறைத்துப் பார்த்த சேகர், “சொல்லுங்க தாத்தா... நாம எப்போ போகப்போறோம்?” என்று கேட்டான் சேகர்.
“சேகர் நீ முதல்ல டிபன் சாப்பிடு. மணி இப்போதான் அஞ்சு ஆகுது. ஆறு மணிக்குத்தான் கோயில் நடை திறப்பாங்க. அப்போதான் நாம அங்க போக முடியும். இன்னிக்கு நாம ரொம்ப துõரம் அலைஞ்சுட்டு வந்திருக்கோம். உடம்பெல்லாம் ரொம்ப வலிக்கும். பேசாம சாப்பிட்டு படுத்து துõங்கு. நாம நாளைக்கு காலையில போகலாம்” என்றார் சுப்பையா தாத்தா.
“அதெல்லாம் முடியாது தாத்தா... நாம இன்னிக்கே கண்டிப்பா முருகன் கோயிலுக்கு போகணும்” என்று பிடிவாதமாய் சொன்னான் சேகர்.
“தாத்தா... பாத்தீங்களா...? இவன் சொன்னா கேட்க மாட்டான். பிடிவாதக்காரன். தான் ஒண்ணு நினைச்சா நடக்கறது வரை, இவன் விடமாட்டான்” என்று மறுபடியும் கேலி செய்தான் சபரீஷ்.
“சேகர் நீ இப்போ டிபன் சாப்பிடு. சாப்பிட்டு முடிச்சதுமே நாம கோயிலுக்கு கிளம்பலாம். சரியா?”
“உண்மையாவா தாத்தா...?” என்று முகம் மலர்ந்தவன், சபரீஷ் அருகில் அமர்ந்து டிபன் சாப்பிட ஆரம்பித்தான்.
சாப்பிட்டுக்கொண்டிருந்த சேகரை வச்சக் கண் வாங்காமல் பார்த்தார் சுப்பையா தாத்தா.
இருவரும் சாப்பிட்டு முடித்ததும், சேகர் கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். மணி 5.30 ஆனது. “தாத்தா... நேரமாயிடுச்சு. நாம இப்போ போனாதான் ஆறு மணிக்காவது கோயிலுக்கு போக முடியும். சீக்கிரம் புறப்படுங்க தாத்தா” என்று அவசரப்படுத்தினான் சேகர்.
“சரி புறப்படுவோம்” என்றவர், தோளில் துண்டை போட்டுக்கொண்டு சைக்கிளை வெளியே எடுத்தார். சைக்கிளில் முன்புறம் சபரீஷையும், பின்னால் சேகரையும் உட்கார வைத்தவர், கோயிலுக்கு சைக்கிளை அழுத்தினார்.
துõரத்தில் முருகன் கோயிலின் கோபுரம் தெரிந்தது.
“தாத்தா கோயில் வந்துடுச்சு” என்று கத்தினான் சபரீஷ்.
“டேய்... கோயில் வரலை. கோயிலுக்கு நாம வந்துட்டோம்” என்று கிண்டல் செய்தான் சேகர்.
கோயில் வாசலில் சைக்கிளை நிறுத்தினார் சுப்பையா. சைக்கிளை விட்டு இறங்கிய சேகரையும், சபரீஷையும் கையை பிடித்துக் கொண்டு கோயிலுக்குள் நடக்க ஆரம்பித்தார் தாத்தா.
“தாத்தா...” என்று மெல்லமாய் அழைத்த சேகர், “தாத்தா... அந்த சுரங்கப்பாதை எங்க இருக்கு?” என்றான்.
“அவசரப்படாதேடா செல்லம்... மூலவர் சிலைக்கு பக்கத்துல, ஐயப்பன் சிலை இருக்கும். அது பக்கத்துலதான் சுரங்கப் பாதை இருக்கு” என்றார் தாத்தா.
குகைக்குள் இருந்த மூலவர் முருகன், விளக்கொளியில் ஜொலித்தார்.
மூலவரை தரிசித்த மூவரும் ஐயப்பன் சிலை இருக்கும் அந்த குகை அருகே வந்தனர். “தாத்தா இந்த இடம்தானே சொன்னீங்க...” என்று மெல்லிய குரலில் கேட்டான் சேகர்.
“ஆமான்டா... இதோ... இந்த சிலைக்கு பின்னாடி பாருங்க”. என்று தாத்தா கைகாட்டிய திசையை பார்த்தார்கள் சேகரும், சபரீஷûம்.
தாத்தா காட்டிய இடத்தில் இரண்டு கரும் பாறைக்கு நடுவே செங்கலால் சுவர் ஒன்று கட்டப்பட்டிருந்தது.
“தாத்தா இங்கே ஏன் செங்கலை வைத்து கட்டியிருக்காங்க” என்று கேட்டான் சபரீஷ்.
“இங்கேதான் சுரங்கப்பாதை இருந்துச்சு. ஆனா, இப்போ அதை செங்கல் வைச்சு அடைச்சிட்டாங்க... அங்கப் பாருங்க... அதுதான் காளிங்கன் புதையல் பத்தின ரகசியத்தை எழுதி வைச்ச கல்வெட்டு” என்று தாத்தா கைகாட்டிய திசையில், பாறையில் ஏதோ எழுதப்பட்டிருந்ததை வினோதமாய் பார்த்துக் கொண்டிருந்தனர் சேகரும், சபரீஷûம்.
கோயில் முழுவதையும் ஆச்சர்யமாக சுற்றிப்பார்த்தனர் சேகரும், சபரீஷûம்.
“தாத்தா... கோயில்ல காளிங்கன் படம் எதுவும் இல்லையே...?” என்று கேட்டான் சேகர்.
“காளிங்கன் படம் குகையிலதான் இருந்துச்சுன்னு பார்த்தவங்க சொன்னாங்க. ஆனா, இப்போ சுரங்கப்பாதையை சுத்தமா அடைச்சுட்டாங்க.”
“தாத்தா... இந்த குகை சுரங்கப்பாதை எங்கே போய் முடியுது” என்று கேட்டான் சபரீஷ்.
“இந்த சுரங்கப்பாதை பணகுடியில் உள்ள ராமலிங்க சுவாமி கோயில்ல போய் முடியுதுடா!” என்றார் தாத்தா.
“சரி தாத்தா... இந்த சுரங்கப்பாதையை ஏன் மூடினாங்க...?” என்று கேட்டான் சேகர்.
“எந்தப் பிரச்னைக்காக அடைச்சாங்கன்னு தெரியலை. ஆனா... இந்த குகையில இருந்து மர்மமான முறையில சத்தமும், புகையும் வந்ததா சொல்றாங்க. அதனாலதான்... இந்த குகையை அடைச்சிட்டாங்க. அதுதான் உண்மை என்றும் உறுதியா சொல்ல முடியாது” என்றார் தாத்தா.
இன்னும் ஆச்சர்யமும், மர்மமும் காளிங்கன் வாழ்க்கையில புதைஞ்சி கிடக்கு என்றார் தாத்தா.
“தாத்தா புறப்படலாமா... உங்க நண்பரை பார்க்கணும்னு சொன்னீங்க... மறந்துடாதீங்க” என்று ஞாபகப்படுத்தினான் சேகர்.
“தாத்தா பார்த்தீங்களா... இவன் விடமாட்டான். இவன் உங்க பிரண்டுகிட்ட போய் இவன் புதையல் எடுத்ததைப் பற்றி முழுசுமா கேட்டு, ஒரு நாள் ராத்திரியோடு ராத்திரியா இவன் பொதிகை மலைக்கு போறானா, இல்லையான்னு மட்டும் பாருங்க”ன்னு கிண்டல் செய்தான் சபரீஷ்.
தாத்தா சிரித்துக்கொண்டே... “அப்படியாடா சேகர்... சபரீஷ் சொல்வது உண்மைதானா?” என்று கேட்டார் தாத்தா.
தாத்தா கேட்டதை கொஞ்சம் கூட கவனிக்காமல் இன்னும், அந்த சுரங்கப்பாதையை பார்த்துக்கொண்டிருந்தான் சேகர்.
“சேகர்... நேரமாச்சு கிளம்பலாமா...?” என்று கேட்டார் தாத்தா.
“தாத்தா நாம இப்போ... நேரடியா முத்தையா தாத்தா வீட்டுக்குத்தானே போகிறோம்” என்று கேட்டான் சேகர்.
“ஆமாண்டா பேராண்டி. நாம அங்கதான் போறோம்” என்றார் தாத்தா.
கோயிலுக்கு வெளியே வந்த மூவரும்... சைக்கிளில் ஏறி, முத்தையா தாத்தா வீட்டிற்கு சென்றனர்.
கொய்யா மரம், மா மரம், தென்னை மரம் என்று மரங்கள் அடர்ந்து கிடந்த பகுதிக்கு நடுவே ஒரு சிறு குடில் இருந்தது. அந்த இடமே, அவ்வளவு குளுமையாக இருந்தது.
சைக்கிளை நிறுத்திய தாத்தா, வெளியே கிடந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தார். கூடவே இரண்டு ஓரமும் சபரீஷûம், சேகரும் அமர்ந்தனர்.
“டேய்... முத்தையா” என்று வெளியில் இருந்து குரல் கொடுத்தார் தாத்தா.
“யாரு...?” என்று வீட்டினுள் இருந்து குரல் மட்டும் வெளியே வந்தது.
“நான்தான்டா சுப்பையா வந்திருக்கேன்...!”
“இதோ வந்துட்டேன்”னு... சொல்லிக்கிட்டே தோளில் துண்டைப் போட்டுக்கொண்டு வெளியே வந்தார் முத்தையா தாத்தா.
“என்னடா சுப்பையா பார்த்தே ரொம்ப நாளாச்சு... என்ன திடீர்னு இந்தப்பக்கம்...” என்று கேட்டார் முத்தையா.
“ஒண்ணுமில்லடா... இவங்க ரெண்டு பேரும் என்னோட பேரப்பசங்க. திருச்சியில இருந்து வந்திருக்காங்க. இப்போ உன்னை பார்க்கணும்னு வந்திருக்காங்க” என்று சொன்னார் சுப்பையா.
“அடடே... திருச்சியிலிருந்து வந்து, என்னை பார்க்கணும்னு வந்திருக்காங்களா...? என்னை எதுக்கு பார்க்கணும்?”னு ஆச்சர்யமாய் கேட்டார் முத்தையா தாத்தா.
“இல்லடா... பேரப்பசங்களுக்கு பொதிகை மலை புதையல் பற்றின கதைய சொன்னேன். அந்த கதையை கேட்டப் பசங்க... கதையில ரொம்ப ஆர்வமாயிட்டாங்க.”
“அதனால... பொதிகை மலைக்கு நேரா போயிட்டுவந்த உன்னை, கண்டிப்பா பார்க்கணும்னு சொல்லிட்டாங்க. அதுதான் பசங்கள இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்” என்றார் தாத்தா.
“அப்படியா...? பசங்களா உங்களுக்கு என்ட்ட என்ன கேட்கணுமோ கேளுங்க!” என்று முத்தையா கேட்டுக்கொண்டே ஒரு நாற்காலியை எடுத்துப்போட்டு எதிரே அமர்ந்தார்.
“தாத்தா... உங்களப் பத்தி எங்க தாத்தா நிறைய சொல்லியிருக்காரு. நீங்க புதையல் எடுக்கப் போன கதையை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றான் சபரீஷ்.
“டேய்... பசங்க ரெண்டு பேரும், கதை கேட்கறதுல ரொம்ப குறியா இருக்காங்க” என்று சுப்பையாவைப் பார்த்து சிரித்துக்கொண்டே கேட்டார் முத்தையா.
“ஆமாண்டா... முதல்ல பசங்க இதை ஒரு கதையாத்தான் கேட்டாங்க. ஆனா, இப்போ புதையல் இருக்கற இடத்தை பார்க்கணும். முடிஞ்சா, புதையலையே எடுக்கணும்னு போனாலும் போயிடுவாங்க போலிருக்கு” என்றார் சுப்பையா தாத்தா.
பலமாக சிரித்துக்கொண்டே முத்தையா தாத்தா... ‘பலே’ என்றார்.
“தாத்தா... சிரிச்சது போதும்... நீங்க புதையலைத் தேடி போன கதைய கொஞ்சம் சொல்லுங்க” என்றான் சேகர்.
“சொல்லுறேன் கண்ணுங்களா...” என்று ஆரம்பித்தார் முத்தையா.
“புதையல், பொதிகை மலையிலதான் இருக்குன்னு உறுதியா தெரிஞ்சுகிட்ட பிறகு, நானும் என்னுடைய கூட்டாளிங்களும் சேர்ந்துக்கிட்டு பொதிகை மலைக்கு போனோம்.
புதையலை பற்றி காளிங்கன் சொன்ன தகவல் முழுசா எங்களுக்கு கிடைக்கல. ஆனா, தெரிஞ்ச வரைக்கும் போதும்னு நினைச்சுக்கிட்டு, ஒரு தைரியமா கிளம்பி போயிட்டோம். பொதிகை மலை முழுவதும் அடர்த்தியான காடு.
எங்களால சரியா எந்த இடத்துல போயிட்டு இருக்கோம்ன்னு கூட எங்களாள கண்டுபிடிக்க முடியலை.”
“ஏன் தாத்தா...?” என்று ஆவலாய் கேட்டான் சேகர்.
“ஏன்னா... முதல் முறையா, நாங்க அப்போதான் பொதிகை மலைக்கே போறோம். உள்ளுக்குள்ள பயம். அங்க எப்படிப்பட்ட மிருகங்கள் இருக்கும்ங்கறது கூட எங்களுக்கு அப்போது தெரியாது.
காட்டுல ரெண்டு மூணு நாள் சுத்தி திரிஞ்சோம். எங்களால எதையுமே கண்டுபிடிக்க முடியலை. ஒரு கட்டத்துல கூட்டாளிகளும், நானும் ரொம்ப சோர்ந்து போயிட்டோம். காளிங்கன் சொன்னது மாதிரி, பொதிகை மலையில நாங்க எதையுமே பார்க்கல. எங்களுக்கு உள்ளூர சந்தேகம் வேற வர ஆரம்பிச்சிடுச்சு. உண்மையிலே இங்கே புதையல் இருக்குமா? அல்லது வெறும் கட்டுக் கதையான்னு கொஞ்சம் புலம்பவே ஆரம்பிச்சுட்டோம்.
அப்போதான்... அந்தப் புதையல் பத்தின குறிப்புல... மலைக்கு உச்சிக்கு முன்பாக ஒரு காளி கோயில் இருக்கும்... அந்த காளி கோயில் பக்கம்தான், கரு நொச்சி செடி இருக்கும். அந்த இலையை பிழிந்து ஊற்றினால் மட்டும்தான், அந்த தகட்டில் உள்ள தகவல்களை பார்க்க முடியும்னு காளிங்கன் அரசன் குறிப்பிட்டிருந்தான். அந்த தகவலை மட்டும் வைத்துக்கொண்டு இன்னும் கொஞ்சம் நாம் மேலே போகலாம்னு நாங்களும் மலையில் ஏற ஆரம்பிச்சோம்.
அப்போதுதான்... துõரத்துல ஒரு பெரிய சிலை ஒண்ணு, எங்க கண்களுக்கு தெரிந்தது. அந்த சிலையைப் பார்த்ததும்தான் எங்களுக்கு புதையல் நம்பிக்கையே வந்தது.
அப்புறம் முழு சந்தோஷத்தோட விறுவிறுவென்று காளி கோயில் பக்கத்துல நெருங்க ஆரம்பிச்சோம். அப்போ... எங்க கூட வந்த கூட்டாளிகளில் ஒருவன், படாரென்று மயக்கம்போட்டு விழுந்தான்.
என்னவாச்சு என்று நான் திரும்பிப் பார்த்தபோது, கூட வந்த மற்ற இரு நண்பர்களும் மயக்கம் போட்டு விழுந்தனர். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன நடக்கிறது என்றும் ஒன்றும் புரியவில்லை. அப்போது நான் நிமிர்ந்து என்ன சோதனை இது என்று காளி சிலையை நிமிர்ந்து பார்த்தேன். அப்போது ஏதோ ஒரு தீய சக்தி என்னை ஓங்கி அடிப்பது போன்று இருந்துச்சு. அவ்வளவுதான். அப்புறம் என்ன நடந்துச்சுன்னே எனக்குத் தெரியாது. நானும் மயக்கம்போட்டு விழுந்தேன்” என்றார் முத்தையா தாத்தா.
“அப்புறம் எப்படித் தாத்தா நீங்க எழுந்தீங்க?” என்றான் சேகர்.
“முதலில் மயக்கம் போட்டு விழுந்தானே... அவன்தான் முதல்ல கண் முழிச்சு, எங்களை எல்லாம் ‘தடதட’வென்று எழுப்பினான். நாங்களும் கண்விழிச்சு பார்த்தோம். சரி இனிமேலும் புதையலை எடுக்க ஆசைப்பட்டுப்போய் உயிரை விட்டு விடக்கூடாது என்று எல்லாரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு, விட்டால் போதும் என்று பொதிகை மலையைவிட்டு ஓடிவிந்தோம்” என்றார் முத்தையா தாத்தா.
“தாத்தா... உங்கள ஏதோ ஒரு சக்தி ஒண்ணு தாக்குச்சுன்னு சொன்னீங்களே... அது என்ன சக்தி?” என்று கேட்டான் சேகர்.
“அதுவா...?” என்று ஆரம்பித்த முத்தையா, சொன்ன விஷயம்...
“நாங்க நான்கு பேரும் அந்த மலை உச்சிக்குப் போனோம். அப்போ, ஏற்கனவே காலிங்கன் அரசன் மந்திரவாதியை வைத்து ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மந்திரக் கோடு ஒன்று வரைந்திருக்கிறான். அந்த மந்திரம் தெரியாமல் அந்த கோட்டைத் தாண்டினால், உயிரே போய்விடும். இதை சுத்தமாக மறந்து போன நாங்கள், அந்த மந்திரக்கோட்டை தாண்டிவிட்டோம். அவ்வளவுதான். ஒரு பெரிய மின்னல் மாதிரி காடு முழுவதும் பயங்கர வெளிச்சம். எங்கள் கண்ணே குருடாகிவிடும் போல் இருந்தது, அந்த வெளிச்சத்தில். அவ்வளவுதான். அதற்குப்பிறகு என்ன நடந்தது என்றே தெரியாது. எல்லாரும் மயங்கிப் போய்விட்டோம்.
அதற்குப் பிறகு, விட்டால்போதும் என்று தலைதெறிக்க ஓடிவந்துவிட்டோம் என்று நடந்த கதையை அப்படியே கூறினார் முத்தையா தாத்தா.
“தாத்தா... அந்த தகட்டை, இப்போ நீங்க வச்சிருக்கீங்களா?” என்று கேட்டான் சேகர்.
“அந்த தகட்டால்தானே வந்தது வினை. அதனால அந்த தகட்டைத் துõக்கி பரனில் போட்டுட்டேன்” என்றார் முத்தையா தாத்தா.
“தாத்தா அந்தத் தகட்டை கொஞ்சம் காட்ட முடியுமா?” என்று கேட்டான் சேகர்.
“அந்த தகட்டை வச்சி நீ என்ன பண்ணப்போற?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் முத்தையா தாத்தா.
“அந்த காலத்து தகடு இல்லையா...? அதுதான்! அதப்பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு தாத்தா” என்றான் சேகர்.
இதைக் கேட்டதும் பலமாக சிரித்துக்கொண்ட முத்தையா தாத்தா... “தம்பி... நான் வச்சிருக்கிறது ஒரிஜினல் தகடு கிடையாது. இதே மாதிரி தகடு இந்த ஊர்ல நிறைய பேர்ட்ட இருக்கு” என்றார் முத்தையா தாத்தா
“குழப்பத்துடன்... எப்படித் தாத்தா இது?” என்றான் சேகர்.
“முதல்ல கிடைச்ச அந்த பழமையான தகட்டைத்தான் எங்கள்ல பல பேரு படி எடுத்தோம். அப்படி படி எடுத்த தகட்டைத்தான், நான் இப்போ வச்சிருக்கிறது” என்றார் முத்தையா தாத்தா.
“இல்ல தாத்தா... நான் அந்த தகட்டை பார்க்கணுமே” என்றான் சேகர்.
“சரி... உன் ஆசையை ஏன் கெடுப்பானேன்? அந்தத் தகடு எப்படியும் பரண்மேலதான் கிடக்கும். நான் தேடிப்பார்த்து எடுத்து சாயங்காலம் கொண்டு வர்றேன்” என்றார் முத்தையா தாத்தா.
“சரிடா செல்லங்களா... நாம கிளம்பலாமா?” என்று சுப்பையா தாத்தா கேட்க. “போவோம் தாத்தா... எனக்கு இப்பவே பசி எடுக்க ஆரம்பிச்சிடுச்சு” என்று முந்தினான் சபரீஷ்.
“சரி முத்தையா நான் கிளம்பறேன்.” என்று இருவரையும் கூட்டிக்கொண்டு , நடக்க ஆரம்பித்தார் தாத்தா.
“சபரீஷ்... ஒரு விஷயத்தை கவனிச்சியா...” என்று மெதுவாக கேட்டான் சேகர்.
“என்னடா சேகர்... நீ கேட்கிறது எனக்கு ஒன்னும் புரியலையே...” என்று தலையை சொரிய... “என்னடா பேராண்டி என்ன சந்தேகம்?” என்று சேகரிடம் கேட்டார்.
“ஒண்ணுமில்லை தாத்தா! என்று சேகர் சொல்வதற்கு முன்பே, இல்லை தாத்தா இவன் பொய் சொல்றான். ஏதோ என்ட்ட சொல்ல வந்தான். நீங்க கேட்ட உடனேயே இல்லைன்னு மழுப்பறான்” என்றான் சபரீஷ்.
“என்னடா சேகர் உனக்கு குழப்பம்” என்று தாத்தா கேட்டார்.
“ஒண்ணுமில்லை தாத்தா” என்று சேகர் மறுபடியும் சொல்ல, இருவரையும் சைக்கிளில் ஏற்றி வீட்டிற்கு விரைந்தார் சுப்பையா தாத்தா.
இரவு மணி எட்டை தாண்டிக்கொண்டிருந்தது. பகலில் அடித்த வெயில் இரவில் வெட்கையை கிளப்பிவிட, வீட்டு மாடியில் படுக்கையை விரித்தார் சுப்பையா தாத்தா.
மேற்கு தொடர்ச்சி மலையில் காற்று மெல்லமாக வந்து தென்னை மரத்தை தொட, அது லேசாக ஆடி அசைந்து காற்றை இதமாகத் தந்தது.
படுத்துக்கொண்டு வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த நட்சத்திரத்தை ஒவ்வொன்றாய் எண்ணிக்கொண்டிருந்தான் சபரீஷ்.
பால் நிலா வெளிச்சம் முகத்தில் பட்டது. நிலாவை பார்த்துக்கொண்டிருந்த சேகர், மந்திரவாதி கோடு போட்ட இடத்தில் கால் பட்டாலே உயிரே போய்விடும்தானே மந்திரவாதி சொல்லியிருக்கான்.
அப்படி இருக்கையில் முத்தையா தாத்தா அந்த கோட்டைத் தாண்டியும் உயிரோடு வந்தது எப்படி... இதுல ஏதோ ஒரு விஷயம் இருக்கு. இதை எப்படியாவது கண்டுபிடிச்சே ஆகணும்...!
காலையில் துõங்கி விழித்ததில் இருந்தே சேகருக்குள் ஆழ்ந்த சிந்தனை. முத்தையா தாத்தா எப்படி உயிரோட மறுபடியும் மலையிலிருந்து கீழே வந்தாரு... இந்த கேள்வி சேகரின் மண்டையைக் குடைந்தது.
சேகர் அமைதியாக இருப்பதைக் கண்ட சபரீஷ், “ஏண்டா... இப்படி சைலண்ட்டா இருக்க... உனக்கு என்னாச்சு?”
“சபரீஷ் எனக்கு ஒரு உதவி செய்யணும். செய்வியா?”
“என்னடா இப்படி கேட்டுட்டே... சொல்லுடா கண்டிப்பா செய்யறேன்.”
“நான் கேட்கறதை எந்தக் காரணத்தைக் கொண்டும் நீ, தாத்தாக்கிட்ட சொல்லிடக்கூடாது சரியா?”
“சரி... கண்டிப்பா சொல்லமாட்டேன். என்னன்னு விஷயத்தை முதல்ல சொல்லு!”
“இல்லடா சபரீஷ்... நாம நேத்து முத்தையா தாத்தா வீட்டுக்கு போயிருந்தோம் இல்லியா.”
“ஆமாம்! அதற்கு இப்போ என்னடா.”
“அப்போ முத்தையா தாத்தா சொன்ன கதையில, காளிங்கன் போட்ட மந்திரக் கோட்டை தாண்டியவர்கள் யாரும் உயிரோட திரும்பியதில்லைன்னுதானே... தாத்தா நம்மகிட்ட கதை சொன்னார். அப்படியிருக்கையில்... முத்தையா தாத்தா மட்டும் எப்படி உயிரோட திரும்பி வந்தார்...? எனக்கு இது மட்டும் புரியல சபரீஷ். இதுல ஏதோ ஒரு மர்மம் இருக்கு. அது என்னன்னு கண்டிப்பா நாம தெரிஞ்சுக்கணும்.”
சேகர் சொல்வதை அப்படியே கேட்டுக்கொண்டிருந்த சபரீஷ், “ஆமாண்டா சேகர்; நீ சொல்றதெல்லாம் கரெக்ட்டு தாண்டா! நீ சொல்றதை கொஞ்சம்கூட நான் யோசிக்கவே இல்லையே!”
“பார்த்தியா... இந்தக் கதையில ஒரு மர்மம் மட்டும் மறைஞ்சி கிடக்கு. அதமட்டும் நாம எப்படியாவது கண்டுபிடிச்சிடனும்.”
“சரிடா சேகர், அதுக்கு நாம இப்போ என்ன செய்ய முடியும்.”
“அதுக்கும் நான் யோசிச்சி வச்சிட்டேன்டா. நம்ம ஸ்கூல் ஹிஸ்டரி சாருக்கு, முன்காலத்து கல்வெட்டு எல்லாம் படிக்கத் தெரியும். ஏற்கெனவே இன்னிக்கு சாயங்காலம் முத்தையா தாத்தா, அந்த தகட்டை கொண்டு வர்றேன்னு சொல்லியிருக்கார். அந்தத் தகட்டை எடுத்துட்டுப் போய், சார்ட்ட கொடுத்தோம்னா, அவரு கரெக்ட்டா சொல்லிடுவாரு” என்ற சேகர் சொன்ன ஐடியாவை அப்படியே ஆமோதித்தான் சபரீஷ்.
“சரிடா சேகர்... முதல்ல சார் ஊர்லதான் இருக்காறா? இல்லாட்டி அவரு சம்மர் லீவுக்கு எங்கேயாவது ஊருக்கு போயிட்டாரான்னு கேட்கணும். அவரு போன் நம்பர் உன்ட்ட இருக்கா” என்று கேட்டான் சபரீஷ்.
“ஆமாண்டா நான் வச்சிருக்கேன். அவருக்கு இப்பவே போன் பண்ணிடுவோம்”, என்று தன் பேக்கில் வைத்திருந்த போன் டைரியை எடுத்துக்கொண்டு போன் இருக்கும் அலமாரி இருந்த திசையைப் பார்த்து ஓடினான் சேகர்.
நம்பரை பார்த்து போனில் டயல் செய்தான்.
“ஹலோ நான் பிரிட்டோ பேசறேன் நீங்க யார் பேசறது?” என்றது எதிர்முனையில்.
“சார்... நான் உங்க ஸ்டூடன்ட் சேகர் பேசறேன்.”
“என்னப்பா சம்மர் லீவுக்கு ஊருக்கு போவேன்னு சொன்னியே. போயிட்டு வந்துட்டாயா?”
“இல்ல சார்... சம்மர் லீவுக்கு திருநெல்வேலி பக்கத்துள்ள வள்ளியூருக்கு வந்திருக்கேன் சார்” என்றான் சேகர்.
“வாட் அ சர்ப்ரைஸ்... நானும் நாளைக்கு வள்ளியூருக்கு பக்கத்துல உள்ள பணகுடிக்குத்தான் வர்றேன்.”
“அப்படியா சார்; உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேட்கணும்னுதான் போன் பண்ணினேன்.”
“என்னடா சந்தேகம்... கேளு.”
“இல்ல சார்... நீங்க நாளைக்கு இங்கே தானே வர்றீங்க... உங்ககிட்ட ஒரு ராஜா காலத்து தகடை காட்டறோம். அதுல என்ன எழுதியிருக்குன்னு நீங்கதான் சார் படிச்சி சொல்லணும்” என்றான் சேகர்.
“சரிடா... நாளைக்கு நான் ஊருக்கு வர்ற சமயத்துல, உங்கள நான் சந்திக்கிறேன்” என்ற சாரிடம், “ரொம்ப தாங்ஸ் சார்.” என்று போனை கட் செய்தான் சேகர்.
வாசலில் “சுப்பையா...” என்ற குரல் கேட்டதும் வாலைப் பார்த்தான் சேகர்.
அங்கே முத்தையா தாத்தா ஒரு பையுடன் நின்று கொண்டிருந்தார்.
முத்தையா தாத்தாவைப் பார்த்ததும் சேகருக்கு பயங்கர சந்தோஷம். வாங்க தாத்தா... என்று வாசல் வரை சென்று வரவேற்றான் சேகர்.
“என்னடா சேகர், நான் எப்போ வருவேன்னு ரொம்ப நேரம் பார்த்துக்கிட்டே இருந்தியா?” என்றார் முத்தையா.
“ஆமாம் தாத்தா... நீங்க அந்த தகடை கொண்டு வந்துட்டீங்களா?”
“இதோ எடுத்துட்டு வந்துட்டேன். இதை இனிமே நீயே வச்சுக்கோ...” என்று அந்த ரகசிய தகடை சேகரில் கையில் கொடுத்தார் முத்தையா தாத்தா.
“சரி... வீட்ல சுப்பையா இல்லியா?”
“தாத்தா கடைக்கு போயிருக்காங்க. நீங்க உள்ள வந்து உட்காருங்க. தாத்தா இப்போ வந்துருவாங்க” என்று சொன்னான் சேகர்.
“இல்லடா செல்லம்... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. தாத்தா வந்தார்ன்னா, நான் வந்துட்டு போனதா சொல்” என்று நடையைக் கட்டினார் முத்தையா தாத்தா.
தகடை கையில் வைத்து, அதை ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்த சபரீஷ், ஓடோடி வந்து, “டேய் சேகர் உனக்கு பொதிகை மலை தகடு கிடைச்சிடுச்சா?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டான்.
“ஆமாண்டா... முத்தையா தாத்தா, இப்போதான் கொடுத்துட்டு போனார்.”
“டேய் சபரீஷ்... இங்கே பாரேன் இந்த தகட்டுல ஏதோ படம் எல்லாம் வரைஞ்சிருக்காங்கடா.”
தகட்டை உற்றுப் பார்த்த சபரீஷûம், “ஆமாண்டா நீ சொல்றது ரொம்பச் சரி; இந்தத் தகட்டுல பாம்பு, மலை, அருவியோட படம் எல்லாம் இருக்குடா.”
“ஆமா சேகர்... இந்த தகட்டை வச்சி நாம இப்போ என்ன பண்ணப் போறோம்.”
“பொறுடா சேகர்; நாளைக்கு நம்ம சார் வந்துடுவாரு. அவரு வந்தவுடன் இந்தத் தகட்டை காட்டுவோம். அவரு என்ன சொல்றாருன்னு கேட்போம்” என்றான் சேகர்.
அந்த நாள் கடக்கும் ஒவ்வொரு நிமிஷமும், சேகருக்கு ஒவ்வொரு யுகமாய் இருந்தது. மறுநாள் பொழுது விடிந்தது. காலையிலேயே சேகர் எழுந்து குளித்துவிட்டு சார் போனிற்காக காத்திருந்தான். அப்போது, மணி 9 இருக்கும். டெலிபோன் மணி அடித்தது. ஓடிச்சென்று போனை எடுத்தான் சேகர்.
“ஹலோ நான் சேகர் பேசறேன்...” என்று சொல்லி முடிக்கும்முன்பே, “சேகர் நான் பணகுடிக்கு வந்துட்டேன். சாயங்காலம் வள்ளியூருக்கு கண்டிப்பா வருவேன். அப்போ, நீ ஏதோ தகடுன்னு சொல்லிட்டு இருந்தியே அதை எடுத்து வை. நான் வந்து பாத்துக்கறேன்” என்றார் பிரிட்டோ.
“சரி சார்; தகடை நான் தயாராத்தான் வச்சிருக்கேன்” என்றான் சேகர். “சரிடா சேகர் சாயங்காலம் நாம சந்திப்போம்” என்று சொல்லி போனை வைத்தார் பிரிட்டோ.
மணி நான்கை கடந்தது. வாசலிலே தவமாய் கிடந்தான் சேகர். “டேய் சேகர், சார் சொன்ன நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடுவாரா? அது சரி... சாருக்குத்தான் நம்ம வீடு தெரியாதே எப்படி வருவார்.?” என்று சந்தேகத்தை கிளப்பினான் சபரீஷ்.
“ஏற்கனவே நம்ம வீட்டு அட்ரஸை, சார்ட்ட நான் கொடுத்துட்டேன். சார் கண்டிப்பா இப்போ வந்துடுவார்.”
அப்போது லுத்தர் நகர் தெருவினுள் ஒரு ஆட்டோ நுழைந்தது.
ஆட்டோ சத்தம் கேட்டதும், ஆட்டோ அருகிலேயே ஓடிச்சென்றார்கள் சேகரும், சபரீஷûம்.
ஆட்டோவில் பிரிட்டோ சாரைப் பார்த்ததும் சேகருக்கு ஒரே சந்தோஷம். “வாங்க சார்...” என்று சாரின் கையைப் பிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தான் சேகர்.
“என்னடா சேகர்... வீட்டில் யாரும் இல்லையா” என்று கேட்டார் பிரிட்டோ.
“தாத்தா... களக்காடு வரைக்கும் போயிருக்கார். பாட்டி பக்கத்துல உள்ள கோயிலுக்கு போயிருக்காங்க சார். இப்போ வந்துடுவாங்க” என்றான் சேகர்.
“சரிடா சேகர்... நீ ஏதோ புதையல் தகடுன்னு ஒண்ணு சொன்னியே எடுத்துட்டு வா பார்ப்போம்” என்று கேட்டதும், சேகர் ஓடோடிச்சென்று அந்த தகட்டை எடுத்து வந்தான்.
தகட்டை வாங்கிக்கொண்ட பிரிட்டோ, அதை அப்படியே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
சார் பார்த்துக்கொண்டிருப்பதை சேகரும், சபரீஷûம் வச்சக்கண் வாங்காமல் பார்த்தனர்.
“சேகர்... இந்த தகடு 18ம் நுõற்றாண்டைச் சேர்ந்தது. இது எப்படி உங்க கைக்கு கிடைச்சது?”ன்னு பிரிட்டோ கேட்டதும், சேகர் நடந்த கதையெல்லாம் மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்.
சேகர் சொன்ன கதையல்லாம் கேட்டு, “நீ சொன்ன கதைப்படி பார்த்தா... நீ சொல்ற புதையல் இருக்கற இடத்தை காட்டுற தகடு இதுதான்” என்றார் பிரிட்டோ.
“அப்படியா சார்?” என்று ஆச்சர்யமாய் கேட்டான் சேகர்.
“இந்தப் புதையல் இருக்கற இடம் பொதிகை மலை உச்சியில இருக்கு. இதை எடுக்க யாரும் முயற்சி பண்ணலையா?” என்று கேட்டார் பிரிட்டோ.
“முயற்சி பண்ணிருக்காங்க சார். ஆனா, யாரும் உயிரோட திரும்பி வரலைன்னு, புதையல் எடுக்கப் போன முத்தையா தாத்தா சொன்னாரு” என்றான் சேகர்.
“அப்படீன்னா அவர் மட்டும் எப்படி உயிரோட திரும்பி வந்தார்?” என்று கேட்டார் பிரிட்டோ.
“அவர் மட்டும் எப்படி உயிரோடு திரும்பி வந்தாங்கன்னே தெரியல சார்... அதுதான் மர்மமா இருக்கு.” என்றான் சேகர்.
“இந்தத் தகட்டுல ராமர் பாதம்னு ஒரு மலையைப் பற்றி சொல்லியிருக்காங்க. அந்த மலையிலதான் புதையலப் பற்றின இன்னொரு பாதி ரகசியம் இருக்கு. அங்கேப் போனாதான், அங்க என்ன எழுதியிருக்குன்னு நமக்குத் தெரியும்” என்றார் பிரிட்டோ.
“சார்... அந்த மலையில என்ன எழுதியிருக்கும்னு, இந்த தகட்டுல எழுதியிருக்கு” என்றான் சேகர்.
“புதையலைப் பற்றின பாதி ரகசியம், அதாவது பொதிகை மலைக்கு எப்படி போகணும்? அது எவ்வளவு உயரத்துல இருக்கு? எவ்வளது துõரம் போனா புதையலை நம்ம நெருங்க முடியும்னு போட்டிருக்கு. ஆனா, அந்தப் புதையலை எடுக்கணும்னா, ராமர் பாதம் மலையில சில ரகசியம் இருக்கு, அந்த ரகசியத்தைப் படிச்சோம்னாதான் இன்னும் என்னென்ன மர்மம் அந்த புதையல் விஷயத்துல புதைஞ்சு இருக்குன்னு தெரிய வரும்.” என்றார் பிரிட்டோ.
“சார்... ராமர் பாதம் மலைக்கு, நாங்க ஏற்கனவே போயிருக்கோம். எங்கள சுப்பையா தாத்தா கூப்பிட்டு போயிருக்கார்.”
“அப்படியா!” என்று ஆச்சர்யப்பட்ட பிரிட்டோ, “அந்த குகையில என்னென்ன பார்த்தீங்க?”
“அந்த குகை ரொம்ப பெருசா இருந்துச்சு சார். பெரிய அருவி எல்லாம் இருந்துச்சு, ஒரு பெரிய மலைப்பாம்பு வந்துச்சு” என்று அடுக்கிக்கொண்டிருந்தான் சபரீஷ்.
“அதை கேட்கல சபரீஷ், அந்தக் குகையில எதாவது எழுதி வச்சிருந்தாங்களா?”
“ஆமா சார்... என்னன்மோ எழுதி வச்சிருந்தாங்க... ஆனா, அதையெல்லாம் தாத்தாதான் படிச்சிட்டு இருந்தார்” என்று அப்பாவியாய் சொன்னான் சபரீஷ்.
“சார்... அந்த குகையில எழுதின எழுத்துக்கள் எல்லாம் விசித்திரமா இருந்துச்சு, சாதாரண தமிழ் எழுத்து மாதிரி இல்லாம, சதுரம், செவ்வகம், கட்டம்னு படம் எல்லாம் வரைஞ்சி வச்சிருந்தாங்க.” என்றான் சேகர்.
“கரெக்ட்... அப்படீன்னா நீ பார்த்ததுதான், புதையல் ரகசியம் அடங்கிய எழுத்து. அந்த மலைக்கு மீண்டும் நாம போனோம்னா அது என்னன்னு நாம கண்டுபிடிச்சடலாம்” என்றார் பிரிட்டோ.
“சார், அதுக்கு அவசியமே இருக்காதுன்னு நினைக்கிறேன். எங்களை தாத்தா கூப்பிட்டுட்டு போன சமயத்துல, அந்த குகையில எழுதின எழுத்தையெல்லாம், அதுல உள்ளது மாதிரியே ஒரு நோட்டுல வரைஞ்சி வச்சிருக்கேன். அதை நீங்க பார்க்கிறீங்களா சார்”, என்றான் சேகர்.
“வெரிகுட், அந்த நோட்டை எடுத்துட்டு வா. அதில் என்ன இருக்குன்னு பார்ப்போம்” என்றார் பிரிட்டோ.
“இதோ வந்துடறேன் சார்,” என்று சொல்லிக்கொண்டு உள் அறைக்குள் ஓடிச் சென்று நோட்டை எடுத்து வந்தான் சேகர்.
“சார்... சேகர் அந்தப் புதையல எடுக்காம விட மாட்டான்னு நினைக்கிறேன். வள்ளியூருக்கு வந்ததில் இருந்தே... எப்போ பார்த்தாலும், பொதிகை மலையையே நினைச்சுக்கிட்டு இருக்கான். இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் எங்க சுப்பையா தாத்தாதான்.
அவருதான் நாங்க ஊருக்கு வந்தவுடனேயே... இந்த பொதிகை மலை புதையல் பற்றி, கதையாய் சொன்னார். அந்தக் கதை கேட்டதில் இருந்தே, இவன் இப்படித்தான் பித்து பிடிச்சது மாதிரி எதையாவது யோசிச்சுக்கிட்டே இருக்கான்”, என்று பிரிட்டோ சாரிடம் ஒப்பித்துக்கொண்டிருந்தான் சபரீஷ்.
சபரீஷ் சொல்வதையெல்லாம் ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டிருந்த பிரிட்டோ சாரிடம், நோட்டைக் கொண்டு நீட்டினான் சேகர்.
நோட்டை பார்த்ததும் பிரிட்டோவின் கண்கள் அகல விரிந்தன.
அவர் ஆச்சர்யத்துடன் நோட்டைப் பார்த்ததைப் பார்த்த சேகருக்கு, கையில் புதையலே கிடைச்சது மாதிரி சந்தோஷப்பட்டான்.
நோட்டில் சேகர் எழுதியிருந்த சித்திர எழுத்துக்கள் எல்லாவற்றையும் படித்து முடித்த பிரிட்டோ, நோட்டை மூடி வைத்தார்.
“சேகர்... நான் இப்போ உன்ட்ட ஒரு கேள்வி கேட்பேன். அதற்கு நீ மறைக்காம உண்மைய சொல்லணும்.”
“கேளுங்க சார்” என்றான் சேகர் பவ்யமாக.
“ஒரு வேளை இந்தப் புதையல் உன்ட்ட கிடைச்சா நீ என்ன பண்ணுவ?”
“சார்... இந்த புதையல் மேல இவ்வளவு ஆசையா இருக்கறதுக்கு காரணம், 200 வருஷத்துக்கு முன்னாடி ராஜாக்கள் ஆண்ட காலத்துல உள்ள புதையல் என்பதால, அதைப் பார்க்கணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு. அந்தப் புதையலை மட்டும் நாம எடுத்துட்டோம்னா, அதை அப்படியே கவர்மென்ட் கையில கொடுக்கணும் சார்” என்றான் சேகர்.
“வெரிகுட். இதைத்தான் எதிர்பார்த்தேன்...” என்றார் பிரிட்டோ பெருமையாக.
“சார்... அந்த நோட்டை முழுசுமா படிச்சுட்டீங்களா... புதையல் எங்க இருக்குன்னு கண்டுபுடிச்சிட்டீங்களா?” என்று ஆர்வமாய் கேட்டான் சேகர்.
“புதையல் எங்க இருக்கு? அதை எப்படி எடுக்கணும் எல்லாமே இதுலதான் இருக்கு. நான் கண்டுபுடிச்சிட்டேன்” என்று பிரிட்டோ சார் சொன்னவுடன் ஆச்சர்யமாய் பார்த்தான் சேகர்.
“புதையல் பொதிகை மலையிலத்தான் இருக்கு. ஆனா, புதையல் எப்படி எடுக்கணும்ங்கற வழிமுறைகள் எல்லாவற்றையும் ஒரு தகட்டுல எழுதி வச்சிருக்காங்க. அந்தத் தகட்டுல, கருநொச்சிங்கிற மூலிகை இலையை பிளிந்து ஊற்றினால், அதில் உள்ள ரசாயணங்கள் எல்லாம் மறைந்து, எழுத்து தெரிய ஆரம்பிக்கும்.
அதற்குப் பிறகுதான் புதையல் எங்கே இருக்குன்னு கரெக்ட்டா தெரியும்” என்றார் பிரிட்டோ.
“சார்... நீங்க சொன்னது ரொம்ப ரொம்ப கரெக்ட். எங்க சுப்பையா தாத்தாக் கூட இந்த கருநொச்சி இலையைப் பற்றி சொல்லியிருக்கார். அந்த இலை இங்கே கிடைக்குமா சார்” என்று ஆர்வமாய் கேட்டான் சபரீஷ்.
“அதுலதான் ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. இந்த கருநொச்சி இலை அவ்வளவு ஈசியா கிடைச்சிறாது. கருநொச்சி இலையை சித்தர்கள் எல்லாம் மார்க்கண்டேய இலை” என்றுதான் சொல்லியிருக்கிறார்கள் என்றார் பிரிட்டோ.
“மார்க்கண்டேய இலைன்னா என்ன சார்” என்று கேட்டான் சேகர்.
“இந்த இலையை சாப்பிட்டவங்க நுõறு வருஷத்துக்கு உயிரோட வாழலாம். உடம்பு நல்ல ஆரோக்கியமா இருக்கிறதுக்கு இந்த இலையைத்தான் அந்த காலத்து ராஜாக்கள் எல்லாம் யூஸ் பண்ணியிருக்காங்க.”
“அந்த கருநொச்சி இலை இப்போ இங்கே கிடைக்குமா சார்.”
“அது ரொம்ப மருத்துவ குணம் நிறைஞ்ச இலை. கருநொச்சி இலை மாதிரியே நம்ம ஊர்ல நிறைய இலைகள் எல்லாம் இருக்கு. ஆனா, அந்த இலையை கண்டுபிடிக்கறதுக்கு தனி டெக்னிக்கே இருக்கு.”
“அது என்ன சார் டெக்னிக்?” என்று ஆர்வமாய் கேட்டான் சேகர்.
“அதாவது அந்த கருநொச்சி இலையைப் பறித்து, அதை பிழிந்து பசும்பாலில் ஒரு சொட்டு அளவு ஊற்றினால் கூட அந்தப் பால் அப்படியே கருப்பு நிறத்தில் மாறிப்போகும். அதற்குத்தான் அதற்கு கருநொச்சின்னு பெயர் வந்துச்சு.” “அதுமட்டுமல்லாம சித்தர்கள் கண்டுபிடிச்ச அரிய மூலிகையா இந்த கருநொச்சி இருக்கறதுனால, இதை அவ்வளவு ஈசியா நாம போய் பறிச்சிட்டு வந்துட முடியாது.
இந்தச் செடியை காவல் காக்க ஐந்து தலை பாம்பு இருக்கும் என்று எங்க பாட்டி கதை சொல்லி நான் கேட்டிருக்கேன். ஆனா, அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது. ஆனா, இந்தப் புதையல் ரகசியத்துல, கருநொச்சியைப் பற்றி ரொம்ப விலாவாரியா சொல்றதப் பார்க்கும்போது, பாட்டி சொன்ன கதை உண்மையாக்கூட இருக்கலாம்னு தோணுது” என்றார் பிரிட்டோ.
“அப்படீன்னா அந்த கருநொச்சி இலையை பறிக்கறது அவ்வளவு கஷ்டமா சார்...” என்று பரிதாபமாய் கேட்டான் சபரீஷ்.
“இல்லடா பசங்களா... நாம நினைச்சா, முடியாதது எதுவும் கிடையாது. இந்தப் புதையல் ரகசியத்துல, கருநொச்சி செடியை எப்படி எடுக்கணும்ங்கற விவரத்தையும் சொல்லியிருக்காங்க” என்று பிரிட்டோ சொல்லி முடிக்கும் முன்பே, “அது என்ன சார் விவரம்?” என்று ஆர்வமாய் கேட்டான் சேகர்.
“அதாவது இந்த இலையைபறிப்பவர்கள், கண்டிப்பாக சிறுவர்களாகத்தான் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அவர்கள் இந்த இலையைப் பறிக்கும், முந்தைய நாள் கண்டிப்பாக மாமிசம் உண்ணக்கூடாது என்ற நிபந்தனையும் இந்தத் தகடுல இருக்கு” என்று விளக்கிச் சொன்னார் பிரிட்டோ.
“அப்படீன்னா கண்டிப்பா அந்த இலையை நாம பறிச்சிடலாம்” என்று ஆர்வமாய் கத்தினான் சபரீஷ்.
“கண்டிப்பா அந்த இலையை உங்களால மட்டும்தான் பறிக்க முடியும்” என்று நம்பிக்கை ஊட்டினார் பிரிட்டோ.
“சார்... எனக்கு ஒரு சந்தேகம்” என்று இடைமறித்தான் சேகர்.
“என்னடா உனக்கு திடீர்னு சந்தேகம்” என்றார் பிரிட்டோ.
“சார்... இந்த புதையலை காளிங்கன் ராஜா கிட்டத்தட்ட நுõற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பொதிகை மலையில மறைச்சி வச்சிருக்கான். அந்த புதையல் ரகசியம் பற்றிய முக்கால்வாசி விவரம், இங்குள்ள மக்களுக்கே தெரிஞ்சிருக்கு. அப்படி இருக்கிற நேரத்துல, அந்தப் புதையலை ஏன் அரசு எடுக்கலை” என்று சந்தேகத்தைக் கிளப்பினான் சேகர்.
“நீ கேட்கறது ரொம்ப ரொம்ப கரெக்ட். இந்தக் கேள்வியைத்தான் உங்கள்ல யாராவது கேட்பீங்கன்னு எதிர்பார்த்தேன்” என்று பரவசமடைந்தார் பிரிட்டோ.
“பூமிக்கடியில் இருக்கிற எல்லா சொத்துக்களுமே அரசாங்கத்துக்கு சொந்தமானதுதான். அதுமட்டுமல்லாம பொதிகை மலையில் காளிங்கன் அரசன் புதையலை மறைச்சு வச்ச கதை மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். ஆனா, கோடிக்கணக்கான வைரங்களும், வைடூரியங்களும் இந்த மலையிலதான் விளைஞ்சிக்கிட்டு இருக்கு. அதையே இன்னும் அரசு எடுக்க முயற்சி பண்ணலை. அரசு எடுக்க முயற்சி செய்யாததால, சமூக விரோதிகள் எல்லாம் அந்த வைரத்தை எடுத்துக்கிட்டு இருக்காங்க. அதனால, காளிங்கன் மறைச்சு வச்ச புதையல் கண்டிப்பா இருக்கும். அதுல இன்னொரு விஷயம் இருக்கு. ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு போனப்பிறகு, மந்திரவாதி போட்டுவச்ச மந்திர வளையத்தை தாண்ட முடியாத பலர், உயிர் பிழைக்க முடியாதுங்கறதுனாலத்தான் அந்தப் புதையலை இன்னிக்கு வரைக்கும் யாரும் எடுக்காம வச்சிருக்காங்க” என்று பிரிட்டோ சொன்னதும், “அப்படீன்னா நாம மட்டும் எப்படி சார் அந்தப் புதையலை எடுக்க முடியும்” என்று கேள்வியைத் தொடுத்தான் சபரீஷ்.
“கண்டிப்பா முடியும். அதற்கு அறிவியல் கைகொடுக்கும்” என்று பீடிகை போட்டார் பிரிட்டோ.
“சார்... நாம என்னைக்கு பொதிகை மலைக்கு போகப்போறோம்” என்று ஆர்வமாய் கேட்டான் சபரீஷ்.
“நாளைக்கே நாம கிளம்பலாம். நான் உங்க தாத்தாவிடம் பேசிக்கொள்கிறேன். நீங்க ரெண்டு பேருமே வர்றீங்கதானே...” என்று கேட்டார் பிரிட்டோ.
“ஆமாம் சார்...” என்று பலமாக தலையை ஆட்டினார்கள் இருவரும்.
“அங்க போகணும்னா நாம பொதிகை மலையில ஒரு நாள் தங்கித்தான் ஆகணும். அதற்குண்டான முன்னேற்பாடுகள் எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். நாளைக்கு தயாரா இருங்க. நான் கூட்டிட்டுப் போறேன்” என்றார் பிரிட்டோ.
அந்த சமயத்தில் சுப்பையா தாத்தா களக்காட்டிற்கு சென்றுவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தார். “சார்... இவர்தான் எங்க தாத்தா” என்று அறிமுகப்படுத்திவைத்தான் சேகர்.
“வணக்கம் ஐயா...” என்று வணங்கினார் பிரிட்டோ.
“வணக்கம் சார்... நீங்கதான் இந்தப் பசங்களோட ஆசிரியரா... நேற்றிலிருந்து உங்க புராணம்தான் பாடிட்டு இருந்தாங்க...” என்று சுப்பையா சொன்னதும் பிரிட்டோ முகம் மலர்ந்தார்.
“சார்... புதையல் கதையை நான் சொன்னாலும் சொன்னேன். இந்தப் பசங்க புதையலை எடுத்தே தீருவேன்னு ஒத்தக்கால்லதான் நின்னுட்டு இருக்காங்க... நீங்களே சொல்லுங்க சார்... அதெல்லாம் முடியாததுதானே...” என்றார் சுப்பையா.
“அப்படியெல்லாம் இல்லை ஐயா, கண்டிப்பா எடுத்துடலாம்” என்று பிரிட்டோ சொன்னதும், சுப்பையா ஆச்சர்யமாய் பார்த்தார். “என்ன சார் சொல்றீங்க...? அது எப்படி எடுக்க முடியும்? இதுக்கு முன்னாடி எத்தனை பேர் இந்தப் புதையலை எடுக்கப்போயி செத்துருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? அப்படியிருக்கையில் எப்படி புதையலை எடுக்க முடியும்னு சொல்றீங்க?”
“இல்லை ஐயா... ஒவ்வொருத்தரும் அந்தப் புதையலை தவறான கண்ணோட்டத்துல எடுக்கறதுக்கு முயற்சி பண்ணியிருக்காங்க. இந்த தகட்டுலேயே... ஒரு விஷயம் குறிப்பிட்டு சொல்லியிருக்காங்க... அதாவது இந்த புதையலை எடுக்கறவங்க யாராவது இதை தவறான உபயோகத்துக்கு பயன்படுத்தினாங்கன்னா... அவங்க தலை வெடிச்சி இறந்து போவாங்கன்னு சொல்லியிருக்காங்க... அதுமட்டுமல்லாம... பொதிகை மலையில் உச்சியிலதான் இந்தப் புதையல் இருக்கு.
அவ்வளவு உயரத்தை அவ்வளவு சுலபமா யாரும் நெருங்கிட முடியாது. அதற்கு நிறைய முன்னேற்பாடுகள் செஞ்சாதான் போகவே முடியும். ஆனா, இதற்கு முன்னாடி போனவங்க அதையல்லாம் செஞ்சாங்களான்னு நமக்குத் தெரியாது.
ஒரு குறிப்பிட்ட உயரத்துக்குப் போனா, காற்றோட அளவு குறைஞ்சு போயிடும். இது அறிவியல். அப்படி இருக்கிற சமயத்துல மலைக்கு உயரே நாம போகக்கூடிய நேரத்துல நமக்கு அளவுக்கு அதிகமா சுவாசத்திற்கு காற்று தேவைப்படுது. நமக்கு செயற்கையா சுவாசிக்க அந்த சமயத்துல இப்போ கிடைக்கிறமாதிரி செயற்கை காத்து கிடைக்கறதில்லை. அந்தப் பிரச்னையிலதான்... அப்போ புதையல் எடுக்கப் போனவங்க சுவாசிக்க முடியாம மயக்கம்போட்டும், சிலர் செத்தும் போயிருக்காங்க.”
“ஆனா, இதைத்தான் அவங்க பேய், பிசாசு, அபூர்வ சக்தின்னு ஏதேதோ புரளிய கிளப்பியிருக்காங்க. இதுல எதுவும் உண்மையில்லை.”
“அதுக்குத்தான் நான் ஒரு திட்டம் போட்டிருக்கேன். இப்போ நாங்க நாளைக்கு புதையல் எடுக்கறதுக்காக பொதிகை மலைக்கு போகப்போகிறோம். அப்போ ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல நாங்களும் சுவாசிக்கறதுக்கு சிரமப்படுவோம். அந்த சமயத்துல சமாளிக்கறதுக்கு... இங்கிருந்தே ஆக்ஸிஜன் சிலிண்டர் கொண்டு போலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்.” என்று பிரிட்டோ சொன்னதும், அதிர்ச்சியும், ஆச்சர்யமும் கலந்த சுப்பையா தாத்தா, “ஏன் சார்... இவ்வளவு கஷ்டப்பட்டு அந்தப் புதையலை நீங்க போயி எடுத்துத்தான் ஆகணுமா?”
“நாம எடுத்தா... அது நல்ல விஷயத்துக்காக அரசாங்கத்துக்கு கையில கொடுக்கலாம். ஆனால், இதுவே சமூக விரோதிகளிடம் கிடைத்துவிட்டால் அவ்வளவுதான். அதுமட்டுமல்லாம... தகட்டுல கொடுத்திருக்கிற புதையல் எடுக்கற வழிமுறைகள் எல்லாம் ரொம்ப ஈஸியாத்தான் இருக்கு. அதனால... இந்தப் புதையலை கண்டிப்பா எடுத்திடலாம்னு நான் நினைக்கிறேன்” என்றார் பிரிட்டோ.
“சரி சார்... அப்படீன்னா போயிட்டு வாங்க... பசங்களும் கூட வர்றாங்களான்னு” கேட்டார் சுப்பையா...!
“ஆமாம் ஐயா... கண்டிப்பா இவங்க வராம அந்தப் புதையலை எடுக்கவே முடியாது. ஏன்னா... புதையல் ரகசியத்துலேயே இந்தப் புதையலை கண்டிப்பா... 15 வயசுக்குள்பட்ட பாலகர்கள்தான் எடுக்க முடியும்னு போட்டிருக்கு...”
“அப்படியா...! இந்த விஷயம் தெரியாமத்தான் பல பேரு புதையல் எடுக்கப்போயி செத்துருக்காங்க போல” என்றார் சுப்பையா.
மறுநாள் காலையிலேயே சேகரும், சபரீஷûம் பொதிகை மலைக்கு புறப்பட தயாரானார்கள். பிரிட்டோ வாத்தியாரும் செயற்கை சுவாசத்திற்கு தேவையான கருவிகளுடன் வந்தார்.
மூவரும் பொதிகை மலை அடிவாரத்தை வந்தடைந்தார்கள். என்னடா பசங்களா... “இதுதான் பொதிகை மலை... எவ்வளவு உயரம் இருக்குப்பார்த்தீங்களா... இந்த மலையில உள்ள ரெண்டாவது அடுக்குலதான்... நாம கண்டெடுக்கப்போற புதையல் இருக்கு.”
“நாம இப்ப நடக்க ஆரம்பிப்போமா...” என்றார் பிரிட்டோ.
“ஓ.கே. சார்...” என்று பலமாக தலையை ஆட்டினார்கள் சேகரும், சபரீஷûம்.
மூவரும் மலையேற ஆரம்பித்தார்கள். ராமர் பாதம் மலையைப்போல் இல்லாமல், பொதிகை மலை பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது சேகருக்கும், சபரீஷûக்கும். காட்டு மரங்கள் அடர்த்தியாய் வளர்ந்து கிடந்தன. காட்டு வண்டுகளும், குயில்களின் சத்தமும் அந்த நிசப்தமான இடத்தை கலவரப்படுத்தியது.
பிரிட்டோ வாத்தியார் கையில் ஒரு தடியை வைத்துக்கொண்டு, முன்னால் புதர்போல் வளர்ந்துகிடந்த காட்டுப் புல்லை விலக்கியவாறே நடந்து சென்றுகொண்டிருந்தார். அவரைத்தொடர்ந்து பின்னாலேயே சேகரும், சபரீஷûம் நடந்து வந்துகொண்டிருந்தார்கள்.
மலையில் மேலே ஏற ஏற சேகருக்கும், சபரீஷûக்கும் மூச்சுவாங்க ஆரம்பித்தது. “என்னடா பசங்களா... ரொம்ப களைப்பா இருக்கா...” என்று பிரிட்டோ கேட்டதும், “ஆமா சார்... ரொம்ப களைப்பா இருக்கு. இவ்வளவு பெரிய காடா இருந்தாலும், ரொம்ப வியர்க்குதே சார்... ஆமா... நாம கொஞ்சம் உயரத்துக்கு வந்ததுனாலதான், உங்களுக்கு இப்படி மூச்சு வாங்குது. வாங்க அந்தப் பாறையில உட்காருவோம்.” என்று பிரிட்டோ கைக்காட்டிய இடத்தில் சேகரும், சபரீஷûம் ஓடிச்சென்று உட்கார்ந்தார்கள். பக்கத்திலே மெல்லிய சத்தத்துடன், காட்டு நீர் ஓடை ஓடிக்கொண்டிருந்தது. அந்தத் தண்ணீரை தொட்டுப்பார்த்த சபரீஷ் ‘படக்’கென்று கையை எடுத்துக்கொண்டான்.
“என்னடா ஆச்சு...” என்று சேகர் கேட்க... “இல்லடா சேகர் தண்ணீர் ரொம்ப குளிருது. அதான்.” என்று பதிலுக்குச் சொன்னான் சபரீஷ்.
“பசங்களா... இந்தாங்க... குளுக்கோஸ். இதை சாப்பிட்டா... உங்களுக்கு தளர்ச்சி போகும்” என்றார் பிரிட்டோ. குளுக்கோஸை வாங்கிக்கொண்ட இருவரும் அதை சாப்பிட ஆரம்பித்தார்கள். பிரிட்டோ அண்ணாந்து மலையை உச்சியைப்பார்த்தார்... அடடா இன்னும் மூன்று மணி நேரம் நடக்க வேண்டியதிருக்கும் போலிருக்கே... என்று நினைத்துக்கொண்ட பிரிட்டோ, “டேய் பசங்களா நடக்க ஆரம்பிக்கலாமா...”
“சரி சார்...” என்று உற்சாகமாக பாறையிலிருந்து இறங்கி, பிரிட்டோவைப் பின்தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக மேலே போகப்போக... மூவருக்குமே மூச்சு இறைக்க ஆரம்பித்தது. “சார்... என்னால முடியலை. எனக்கு மயக்கமா வருது.” என்று படாரென்று தரையில் அமர்ந்தான் சேகர்.
“டேய் சேகர் உனக்கு என்னாச்சு...” என்று பக்கத்தில் போய் பார்த்தான் சபரீஷ். பிரிட்டோ தன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலிலுள்ள தண்ணீரை முகத்தில் தெளித்தார். விழித்துக்கொண்ட, சேகர்... “சார் நாம அப்படியே கீழே இறங்கிடுவோமா... எனக்கு என்னவோ கொஞ்சம் பயமா இருக்கு... புதையலும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம்” என்று பயப்பட ஆரம்பித்தான் சேகர்.
“டேய் சேகர் உனக்கு என்னாச்சு... நீதான் புதையலை எடுக்கணும். அதைப் பார்க்கணும்னு ஆவலா இருந்தே... இப்போ உனக்கு என்னாச்சு.”
“இல்ல சார்... இங்கே என்னமோ இருக்கு... அதான் எனக்கு ஒருமாதிரி வருது” என்றார் சேகர்.
“உனக்கு ஒண்ணும் ஆகலை... நம்ம இப்போதான் சரியான இடத்துக்கு வந்திருக்கோம். முத்தையா தாத்தா... சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கா...? பொதிகை மலையில ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு போனப்பிறகு நாங்க எல்லாரும் மயங்கி விழுந்துட்டோம்னு சொன்னாரே... அந்த இடம்தான் இது.
ஆனா, அவரு ஒரு பெரிய சக்தி வந்துதான் எங்களை மயக்க வச்சுதுன்னு சொன்னாரே ஞாபகம் இருக்கா...” என்று பிரிட்டோ கேட்டதும், ஆவலாய் எழுந்து அமர்ந்தான் சேகர்.
“ஆமா சார்... எனக்கு ஞாபகம் வந்துடுச்சு.”
“இப்போ புரியுதா... இந்த இடத்துல ஆக்ஸிஜன் அளவு ரொம்ப குறைவா இருக்கறதுனால, உனக்கு சுவாசிக்க முடியாம மூச்சுத் திணறல் வந்திருக்கு... அடுத்ததா தலை சுற்றல் வந்திருக்கு.
இப்படியல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான் நான் ஆக்ஸிஜன் சிலிண்டர் எடுத்துட்டு வந்திருக்கேன். இனிமே நாம மேலே ஏறப்போற இடத்துக்கு நாம ஆக்ஸிஜன் இல்லாம போக முடியாது. அதோ பாருங்க... ஒரு பெரிய காளி சிலை ஒண்ணு தெரியுதா... அதுதான் புதையல் இருக்கும் இடம்னு நான் நினைக்கிறேன். அதைத்தான் தகட்டிலும் எழுதியிருக்கு. இன்னும் அரைமணி நேரம் நடந்தோம்னா... நாம கரெக்ட்டா அந்த இடத்துக்கே போயிடலாம்.”
“சரி சார்... நாம இப்பவே அந்த இடத்துக்கு போவோம்...” என்று முந்திக்கொண்டு நின்றான் சபரீஷ்.
“சரி இப்ப நாம ஆக்ஸிஜன் டியூப் உள்ள மாஸ்க்கை எல்லாரும் உங்க முகத்துல கட்டிக்கோங்க...” என்ற பிரிட்டோ... ஆக்ஸிஜன் சிலிண்டரோடு கூடிய முக கவசத்தை இருவருக்கும் கொடுத்தார்.
“சார்... நாம அந்தப் புதையலை கண்டிப்பா எடுத்துடலாம் இல்ல” என்று ஆர்வமாய் கேட்டான் சேகர்.
“கண்டிப்பா எடுத்துடலாம்... நாமதான் இப்போ புதையல் பக்கம் நெருங்கிட்டோமே” என்றார் பிரிட்டோ.
“நாம இங்கிருந்து புறப்படும் நேரத்துல கண்டிப்பா புதையலோடுதான் போவோம். இதுல எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று புத்துணர்ச்சியை ஏற்படுத்தினார் பிரிட்டோ வாத்தியார்.
“சார்... நீங்க சொல்றப்பவே எனக்கு உடனடியா புதையலை பார்க்கணும்போல இருக்கு” என்று ஆசையாய் சொன்னான் சேகர்.
“சரி பசங்களா... இனிமேதான் நாம ஜாக்கரதையா இருக்கணும். இப்போ எல்லாரும் தங்கள் கையில் இருக்கற ஆக்ஸிஜன் கவசத்தை முகத்துல மாட்டீக்கோங்க... அப்போதான்... இனிமே தடையில்லாம நாம மேலே ஏற முடியும். இல்லன்னா அவ்வளவுதான்.” என்று பிரிட்டோ சொன்னதும், சேகரும் சபரிஷûம் தங்கள் கையில் இருந்த ஆக்ஸிஜன் கவசத்தை முகத்தில் மாட்டிக்கொண்டனர்.
மூவரும் மலையில் நடக்க ஆரம்பித்தார்கள்... பக்கத்தில் ஒரு மலைப்பாம்பு சரசரவென்று ஓடிச்சென்றதை கலவரத்துடன் பார்த்தார்கள் சேகரும், சபரீஷûம்.
அதைப் பார்த்த பிரிட்டோ “இதற்கெல்லாம் பயப்படக்கூடாது. இதைவிட கொடிய விஷம் உள்ள பாம்பெல்லாம் இன்னும் உயரத்தில் இருக்கும். நாம் பாம்பை சீண்டிப்பார்க்காத வரை அதை நம்மிடம் எந்த தொந்தரவும் செய்யாது. தைரியமாக மலையேருங்கள்” என்று இருவருக்கும் தைரியமூட்டினார் பிரிட்டோ.
“சரி சார்...” என்று இருவரும் பிரிட்டோவை பின் தொடர்ந்தார்கள்.
கொஞ்ச துõரம்தான் கடந்திருப்பார்கள். ஒரு பெரிய காளி சிலை இருந்தது. அந்தச் சிலையை காட்டு மரத்தின் வேர்கள் பின்னிப்பிணைந்து சுற்றி இருந்தது. சிலையின் ஒரு சில இடத்தில் காட்டுச் செடிகள் முளைத்திருந்தது.
“டேய் பசங்களா... தகட்டுல உள்ள காளிச்சிலை, இதுதான். இதுக்குப் பக்கத்துல ஒரு குகை இருக்கும்னு போட்டிருக்கு...”
“அந்த குகை கண்டிப்பா இங்கேதான் இருக்கணும்” என்று சுற்றும் முற்றும் தேடினார் பிரிட்டோ...
அங்கே கொஞ்ச துõரத்தில் ஒரு பெரிய புதர் மண்டிக்கிடந்தது. அதைப்பார்த்ததும் பிரிட்டோ, “அந்தப் புதருக்கு பின்னால்தான் கண்டிப்பாக குகை இருந்தாக வேண்டும்” என்று கையில் இருந்த பெரிய தடியை எடுத்து அதை விலக்கிப் பார்த்தார். என்ன ஆச்சர்யம், அவர் நினைத்தது போலவே அந்தப் புதருக்கப் பின்னால் ஒரு குகை ஒன்று இருந்தது.
அந்த குகையில்தான் ஐந்து தலை நாகம் இருக்கும் என்றும், அந்த நாகத்தின் கீழ்தான் அந்த புதையல் தகடு இருக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது. அப்படியானால், இந்த குகையில்தான் ஐந்துதலை நாகம்இருந்தாக வேண்டும் என்று அச்சத்தோடே அந்தக் குகையில் உள்ளே நுழைந்தார்கள் மூவரும்.
ஆனால், அங்கே அஞ்சு தலை நாகம் இல்லை. அந்த குகை முழுவதும் மிகவும் இருட்டாக இருந்ததால், கையில் இருந்த விளக்கை ஏற்றினார்... பிரிட்டோ. அந்த மங்கிய விளக்கொளியில்... அந்த குகையை பார்த்தபோது மிக பிரமாண்டமாக இருந்தது. அந்தக் குகையில் காளிங்கன் மன்னனின் உருவம். அவர் போர் முறைகள் போன்றவை எல்லாம் சிற்பமாக செதுக்கப்பட்டிருந்தது.
அதற்குப் பக்கத்தில் ஒரு பிரமாண்டமான ஐந்து தலை நாகத்தின் சிலை ஒன்று செதுக்கப்பட்டிருந்தது. “சார்... அங்கே பாருங்க சார்... ஐந்து தலை நாகத்தின் சிலை இருக்கு...” என்று ஆச்சர்யத்துடன் சொன்னான் சேகர்.
“சார்... ஐந்து தலை நாகம் இருக்கும்னு சொன்னீங்க. இங்கே சிலை மட்டும்தான் இருக்கு” என்று கேட்டான் சபரீஷ்.
“நீ கேட்டது ரொம்ப சரி... தகட்டில் ஐந்து தலை நாகம் இருக்கும் என்றுமட்டும்தான் போட்டிருக்கிறார்கள். அது சிலையா? இல்லை உண்மையான பாம்புதானா என்று சரியாக குறிப்பிடவில்லை. இதை வைத்து குழப்புவதற்குத்தான் இம்மாதிரி தகட்டில் குறித்து வைத்திருக்கிறார்கள். எப்படிப்பார்த்தாலும், அந்த புதையல் தகடு இந்த ஐந்து தலை நாகத்தின் சிலை அருகில்தான் இருந்தாக வேண்டும்...” என்று அந்த இடத்தை கூர்மையாக பார்த்தார்.
அந்த சிலையின் கீழ் பகுதியில் ஒரு சின்ன பாறை ஒன்று இருந்தது. அந்தப் பாறையை பிரிட்டோ அசைத்துப் பார்த்தார். அந்தப் பாறை அப்படியே அவரது கையில் வந்துவிட்டது. பாறை இருந்த இடத்தில் தங்கத்தினால் ஆன சின்ன பெட்டி ஒன்று கிடைத்தது.
அந்தப் பெட்டியில்... ஒரு தகடு ஒன்று பளபளப்பாக மிணுங்கியது.
அந்தத் தகட்டைப் பார்த்ததும் மூவரும் பரவசமானார்கள்.
“சார்... என்ன தகடு இது?” என்று ஆச்சர்யமாய் கேட்டான் சேகர்.
“இதுதாண்டா... புதையல் ரகசியத் தகடு. இப்போ கருநொச்சி இலையைத் தேடணுமே... எப்படித் தேடலாம்” என்று யோசித்துக்கொண்டிருக்கவே... குகையின் அருகில் புதர் போன்று ஒரு செடி வளர்ந்து கிடந்தது. அந்த இலையின் பின்புறத்தில் கறுப்பாக இருந்தது.
“இதுதான் கறுநொச்சி இலையாக இருக்கும்” என்று ஒரு கை அளவிற்கு இலையைப் பறித்த பிரிட்டோ, அதை பலம் கொண்ட மட்டும் கையில் வைத்து பிழிந்தார். அதில் வழிந்த சாற்றை அந்த தகட்டில் ஊற்றினார். என்ன ஆச்சர்யம்... அந்த தகட்டில் மேலிருந்த படிமங்கள் எல்லாம் ஆவியாக ஆரம்பித்தது.
படிமம் ஆவியாகி முடித்ததும்... அந்த தகட்டில் ஒரு குன்று ஒன்று வரையப்பட்டிருந்தது. அந்தக் குன்றின் உள் புதையல் இருப்பது போன்ற அடையாளங்கள் பொறிக்கப்பட்டிருந்தது. அதற்குக் கீழே காலிங்கன் மன்னனுடைய ராஜ முத்திரை பதிக்கப்பட்டிருந்தது.
அதை முழுவதுமாக பார்த்த பிரிட்டோ... “டேய் சேகர்... பக்கத்தில் ஏதும் சிறிய குன்று தென்படுகிறதா பார்...” என்று கட்டளையிடவும், சுற்றியும் முற்றியும் தேடினான் சேகர்.
“சார்... அங்கே ஒரு பெரிய மரத்திற்கு பின்னால் ஒரு பெரிய பாறை இருக்கிறது. ஆனால், அது குன்றாக இருக்குமா...?” என்று சந்தேகம் எழுப்பினான் சேகர்.
“டேய் அதுவாத்தான் இருக்கும்... வாங்கள் அருகில் சென்று பார்ப்போம்” என்று அருகில் சென்று பார்த்தனர். அவர்கள் சந்தேகப்பட்டது போன்றே அது சிறிய குன்றுதான்.
“சார்... நீங்க சொன்னது மாதிரியே இது குன்றுதான்” என்று ஆனந்தப்பட்டான் சபரீஷ். அந்த குன்றின் முன் இருந்த பாறையை லேசாக நகட்டிப் பார்த்தார் பிரிட்டோ. அது அப்படியே உருண்டு சென்றது. உள்ளே... இருட்டாக குகை போன்று இருந்தது. கையில் இருந்த டார்ச் லைட்டால் அந்த குகையில் அடித்தப் பார்த்தபோது. அதனுள் ஒரு பெட்டி மின்னிக்கொண்டிருந்தது.
“டேய் பசங்களா பார்த்தீங்களா... இதுதான் காலிங்கன் மறைச்சு வச்ச புதையல்.”
“சார்... நாம இப்பவே போய் எடுத்துடலாமா?” என்று அவசரப்பட்டான் சேகர்.
“எடுக்கலாம்... நீங்க ரெண்டு பேரும் பத்திரமா உள்ளே இறங்கி போங்க...” என்று வெளியில் நின்று எட்டிப்பார்த்தார் பிரிட்டோ.
உள்ளே நுழைந்த சேகரும், சபரீஷûம் அந்த ராஜா காலத்து மரப்பெட்டியை வெளியே துõக்கிவந்தனர். அதை பிரிட்டோ திறந்து பார்த்தார். எல்லாம் காலிங்கன் ஆண்டபோது அவன் சேகரித்த தங்கமும், வைரமும், வைடூரியமும் ஜொலித்துக்கொண்டிருந்தது. அந்த வெளிச்சம் மூவரின் கண்களையும் கூசச் செய்தது.
மூவரும் சந்தோஷமாய் அந்த புதையலைப் பார்த்தனர்.
“சார்... இதை நாம எப்படியே எடுத்துக்கிட்டு போய் எங்கே கொடுக்கணும்?” என்று அடுத்தக்கேள்வியைத் தொடுத்தான் சபரீஷ்.
“நம்ம மாவட்ட கலக்டர்கிட்டதான் இதைக் கொடுக்கணும்” என்று மூவரும் சேர்ந்து அந்த புதையல் பெட்டியை துõக்கிக்கொண்டு பொதிகை மலையை விட்டு கீழே இறங்கினர்.
மறுநாள்... கலக்டர் அலுவலகத்தில் அந்த புதையல் பெட்டியை மூவரும் சேர்ந்து ஒப்படைத்தனர். அந்த புதையலை பெற்றுக்கொண்ட கலக்டர்... மாணவர்களின் துணிச்சலையும்... அவர்கள் அதை பத்திரமாக அரசுக்கு ஒப்படைத்தையும் வெகுவாக பாராட்டியதோடு... அவர்களுக்கு நற்சான்று அளித்து... அவர்கள் கல்லுõரி வரை படிக்கும் செலவை அரசே ஏற்பதாக உறுதியளித்தார்.
இதைக்கேட்டதும் சபரீஷûம், சேகரும் சந்தோஷமாய் பிரிட்டோ வாத்தியாரை பார்த்தார்கள்.
ரகசியம் தொடரும்.
No comments:
Post a Comment