Friday, January 29, 2010

அனுபவம்


ஆபீஸ் கலாட்டா!


நான் வேலைக்கு சேர்ந்த முதல் வாரம். நான் வேலைக்கு சேர்ந்த அலுவலகத்தில், அதுவும் என்னோட பிரிவில் ஒருவர். அவர் மற்றவர்களை எப்போதும் மட்டம் தட்டிப்பேசிக்கொண்டே இருப்பார். தன்னை எப்போதும் மேதாவி என்றே நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு மேதாவி. அவரால் மற்ற அனைவருக்கும் எரிச்சல். எனக்கும்தான். ஆனால், இதை இப்படியே வளர விடக்கூடாது என்று நம்ம வடிவேலு மாதிரி யோசிக்க ஆரம்பிச்சேன். இந்த ஐடியாவுல பார்ட்டி சிக்குச்சுன்னா... இன்னிலிருந்து அவரு நமக்கு அடிமை. சிக்கலேன்னா... அவருக்கு நாம அடிமை. இதுதான் ஐடியா. குப்புறப்படுத்து நைட்டு புல்லா யோசிச்சேன்.
மறுநாள் ஆபீசுக்கு போனேன். பார்ட்டியை அவருக்குத் தெரியாமல் மொபைல் போனில் படம் எடுத்தேன். இதில் இன்னொரு கொடுமையான விஷயம், என்னுடைய இருக்கைக்கு அடுத்ததுதான் சம்பந்தப்பட்ட பார்ட்டியோட இருக்கையும். ஏற்கனவே எடுத்த போட்டோவை செல்போன்ல ஸ்கிரீன் சேவரா வச்சுட்டு, போனை என் டேபிளில் வைத்துவிட்டு வெளியே போய்ட்டேன்.
வெளியில் ஒரு ரூபாய் போன்ல இருந்து என்னுடைய செல்லுக்கு மிஸ்டு கால் கொடுத்தேன். ரிங்டோனை பார்த்துட்டு, என்னைத் தேடிய மேதாவி, நான் இல்லை என்று தெரிந்ததும், என் செல்லை எடுத்து யார் அழைப்பது என்று பார்த்ததும் அவர் மிரண்டுட்டார்.
நான் ஐந்து நிமிஷம் கழிச்சு, மெதுவா சீட்ல வந்து உட்கார்ந்தேன். பார்ட்டி மெதுவா என்ட்ட பேச ஆரம்பிச்சார், “தம்பி உங்களோட மொபைல்ல என்னோட போட்டோவ ஏன் வெச்சிருக்கீங்க”ன்னு கேட்டார்.
நான் “சார்... நீங்க என் குரு சார். இந்த மாதிரி வேலையெல்லாம் வேற யாரும் இப்படி கத்துக்கொடுக்க மாட்டாங்க... அதுக்குன்னு தனி எண்ணம் வேணும். சார். அந்த உயர்ந்த எண்ணம் உங்ககிட்ட இருக்கு சார். வீட்டுக்கு போனப் பிறகும் உங்களோட போட்டோவ பார்த்தேன்னா... தனி உற்சாகம் பிறக்கும். அதுக்குத்தான் உங்க அனுமதி இல்லாம உங்க போட்டோவ ஸ்கிரீன் சேவரா வச்சிருக்கேன்”னு சொன்னதுதான் தாமதம், பார்ட்டி அப்படியே உருகிட்டார்.
நம்ப மாட்டீங்க... அன்னையிலேர்ந்து பார்ட்டி எனக்கு அடிமை. என்னோட பாதி வேலைய அவர்தான் பார்த்துட்டு இருக்கார்ன்னா பாத்துக்கோங்களேன். நான் இப்போ ஜாலியா பிளாக் எழுதிட்டு இருக்கேன்.

1 comment:

  1. பாஸ் எனக்கும் உங்களுக்கு பக்கத்துல ஒரு சீட் புடிச்சி வைங்க.நாளை பின்ன use ஆகும்.

    ReplyDelete