Friday, February 26, 2010

சாக்லேட் பரீட்சை!தினமும் சாக்லேட் சாப்பிடுபவர்களா நீங்கள்...? அப்படீன்னா, நீங்கள் இதய நோயைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். சாக்லேட் தினமும் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் வராது என்று எகிப்து விஞ்ஞானிகள், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் (நாம நேருல போய் தேடியா பார்க்கப்போறோம்... அந்த தைரியம்) என்று ஏதாவது ஒரு நாட்டு விஞ்ஞானிகளின் பெயரைப் போட்டு (முக்கியமா, வாயில நுழையாத பெரைச்சொல்லி, இவர்தான் அந்த விஞ்ஞானின்னு சொல்லிடுவாங்க) சொன்னாங்கன்னு... பெருசா விளம்பரம் எல்லாம் செஞ்சு... இதய நோய்க்காரர்களை எல்லாம் விளம்பரம்போட்டே, புத்தகத்தை வாங்க வச்சிடுவாங்க.
இதை உண்மையிலேயே படிச்சுப் பார்த்த கிழக்கு லண்டனில் உள்ள கிழக்கு ஏங்கிலியா பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகளுக்கு ஏகப்பட்ட குழப்பம். என்னப்பா இது... சாக்லேட் சாப்பிட்டா இதய நோய் வராதா...? ஆச்சர்யமாய் இருக்கே... என்று மிரண்டு போன விஞ்ஞானிகள், இந்த அதிசயத்தை நாமும் எப்பாடு பட்டாவது கண்டுபிடிச்சாகனும்னு முடிவு பண்ணியதோடு, நல்ல உடல் நல ஆரோக்கியமான பெண்கள் 40 பேர் தேவை. என்று தங்கள் ஆராய்ச்சிக்குழு சார்பா பத்திரிகையில விளம்பரம் கொடுக்க ஆரம்பிச்சாங்க.
இவங்களோட ஆராய்ச்சி இதுதாங்க... உடல் நல ஆரோக்கியமுள்ள 40 பெண்கள், பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட உயர்தரமுள்ள 2 சாக்லேட்டுகளை தினமும் ஒருஆண்டு முழுவதும் சாப்பிட்டு வரவேண்டும். ஒரு வருடம் கழித்து அவர்கள் சாப்பிட்ட சாக்லேட்டால், உண்மையில் இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏதும் நிகழாமல் இருக்கிறதா... என்பதை ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிடுவார்கள்.
இந்த ஆராய்ச்சிக்குத்தான் 40 பெண்களை தேடும் படலம் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு வருடம் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கப்போகும் இந்தப் பெண்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருவதோடு, செலவுக்கு கைநிறைய பணமும் அள்ளிக்கொடுக்கவும் அந்நாட்டு அரசாங்கம் தயாராக இருக்கிறதாம். பட்... பெண்கள்தான் வரமாட்டேங்கறாங்களாம்... (தெரிஞ்சே யாராவது புதைகுழியில வந்து விழுவாங்களா...?)
இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பீட்டர் கர்டிஸ் கூறும் போது, ”ஆராய்ச்சி வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். இதற்காக செலவு செய்வதில் தயங்க மாட்டோம்‘ என்றார்.
ஓராண்டுக்கு ’இனிப்பான’ வாழ்க்கையை அனுபவிக்கப் போகும் 40 பெண்களை இன்னும் முடிவு செய்யவில்லையாம் விஞ்ஞானிகள்.

உயிரைக் குடிக்கும் உணவுப் பொருட்கள்!!

மாசம் பொறந்துச்சுன்னா... அவசர அவசரமா... மளிகை லிஸ்ட்டை தயார் செய்வோம். அதுலேயும், பட்டியல்ல முதல்ல... மங்களகரகமா 100 கிராம் மஞ்சள் பொடியைத்தான் முதலில் சேர்ப்போம். இப்படி எது மங்களகரமா முதல்ல ஆரம்பிக்கிறமோ, இதுலயும் மங்களகரமா கலப்பிடம் பண்றாங்கங்கறதுதான் அதிர்ச்சிகரமான செய்தி.
இந்த மஞ்சள் பொடியில் லெட் க்ரோமேட் என்ற வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது உடலுக்கு மிக மிக தீங்கு விளைவிக்கக் கூடியது. முன்னெல்லாம், விரலி மஞ்சள் ஒன்றை வாங்கி வந்து அதை அம்மியிலோ அல்லது மிக்சியிலோ பொடி செய்துதான் நாம் சமையல் செய்து வந்தோம். ஆனா, இப்போதான் ரெடிமேடா கிடைக்குதே... என்று நேரத்தை மிச்சம்படிக்கிறோம் என்ற பெயரில் கலப்படத்தை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் வேதனையான விஷயம்.
பெரும்பாலும் நம்மவர்களுக்கு காய்ச்சல், தொடர்ந்து வயிற்றுப்போக்கு மாதிரி ஏதாவது கோளாறுகள் ஏற்பட்டா, உடனே மருத்துவமனைக்கு போவோம்.
டாக்டரும் உங்களை நல்லா செக்கப் பண்ணி பார்த்துக்கிட்டு, நீங்க சாப்பிட்ட சாப்பாட்டுல ஏதோ புட் பாய்சன் இருக்கு. அதான் இந்த ப்ராப்ளம் என்று சொல்வார். நாமளும்... நேற்று சுண்ட வச்ச குழம்பை சாப்பிட்டோம்ல, அதைத்தான் டாக்டர் கரெக்ட்டா சொல்றாருன்னு நாம மனசுல நினைச்சுக்குவோம். ஆனா, பிரச்னை பழைய குழம்புல இல்லீங்க, நீங்க சாப்பிட்ட சாப்பாட்டுல ஏதோ அளவுக்கு அதிகமா கலப்படம் ஆகியிருக்கு. இதுதான் நிஜம்.
புட் பாய்சன் என்பது உடனடி வியாதிகள் மட்டுமின்றி பெரிய வியாதிகள் உருவாவதற்கும் மூலக் காரணமாக இருக்கிறது.
ஆபீஸ் போகிறவர்களுக்கு இந்த நாலு மணி ஆச்சுன்னாலே போதும்; ஒரு பஜ்ஜி, வடை, இப்படி ஏதாவது ஒரு எண்ணெய் அயிட்டத்தோடு டீயையும் உறிஞ்சி விட்டு வருவார்கள்.
பெட்ரோல், டீசல் எல்லாம் தயாரிக்கும்போது கடைசியா எண்ணெய் மாதிரி ஒரு திரவம் மிஞ்சும்ங்க. இதன் பெயர் மினரல் ஆயில் என்று சொல்வார்கள். இந்த எண்ணெய்க்கு மணமோ, நிறமோ இருக்காது. இதை எந்த எண்ணெயிடனும் கலக்க முடியும். ஒரு வித்திசாசத்தையும் கண்டுபிடிக்கமுடியாது. ஆனால், இந்த வித்யாசத்தை எப்போது தெரிந்துகொள்வீர்கள் தெரியுமா...? வீட்டுக்கு போவீங்க... ஆனா, சாப்பிடறதுக்கு மனசே வராது. ஏன்னா... நீங்க சாயங்காலம் சாப்பிட்ட வடை ஜீரணம் ஆகாது. இந்த எண்ணெய் ஜீரணம் ஆகாமல், அப்படியே நம் குடல்களில் தங்கி குறிப்பிட்ட காலத்திற்குப்பின் புற்று நோயை உண்டாக்கும்.
அதேபோல பப்பாளி விதைகளை மிளகுத் தண்ணீரில் ஊறவைத்து, பிறகு காயவைத்து மிளகுடன் கலந்து விடுகிறார்கள். கலப்பிடக்காரர்கள். நீங்கள் டீ பிரியரா... தொடர்ந்து டீ குடிப்பவரா... அப்படீன்னா கண்டிப்பா நீங்க இதை தெரிஞ்சுக்கணும்.
இலவம் பஞ்சு, மஞ்சநத்தி இலைகளை காயவைத்து, வறுத்து, அரைத்து டீத்துõளுடன் கலக்கிறார்கள். இந்த கலப்படம் உங்கள் உடல் நலத்தை உடனடியாக பாதிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், இது உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல.
நல்லவேளை, நாங்கள்... இம்மாதிரியான தரமற்ற உணவுப் பொருட்களை எல்லாம் வாங்குவதில்லை. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஐஎஸ்ஐ முத்திரை குத்தப்பட்ட உணவுப் பொருட்களைத்தான் கடைகளில் வாங்குகிறோம். அதுவும் அந்தப் பொருள் டிவிக்களில் விளம்பரம் செய்து, சுத்தமானது, தரமானது என்று அங்கீகாரம் கொடுத்தால் மட்டுமே நாங்கள் வாங்குகிறோம் என்று மார்த் தட்டிக்கொள்கிறீர்களா...?
அப்படியென்றால்... அந்த வகையிலும் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள். ஆனால், கொஞ்சம் அறிவுப்பூர்வமாக ஏமாற்றப்படுகிறீர்கள்.
அக்மார்க் தர நிர்ணயம் எப்படி வழங்கப்படுகிறது தெரியுமா...? அதாவது ஒரு பெரிய நிறுவனம் மஞ்சள்பொடி தயாரிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த நிறுவனம் தர நிர்ணய நிறுவனத்தை தொடர்புகொண்டு தங்கள் பொருளை ஆய்வுக்கு கொடுப்பர். அவர்கள் அதை தரம் பார்த்து, அக்மார்க் தரம் அளிப்பார்கள். இதில் பல நிபந்தனைகள் உண்டு. அதாவது அக்மார்க் நிறுவனம், மஞ்சள் பொடி நிறுவனத்திடமிருந்து முதலில் 50 கிலோவோ அல்லது 100 கிலோவிலான பொருட்களை பெற்று அந்தப் பொருட்களுக்கு மட்டுமே தரத்தை சோதிப்பார்கள். பின்னர் அவர்கள் தரச் சான்றிதழ் அளிப்பார்கள். ஆனால், அவர்கள் தரம் அளிப்பது அந்த நிறுவனத்திற்கு அல்ல. அவர்கள் தயாரிக்கும் அந்த 50 கிலோ உணவுப் பொருட்களுக்கு மட்டுமே அவர்கள் சான்றளிப்பார்கள். அதுவும் மஞ்சள் துõள் நிறுவனம் முன்கூட்டியே தாங்கள் அளிக்கும் உணவுப்பொருள் எத்தனை கிராம் பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக தர நிர்ணய நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும்.
உதாரணத்திற்கு தரம் சோதிக்கப்பட்ட 50 கிலோ மஞ்சள் பொடியும், 50 கிராம் பாக்கெட்டுக்களில் மட்டும்தான் வரும் என்று எழுதிக்கொடுத்திருந்தால், 50 கிராம் பாக்கெட்டில் மட்டும்தான் தர நிர்ணய சான்று அளிக்கப்படும். மற்ற எடை பாக்கெட்டுக்களின் தரம் சம்பந்தப்பட்ட எந்த குறியீடோ, உறுதிமொழியோ சம்பந்தப்பட்ட நிறுவனம் குறிப்பிடக்கூடாது. இதுதான் கட்டுப்பாடு.
இதில்தான் மசாலா நிறுவனங்கள் விழித்துக் கொள்கிறது. 50 கிராம் பாக்கெட்டிற்கு மட்டும் தரச்சான்றிதழ் வாங்கிவிட்டு, அதை மீடியாக்களில் விளம்பரம் செய்துவிடுகிறார்கள். அதைப் பார்க்கும் நம்மவர்கள், நம் மனதில் டீவியில் காட்சியில் வரும் கம்பெனியின் பெயர் மட்டும்தான் ஞாபகத்திற்கு வருமே தவிர, அது எத்தனை கிராம் பாக்கெட் என்பது நம் கண்ணில் தெரியாது. அதேபோல தர நிர்ணய நிறுவனம் இவர்களுக்கு சோதனை செய்து அளித்தது, 50 கிலோவிற்கு மட்டும்தான். அதற்கு மேல் மஞ்சள் துõள் நிறுவனம் பொருளை உற்பத்தி செய்யும்போது, தயாரிக்கப்படும் ஒவ்வொரு கிலோவிற்கும் தர நிர்ணய சான்று வாங்க வேண்டும். ஆனால், தற்போது அம்மாதிரியான முயற்சிகளில் முன்னணி நிறுவனங்கள் ஈடுபடுவதில்லை. ஏனெனில் மக்கள் மனதில்தான் முன்பே நல்லபெயரை வாங்கியாச்சே... பின் எதற்கு வீண் செலவு என்ற எண்ணத்தில் கலப்பட உணவை, பாக்கெட்டில் அடைத்து சந்தையில் விற்றுவிடுகிறது. நாமும், தரத்தில் சிறந்தது என்று நம்பி சாப்பிட்டு, ஏமாளியாக நிற்பது நுகர்வோர் மட்டும்தான்.கலப்படத்தால் குழந்தைகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் தெரியுமா...?

உயிரைக் குடிக்கும் உணவுப் பொருள்கள்!!பாலில் ஆரம்பித்து தண்ணீர் வரை அனைத்திலும் கலப்படம் இல்லாமல் இல்லை. இந்த கலப்படத்தை நிறுத்த என்ன தான் வழி...?
கலப்படம் செய்பவர்கள் திருந்தினாலே தவிர இந்த கலப்படத்தைக் குறைக்கவோ தடுக்கவோ முடியாது. ஆனால், இதிலிருந்து ஓரளவிற்காவது தப்பித்துக்கொள்ள நாம்தான் கொஞ்சம் விழிப்போடு இருக்க வேண்டியதிருக்கிறது.
முன்பெல்லாம் வாழைப்பழம் வீட்டிற்கு வாங்கி வந்தால், ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம். ஆனால், பெருநகரங்களில் வாழைப்பழத்தை வாங்கி வந்த அன்றே சாப்பிட்டாக வேண்டும். இல்லாவிட்டால், மறுநாள் நீங்கள் அந்தப் பழத்தை சாப்பிடவே முடியாது. அந்தளவிற்கு அந்தப் பழம் சாப்பிடும் பருவத்தை தாண்டி நிற்கும். முன்பெல்லாம் வாழைப்பழத்தை மூட்டம் போட்டு பழுக்க வைக்கிறார்கள். ஆனால், வியாபார ரீதியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் அதற்கும் கல் வைத்து பழுக்க வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். வாழைப்பழம் இப்படி என்றால், பார்ப்பதற்கு பளிச்சென்று இருப்பதற்காக ஆப்பிள் பழத்தில் மெழுகை தடவி விற்பனை செய்கிறார்கள்... இப்படியே சென்றால், பழத்தை யார்தான் வாங்கி சாப்பிடுவார்களோ...
பெரியவர்கள் சாப்பிடும் ஐட்டங்களில் இப்படிப்பட்ட கலப்படங்கள் என்றால், சிறுவர்களையும் கலப்படக்காரர்கள் விட்டுவைப்பதில்லை. நம்ம குட்டீஸ்களுக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச உணவு என்று கேட்டவுடன், எந்தக் குழந்தைகளும் கீரை, பருப்பு, சோறு என்று சொல்வதில்லை... மாறாக, ஐஸ்கிரீம், சாக்லேட்... இம்மாதிரியான வகையறாக்களை பட்டியலிடுகிறது.
தற்போது குழந்தைகள் இரண்டரை வயதில் இருந்தே பள்ளிக்கு செல்ல ஆரம்பித்துவிடுவதால், குழந்தைகளுக்கு விளையாட நேரம் கொடுப்பதில்லை. விடுமுறை நாட்களிலேயும், எக்ஸ்ட்ரா கோச்சிங் கிளாஸ் என்று எதிலேயாவது பிள்ளைகளை சேர்த்து அறிவு ஜீவிகளாக்க முயற்சிக்கிறோம். இதன் விளைவு... மிதமிஞ்சிய எடை உயர்வு, ரத்த அழுத்தம் சர்க்கரை வியாதி இதெல்லாம் ஏற்பட்டுவிடுகிறது.
ஏங்க இதற்கும் உணவு கலப்படத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? மொட்டை தலைக்கும், உள்ளங்காலுக்கும் ஏன் முடிச்சுப் போடுறீங்கன்னுதானே கேட்கறீங்க...
விஷயம் இருக்கு...
குழந்தைகள் பெரியவர்களைப் போல் மிதமிஞ்சிய எடை உயர்வுக்கு என்ன காரணம்...? விளையாட்டு ஒன்றுதான் காரணமா...?
இல்லவே இல்லை. விளையாட்டும் ஒரு காரணம்... மற்றொரு முக்கிய காரணம் என்ன தெரியுமா...? உடம்பில் அபாயகரமான அளவில் கூடும் கொழுப்பு.
ஏங்க... குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிய நாங்கள் மிகவும் பார்த்து பார்த்துதான் சாப்பாடு எல்லாம் கொடுக்கிறோம். பின்னே எங்கேயிருந்து கொழுப்பு சேரும்னு நீங்க கேட்கிற கேள்வி புரியுது.
குழந்தைங்க ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுதுன்னு... பெற்றோர்களாகிய நாம் தேடித் தேடி ஐஸ்கிரீம்களை வாங்கி கொடுக்கிறோமே... இதுதாங்க வினை. அதிலும் ஒரு சில பெற்றோர்கள்... சே... ரோட்டில் விற்பனையாகிற ஐஸ்கிரீம் எல்லாம் அந்த அளவுக்கு சுத்தம் கிடையாது. என் குழந்தைக்கு நல்ல பிராண்டடு ஹை கோலிட்டியான ஐஸ்கிரீம்களைத்தான் வாங்கிக்கொடுக்கிறேன்னு சொல்லக்கூடிய பெற்றோர்களா நீங்கள்...? அப்படீன்னா... குழந்தைகளை அதிக அளவிற்கு ஆபத்தில் தள்ளக்கூடிய பெற்றோர்கள் சாட்சாத் நீங்கள்தான்.
ஏனெனில் பெரு நகரங்களில் விற்பனையாகிற குறைந்த ஐஸ்கிரீம் வகையறாக்களில் இருந்து விலை உயர்வான ஹைகிளாஸ் மக்கள் சாப்பிடும் ஐஸ்கிரீம் வரை எதுவுமே... குழந்தைகள் சாப்பிடும் அளவிற்கு தரமானது கிடையாதுன்னு ஒரு ஆய்வு சொல்லியிருக்கு.
அதாவது, இம்மாதிரியான ஐஸ்கிரீம் நீங்கள் நினைத்த மாதிரி ரொம்ப ரொம்ப சுத்தமாகவே தயாரிக்கப்படுகிறது. இருந்தாலும், அதில் சேரும் பால் பொருள்கள், செயற்கை நிறமூட்டிகள், வாசனைப் பொருட்கள் இவை யாவும், குழந்தைகள் உடல் ஜீரணிக்கும் அளவிற்கு சக்தி கொண்ட உணவுப் பொருட்கள் இல்லை. அதுமட்டுமல்லாமல், இம்மாதிரியான ஐஸ்கிரீம்களை சோதனை செய்து பார்த்தபோது இதில் உள்ள கொழுப்பு பெரியவர்களுக்கே ஜீரணமாவது அவ்வளவு சிரமம். அப்படியிருக்கையில் குழந்தைகள் உடல் இந்த ஐஸ்கிரீமை எப்படி ஜீரணிக்கும். இப்படியாக வாங்கி வாங்கி கொடுக்கும் ஐஸ்கிரீமால் மிதமிஞ்சிய கொழுப்பு நம் குழந்தைகளின் உடலில் சேர்கிறது. இதனாலேயே மிதமிஞ்சிய உடல் எடை அதிகரிப்பும் அதனால், விபரீதமான பின் விளைவுகளையும் நாம் சந்திக்கிறோம். ஐஸ்கிரீம் எப்படியோ... அதேபோலத்தான் தற்போது சந்தையில் விற்பனையாகிக்கொண்டிருக்கும் சாக்லேட் வகையறாக்களும்.
லண்டனில் உள்ள நுகர்வோர் அகிலம் என்கிற அமைப்பு உலகெங்கும் மக்கள் சாப்பிடக்கூடிய மோசமான ஐந்து உணவு வகைகளைக் கண்டுபிடித்து மோசமான உணவுக்கான விருது என்ற ஒன்றையே வழங்கி மக்களை எச்சரிக்கிறது... அந்த வகையில் அண்மையில் அப்படி ஒரு விருது பெற்ற உணவு இந்தியாவில் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக பாலில் அப்படியே ஊறவைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் என சிபாரிசு வேறு!
அப்படீன்னா... குழந்தைகளுக்கு என்னதான் சத்தான ஆகாரங்களை கொடுக்கறது... என்று உங்கள் ஆதங்கம் புரிகிறது?
உங்கள் தாத்தா பாட்டி காலத்தில் குழந்தைகளுக்கு சாக்லேட்டும், ஐஸ்கிரீமுமா கொடுத்தார்கள்... இல்லையே... கடலை மிட்டாய், கடலை உருண்டை, சுசியம், பொரி உருண்டை... இதைத்தானே கொடுத்தார்கள். அதையே நீங்களும் உங்கள் குழந்தைக்கு கொடுங்கள். ஏனென்றால், பணை வெல்லத்தில் அந்த அளவிற்கு இரும்பு சத்துக்கள் இருக்கிறது. அது உங்கள் குழந்தையின் உடலை கண்டிப்பாக ஆரோக்கியத்துடன்தான் வைத்திருக்கும். கொஞ்சம் கொடுத்துத்தான் பாருங்களேன்... உங்கள் குழந்தைகள்... முன்பை விட பலசாலியாக மாறுவார்கள்.
சரிங்க... எல்லாம் சொன்னீங்க... கலப்படத்தை தடுக்கறதுக்கு சட்டம் ஏதும் இல்லையா...?
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த சட்டம் ஒன்றை மத்திய அரசு 2006ம் ஆண்டு இயற்றியுள்ளது. இதில் சில முக்கியமான பொருட்களில் செய்யப்படுகின்ற கலப்படத்திற்காக ஆயுள் தண்டனை வரை வழங்க வாய்ப்பு உள்ளது. ஆனால், அந்தச் சட்டமெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாமல் கிடப்பில் கிடக்கிறது.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகள்தான் இந்த கட்டுரைக்கு சரியாகப் பொருந்தும்.
நம் உடல் நிலை, குழந்தையின் உடல் நலத்தை பேணிக்காக்க நம் உணவு முறைகளை கொஞ்சம் மாற்றிக்கொண்டால் மட்டுமே... இந்த கலப்பட சமுதாயத்தில் இருந்து கொஞ்சம் பிழைக்கலாம்.

உயிரைப் பறிக்கும் மருந்துகள்!!நம்ம மக்கள் எப்போதும் கொஞ்சம் உஷார் பேர்வழிதான். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதுவும், இந்த மழை சமயம் வந்தால்போதும். தலைவலி, காய்ச்சல், சளி தொந்தரவுகளும் சேர்ந்தே வந்துடும். இந்த மேற்படி பிரச்னைகளுக்காக நம்ம குடும்பத் தலைவர்... ஏதோ மளிகைக் கடைக்கு செல்வது போல ஒரு பெரிய லிஸ்ட்டை தயார் செய்வார். அதில் காய்ச்சலுக்கு என்று தனி மாத்திரை. சளிக்கென்று தனி மாத்திரை. வீட்டுக்காரிக்கு அடிக்கடி தலைவலி வருமே... என்று திடீர்னு வந்த ஞாபகத்தில் அவளுக்கும் தலைவலி மாத்திரை... இந்தப் பட்டியல் ஒவ்வொருவருக்கும் மாறுமே தவிர, மற்றபடி பெரும்பாலான இந்தியர்களின் வீடுகளில் இதுதான் நிலைமை.
ஏங்க... வாங்கறது எல்லாம் சரிதான். நீங்க இந்த மாத்திரைகளைத்தான் சாப்பிடனும்னு டாக்டர் ஏதும் எழுதிக்கொடுத்தாங்களான்னு கேட்டோம்னு வச்சுக்கோங்க... என்னங்க புரியாதா ஆளா இருக்கீங்க... சும்மா தலைவலின்னு டாக்டர்கிட்ட போனா போதும். அந்த டெஸ்ட் எடு; இந்த டெஸ்ட் எடு...ன்னு அஞ்சு ரூபாய்ல தீர்ந்து போற சமாசாரத்தை ஐநுõறு ரூபா இழுத்து வச்சிடுவாங்க... என்னைப் பொருத்தவரை டாக்டர்கிட்ட போகாம இருக்கற வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த வசனங்கள் எல்லாம் நம்நாட்டின் நடுத்தர வர்க்கத்தின் குரல்தான்.
சரிங்க... நீங்க சாப்பிடுற மாத்திரையினால, இப்போ வர்ற காய்ச்சல், தலைவலி எல்லாம் சரியாப்போகும். ஆனா, இந்த மாத்திரையால ஏதாவது சைடு எபக்ட் வந்துடுச்சுன்னா... அப்ப என்ன பண்ணுவீங்கன்னு ஒரு கேள்வி கேட்டோம்னு வச்சுக்கோங்க... அதுக்கும் பதில் தயாரா இருக்கும்.
ஏங்க... மெடிக்கல்ல வந்து மாத்திரை, மருந்து வாங்கறோம்னு வச்சுக்கோங்க... இதெல்லாம் யோசிக்காமலா வாங்குவோம். எல்லாம் நல்ல மருந்துதான் என்று அடித்துச்சொல்வார்கள் நம்மவர்கள்.
அப்படி என்னதாங்க மாத்திரை சாப்பிடுறீங்கன்னு கேட்டோம்னா... பாராசிட்டமல் மாத்திரை என்பார்கள். இதுல நோ சைடு எபக்ட். பச்சக்குழந்தைங்க கூட சாப்பிடலாம் என்று ஒரு அறிவுப்பூர்வமான பதிலையும் சொல்வார்கள்.
சரி... இந்த பாராசிட்டமல் மாத்திரை எது எதுன்னு உங்களுக்குத் தெரியுமா...? என்று கேள்வி கேட்டால், அதற்கும் பதில் ரெடியாகத்தான் இருக்கும். ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோங்க... பலபேருக்கு பாராசிட்டமல் மாத்திரை எது எதுன்னு உண்மையிலேயே தெரியாது. ஆனால், அவங்க போய் மெடிக்கல் ஷாப்புல... எனக்கு தலைவலி இருக்கு ஒரு பாராசிட்டமல் மாத்திரை கொடுங்கன்னா கரெக்ட்டா கொடுத்துருவாங்க... தெரியுமா...!
இப்படி பாராசிட்டமல் மாத்திரை எது எதுன்னே விஷயம் தெரியாத ஒரு தரப்பினர். பாராசிட்டமல் மாத்திரை இது இதுதான் என்று முழுவதும் தெரிந்து டாக்டர்கள் அளிக்கும் மருத்துவச் சீட்டு இல்லாமலேயே வாங்கும் விஷயம் தெரிந்த தரப்பினர் என்று இரண்டு வகையாக நமது சமுதாயத்தில் இருக்கின்றனர்.
கால்பால், டோலிபிரைன், பெபானில், மெட்டாசின், பைரிஜெஸிக், பி-125, பி-250 இப்படி நுõற்றுக்கணக்கான பெயர்களில் சந்தையில் பாராசிட்டாமல் மாத்திரைகள் விற்பனையாகின்றன என்பதை தெரியாதவர்கள் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
பாராசிட்டாமல் மாத்திரை சாப்பிட்டால், காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்றவை சில மணி நேரங்களில் சரியாகிவிடும் என்ற உங்கள் கணிப்பில் எள்ளளவும் பொய்யில்லை. ஆனால்... தலைவலி மாதிரி போன்ற ஒரு எண்ணம், உடல் லைட்டா சூடா இருக்கு... சாயங்காலம் காய்ச்சல் வர்றதுக்குள்ளே ஒரு பாராசிட்டாமல் மாத்திரை சாப்பிட்டோம்னா... சரியாப்போகும்னு நினைச்சுக்கிட்டு மாத்திரை சாப்பிடுகிற நபர்களா நீங்கள்... அப்படியென்றால்... உங்களின் ஆயுட்காலத்தின் முடிவை எண்ண ஆரம்பித்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா... மக்களை பயமுறுத்தவும், ஒரு சர்ச்சையை கிளப்புவதற்குமான கட்டுரை அல்ல இது. மக்கள் நீண்ட நாள் வாழ வேண்டும். மருந்துகளைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே இந்தக் கட்டுரை.
இந்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை, ஓடிசி வகை மருந்துகள் என்று சில வகை மருந்துகளை பிரித்துள்ளது. ஓடிசி வகை மருந்துகள் என்றால், மருத்துவர் சீடடில்லாமல் நீங்கள் மருந்துக் கடைக்குச் சென்று வாங்கிக் கொள்ளலாம். சாதாரண ஜூரம், தலைவலி, சளி, வலி, செரிமானத்திற்கு மற்றும் பலவகை பிரச்னைகளுக்கு நீங்களாகவே கேட்டோ அல்லது மருந்துக்கடையில் தரும் மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டிருப்பீர்கள். அவ்வகை மருந்துக்கள் அனைத்தும் ஓடிசி வகை மருந்துகளே.
இப்படி... நம் டாக்டர் அறிவுரை இல்லாமல் மெடிக்கல் ஷாப்பில் வாங்கும் இந்த மருந்துகள்தான் இப்போது நமது உயிரைப் பறிக்க தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த பாராசிட்டாமல் மாத்திரையில் என்னதான் பிரச்னை இருக்கிறது என்று பெங்களூரில் மனித வழி ஆராய்ச்சித் துறையில், மனித வழி ஆராய்ச்சி இணைப்பாளராக இருக்கும் இ.க. இளம்பாரதி சொல்லும் அதிர்ச்சியான தகவல்கள்...

திக் திக் மாத்திரைகள்

!

3


தலைவலி, சாதார காய்ச்சலுக்காக வாங்கிச் சாப்பிடும் மாத்திரையே உடம்புக்கு ஆபத்தா...? இப்படியே போச்சுன்னா என்னதாங்க செய்யறது என்ற உங்க கேள்விக்கு, நீங்கள் சாப்பிடும் மாத்திரை சரிதான். ஆனால், அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து சாப்பிட்டால், உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று சொல்கிறார் பெங்களூர் மனித வழி ஆராச்சித் துறையில் இணைப்பாளராக பணியாற்றும் இ.க. இளம்பாரதி.
பாராசிட்டாமல் மாத்திரை தனியாக மட்டுமின்றி சில வகை மருந்துகளுடன் சேர்ந்தும் வருகிறது. அவை கூட்டு வகை மருந்துகள் என்று சந்தையில் சொல்லப்படுகின்றன. உதாரனாமாக நமக்கு கிடைக்கக் கூடிய மருந்துகள் பிராக்ஸிவான், டார்ட், டோலாபர், பெப்ரினில், பாரால்டிம் மற்றும் எனண்ணற்ற பெயர்களில் கூட்டு மருந்தாகவும் பாராசிட்டமல் கிடைக்கிறது.
மருந்தைப் பற்றி மக்கள் இந்தளவுக்கு தெரிஞ்சு வச்சிருக்கிறது மற்றும் அதை எளிதாக அனைவரும் வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு நம்ம நாடு முன்னேறியிருக்கிறது என்றால் மகிழ்ச்சித்தான். ஆனால், அந்த மருந்தைப் பற்றி மக்கள் முழுசா தெரிஞ்சு பயன்படுத்தினால் இன்னும் மகிழ்ச்சிதானே.
ஆனால், மக்கள் அவர்கள் பயன்படுத்தும் மருந்தோட பயன்பாட்டைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்காம, பயன்படுத்த ஆரம்பிக்கும்போதுதான் பிரச்னையும் அங்கே ஆரம்பிக்கிறது. சரி, அப்படி என்னதான் பிரச்னை இந்த பாராசிட்டமலில் என்றுதானே கேட்கிறீர்கள்.
வலி மற்றும் ஜூரத்திற்கு பயன்படும் பல மருந்துகள் சந்தையில் இரந்தாலும், பாராசிட்டாமலை மட்டும் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், மக்கள் மத்தியில் அதிகமான நம்பிக்கைக்கு பாத்திரமானதும், பலதரப்பட்ட மக்களும், ஜூரம், தலைவலி பான்ற அடிக்கடி பலருக்கும் வருகிற பிரச்னைக்காகவும் பாராசிட்டமல் பயன்படுவதால்தான்.
பாராசிட்டமலுக்கு மூன்று வித குணங்கள் உள்ளன. காய்ச்சலை குணப்படுத்துவது, வலி நிவாரணி மற்றும் அழற்சியைக் குணப்படுத்துவது. மூன்று வகை செயல்கள் இருந்தாலும், காய்ச்சலைக் குணப்படுத்துவதில் தான் பாராசிட்டமல் திறம்பட செயல்படுகிறது. வலி நிவாரணியாக சுமாராகவும் மற்றும் அழற்சியைக் குணப்படுத்துவதில் மிகவும் சுமாராகவே பயன்படுகிறது. எனவேதான் காய்ச்சலுக்கும், தலைவலிக்கும் பயன்படும் பாராசிட்டமல் பெரிய வலிகளுக்கும், அழற்சிக்கும் பயன்படுவதில்லை.
ஹைப்போதலாமஸ், இதுதான் உடலின் வெப்ப சமச்சீர் நிலையை பாதுகாத்து வருகிறது. உடலில் வெப்ப உற்பத்திக்கும், வெப்ப இழப்பிற்கும் இடையே உள்ள சமச்சீர் நிலைமை சீர்கெடும்போது, நமக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. உடலில் வெப்ப சமச்சீர் நிலைமையை மீண்டும் ஏற்படுத்தி, அதன்மூலமாக காய்ச்சலை குறைப்பதே பாராசிட்டமலின் வேலை.
காய்ச்சலை நல்லபடியாதே குணப்படுத்துகிறது, அப்புறம் என்ன பாராசிட்டமலில் பிரச்னைங்கிறீங்களா? பாராசிட்டமல் பிரச்னையே இல்லை. அதை முறையா எடுத்துக்கிறோமா இல்லையாங்கிறதில்தான் பிரச்னையே. சரி அப்படி முறையா எடுத்துக்கலைன்னா, என்ன பிரச்னை? நம்ம கல்லீரலை படிப்படியாகச் செயலிழக்கச் செய்யும் மாத்திரை உட்கொண்ட சில நாட்களில் உடலில் எந்த வித்தியாசமும் தெரியாது. ஆண்டுகள் செல்லச் செல்ல கல்லீரலின் செயல்பாடு குறைய ஆரம்பிச்சிருக்கும். தலைவலி, காய்ச்சலுக்காக சாப்பிடும் பாராசிட்டமல் எப்படி கல்லீரலை செயல் இழக்கச் செய்கிறது என்பதை சற்று விரிவாகவே சொல்கிறேன்.
நாம் எடுத்துக்கொள்ளும் பாராசிட்டமல் கல்லீரலில் உள்ள சில வித செரிமப் பொருள்களால், அது என் அசிட்டைல் பி பென்சோ குயனோன் என்ற வேதிப்பொருளாக மாற்றமடைகிறது. இந்த வேதிப்பொருள்தான் பாராசிட்டமலின் எல்லா தீய விளைவுகளுக்கும் காரணம்.
கல்லீரலைச் சுற்றி கொழுப்பு போன்ற ஒரு சவ்வுப் பகுதி இருக்கும். இந்த சவ்வுப்பகுதியை பாராசிட்டமலில் நான் மேலே சொன்ன வேதிப்பொருள் ஆக்ஸிஜேனற்றம் செய்யத் துõண்டுகிறது. இன்னும் தெள்ளத் தெளிவாக சொல்லப்போனால், அந்த கொழுப்புப் பகுதியை முற்றிலுமாக இந்த மூலக்கூறுகள் கரைக்கின்றன. பாராசிட்டமல் அதிகமாக உட்கொண்டால், கல்லீரலைச் சுற்றி பாதுகாப்பு வளையமாக இருக்கும் கொழுப்பையே இது கரைக்கிறது என்றால், அடுத்தக்கட்ட பாதிப்பு கல்லீரலுக்குத்தானே!
கல்லீரலில் இந்த கொழுப்புப் பகுதியை காப்பதற்காக இயற்கையாகவே நமது உடம்பில் குளூட்டோதயோன் என்ற வேதிப்பொருள் சுரக்கிறது. இது, பாராசிட்டமலில் உள்ள வேதிப்பொருள்களை கூடியமட்டும் கொழுப்பை கரைக்காதவாறு பாதுகாத்துக் கொள்கிறது. ஆனால், நாம் எடுத்துக்கொள்ளும் அதிக அளவிலான பாராசிட்டமல் மாத்திரையால், குளூட்டோதயோனின் செயல்பாடு கொஞ்சம் கொஞ்சமாக வலுவிலந்து போகிறது என்பதுதான் உண்மை என்கிறார் இளம்பாரதி.
இன்னும் என்ன என்ன பாதிப்புகள், இந்த மாத்திரையை அபாயகரமானது என்று அறிவித்த நாடு எது போன்ற திக் திக் தகவல்களை அடுத்த வாரமும் இளம்பாரதியே சொல்கிறார்.

Thursday, February 25, 2010

திக்.. திக்.. மாத்திரைகள்!

பாராசிட்டாமலின் நச்சுவிளைவுகளை ஏன் இவ்வளவு விளக்கமாக எடுத்துச் சொல்கிறேன் என்றால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்வதற்காகத் தான். 1989ம் ஆண்டு இங்கிலாந்தில் பாராசிட்டாமல் மருந்தை உட்கொண்டு அதாவது மருந்தினால் ஏற்படும் பாதிப்புகளால் இறப்பவர்களில் அதிகமாகப் பயன்படுத்தும் நாலாவது மருந்தாக இருப்பது பாராசிட்டாமல் என்று ஓர் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
மருந்தினால் ஏற்படும் உயிரிழப்பில் நான்காவது இடத்தில் இருக்கும் பாராசிட்டாமல் இந்தியாவில் யாரும் எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலையில் இருப்பதால், அதனால் ஏற்படும் நச்சு விளைவுகளை எடுத்துச் சொல்வது அவசியமாகிறது.
இங்கே குறிப்பிடப்படவேண்டிய விஷயம், இந்தியாவில் கல்லீரல் பாதிப்புகள் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், பாதிப்பு எதனால் வந்தது என்று ஆராய்வதற்கு மக்களிடத்தில் வசதியும் இருக்காது. குவியும் நோயாளிகளால் மருத்துவர்களுக்கு நேரமும் இருக்காது. உடனடியாக கல்லீரலையோ, சிறுநீரகத்தையோ பாதிப்பிலிருந்து மீட்க முயற்சிக்கவே நமது பணமும், நேரமும் செலவாகியிருக்கும்.
இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணமான பாராசிட்டாமலின் மறுபக்கம்தான் இது. சிறு தலைவலி மற்றும் லேசான காய்ச்சல், அதாவது உடம்பு சூடாவது போன்று இருந்தாலே பாராசிட்டாமலை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் இளம்பாரதி.
இன்றைய அவசர உலகில் பலரும் காய்ச்சல், தலைவலி மற்றும் சின்னச் சின்ன உடல் சிக்கல்களுக்கு உடனடியாக ஒரு மாத்திரையை விழுங்க வேண்டும். உடனே உடல் உபாதை தீரவேண்டும் என்று கருதுகின்றனர்.
ஒருவருக்கு தலை வலிக்கிறது என்றால் அதற்கு எத்தனை எத்தனை காரணங்கள் இருக்கலாம் என்று தெரியுமா? பார்வைக் கோளாறு, சைனஸ் பிரச்னை, தலையில் நீர் அழுத்த நோய் என பல்வேறு விஷயங்களால் தலைவலி ஏற்படலாம். இதையெல்லாம் பார்க்காமல், வெறும் தலைவலியைப் போக்க வலி நிவாரணி சாப்பிடுவதாற் ஒரு வியாதியை நமக்கு உணர்த்துவதற்காக வந்த தலைவலி போய்விடலாம். ஆனால், அந்த நோய்... நம்மை என்ன செய்யும் என்று யாராவது சிந்தித்து பார்த்திருப்போமா?
அதுமட்டுமல்லாமல் எதற்கெடுத்தாலும் மாத்திரை சாப்பிட்டுவந்தால், இயற்கையிலேயே நம் உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பயனற்று போய்விடாதா? அவற்றிற்கு வேலையே கொடுக்காமல் இப்படி மாத்திரையை போட்டு முடக்கிவிட்டால், அவற்றிற்கும் இயங்கும் சக்தி போய்விடுமே... இதை நாம் எப்போதுதான் யோசிக்கப் போகிறோம்?
சில மருத்துவர்கள் எழுதிக்கொடுக்கும் மாத்திரைகளில் அதிகப்படியான செயலாற்றுத் திறன் காரணமாக, நோய் பாதித்தவர், நோயின் தாக்குதலை விட, மருந்தின் தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும். தலை சுற்றல், கை கால் நடுக்கம், நாக்கு, உதடு வறண்டு போவது, உடலில் நீர்த்தன்மை குறைவது, நினைவை இழப்பது வரை ஒரு மாத்திரையின் பக்க விளைவுகள் ஏராளம் ஏராளம்!

திக் திக் மாத்திரைகள்!

என் அம்மா நீண்ட கால சர்க்கரை நோயாளி. சில காரணங்களால் வழக்கமான மருத்துவரைத் தவிர்த்து, வேறு ஒரு மருத்துவரிடம் அவரை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றேன்.
அவர் இன்சுலின் கட்டுப்பாட்டில் இருந்த என் அம்மாவுக்கு, இனி இன்சுலின் தேவையில்லை என்று சொல்லிவிட்டு மாத்திரைகள் மூலமே சர்க்கரையைக் கட்டுப்படுத்த முயன்றார். அம்மாவுக்கு மட்டுமல்ல, யாருக்குமே அவர் இன்சுலின் பரிந்துரைக்கமாட்டார். அவர் எழுதித் தரும் மருந்துகளும் குறிப்பிட்ட கடையில் மட்டுமே கிடைக்கும்.
மாத்திரைகளின் மூலம் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஒரு கட்டத்தில் தொடர்ந்து ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொடுத்தார்.
நான் அதிகமாக ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளக் கூடாது என்கிறார்களே... என்று பணிவான முறையில் சொன்னேன். யார் சொன்னது? 6 மாதம் கூட தொடர்ந்து கொடுக்கலாம்! என்றார்.
இடையில் சின்னச் சின்ன உடல் நலக் கோளாறுகளுக்கும் சளைக்காமல் ஆன்டிபயாடிக்குகள் கொடுத்தார். ஒரு கட்டத்தில் கால் வீக்கம் தொடங்கியது.
கால் வீக்கம் சிறுநீரகப் பாதிப்பின் அறிகுறி என்று எங்கேயோ படித்த ஞாபகம், உடனடியாக ரத்தத்தில் யூரியா அளவு, செரம் கிரிட்டினைன் ஆகியவற்றை பரிசோதித்தில் அம்மாவுக்கு வழக்கமான அளவைத் தாண்டி உச்சத்தில் இருந்தது.
இப்போதும் மனம் தளராத மருத்துவர் ப்ரூஸ்மைட் மருந்தை வேளைக்கு ஒன்று, இரண்டு என்று கூட்டிக்கொண்டே போனார். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு மாத்திரை, அதிக பட்சம் 3 மாத்திரைதான் என்று இதர மருத்துவர்கள் அஞ்சுகிற ஒரு மருந்தை வேளைக்கு 4 வீதம் ஒரு நாளைக்கு 12 வரை கூட சாப்பிடலாம் என்று அவர் சொன்ன போது எனக்குத் தலைசுற்றியது. உடனடியாக வேறு வழியில்லாமல் என் அம்மாவிற்கு வேறு ஒரு மருத்துவரிடம் சிகிச்சை அளிக்க ஆரம்பித்த பிறகு இப்போது உடல் ஆரோக்கியமாக இருக்கிறார்.கட்டுரையில் எந்த இடத்திலும், பாராசிட்டமால் மாத்திரையை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லவேயில்லை. ஆனால், தேவையில்லாமல் அந்த மாத்திரையை பயன்படுத்தாதீர்கள். அது உயிரையே வாங்கும் அளவிற்கு ஆபத்தானது என்று மட்டுமே சொல்லிக்கொண்டு வருகிறோம்.
வெளிநாட்டில் 4ம் கட்ட மாத்திரையாக பயன்படுத்தி வரும் இந்த பாராசிட்டாமல் மாத்திரையை நம் மக்கள் தேவைக்கு தகுந்தாற்போல் பயன்படுத்தி வருவது ஆபத்தான ஒன்றல்லவா?
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு... என்ற பழமொழி எதுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... கண்டிப்பாக பாராசிட்டாமல் மாத்திரைக்கு கண்டிப்பாக பொருந்தும்.
பாரம்பரியமாகவே நம்முடையே சிகிச்சை முறை ஆயிர்வேதத்தைச் சார்ந்ததுதான். ஆனால், தற்போது வளர்ந்து வரும் ஆங்கில மருத்துவத்தால், ஆயிர்வேத சிகிச்சை முறை மகத்துவம் குறைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆயிர்வேத மருத்துவர்கள் ஆங்கில மருத்துவர்களை குறை கூறுவதும், ஆங்கில மருத்துவர்கள் ஆயிர்வேதத்தைக் குறை கூறுவதும் இயல்பாகிவிட்டது.
எல்லா மக்களுமே தங்கள் நோய் தீர தாங்களே மருந்து உட்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருப்பதில்லை. மருத்துவர்கள் வாங்கும் கட்டணம் மற்றும் அவர்கள் பரிந்துறைக்கும் மாத்திரைகளின் விலையைக் கண்டு பயந்தே கடையில் கிடைக்கும் பாராசிட்டாமல் மாத்திரையை அளவு உட்கொண்டுவிடுகின்றனர்.
சில மருத்துவர்கள் வர்த்தக ரீதியாக காசு பார்ப்பதற்காக நோயாளிகளின் உடல்நலத்தைப் பற்றி கொஞ்சமும் அக்கறை கொள்ளாமல் தங்கள் மருத்துவமனையில் தாங்களே நடத்தும் மெடிக்கல் ஷாப்பின் மருந்துகள் விற்பனையானால் போதும் என்று பக்கவிளைவுகளைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் கண்டபடி மாத்திரைகளை எழுதிக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதற்கு ஆரணி வாசகர் எழுதியே கடிதமே சாட்சி!
அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அங்குள்ள மக்கள், தங்கள் உடல்நலனை பேணிக்காக்க ஆங்கில மருத்துவத்தை விட ஆயிர்வேத மருத்துவத்தையே நாடுகிறார்களாம்.
எதற்கெடுத்தாலும், வெளிநாட்டை கைக்காட்டும் நம்மவர்கள், ஆயிர்வேத மருத்துவத்தையும் வெளிநாட்டினரைப் பார்த்து பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம்.
சுக்கு, மிளகு, திப்பிலி இந்த மும்மருந்தும்தானே... நமது பாட்டிக் காலத்து மருந்துகள். அவர்கள் ஆரோக்கியமாத்தானே இருந்தார்கள். அடிக்கடி வரும் தலைவலி, காய்ச்சலுக்கு... நாமளும் அதையே பயன்படுத்தினால், மாத்திரையால் ஏற்படும் பக்க விளைவிலிருந்து தப்பிக்கலாம் அல்லவா?
இவ்வளவு ஏங்க... தினமும் மூன்று லிட்டர் நல்ல தண்ணீர் குடிச்சாலே போதும், இந்த உடம்பு வலி, காய்ச்சல், தலைவலி எதுவுமே வராதுன்னு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க.

விண்ணை முட்டும் விலைவாசி!விலைவாசி உயர்வால் மக்கள் படும் அவஸ்தையைப் போக்க மத்திய அரசும், மாநில அரசும் என்னதான் நடவடிக்கை எடுத்து வருகிறது? என்று உங்களின் பலருக்கு கேள்வி எழலாம்.
இந்த விலைவாசி உயர்வு ஆள்பவர்களுக்கு தெரியாமல் இல்லை. இதுகுறித்து பிரணாப்முகர்ஜி ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது விலைவாசி உயர்வு தன்னை மிகவும் கவலைக்கொள்ள வைத்திருக்கிறது. இது விரைவில் கட்டுக்குள் வரும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்று வழக்கமாக தனது அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் மத்திய அரசு தொகுப்பிலும் மாநில அரசுகளின் தொகுப்புகளிலும் போதிய உணவுத் தானியக் கையிருப்பு இருக்கிறது என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
எதிர்காலத் தேவையை ஒட்டி இரண்டு லட்சம் டன்கள் வரை உணவுத் தானியங்களை, தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்ய இருப்பதாகவும் சில அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது இப்படியிருக்க, விலை உயர்வுக்கும், ஆன்லைன் டிரேடிங் என்று சொல்லும் முன்பேர வர்த்தகத்திற்கும் தொடர்பில்லை என்று என்.சி.டி.இ.எக்ஸ். முன்பேர நிறுவன நிர்வாகத் தலைவர் ஆர்.ராமசேஷன் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உணவுப் பொருட்களான பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுத்த தடை விதித்தது.
ஆனால், தடை விதிக்கப்பட்ட பிறகு இவற்றின் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணமே தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததுதான். அதோடு, முன்பேர வர்த்தகத்தால் மக்களுக்கு நன்மையே தவிர அதனால், எவ்வித பாதிப்பும் கிடையாது என்பது அவருடைய வாதம்.

மத்திய அரசு தொகுப்பிலும், மாநில அரசுகளின் தொகுப்புகளிலும் போதிய அளவு உணவு தானியம் கையிருப்பு இருப்பதாக அரசு சொல்கிறது. அப்படியிருக்கையில், விலைவாசி விஷம் போல ஏறிக்கிடக்கும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அரசு உறுதியுடனும் தொலைநோக்குடனும் நடந்துகொள்ள வேண்டாமா?.
கையிருப்பில் இருக்கும் உணவுப் பொருள்களை சந்தையில் இறக்கினாலே, விலைகள் தானாகவே வீழ்ச்சி அடைந்துவிடாதா?.

இதைவிடக் கொடுமை தேசிய மற்றும் மாநில சேமிப்புக் கிடங்குகளில் இருக்கும் மெத்தனத்தால், பெரும்பாலான பல ஆயிரம் டன் உணவுப் பொருள்கள் உபயோகமற்றுக் கிடக்கின்றன. இது எந்தளவிற்கு உண்மை என்பதை ரேஷனில் மக்கள் வாங்கும் அரிசியே சாட்சி. இதையெல்லாம் முறைப்படுத்தினாலே, சந்தைக்கு இன்னும் கூடுதலான நல்ல தரமான பொருள்கள் வந்து சேரும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.


இப்போது விண்ணை முட்டும் அளவிற்கு ஏற்பட்டிருக்கும் இந்த விலைவாசி உயர்வு இந்தியா மட்டுமல்ல; உலகம் முழுவதிலும் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணங்கள்; விவசாய உற்பத்தி திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது. பயோ டீசலுக்கு என்று உணவு தானியங்கள் திருப்பி விடப்படுகிறது. இருக்கின்ற கொஞ்ச விவசாயப் பொருட்களும் முன்பேர வர்த்தகம் என்ற பெயரில் திறந்துவிடப்பட்டுள்ளதும், சர்வதேச அளவில் உயர்ந்து வரும் எண்ணெய் விலை உள்ளிட்டவையும்தான். இவற்றை ஆளும் அரசுகள் முறைப்படுத்த தொடங்கிவிட்டால், சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தலாம்.

தேவைக்கேற்ப உற்பத்தி இருந்தால், விலைவாசி கட்டுக்குள் இருக்கும் என்பது உண்மையானால், சர்க்கரை, சிமெண்ட், இரும்புக் கம்பிகளின் விலைகள் உயர்ந்திருக்கக் கூடாது. ஆனால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வெளிச்சந்தையில் ரூ.13க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை இன்று ரூ.17 ஆக அதிகரித்துவிட்டது. கடந்த மூன்றே மாதங்களுக்குள் கட்டுமானக் கம்பிகளின் விலை 20 முதல் 24 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது. அதேபோலத்தான் சிமெண்ட்டின் விலையும்.
எனவே, உற்பத்திப் பெருகுவதற்கும் சில்லறை விற்பனை விலைக்கும் நேரடித் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது. மாறாக, உற்பத்தியிலும், விநியோகத்திலும் தனியார் முதலாளிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கையை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் விஷம்போல் ஏறிக்கிடக்கும் இந்த விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பது பட்டவர்த்தனமான உண்மை.

விண்ணை முட்டும் விலைவாசி!

இந்த ஊக பேர வணிகத்திற்கு இன்னும் கொஞ்சம் எளிமையான விளக்கம் தரலாம் என்று நினைக்கிறேன். அதாவது மொத்த பருப்பு வியாபாரி ஒருவர் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவரிடம் ஒருவர் ஒரு கிலோ துவரம் பருப்பை இருபது ரூபாய்க்கு வாங்குவதாக முன்பதிவு செய்திருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு இடைத்தரகர் மொத்த வியாபாரியிடம் தொடர்புகொண்டு, ஒரு கிலோ பருப்பை முப்பது ரூபாய்க்கு தரமுடியுமா என்று கேட்பார். உடனே வியாபாரி ஏற்கனவே முன்பதிவு செய்தவருக்கு 25 ரூபாய் கொடுத்து ஏற்கனவே கொடுத்ததை வாபஸ் வாங்கிக்கொண்டு புதிதாக வந்த நபரிடம் ஐந்து ரூபாய் லாபம் வைத்து முப்பது ரூபாய்க்கு விற்றுவிடுவார்.
இந்த விற்பனையில் மொத்த வியாபாரி, விவசாயிகளிடம் நீங்கள் விளைவிக்கப் போகும் பருப்பை மொத்தமாக நானே கொள்முதல் செய்துகொள்கிறேன். ஒரு கிலோவுக்கு பத்து ரூபாய் தரப்படும் என்று விளையாத பொருளுக்கு முன்பே அச்சாரமாக விவசாயிகளிடம் சொர்பமாக கொஞ்சம் பணத்தை கொடுத்துவிடுவார். நாம் விளைவிக்காத ஒரு பொருள் விளைச்சல் ஆகும் முன்பே பணம் கிடைக்கிறதே என்று ஆர்வத்தில் விவசாயிகளும் இந்த வியாபாரியிடம் பணத்தை வாங்கிக்கொள்கின்றனர்.
ஆனால், மொத்தத்தில் இந்த மொத்த வியாபாரி, அந்த இடைத்தரகர், இன்னொருவர் இந்த மூவரிடமும் பருப்பு என்ற ஒன்றே கையில் இருக்காது. இது அவ்வளவும் இணையதளத்திலேயே செயற்கையாக கைமாறி கைமாறி நுகர்வோரை வந்தடையும்போது, பருப்பின் விலை ஒரு கிலோ நாற்பது ரூபாய்க்கு விற்கும்.
ஆனால், பருப்பின் உண்மையான கொள்முதல் விலை வெறும் பத்து ரூபாய்தான். இதில் வியர்வை சிந்தி உழைத்து சாகுபடி செய்த விவசாயிக்கு கிடைக்கும் பணமோ சொர்பம்தான். ஆனால், இடைத்தரகர்கள் எந்தவித கஷ்டமும் படாமல் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள்.
தான் விளைவித்த விளைபொருட்களுக்கு உழைப்புக்கேற்ற மதிப்பு கிடைக்காததும் விளைபொருள்கள் எதிர்பார்த்தது போல விற்பனையாகாததும், பல்வேறு கடன் பிரச்னையால் சிக்கித் தவித்த விவசாயிகளுக்கு, விதைக்கும்போதே விற்பனைக்கான உத்தரவாதம் கிடைக்கிறது என்ற அடிப்படையில்தான் இந்த ஊக பேர வர்த்தகத்தில் அதாவது பியூச்சர் டிரேடிங்கில் முதலில் ஆர்வம் காட்டத் தொடங்கினர் விவசாயிகள். ஆனால், இடைத்தரகர்களின் ஏகபோக ராஜ்யம்... தாங்கள் விளைபொருட்களை வியாபாரிக்கு விற்ற தொகையும், சந்தையில் தாங்கள் விற்ற விளைபொருட்கள் விஷம் போல் ஏறி நிற்கும் நிலையையும்தான் தற்போது ஊக பேர வணிகத்தைப் பற்றி கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கிறது விவசாயிகளை. நியாயமாக நடக்கவேண்டிய இந்த ஊகபேர வணிகம் இப்போது சூதாட்டமாக மாறிப்போனதால்தான் இந்த விண்ணை முட்டும் விலைவாசி.
விலைவாசியை குறைக்கவும், இந்த முன்பேர வர்த்தகத்தை தடுக்கவும் அவ்வப்போது ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
கடந்த நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள் விலை உயர்ந்து வருவதற்கு பதுக்கல் பேர்வழிகள்தான் காரணம். எனவே அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள், அதிக விலைக்கு விற்போர் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்.
அதுபோல உயர்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த சர்க்கரை, அரிசி போன்ற பொருட்களின் முன்பேர வர்த்தகத்தை கடந்த மே மாதம் முதல் மத்திய அரசு தடை செய்திருக்கிறது. தேவைப்பட்டால், இந்த தடை மேலும் நீடிக்கப்படும் என்று தெரிவித்தார்.
திருட்டு சிடி என்பது அரசால் தடை செய்யப்பட்டதுதான். அதை தயாரிப்பவர்கள் அவ்வவ்போது காவல்துறையால் கைது செய்யப்படுவதும் அடிக்கடி நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்காக திருட்டு சிடி வராமல் போய்விடுகிறதா இல்லை. திருட்டு சிடி தயாரிப்பவர்கள் தங்களது தயாரிப்புகளை நிறுத்தத்தான் செய்கிறார்களா... இல்லையே...! அதிலும் உச்சக்கட்டமாக திரைக்கு வராத திரைப்படத்திற்கே திருட்டு சிடி தயாரிக்கப்பட்டதையும் நாம் நாளேடுகளில் படித்திருப்போம்.
அதேபோலத்தான் இந்த முன்பேர வர்த்தகத் தடையும். அரசு என்னதான் தடை போட்டாலும், முன்பேர வர்த்தகம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. விலைவாசி ஏறிக்கொண்டுதான் இருக்கிறது.
110 கோடி மக்களில் 80 விழுக்காடு மக்களின் தினசரி வருமானம் 20 ரூபாய்க்கும் குறைவென அரசின் குறிப்பு சொல்கிறது. அப்படியானால் இப்போது உயர்ந்திருக்கும் விலைவாசியில் இந்த பெரும்பான்மையான மக்கள் எப்படி உண்டு உயிர்வாழ்வார்கள்? இந்நிலை இப்படியே தொடர்ந்தால் நம்நாடும் பட்டினிச் சாவில் சிக்காமல் எப்படிப்போகும் என்பதை முதலில் ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.
விலைவாசி உயர்வால் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
15 கோடி ஹெக்டேர் நிலம், ஆண்டில் 220 நாள் சூரிய ஒளி, 880 மி.மீ மழை மிகப்பெரிய மனிதவளம். ஆனால், இவ்வளவு இருந்தும் ஒரு வேளை சோற்றுக்காக கையேந்தும் பாமரர்கள்தானே நம் நாட்டின் அடையாளமாக மீதமிருக்கிறார்கள். இவர்களுக்கு உண்மையாகவே ஒருவேளையாவது சோறு கிடைக்க நமது ஆட்சியாளர்கள் முயற்சி செய்கிறார்களா? உயர்ந்து வரும் விலைவாசிக்கு தீர்வே கிடையாதா? என்பதையெல்லாம் அடுத்த வாரம் சொல்கிறேன்.

விண்ணை முட்டும் விலைவாசி!

இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வரும், இவ்வேளையில் சினிமா டிக்கெட் முதல் சகல தேவைகளையும், ’ஆன்-லைன்’ மூலம் பெற்றுக் கொள்வது சுலபமாகி உள்ளது. வீட்டில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தபடி உலகின் எந்த மூலையில் உள்ள பொருளையும், இன்டர்நெட் வழியாகக் கண்டறிந்து வாங்கலாம். வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை; புத்தகங்கள் முதல் விமான டிக்கெட்டுகள் வரை என்று எல்லாமே இப்போது ஆன்லைன் மயம்தான். இந்தியாவில் தற்போது 10 கோடி பேர் இன்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் 16 சதவீதம் பேர் ஆன்-லைன் வர்த்தகத்தை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் ஆன்-லைன் வியாபாரத்தில் மும்பை முதலிடம் வகிக்கிறது. அனைத்து பொருள்களையும் மக்கள் ஆன்-லைனில் போட்டி போட்டு வாங்குகின்றனர். பல சுலபமான வழிமுறைகள் ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்தாலும், சிறிய முதலீட்டாளர்கள் மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு, இந்த ஆன்-லைன் வர்த்தகம் பாதிப்பையே ஏற்படுத்துகிறது. குறிப்பாக, சில்லறை வியாபாரத்தில் ஆன்-லைன் வர்த்தகம், ஊக வணிகம் ஆகியவை முறைகேடுகள் நடக்க பெரும் பங்கு வகிக்கிறது.

கிரிகெட்டில் ஊகத்தின் அடிப்படையில் எந்த அணி வெல்லும் என்று பணம் கட்டுகின்றனர். யார் வேண்டுமானாலும் ஊகத்தின் அடிப்படையில், ஒரு சிறு தொகை பணம் கட்டி எந்த ஒரு பொருளையும் பதுக்கி, நிறுத்தி வைத்து விடலாம். தங்கத்தை போல விலை ஏறியவுடன் மற்றவர்க்கு விற்று விடலாம். இப்படி செய்பவர்க்கு கிடங்கு தேவை இல்லை. பொருளை ஊர்தியில் ஏற்றி, இறக்க தேவையில்லை. பொருள் யாருடையது, எங்குள்ளது என்று இணையதள ஆட்டத்தை நடத்தும் நிறுவனங்களுக்குத் தான் தெரியும். ஒரே பொருளின் மீது பலர் பணம் கட்டுவதாலும், பல பேர் பதிவு செய்வதாலும் வரி, மேலும், மேலும் கூடி விடுகிறது. இருந்தாலும் அரசுக்கு சேவை வரி, வாங்குபவரின் மூலமாக கிடைத்து விடுகிறது. விற்பவரிடம் இருந்தும் அரசுக்கு சேவை வரி கிடைக்கும். 1997ம் ஆண்டு வரை உணவு தானியங்களை பெருமளவில் தனியார் கொள்முதல் செய்ய அரசு அனுமதிக்கவில்லை. அதற்கு பின் வந்த அரசுகள் ‘ஏதோ ஒரு காரணத்திற்காக’ முன்பதிவு வர்த்தகத்தை அமல் படுத்தியது. அப்போதிருந்துதான் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர ஆரம்பித்தது.
இதற்கு முன் நடந்த வர்த்தகத்தாலும், வியாபாரத்தாலும், அந்தந்த மாநில அரசாங்கங்களுக்கு மட்டும்தான் விற்பனை வரி போய் சேரும். மத்திய அரசுக்கு இதன்மூலம் எந்த பயனும் இருக்காது. ஆனால், இந்த முன்பதிவு வர்த்தகத்தால் மத்திய அரசுக்கு கணிசமான அளவு வருமானம் வர ஆரம்பித்தது. ஆனால், மாநில அரசுக்கு இந்த விற்பனை வரியில் எந்த வித பங்கும் கிடையாது.
அதனால்தான் என்னவோ இந்த ‘பதுக்கல்’ விற்பனைக்கு மத்திய அரசு துணைபோகிறது.

இதுவரை ஊக வணிகத்தில், 7,000க்கும் அதிகமான வர்த்தக நிறுவனங்களும், மொத்த கொள்முதல் வியாபாரிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏஜன்ட்கள், விளையும் இடத்திற்கே சென்று விவசாயிகளை சந்திக்கின்றனர். அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். உழுவதற்கும், விதைப்பதற்கும் கூடக் கடன் கொடுக்கின்றனர். இதனால், விளை பொருள்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது. அவர்களே, நல்ல விலை கொடுத்து வாங்கி விடுகின்றனர். விவசாயிகளுக்கும், ஏற்றுமதி, இறக்குமதி செலவு மிச்சம் என்பதாலும், இருக்கும் இடத்திலேயே நல்ல வருமானம் வருவதால், பொருட்களை ஏஜன்ட்களிடமே விற்று விடுகின்றனர்.
இவ்வாறு விவசாயிகளுக்கு, ஏஜன்ட்கள் கடன் கொடுக்கும் போதே, உற்பத்தி பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு விடுகிறது. அதுவும் விவசாயிகள் விலையை நிர்ணயம் செய்துவிடுவதில்லை. விலையையும் அதன் தரத்தையும் முற்றிலுமாக அந்த ஏஜென்டே தீர்மானம் செய்கிறார். இந்த ஏஜன்ட் என்று இங்கு சொல்கிறேனே இவர்கள் யார் என்று தெரியுமா... நமது சமூகத்தில் முன்னணியில் உள்ள பெரும் தனியார் நிறுவனங்கள்தான்.

எடுத்துக்காட்டாக விவசாயிகளுக்கு ஒரு சொர்ப விலையை கொடுத்து விளைபொருட்களை வாங்கிக்கொள்ளும், ஒரு பெருவணிகர் தன்னிடம் 1 இலட்சம் மூட்டை எள் இருப்பதாக அறிவித்து அதற்கு ஒரு குறிப்பிட்ட விலையை இணைய தளத்தில் அறிவிக்கிறார். இதைப் பார்க்கிற இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிற இன்னொரு வணிகர் இதில் 10 ஆயிரம் மூட்டையை “வாங்குவதற்கு” முன்வருவதாக அறிவிக்கிறார். இப்படி “வாங்குகிறவர்” உடனடியாக முழுப்பணத்தையும் செலுத்தி விடுவதில்லை. 10 விழுக்காடு தொகையை பெருவணிகரின் கணக்கில் செலுத்திவிட்டால் போதும். அந்தப் 10ஆயிரம் மூட்டை இவருக்கு உரியதாகக் குறிக்கப்படுகிறது.

மீதமுள்ள தொகையை அவர் எப்போது செலுத்துகிறாரோ அப்போது தனது சரக்கை கிட்டங்கியிலிருந்து எடுத்துச் சென்று விடலாம். ஆனால் இவர் உடனடியாக மீதத் தொகையைச் செலுத்தி சரக்கை எடுக்கமாட்டார். அதற்கு பதிலாக இந்த 10 ஆயிரம் மூட்டையை தனக்குத் தேவையான லாபத்தையும் சேர்த்து கூடுதல் விலைக்கு விற்பதாக தனது இணையதள முகவரியில் அறிவிப்பார். அதைப் பார்க்கிற சிறுவணிகர் அந்தத் தொகையைக் கொடுத்தால் இவரிடமிருந்து சரக்கை எடுத்துச் செல்லலாம். இவ்வாறுதான் ஆன் லைன் வர்த்தகம் நடைபெறுகிறது.

இதில் விவசாயிகள் என்ன மாதிரியான லாபத்தைப் பெருகிறார்கள்? இடையில் இருக்கும் தரகர்கள் எப்படி லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்!
இவர்கள் செய்யும் பேரத்தால் இன்னும் சில ஆண்டுகளில் பட்டினிச் சாவு என்பது நமது இந்தியாவிலும் சர்வ சாதாரணமாகிப் போகும் என்பது மட்டும் என்னவோ உண்மை!
அது எப்படி...?

அபாயத்தைத் தொடும் விலை உயர்வு!ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு கிலோ சாப்பாடு அரிசி பதினைஞ்சு ரூபாய்தான். தோசைக்கு அரிசி வெறும் 7 ரூபாய்தான். சோறு பொங்கினா அப்படியே மல்லிகைப்பூ மாதிரி உதிரி உதிரியா அழகா இருக்கும். ஆனா, இப்போ நல்ல அரிசி வாங்கி சாப்பிடணும்னா ஒரு கிலோ அரிசிக்கு முப்பத்தைந்து ரூபாய் கொடுக்க வேண்டியதிருக்கிறது.
சரி இவ்வளவு விலை கொடுத்து வாங்குறோம். ஆனா, வாங்குற அரிசி நல்லா இருக்குதா... ம்ஹும். சோத்துல தண்ணீர் ஊத்தி வைச்சா... மறுநாள் காலைல அத மாடுகூட சாப்பிடாது. அந்தளவிற்கு சோறு கெட்டுப்போயிடுது. ஆனா, ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஒரு நாள் பொங்கிய சோறை மூணு நாள் வச்சி சாப்பிடலாம்... இந்த ஒவ்வொரு வார்த்தையையும் தமிழ்நாடு இல்லீங்க... இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நடுத்தர மக்களும் புலம்பிக்கிட்டு இருக்காங்க.
அதிகரிச்சுக்கிட்டேதான் இருக்கு.
இப்படியே விலை அதிகரிச்சுக்கிட்டு போச்சுன்னா என்னதான் செய்யறது. இந்த பயம் எல்லாரிடமும் இருக்கத்தான் செய்கிறது.
என்னதான் நடக்கிறது நம் நாட்டில்? இவ்வளவு உயர்வுக்கு என்ன காரணம்? உணவுப் பொருள் உற்பத்தியே இல்லாமல் போய்விட்டதா? அல்லது உணவுப்பொருட்கள் அனைத்தையும் வெளிநாட்டில் இருந்துதான் கொள்முதல் செய்கிறோமா...? ஏன் இந்த விலை உயர்வு என்று ஏகப்பட்ட கேள்விகள் எழத்தான் செய்கிறது.
இப்படி தாறுமாறாக ஒருபுறம் விளைபொருட்கள் விலையேறிக் கொண்டிருக்க... மறுபுறம் விவசாயிகள் போதுமான வருமானம் இன்றி விளைநிலங்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அப்படியானால், இப்படி தாறுமாறாக போகும் பணங்கள் எங்கு, யாரிடம் போய்ச் சேருகிறது என்பதுதான் இப்போது நம் முன்னால் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.

இந்த விலை உயர்வு பிரச்னைக்கு காரணம் தாராளமயமாக்கல், ஊகபேர வணிகம், ஆன்லைன் டிரேடிங் என்று பலபுரியாத பெயர்களை ஆட்சியாளர்களும், எதிர்கட்சியினரும் சொல்லிக்கொண்டிருந்தாலும்... எல்லாருக்கும் புரியும்படியான ஒரே வார்த்தை பதுக்கல் என்பது மட்டும்தான்.

டிசம்பர் 2007 வரை ஆண்டு விலைவாசி உயர்வு 4 விழுக்காடு என்று இருந்தது, 2008 மார்ச் இறுதியில் 7.41 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்திய சேமவங்கி கூறுகிற அபாய அளவான 5 விழுக்காட்டையும் தாண்டி மிக அபாய அளவை நோக்கி விலை உயர்வு விரைந்து செல்கிறது. இந்தக் கணக்குக்கூட மொத்த விலைவாசிக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு கூறப்படுவதாகும். உண்மையில் மக்கள் சந்திக்கிற சில்லரை விலை உயர்வு இதைவிடப் பன்மடங்கு அதிகம்.

எடுத்துக்காட்டாக, 2008 மார்ச்சுடன் முடிந்த கடந்த 12 மாதங்களில் வனஸ்பதியின் (டால்டா) விலை மொத்த வணிகத்தில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. சில்லரை வணிகத்தில் 22 சதவீதம் உயர்ந்துள்ளது. அரிசி விலை மொத்த சந்தையில் 8 சதவீதம் உயர்ந்துள்ளது. சில்லரைச் சந்தையில் 21 சதவீதம் உயர்ந்துள்ளது. கடலை எண்ணெய் மொத்த வணிகத்தில் 9 சதவீதம் உயர்ந்திருக்கிறது. சில்லரைச் சந்தையில் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. கோதுமை மாவு 0.5 சதவீதம் மொத்த வணிகத்தில் விலை உயர்ந்துள்ள போது சில்லரைச் சந்தையில் 5 சதவீதம் உயர்ந்துள்ளது. இரும்புக் கம்பிகளின் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளது. சிமெண்ட் விலை ஒவ்வொரு நாளும் கணிக்க முடியாத வகையில் உயர்ந்தும் மாறியும் வருகிறது. உயிர் காக்கும் மருந்துகள் சில்லரைச் சந்தையில் 300 சதவீதம் உயர்ந்துள்ளன.

கிட்டத்தட்ட 1960களின் இறுதியில் சந்தித்த விலைவாசி உயர்வை இன்று இந்தியா சந்தித்து வருகிறது. அன்றைக்கு ஏற்பட்ட உணவு நெருக்கடியைச் சமாளிப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்தார்கள். ஆனால் இன்று அந்த வாய்ப்பு இல்லை. ஏனெனில் இந்த உணவுப் பஞ்சம் உலகு தழுவியதாக மாறியிருக்கிறது. செனிகல், கேமரூண், கென்யா, வங்காளதேசம், எகிப்து உள்ளிட்ட பல நாடுகளில் உணவுக் கலவரம் நடந்துவருகிறது. காசு கொடுத்தாலும் உணவு கிடைக்காதவர்களும், உயர்ந்துள்ள உணவுப் பொருள் விலையை எதிர்கொள்ள முடியாதவர்களும் இந்நாடுகளில் மோதிக் கொள்கிறார்கள்.

Saturday, February 6, 2010

நுõறு வருஷம் வாழ வைக்கும் மாத்திரை!

நுõறு வருஷம் வாழ்றதுக்கு எல்லாத்துக்கும் ஆசைதான். ஆனால், இப்போது கிடைக்கற சாப்பாடு, தண்ணீர், சுற்றுப்புறத்தை பார்க்கும்போது ஐம்பது வயசு வரை நோய் நொடி இல்லாம வாழ்ந்தாலே போதும் என்கிற நினைப்பு வந்துடுது. ஆனாலும், உங்கள நுõறு வயசு வரை வாழ வைக்காம விடமாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, ஆராய்ச்சி செய்து ஒரு அபூர்வ மாத்திரையை கண்டுபிடித்துள்ளார்கள் லண்டன் ஆராய்ச்சியாளர்கள்.
மாரடைப்பு, மூச்சுத் திணறல் போன்ற காரணங்களால்தான் இப்போது அதிகளவு மரணங்கள் நிகழ்கிறது. இது ஏன்...? உடம்பில் கெட்ட கொழுப்பு அதிகளவில் சேர்வதால்தான் இந்த பாதிப்பு. இதையே குறைத்து, உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பை உற்பத்தி செய்யவும், உடலின் வளர்ச்சிக்கு உதவும் ஜீன்களை மேலும் வளர உதவுச்செய்யும் மருந்தை கண்டுபிடித்தால், 100 வயசு வரை வாழலாம்தானே!. அப்படிப்பட்ட ஒரு அபூர்வ மாத்திரையைத்தான் நாங்க கண்டுபிடிச்சிருக்கோம் என்கிறார் லண்டன் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கல்லுõரியின், வாழ்வியல் பற்றிய ஆராய்ச்சியாளர் நிர் பர்ஷிலாய்.

அம்மாடியோவ் விலை:

அரபு நாடுகள் என்றாலே நமக்கு ஞாபகம் வரும் விலங்கு ஒட்டகம். நம்ம ஊர்ல குதிரைப்பந்தயம் மாதிரி அங்க ஒட்டகப் பந்தயம் ரொம்பவே பேமஸ். அதனால், நம்ம ஊர் ஆடு, மாடு சந்தை போல அங்க ஒட்டகச் சந்தை ரொம்ப பிரசித்தி. இந்த ஒட்டகச் சந்தையில்தான் சமீபத்தில் ஒருவர் மூன்று ஒட்டகங்களை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார். என்னங்க... நீங்க பில்டப் பண்றதப் பார்த்தா... வேற எதுவோ சொல்லப்போறீங்கன்னு பார்த்தா... சப்புன்னு மேட்டரை முடிச்சுட்டீங்களேன்னுதானே சொல்றீங்க. இன்னும் நான் விஷயத்துக்கே வரலைங்க. மூணு ஒட்டகம் வாங்கியிருக்கார். ஆனா, அதன் விலை எவ்வளவு தெரியுமா... நம்ம ஊர் விலையில சொல்லணும்னா, 29 கோடியே 82 லட்சம் ரூபாய். அம்மாடியோவ்னு மூக்குல விரலை வைக்கிறீங்க தானே...! அரபு நாடுகள்ல ஒட்டகப் பந்தயம் எந்தளவிற்கு பிரசித்தமோ அந்தளவிற்கு, அங்கு விசேஷ நாட்களில் ஒட்டக விருந்தும் பேமஸ். பண்டிகை நாட்கள் என்று வந்துவிட்டால், யாருடைய ஒட்டக இறைச்சி நல்லாயிருக்குன்னு போட்டியே வச்சிடுவாங்களாம். அந்தளவிற்கு ஒட்டகங்கள் அங்கு ரெண்டு விஷயத்திற்கு பயன்படுது. ஆனா, ஒட்டகத்தை வாங்கின ஆசாமி, எதற்கு வாங்கினார்னுதான் புரியலை!

புலி ஆண்டை வரவேற்க புலி!

வெறும் ஒரு மில்லிமீட்டர் உயரம், 1.2 மில்லி மீட்டர் அகலத்தில் மிக மிகச் சிறிய புலி சிற்பத்தை உருவாக்கியுள்ளார் ஒரு சிற்பி. சம்பவம் நடந்தது இங்கில்லை, தைவானில். பிப்ரவரி மாதம் 14ம் தேதி அவர்களுக்கு புலி ஆண்டு தொடங்குகிறதாம். அதை வரவேற்பதற்குத்தான் இந்த புலி சிலை என்கிறார், அதை வடிவமைத்த 54 வயது சிற்பி சென் பிராங் ஷென். செயற்கை பிசினில் வடிக்கப்பட்ட இந்த புலி சிற்பம், ஊசி துவாரத்தைவிட சிறிது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். கடந்த முப்பது ஆண்டுகளாக சிற்பங்கள் வடித்து வருகிறேன். இந்த புலி சிற்பத்தை வடிக்க ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் வீதம் மூன்று மாதங்கள் செலவழித்திருக்கிறேன். ரொம்ப சிறிதான இந்தப் புலி சிற்பம் எந்த திசையில் இருந்து பார்த்தாலும் தத்ரூபமாக இருக்கும் அளவிற்கு 3டி முறையில் தயாரித்துள்ளேன். அதிலும், இதில் வர்ணம் தீட்ட நான் பட்ட பாடு எனக்கு மட்டும்தான் தெரியும். 95 ஆயிரம் டாலர் விலை மதிப்புள்ள இந்த புலி சிற்பத்தை எக்காரணத்தைக் கொண்டும் விற்கப்போவதில்லை என்கிறார் ஷென்.

பறக்க விடுறதுல சாதனை!

சின்ன வயசுல பேப்பர நான்கா மடிச்சு, ராக்கெட் செஞ்சு சர்ர்ர்ன்னு காற்றில் பறக்க விடுவோம். அதுவும் கொஞ்சம் துõரம் பறந்துட்டு சொத்துன்னு கீழே விழும். அதை அந்த நிமிஷத்துல பார்க்கறதுக்கு கொஞ்சம் பரவசமா இருக்கும். ஆனா, இதையே ஒரு மனுஷன் பொழைப்பா வச்சுக்கிட்டு, அதுல கின்னஸ் சாதனையும் படைச்சிருக்கார்னா பார்த்துக்கோங்க.
அந்த சாதனை மனிதர் தக்குவா டோடா. ஜப்பானைச் சேர்ந்த இவர், 10 சென்டிமீட்டரில் செய்த பேப்பர் பிளேன் காற்றில் 27. 9 நொடிகள் பறக்கிறதாம். இதுல கொடுமை என்னன்னா ஹிரோஷிமாவுல கடந்த சில மாதங்களுக்கு முன் 26.1 நொடிகளில் பேப்பர் பிளேனை பறக்கவிட்ட இவரோட சாதனையை, இவரே முறியடிச்சிருக்காருன்னா அது சாதாரண விஷயமா?. இதோடு இருந்துவிடாமல், 30 விநாடிகளில் பறக்கறமாதிரி எப்படி பிளேனை தயாரிக்கலாம்னு, வீடு முழுசும் பேப்பரை கிழிச்சுட்டு இருக்காறாம்.

ரோபோ மீன்!

மீனை நாம் எல்லாரும் பார்த்திருப்போம். நீந்துவதை ரசித்திருப்போம். கண்ணாடித் தொட்டியில் மீன் நீந்திச் செல்லும்போது, சுவாசிப்பதற்காக அதன் கண் ஓரத்தில் செவுல்கள் மூடி மூடி திறப்பதை கவனித்திருப்போம். உதன் உடலை அசைத்து அசைத்து நீந்திச் செல்லும்போது அதன் உடற்உள் கூறுகள் எல்லாம் எப்படியெல்லாம் அசையும், என்று நாம் எப்போதாவது யோசித்திருப்போமா...? ஆனால், யோசித்திருக்கிறார் ஜப்பானில் கடல் உயிரி ஆராய்ச்சியாளர் மாசாமிச்சி ஹயாஸி. இப்படி அவர் யோசித்து தயாரித்ததுதான் படத்தில் நீங்கள் பார்க்கும் இந்த ரோபோ மீன். இந்த மீனோட சிறப்பு அம்சம் என்னன்னா... தண்ணீரில் நீந்தும்போது மீனின் வால் அசையும்போது அதன் உடல் உள் உறுப்புக்கள் எப்படியெல்லாம் அசையும் என்பதை இந்த ரேபோ மீன் காட்டும்.
ஜப்பானிய மக்களுக்கு, மீன் என்றால் கொள்ளை இஷ்டம். அவர்களின் இந்த இஷ்டத்திற்காகவும், அவர்களின் ஆர்வத்தை துõண்டச் செய்யவும்தான் இந்த ரோபோ மீன் என்கிறார் ஹயாஸி.

"சீ" செய்தி

இதையெல்லாம் திருடுவாங்களா?

மும்பையில சமீபத்துல 300 லிருந்து மூவாயிரம் வரை காண்டம் மிஷின் திருட்டுப் போயிருக்காம். ச்சீ... இதையெல்லாமா போய் திருடுவாங்கன்னு நீங்க ஆச்சர்யப்பட்டாலும், இதுதாங்க உண்மை. இந்தியாவிலேயே அதிகளவு எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளான பகுதி மும்பைதான். அதனாலதான், எய்ட்ஸ் சமூகத் தொண்டு நிறுவனங்களில் ஆரம்பிச்சு பல சமூக தொண்டு நிறுவனங்கள் சார்பில் தானியங்கி ஆணுறை மிஷின்கள், மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, சிவப்பு விளக்குப் பகுதி, ரயில்வேஸ்டேஷன், பஸ்ஸ்டாண்ட் என்று பல இடங்களிலும் மாட்டி வச்சிருக்காங்க. ஆனா, சில சமூக விரோதிங்க... இந்த மிஷினை திருடிட்டு அல்லது அதை சேதப்படுத்திட்டு போயிடுறாங்க. இது வேடிக்கையா நடக்கிறதா...? அல்லது வேறு ஏதும் சதித்திட்டமா என்று புரியவில்லை. ஆனால், மும்பையில்தான் எய்ட்ஸ் மற்றும் பாலியல் நோய்கள் அதிகளவில் பரவி வருகின்றன. இந்த சமூக விரோதச் செயலால் இந்நோய் மேலும் அல்லவா பரவும். என்று கவலையடைந்துள்ளார், எச்.எல்.எப்.பி.பி.டி (இந்துஸ்தான் லேட்டக்ஸ் பேமிலி பிளானிங் புரோமஷன் டிரஸ்ட்) யைச் சார்ந்த ராஜேஷ் நைனாக்வால். அவர் கேட்கறதும் சரிதானே!

புலி வருது

புலி ஆண்டை வரவேற்க புலி!

வெறும் ஒரு மில்லிமீட்டர் உயரம், 1.2 மில்லி மீட்டர் அகலத்தில் மிக மிகச் சிறிய புலி சிற்பத்தை உருவாக்கியுள்ளார் ஒரு சிற்பி. சம்பவம் நடந்தது இங்கில்லை, தைவானில். பிப்ரவரி மாதம் 14ம் தேதி அவர்களுக்கு புலி ஆண்டு தொடங்குகிறதாம். அதை வரவேற்பதற்குத்தான் இந்த புலி சிலை என்கிறார், அதை வடிவமைத்த 54 வயது சிற்பி சென் பிராங் ஷென். செயற்கை பிசினில் வடிக்கப்பட்ட இந்த புலி சிற்பம், ஊசி துவாரத்தைவிட சிறிது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். கடந்த முப்பது ஆண்டுகளாக சிற்பங்கள் வடித்து வருகிறேன். இந்த புலி சிற்பத்தை வடிக்க ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் வீதம் மூன்று மாதங்கள் செலவழித்திருக்கிறேன். ரொம்ப சிறிதான இந்தப் புலி சிற்பம் எந்த திசையில் இருந்து பார்த்தாலும் தத்ரூபமாக இருக்கும் அளவிற்கு 3டி முறையில் தயாரித்துள்ளேன். அதிலும், இதில் வர்ணம் தீட்ட நான் பட்ட பாடு எனக்கு மட்டும்தான் தெரியும். 95 ஆயிரம் டாலர் விலை மதிப்புள்ள இந்த புலி சிற்பத்தை எக்காரணத்தைக் கொண்டும் விற்கப்போவதில்லை என்கிறார் ஷென்.

ஆசை தந்த சாவு


கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லையே!

இந்தப் பழமொழி எதுக்கு பொருந்துதோ இல்லையோ... நான் இப்போ சொல்லப்போற விஷயத்துக்கு கரெக்ட்டா பொருந்தும். அம்மையார் பெயர் மெக்டோனால்ட். 47 வயதான இவர் ஒரு லாட்டரி சீட்டுப் பிரியர். அம்மணிக்கு சமீபத்துல லாட்டரி சீட்டுல நம்ம ஊர் பணத்துக்கு 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்திருக்கு. பரிசைப்பார்த்ததும் அம்மணிக்கு பயங்கர குஷி. தலைகால் புரியவில்லை. இந்தப் பரிசில் தன்னுடைய கணவனுக்கு பெரிய அளவில் பரிசு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை. போறதுதான் போறோம் லைட்டா கொஞ்சம் போதை ஏத்திக்கிட்டா நல்லாயிருக்குமேன்னு நினைச்சுக்கிட்டு, ஒரு குவாட்டரை வாங்கி உள்ள விட்டுக்கிட்டு சாலையில் நடந்து வந்துட்டு இருந்துருக்காங்க. அப்போ பார்த்து எங்கிருந்தோ வந்த கார், டோனால்ட் மீது மோதிவிட, அம்மணி ஸ்பாட்டுலேயே காலி. அவர் யார் என்று சோதித்துப் பார்த்த போலீஸார் அவர் பையில் வைத்திருந்த லாட்டரி சீட்டு வென்ற தொகை, லாட்டரி சீட்டு இவற்றையெல்லாம் எடுத்துப் பார்த்து, ‘சோ சேட்’னு துக்கம் தெரிவிச்சிருக்காங்க. பரிசு விழுந்த முழுத் தொகையையும் முழுசா அனுபவிக்காம இப்படி அற்ப ஆயுசுல போன டோனால்ட்டுக்கு நான் சொன்ன பழமொழி பொருந்தும்தானே!

அனகோண்டா


அனகோண்டாவிற்கு வயது 6 கோடி!

‘அனகோண்டா’ படத்தை நம்மில் பலர் பார்த்திருப்போம்! மிகப்ப்ப்ப் பெரிய பாம்பு ஒன்று எல்லோரையும் அடித்து துவம்சம் செய்யும். கப்பலை கவிழ்த்தும், ஆட்களை விழுங்கிக் கொல்லும். இப்படி பிரம்மாண்டமாய் நாம் பார்த்த பாம்பு உண்மையிலே இருக்கிறதா...? அல்லது ஹாலிவுட்காரர்களின் கற்பனையா என்று நம்மில் பலருக்கு சந்தேகங்கள் ஏற்படலாம். ஆனால், சந்தேகமே வேண்டாம் அனகோண்டா பாம்பு உண்மைதான் என்று அடித்து சொல்லியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தென் அமெரிக்காவில் வடக்கு கொலம்பியா பகுதியில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்திக்கொண்டிருக்கும்போது அந்தப் பகுதியில் ஒரு முதலையின் எலும்புக்கூடு ஒன்று கிடைத்திருக்கிறது. அந்த எலும்புக்கூடை பார்க்கும்போது, அது கிட்டத்தட்ட 6 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரியவந்துள்ளது. அந்த படிவம் கிடைத்த பத்து அடி துõரத்திற்குள்ளாகவே இன்னொரு எலும்புக்கூடின் படிவம் கிடைத்திருக்கிறது. 46 அடி நீளம் கொண்ட அந்தப் படிவம் டைட்டனோபா வகை (அதாங்க அனகோண்டா வகையறா) பாம்பாம்பாகத்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி உலகத்திலேயே மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் இருந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

பிட்ஸ் தகவல்கள்

நீங்களும் ஸ்பைடர்மேன்தான்!

‘ஸ்பைடர்மேன்’ படங்களை நீங்கள் எல்லாரும் கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள். செங்குத்தாக உள்ள கட்டடத்தில் அனாயசமாக இரண்டு கைகளையும் வைத்து சர் சர்ரென்று அவர் ஏறும் விதம் பார்க்கும் நமக்கு பிரமிப்பாக இருக்கும். இதெல்லாம் படத்தில் மட்டும்தான் சாத்தியமாகும். நிஜத்தில் சாதாரண மனிதர்களால் இதையெல்லாம் செய்யவா முடியும்? என்று கேள்வி எழுந்தாலும், மனதிற்குள் இதே மாதிரி உண்மையிலேயே இருந்தால் எப்படி இருக்கும்? நாமும் அப்படியே ஸ்பைடர் மேன் மாதிரி சர்ரென்று பிரமாண்டமான கட்டடங்களில் ஏறலாமே என்ற ஆசை இருக்கும்.
ஒரு ஆச்சர்யமான செய்தி... நீங்கள் ஆசைபட்டது நடக்கப்போகிறது. இனி நீங்களும் ஸ்பைடர்மேன் போல செங்குத்தான கட்டடத்தில் எந்த பிடிமானமும் இல்லாமல் அனாசயமாக ஏறலாம். இதற்காக பிரத்யேகமாக ஒரு சாதனத்தை கண்டுபிடித்துள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் கண்டுபிடித்துள்ள இந்த சாதனம் தட்டையாக கையில் மாட்டிக்கொள்ளும் அளவிற்கு இருக்கும். அதில் மிக நுண்ணிய அளவில் சிறிய சிறிய துவாரங்கள் இருக்கும். இந்த துவாரங்களில் இருந்து வெளிவரும் திரவமானது பரப்பு இழுவிசை சக்தியின் காரணமாக நாம், கட்டடத்தின் சுவரை அப்படியே உடும்பு மாதிரி பிடித்துக்கொள்ளுமாம். பின்ன என்ன சாதனத்தை வாங்குங்க... கட்டடத்துல ஸ்பைடர் மேன் மாதிரி ஏறுங்க. ஒரு கொசுறு செய்தி: இது இன்னும் விற்பனைக்கு வரலை. கூடிய சீக்கிரம் வந்துடும்.

எனெர்ஜி கார்னர்

எனர்ஜி கார்னர்!வாழ்க்கையில் எல்லா மனிதர்களும் விரும்புவதும், வேண்டுவதும் ஒன்றை மட்டும்தான். அது எது தெரியுமா... வெற்றி. தான் எதைத் தொட்டாலும் வெற்றி பெற்றுவிட வேண்டும். இந்த எண்ணம் மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கத்தான் செய்கிறது. இதில் யாருக்கும் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்காது என்று நினைக்கிறேன்.
ஆனால், இந்த வெற்றி என்ற இந்தக் கனி எல்லாருக்கும் உடனடியாக கிடைத்து விடுகிறதா... என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
சிலருக்கு உடனே... சிலருக்கு கொஞ்ச நாள் கழித்து... ஆனால், சிலருக்கோ இந்த வெற்றிக்காக போராட்டம் மட்டுமே வாழ்வின் பாதி நாளை குடித்துவிடுகிறது. நிமிர்ந்து பார்த்தால் முதுமை மட்டுமே மிஞ்சுகிறது. வெற்றி மட்டும் இன்னும் கிடைத்தபாடில்லை. நான் சொல்வது சரிதானே...!
வெற்றி என்பதை ஒருவர் சுவைத்துவிட்டால் போதும், இவனுக்கு உடம்பெல்லாம் மச்சம்டா... என்று ஒரே ஒரு வார்த்தையில் சொல்லிவிடுவோம்.
ஆனால், அவரிடம் போய்க் கேளுங்கள்... அதை அடைய அவர் பட்ட கஷ்டங்களும், அவமானங்களும் அப்போது உங்களுக்குத் தெரியும்.
சமீபத்தில் ஒரு நண்பரை சந்தித்தேன். ரொம்பவும் ஏழ்மையானவர்தான். ஆனால் திறமைசாலி. எந்த வித கெட்டப் பழக்க வழக்கங்களும் கிடையாது. நம்மில் இருக்கும் பலரின் குணாதிசயங்களின் அடையாளங்களாக அவர் ஒருவர் இருந்தார்.
இன்னும் வாழ்க்கையை வெல்வதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறார். என்றாவது ஒரு நாள் நானும் இந்த சமுதாயத்தில் பெரிய ஆளாவேன். என்ற தன்னம்பிக்கை ரேகை இன்னும் அவருள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இதே எண்ணம்தானே நமக்குள்ளும் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்.
அவர் ஒரு திறமைசாலி என்று சொன்னேனே... முதலில் அதற்கு வருகிறேன். அந்த நண்பர் காகிதத்தில் அணிகலன்கள் செய்து வருகிறார். ஆங்கிலத்தில் அதை ‘பேப்பர் ஜுவல்ஸ்’ என்பார்கள். பலபேருக்கு தெரியாத இந்த அணிகலன்கள் வெளிநாட்டில் அவ்வளவு கிராக்கி.
இங்கே அவர் அந்த அணிகலன்களை வெறும் ஐம்பது ரூபாய்க்கும், நுõறு ரூபாய்க்கும் விற்று வருகிறார். கடும் உழைப்பு, கடும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி இவ்வளவு இருந்தும், அவர் இன்னும் நகரத்தில் ஏதோ ஒரு மூலையில் யாருக்கும் தெரியாத இடத்தில் ஐம்பதுக்கும், நுõறுக்கும் அல்லாடிக்கொண்டு இருக்கிறார்.
இதில் தவறு யாருடையது? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தான் தயாரிக்கும் பொருளின் தேவை சந்தையில் இப்போது எப்படி இருக்கிறது? யார் விரும்புகிறார்கள். இதை எந்த வடிவத்தில் வடிவமைத்தால், சந்தைப் படுத்தல் இன்னும் எளிமையாக இருக்கும்? அல்லது தன்னுடைய திறமைகளுக்கான அங்கீகாரம் தருவதற்கு யாரும் தயாராக இருக்கிறார்களா...? என்பதைப் பற்றிய தேடலுக்கு அந்த நண்பர் தயாராகி இருந்தால், இன்று அவர் நகரத்தின் ஏதாவது ஒரு மூலையில் இருக்க வேண்டிய அவசியம் வந்திருக்குமா...? மாட மாளிகை கட்டி, காரில் அல்லவா பவனி வந்திருப்பார்.
அவரும் சமுதாயத்தில் முக்கிய இடத்தை அடைந்திருப்பார் அல்லவா?
முன்பு சென்னையிலிருந்து டில்லிக்கு செல்லவேண்டுமானால், மூன்று நாட்கள் ஆகும். ஆனால், இன்று அப்படியா... இன்டர்நெட், ஊடகம், விஞ்ஞான வளர்ச்சி என்று இப்போது உலகம் சுருங்கிவிட்டது. நம்முடைய தேவைகளுக்கான ஆதாரங்கள் அனைத்தும் நம் கைக்கு எட்டும் துõரத்தில்தான் இருக்கிறது. ஆனால்... இவை எவையற்றுமையே தேடாமல், வாய்ப்பு தன்னைத் தேடி வரும் என்று அமர்ந்திருந்தால், அது எப்படி...?
உண்மையான உழைப்பு, நேர்மை இருந்து என்ன பயன்? வாய்ப்புகளை தேடி அலைய அவர் துணியவில்லையே... ஏன்? இந்தக் கேள்விக்கு ‘தான்’ என்ற அகந்தை, அகங்காரம் என்று ஏதாவது ஒன்றை பொருளாக வைத்துக்கொள்ளலாமா? இல்லவே இல்லை. இதற்கு இவைகள் காரணம் இல்லை. அப்போது வேறு என்னதான் காரணம்... ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள். அதற்கு ஒரே விடை... கூச்சம்!
இந்த தடைக்கல்தான் நம் வளர்ச்சியின் எல்லா பக்கங்களையும் மூடிக்கொண்டு விடுகிறது. தன்னிடம் உள்ள திறமைகளை மற்றவர்களிடம் எடுத்துச் சென்று காட்டி, வாய்ப்புத் தேடி அலைந்தால், தன்னுடைய திறமைக்கு பங்கம் வந்துவிடுமோ என்ற தேவையில்லா அச்சம்தான், நம்மில் பெரிய பெரிய திறமைசாலிகளை முடக்கிப்போட்டுள்ளது.
உங்கள் திறமைகளை எடுத்துச்சொல்ல, உங்களைப் பற்றி சிறப்பாக சொல்ல இந்த உலகத்தில் வேறு யார் இருக்கிறார்? யோசித்துப் பாருங்கள். யாரும் இல்லை... என்ற பதில்தான் வரும்.
யாரும் இல்லாத போது இந்த தயக்கத்தை இந்த கூச்சத்தை உடைத்து வெளியே வர வேண்டாமா?. திறமைகளைச் சொல்லி வாய்ப்புகளைக் கேளுங்கள். சில சமயங்களில் ஏமாற்றங்கள் ஏற்படலாம். அவமதிக்கப்படலாம். உங்கள் திறமைகள் நிராகரிக்கப்படலாம். ஆனால், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். உங்கள் வெற்றி எட்டும் துõரத்தில்தான் இருக்கிறது. கண்டிப்பாக தொட்டுவிடுவீர்கள். அதைத் தொட்டப்பின், நீங்கள் சந்தித்த ஏமாற்றமும், அவமானமும், நிராகரிப்பும் உங்கள் துச்சமாய் தள்ளி நிற்கும். அது மற்றவர்களுக்கு படிப்பினையை சொல்லித்தரும் ஆசானாக இருக்கும். இன்று சமுதாயத்தில் பேரும், புகழும் பெற்றவர்களின் கதைகள் எல்லாம் ஏமாற்றம், அவமானம், நிராகரிப்பு இவற்றை எல்லாம் தாண்டி வந்ததுதான் என்பதை என்றைக்கும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு ஒரு சின்ன உதாரணத்தைச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நான் படித்த ஒரு கதையை உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு அரசனுக்கு ஒரு ஓவியன் எழுதிய கடிதம்...

‘யுத்த தளவாடங்கள் தயாரிப்பதில் தம்மை விற்பன்னர்களாகக் கூறிக்கொள்பவர்களின் தயாரிப்புகளைப் பார்த்தாலே அவை எவ்வளவு சாதாரணம் என்பது விளங்கும்.
மிகவும் லேசானதும் வலுவானதுமான பாலங்கள் என்னால் உருவாக்க இயலும். அவற்றை எளிதில் எடுத்துச் செல்லலாம், எதிரிகளிடமிருந்து தப்பிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்; தீயினாலும் யுத்தத்தினாலும் அழிக்க முடியாதபடி பாதுகாப்பானவை; கொண்டுபோய் நிர்மாணிப்பது எளிமையானது மற்றும் வசதியானது. அத்துடன் எதிரியின் பாலங்களை அழிப்பதற்கும் எரிப்பதற்குமான வழிவகைகளும் நான் வடிவமைத்த கருவிகள் செய்யும்.
ஓரிடம் முற்றுகையிடப்படும்போது, பதுங்கு குழிகளிலிருந்து தண்ணீரை அகற்றுவது எப்படி, தினுசு தினுசான பாலங்களை உருவாக்குவது எப்படி என்றெல்லாம் எனக்குத் தெரியும்.
ஓரிடத்தை முற்றுகை இடுகையில் குண்டு வீசித்தாக்குதல் சாத்தியமற்றது; அப்படியான அரண்கள் பாறை மீது இருப்பினும் அழிப்பதற்கான வழிமுறைகள் என்னிடம் உள்ளன.
கடலில் நிகழும் யுத்தங்களுக்கேற்ற எல்லாவிதமான இயந்திரங்களும் உள்ளன; பெரிய துப்பாக்கிகளின் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்கும் மரக்கலன்களும் இருக்கின்றன.
குறிப்பிட்ட இடத்திற்கு, ஆற்றினுõடே கடந்து செல்வதாயினும், செல்லும் வகையில் ரகசியமானதும் சுற்றி வளைந்து போவதுமான சுரங்க வழிகளை ஏற்படுத்தும் உபாயங்களும் என்னிடம் கைவசம் உள்ளன.
பாதுகாப்பானதும், தாக்க முடியாததுமான எனது தேர்களின் பின்வரும் தரைப்படை, தங்குதடை இல்லாமல், காயம்படாமல் வந்து சேரும்; எதிரிப் பிரதேசத்திற்குள் நுழைந்துவிட்டால் அவர்களால் தொட முடியாது போகும்.
தேவைப்பட்டால் பெரிய துப்பாக்கிகளையும் லேசான தளவாடங்களையும் செய்து தருவேன்.
குண்டு வீசித்தாக்குவது, தோற்றுவிடும் இடங்களில் பல்வேறான தாக்குதல்களையும் தற்காப்புகளையும் என்னால் வகுத்தளிக்க இயலும்.
மேலே குறிப்பிட்டவற்றில் ஏதேனும் சாத்தியமற்றதாக உங்களுக்கு தோன்றுமேயானால், சோதனை செய்து காட்ட நான் தயார்.’

இந்த கடிதம் முழுவதையும் படித்தீர்கள் அல்லவா? தன்னுடைய திறமைகளை தானே எடுத்துச் சொல்லும் கடிதம் இது. தன் மீதுள்ள அசாத்திய நம்பிக்கை. அதை நிரூபிக்கும் மனப் பக்குவம் எல்லாமே இந்தக் கடிதத்தில் இருக்கிறது. சரி... இந்தக் கடிதம் யார் எழுதியது தெரியுமா... மோனோலிசா என்ற உலகப் புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்த ஓவியர் லியானார்டோ டாவின்ஸி எழுதியதுதான். இவ்வளவு உலகப் பிரசித்திப் பெற்ற ஓவியர் கூட ஆரம்ப காலத்தில், நான் திறமையானவன், என் திறமைகளை சோதித்துப்பாருங்கள் என்று பகிரங்கமாக வாய்ப்புக் கேட்டதால்தான், இன்று அவர் உலகறிந்த ஓவியரானார். அவரின் ஓவியங்கள் இன்று கோடி ரூபாய்க்கு மேல் விலை போகின்றன. அவருடைய மோனாலிசா ஓவியம், அறிஞர்களின் ஆராய்ச்சியில் இன்று வரை இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
திறமை யாரிடத்தில்தான் இல்லை... ஆனால், எத்தனை பேரால் கூச்சத்தை துறந்து மற்றவர்களிடம் சென்று வாய்ப்பு கேட்க முடிகிறது. சிந்தியுங்கள்... இந்த கூச்சத்தை உடைத்தால், நீங்களும் உலகின் தலைசிறந்த மனிதராகலாம். வாய்ப்பு பெறுவதற்கான சாவி உங்களிடத்தில்தான் இருக்கிறது. அதை வேறெங்கிலும் தேடி அலைய வேண்டாமே!

Wednesday, February 3, 2010

பழம் சாப்பிட்டா குழந்தை பிறக்காது

இப்படியும் பயமுறுத்துறாங்க:

கல்யாணம் முடிஞ்சி மறுவருஷம் குழந்தை பிறந்திடணும். இல்லாட்டி அவ்வளவுதான்... அந்தப் பெண் வாங்கும் ஏச்சுப் பேச்சுக்கள் எல்லாம் உலகறிந்த விஷயம்தானே!. இதற்காக கல்யாணம் முடிஞ்ச மறுவருஷமே எப்படியாவது பொண்ணுக்கு குழந்தை பொறந்திடணும் என்று, புதுப்பெண்ணுக்கு, பார்த்து பார்த்து பழங்கள், சத்தான உணவுப் பொருட்கள் வீட்டார் வாங்கிக் கொடுப்பதும் வழக்கம். ஆனா, இதுலதான் இப்போ ஒரு சிக்கல் வந்துருக்கு.
அதாவது நார் சத்துள்ள உணவுப் பொருட்கள் அதிகளவில் சாப்பிட்டால், குழந்தை உருவாவது தள்ளிப்போகும் என்று கண்டுபிடித்துள்ளார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். நார் சத்துள்ள உணவுப்பொருள்னா என்னன்னு குழம்ப வேண்டாம். பழவகைகள்தான். பழவகைகள் அளவுக்கு அதிகம் சாப்பிட்டா, கரு உண்டாவதில் கால தாமதமாகும் என்று கூறியுள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள். நார்ச்சத்துள்ள உணவுப்பொருள் அதிகளவில் சாப்பிடுவதால், கருமுட்டை உருவாவதற்காக சுரக்கும் ஹார்மோனின் அளவு குறைந்து போகும். அதனால், குழந்தை பாக்யம் கிடைக்க ஆண்டுகள் தள்ளிப்போகும் என்று எச்சரித்துள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நீங்க திருந்துங்க...

நீங்க திருந்துங்க... அவங்க திருந்துவாங்க!

அதிகபட்ச லஞ்சம் எந்தத் துறைக்கு போகுதுன்னு கேட்டவுடனேயே டக்குன்னு நம்ம நினைவுக்கு வரும் துறை, போக்குவரத்து. லைசன்ஸ் வாங்கறதுல இருந்து நம்பர் வாங்கறது வரை... லஞ்சம் கொடிக்கட்டி பறந்துகொண்டு இருப்பது, மக்களாகிய நமக்கு எந்தளவிற்கு தெரிகிறதோ அந்தளவிற்கு அந்தத் துறைக்கும் தெரியும்.
இதைப் பார்த்து கொந்தளித்துப்போன கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர். அசோக் கூறும்போது, நீங்கள் கொடுப்பது குறைந்தால், அவர்கள் வாங்குவது குறையும். இப்படி லஞ்சம் வாங்குவதற்கு நீங்கள்தான் பொறுப்பு என்று தடாலடியாக கூறுகிறார் அமைச்சர்.
ஒரு காரின் விலை மூன்று லட்சம். ஆனால், அந்த காருக்கு ராசி எண்ணுக்கா ஒரு லட்சம் கூட செலவழிக்க வாடிக்கையாளர் தயாராக இருக்கும்போது, லஞ்சம் எப்படிங்க குறையும்.
பெரும்பாலும் 1, 9, 5555, 9000, 9999, 786 போன்ற எண்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தயாராக இருக்கின்றார்கள். அந்த எண்ணை பெறுவதற்காக அவர்கள் குறுக்கு வழியில் செல்வதற்கும் தயாராக இருக்கிறார்கள். இப்படி இருந்தால் என்ன அர்த்தம்? இவர்களின் பேன்சி எண்களின் மோகம் என்று குறைகிறதோ அன்றுதான் ஓரளவிற்கு லஞ்சமும் குறையும்.
இந்த பேன்சி நம்பர் மூலம் இந்த ஆண்டுக்கு மட்டும் அரசுக்கு பத்துகோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆனால், லஞ்சமாக எவ்வளவு பணம் கைமாறியதோ... ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!

சாப்பிட்டா தலைவலி வராது

காலையில ஒழுங்கா சாப்பிடுங்க; நோயை விரட்டுங்க!

தலைப்பை படித்ததும், தலையும் புரியலை; வாலும் புரியலைன்னுதானே யோசிக்கிறீங்க... நம்மில் பல பேருக்கு இருக்கும் தலையாய பிரச்னை இந்த ‘கோல்ட்‘. இந்த கோல்ட் பலபேருக்கு பல விதங்களில் இருக்கும். ஒருத்தருக்கு மூக்கில் நீர் ஒழுகும். சிலருக்கு சளி பிடித்திருப்பது போல் இருக்கும். சிலருக்கு ஒற்றைத் தலைவலி ரெட்டைத் தலைவலின்னு சொல்லிக்கிட்டு இருந்தாலும், இதற்கெல்லாம் ஒரே ஒரு பெயர் ஜலதோஷம் அல்லது கோல்ட்னு சொல்வாங்க.
கரெக்ட்தான். நீங்க சொல்றது எல்லாம் புரியுது. இந்தப்பிரச்னை எனக்கும் இருக்கு. இதுக்கு என்ன தீர்வு அதை மட்டும் சொல்லுங்க...ன்னுதானே கேட்கறீங்க... சொல்றேன்!
இரவு குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது துõங்குங்க. எந்தக் காரணத்தைக் கொண்டும் காலை சாப்பாடு சாப்பிடாம இருக்காதீங்க... இதை கொஞ்சம் முறைப்படுத்திப் பாருங்க கோல்டை முற்றிலுமா சுகப்படுத்த முடியலைன்னாலும், கொஞ்சம் குறைக்கலாம்னு சொல்றாங்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!

சாப்பிட்டா தலைவலி வராது

காலையில ஒழுங்கா சாப்பிடுங்க; நோயை விரட்டுங்க!

தலைப்பை படித்ததும், தலையும் புரியலை; வாலும் புரியலைன்னுதானே யோசிக்கிறீங்க... நம்மில் பல பேருக்கு இருக்கும் தலையாய பிரச்னை இந்த ‘கோல்ட்‘. இந்த கோல்ட் பலபேருக்கு பல விதங்களில் இருக்கும். ஒருத்தருக்கு மூக்கில் நீர் ஒழுகும். சிலருக்கு சளி பிடித்திருப்பது போல் இருக்கும். சிலருக்கு ஒற்றைத் தலைவலி ரெட்டைத் தலைவலின்னு சொல்லிக்கிட்டு இருந்தாலும், இதற்கெல்லாம் ஒரே ஒரு பெயர் ஜலதோஷம் அல்லது கோல்ட்னு சொல்வாங்க.
கரெக்ட்தான். நீங்க சொல்றது எல்லாம் புரியுது. இந்தப்பிரச்னை எனக்கும் இருக்கு. இதுக்கு என்ன தீர்வு அதை மட்டும் சொல்லுங்க...ன்னுதானே கேட்கறீங்க... சொல்றேன்!
இரவு குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது துõங்குங்க. எந்தக் காரணத்தைக் கொண்டும் காலை சாப்பாடு சாப்பிடாம இருக்காதீங்க... இதை கொஞ்சம் முறைப்படுத்திப் பாருங்க கோல்டை முற்றிலுமா சுகப்படுத்த முடியலைன்னாலும், கொஞ்சம் குறைக்கலாம்னு சொல்றாங்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!

பேசி பிரியும் ஜோடிகள்

நடந்ததை பேசியே பிரியும் ஜோடிகள்!

கல்யாணம் முடிஞ்ச ஆறே மாசத்துல டைவர்சுக்கு நீதிமன்ற படியேறும் வழக்கம் நம் நாட்டில் ரொம்பவே அதிகரிச்சிருக்கு. இது நம்ம நாட்டு கலாசாரமா...? அயல்நாட்டு கலாசாரமா என்று பட்டிமன்றம் வைப்பதை விடுத்து, இந்த மாதிரி டைவர்ஸ் அடிக்கடி நடக்கறதுக்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தால், ஈகோ... என்ற ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு சென்றுவிடுவோம். ஆனா, இதையே ஒரு ஆராய்ச்சியாவே பண்ணிட்டாங்க கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகம். இவங்க டைவர்ஸ் ஆன சில தம்பதிகளை வைத்து மனோரீதியா ஆராய்ச்சி செஞ்சி பார்த்தபோது, இவர்கள் ஈகோ என்ற ஒன்றுக்காக டைவர்ஸ் ஆவதை விட, பழைய சம்பவங்களை அதாவது நடந்து முடிந்த சில விஷயங்களைப் பற்றி பேசி, விவாதம் செய்து, அதனால் பாதி சண்டை வருகிறது. அதன் உச்சக்கட்டம்தான் இந்த டைவர்ஸ் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தற்கொலை காரணம்


பரம்பரையும் ஒரு காரணம்!

தினப்படி செய்தித்தாளை படிக்கும்போது நம்ம நாட்டுல தற்கொலை செய்திருப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம், மன அழுத்தம், பணிச்சுமை என்று பல்வேறு காரணங்கள் சொல்லிக்கொண்டிருந்தாலும், உங்கள் பரம்பரையும் ஒரு காரணம் என்று அடித்துச் சொல்லியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சமீபத்தில் தற்கொலை செய்த சிலரின் நடவடிக்கைகளை பார்த்தபோது, தற்கொலை என்ற எண்ணம் அந்த நேரத்தில் அவர்கள் எடுக்கும் முடிவு என்றாலும், இந்த எண்ணம் அவர்களுக்கு தானாக தோன்றவில்லை. இது அவர்களின் உடலில் உள்ள ஜீன்களும் ஒரு காரணம் என்று சொல்லியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உங்க அப்பா, தாத்தா... அல்லது அவங்களுக்கு முன் தோன்றியவர்கள் யாராவது ஒருவருக்கு தற்கொலை போன்ற எண்ணங்கள் அடிக்கடி தோன்றியிருக்கலாம். அந்த எண்ணங்களின் பிரதிபலிப்புத்தான் இப்போது இவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கும் காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

வலது பக்கம்

வலது பக்கம்னா... சந்தோஷம்!

நாய் நன்றியுள்ள விலங்கு. வாலை ஆட்டுதலை வைத்துதான் நம்மவர்கள், நாய் நன்றியுள்ள விலங்கு என்று சொல்லி வைத்தார்களோ என்னவோ...? ஆனால், இதையும் வேலை மெனக்கிட்டு ஆராய்ச்சி செய்து, நாய் வலதுபக்கமாய் வாலை ஆட்டினால் நல்ல சந்தோஷ மூடில் இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள். என்னது... இதையுமா போய் ஆராய்ச்சி பண்ணியிருக்காங்க...? என்றுதானே ஆச்சர்யமாய் கேட்கறீங்க. ஆமாம்... லண்டனின் விக்டோரியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள்தான் இந்த மேற்படி ஆராய்ச்சியை செய்திருக்கிறார்கள். இவர்கள் இந்த சோதனைக்கு 500 நாயை பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த நாயுடனேயே இருக்குமாறு ஒரு ரோபோவையும் வைத்து ஆராய்ச்சி செய்ததில்தான் இந்தக் கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார்கள்.

ஐஸ் ஹோட்டல்


லவ் தினத்தில் ஐஸ் ஓட்டல்!

150 கட்டட கலைஞர்களை வைத்து அட்டகாசமாக ஒரு ஐஸ் ஓட்டலை கட்டி வருகிறார்கள் ரஷ்யர்கள். பிரமாண்டமாக உருவாகிவரும் இந்த ஐஸ் ஓட்டல் பிப்.14ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து இந்த ஐஸ் ஓட்டலின் நிர்வாகத் தலைவர் கூறும்போது, ரஷ்யாவின் முதல் ஐஸ் ஓட்டல் எங்களுடையதுதான். பிரமாண்டமாக தயாராகி வரும் எங்கள் ஓட்டல் வேலை முடியும் தருவாயில் இருக்கிறது. தற்போது உள்புற அலங்கார வேலை நடந்து வருகிறது. இதில் உடற்பயிற்சி கூடம், 70 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய திரையரங்கம், என்று பலதரப்பட்ட விசேஷ அம்சங்கள் இந்த ஓட்டலில் அமைத்துள்ளோம். காதலர் தினத்தை ஒட்டி இந்த ஓட்டல் திறக்கப்படும். மார்ச் 30ம் தேதி வரை இந்த ஓட்டல் இயங்கும். அதற்குப் பின் நகரத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் இந்த ஐஸ் ஓட்டலைக் கட்ட தீர்மானித்துள்ளோம் என்றார் அவர்.

ஜாலி பிட்ஸ்

உலகத்தில் இது இரண்டாவது!

ஒரு ஆண், குழந்தை பெற்றுக்கொள்ளும் உலகத்திலேயே இரண்டாவது சம்பவம் இந்த பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கிறது. அப்படியென்றால் முதல் சம்பவம்தானே கேட்கறீங்க... அது 2008ம் ஆண்டு மார்ச் மாதம் தாமஸ்பீட்டி என்பவருக்கு முதல் குழந்தை பிறந்தது. இதுதான் உலகத்திலேயே முதல். அப்படீன்னா... இது இரண்டாவதுதானே!
அது எப்படிங்க ஒரு ஆம்பளையால குழந்தை பெத்துக்க முடியும்னுதானே கேட்கறீங்க... தாமஸ், மூர் இருவருமே பிறவியில் பெண்கள்தான். ஆனால், இவர்கள் சில ஆபரேஷன்கள் மூலம் ஆண்களாக மாறிவிட்டனர். ஆண்களாக மாறினாலும் மூர் தன்னுடைய கர்ப்பப் பையை மட்டும் நீக்கவில்லை. அப்படித்தான் மூர் தற்போது கற்பம். சென்ற மாதம் மருத்துவமனையில் சோதனை செய்துகொண்ட மூருக்கு பிப்ரவரி மாதம் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். எனக்கு குழந்தை பிறக்கறது பற்றி மற்றவர்கள் கேவலமாக பேசினாலும், எனக்கு அதைப் பற்றி கவலையில்லை என்று, தன்னுடைய கணவன் தாமஸ் தோழில் சாய்ந்து கொள்கிறார் மூர்.
கலி முத்திப் போச்சுடா சாமி!