Thursday, February 25, 2010

திக் திக் மாத்திரைகள்!





என் அம்மா நீண்ட கால சர்க்கரை நோயாளி. சில காரணங்களால் வழக்கமான மருத்துவரைத் தவிர்த்து, வேறு ஒரு மருத்துவரிடம் அவரை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றேன்.
அவர் இன்சுலின் கட்டுப்பாட்டில் இருந்த என் அம்மாவுக்கு, இனி இன்சுலின் தேவையில்லை என்று சொல்லிவிட்டு மாத்திரைகள் மூலமே சர்க்கரையைக் கட்டுப்படுத்த முயன்றார். அம்மாவுக்கு மட்டுமல்ல, யாருக்குமே அவர் இன்சுலின் பரிந்துரைக்கமாட்டார். அவர் எழுதித் தரும் மருந்துகளும் குறிப்பிட்ட கடையில் மட்டுமே கிடைக்கும்.
மாத்திரைகளின் மூலம் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஒரு கட்டத்தில் தொடர்ந்து ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொடுத்தார்.
நான் அதிகமாக ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளக் கூடாது என்கிறார்களே... என்று பணிவான முறையில் சொன்னேன். யார் சொன்னது? 6 மாதம் கூட தொடர்ந்து கொடுக்கலாம்! என்றார்.
இடையில் சின்னச் சின்ன உடல் நலக் கோளாறுகளுக்கும் சளைக்காமல் ஆன்டிபயாடிக்குகள் கொடுத்தார். ஒரு கட்டத்தில் கால் வீக்கம் தொடங்கியது.
கால் வீக்கம் சிறுநீரகப் பாதிப்பின் அறிகுறி என்று எங்கேயோ படித்த ஞாபகம், உடனடியாக ரத்தத்தில் யூரியா அளவு, செரம் கிரிட்டினைன் ஆகியவற்றை பரிசோதித்தில் அம்மாவுக்கு வழக்கமான அளவைத் தாண்டி உச்சத்தில் இருந்தது.
இப்போதும் மனம் தளராத மருத்துவர் ப்ரூஸ்மைட் மருந்தை வேளைக்கு ஒன்று, இரண்டு என்று கூட்டிக்கொண்டே போனார். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு மாத்திரை, அதிக பட்சம் 3 மாத்திரைதான் என்று இதர மருத்துவர்கள் அஞ்சுகிற ஒரு மருந்தை வேளைக்கு 4 வீதம் ஒரு நாளைக்கு 12 வரை கூட சாப்பிடலாம் என்று அவர் சொன்ன போது எனக்குத் தலைசுற்றியது. உடனடியாக வேறு வழியில்லாமல் என் அம்மாவிற்கு வேறு ஒரு மருத்துவரிடம் சிகிச்சை அளிக்க ஆரம்பித்த பிறகு இப்போது உடல் ஆரோக்கியமாக இருக்கிறார்.



கட்டுரையில் எந்த இடத்திலும், பாராசிட்டமால் மாத்திரையை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லவேயில்லை. ஆனால், தேவையில்லாமல் அந்த மாத்திரையை பயன்படுத்தாதீர்கள். அது உயிரையே வாங்கும் அளவிற்கு ஆபத்தானது என்று மட்டுமே சொல்லிக்கொண்டு வருகிறோம்.
வெளிநாட்டில் 4ம் கட்ட மாத்திரையாக பயன்படுத்தி வரும் இந்த பாராசிட்டாமல் மாத்திரையை நம் மக்கள் தேவைக்கு தகுந்தாற்போல் பயன்படுத்தி வருவது ஆபத்தான ஒன்றல்லவா?
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு... என்ற பழமொழி எதுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... கண்டிப்பாக பாராசிட்டாமல் மாத்திரைக்கு கண்டிப்பாக பொருந்தும்.
பாரம்பரியமாகவே நம்முடையே சிகிச்சை முறை ஆயிர்வேதத்தைச் சார்ந்ததுதான். ஆனால், தற்போது வளர்ந்து வரும் ஆங்கில மருத்துவத்தால், ஆயிர்வேத சிகிச்சை முறை மகத்துவம் குறைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆயிர்வேத மருத்துவர்கள் ஆங்கில மருத்துவர்களை குறை கூறுவதும், ஆங்கில மருத்துவர்கள் ஆயிர்வேதத்தைக் குறை கூறுவதும் இயல்பாகிவிட்டது.
எல்லா மக்களுமே தங்கள் நோய் தீர தாங்களே மருந்து உட்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருப்பதில்லை. மருத்துவர்கள் வாங்கும் கட்டணம் மற்றும் அவர்கள் பரிந்துறைக்கும் மாத்திரைகளின் விலையைக் கண்டு பயந்தே கடையில் கிடைக்கும் பாராசிட்டாமல் மாத்திரையை அளவு உட்கொண்டுவிடுகின்றனர்.
சில மருத்துவர்கள் வர்த்தக ரீதியாக காசு பார்ப்பதற்காக நோயாளிகளின் உடல்நலத்தைப் பற்றி கொஞ்சமும் அக்கறை கொள்ளாமல் தங்கள் மருத்துவமனையில் தாங்களே நடத்தும் மெடிக்கல் ஷாப்பின் மருந்துகள் விற்பனையானால் போதும் என்று பக்கவிளைவுகளைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் கண்டபடி மாத்திரைகளை எழுதிக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதற்கு ஆரணி வாசகர் எழுதியே கடிதமே சாட்சி!
அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அங்குள்ள மக்கள், தங்கள் உடல்நலனை பேணிக்காக்க ஆங்கில மருத்துவத்தை விட ஆயிர்வேத மருத்துவத்தையே நாடுகிறார்களாம்.
எதற்கெடுத்தாலும், வெளிநாட்டை கைக்காட்டும் நம்மவர்கள், ஆயிர்வேத மருத்துவத்தையும் வெளிநாட்டினரைப் பார்த்து பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம்.
சுக்கு, மிளகு, திப்பிலி இந்த மும்மருந்தும்தானே... நமது பாட்டிக் காலத்து மருந்துகள். அவர்கள் ஆரோக்கியமாத்தானே இருந்தார்கள். அடிக்கடி வரும் தலைவலி, காய்ச்சலுக்கு... நாமளும் அதையே பயன்படுத்தினால், மாத்திரையால் ஏற்படும் பக்க விளைவிலிருந்து தப்பிக்கலாம் அல்லவா?
இவ்வளவு ஏங்க... தினமும் மூன்று லிட்டர் நல்ல தண்ணீர் குடிச்சாலே போதும், இந்த உடம்பு வலி, காய்ச்சல், தலைவலி எதுவுமே வராதுன்னு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க.

No comments:

Post a Comment